மேலோட்டம்
வெறுப்புப் பேச்சு மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல் அல்லது வன்முறை மிகுந்த தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் செயல்களுக்கு Snapchat-இல் இடமில்லை. Snapchat பயனர்களின் பாதுகாப்பை ஆதரிக்கும் மற்றும் அதற்கு முன்னுரிமை அளிக்கும் சூழலை உருவாக்குவதற்கும், வன்முறை மற்றும் பாகுபாட்டிலிருந்து சமூகங்களைப் பாதுகாப்பதற்கும் எங்கள் கொள்கைகள் செயல்படுகின்றன.
வெறுப்பு பேச்சு அல்லது வெறுப்பு சின்னங்களின் பயன்பாடு உட்பட வெறுப்பு நடத்தையில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல பயங்கரவாதம் அல்லது வன்முறை மிகுந்த தீவிரவாதம் குறித்த செயல்களை ஆதரிக்கும் அல்லது பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் இதேபோல் தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் தேவைப்பட்டால் சட்ட அமலாக்கத்திற்குப் புகாரளிக்கப்படும்.
இந்தக் கொள்கைகள் பொறுப்புடன் அமலாக்கப்படுவதை உறுதி செய்ய எங்கள் குழுக்கள் சிவில் உரிமைகள் அமைப்புகள், மனித உரிமைகள் நிபுணர்கள், சட்ட அமலாக்க அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு வழக்கறிஞர்களின் நிபுணத்துவம் மற்றும் பணிகளை ஆலோசிக்கும். நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறோம், மேலும் snapchat பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எங்கள் தயாரிப்புகள் மற்றும் கொள்கைகள் செயல்படுவதை உறுதிசெய்ய தேவையான இடங்களில் மதிப்பாராய்வு செய்வோம். எங்களுக்கு உதவ, பயங்கரவாதம் மற்றும் வன்முறை கடுமையான தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் கொள்கைகளை மீறக்கூடிய எந்தவொரு வெறுப்பு உண்டாக்கும் உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டை உடனடியாகப் புகாரளிக்குமாறு பயனர்களை ஊக்குவிக்கிறோம்.
பயங்கரவாத அமைப்புகள், வன்முறை மிகுந்த தீவிரவாதிகள் மற்றும் வெறுப்பு குழுக்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. வன்முறை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அல்லது முன்னேற்றும் உள்ளடக்கத்தித்தை நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம்.
இனக்குழு, நிறம், சாதி, இனம், நாட்டினம், மதம், பால் நாட்டம், பாலின அடையாளம், இயலாமை அல்லது முதுவர் நிலை, குடிவரவு நிலை, சமூக-பொருளாதார நிலை, வயது, எடை அல்லது கர்ப்ப நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இழிவுபடுத்தும், அவதூறு பரப்பும் அல்லது பாகுபாட்டையோ வன்முறையையோ ஊக்குவிக்கும் வெறுப்புப் பேச்சு அல்லது உள்ளடக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது