Snaps & அரட்டைகள்
நேரில் அல்லது தொலைபேசியில் ஒருவருடன் பேசுவதைப் போலவே, Snaps மற்றும் அரட்டைகள் மூலம் உரையாடுவது உங்கள் மனதில் உள்ளதை அந்த நேரத்தில் வெளிப்படுத்த அனுமதிக்கிறது — நீங்கள் இதுவரை கூறிய அனைத்தின் நிரந்தரப் பதிவைத் தானாகவே பராமரிக்காமல்.
நிச்சயமாக, நீங்கள் ஒரு Snap-ஐ அனுப்புவதற்கு முன்பு சேமிக்க தேர்வு செய்யலாம் மற்றும் பெறுநர்கள் எப்போதும் திரை பிடிப்பு படத்தை எடுக்கலாம். நீங்கள் அரட்டையில் ஒரு செய்தியையும் சேமிக்கலாம். அதை தட்டவும். மீதமுள்ளவற்றிடம் சிக்காமல், முக்கியமானதை சேமிப்பதை Snapchat எளிதாக்குகிறது.
Snaps சேமிப்பு தனியுரிமையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் Snap-கள் Snapchat-இல் சேமிக்கப்படலாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். ஒரு Snap-ஐ சேமிப்பதை அனுமதிக்க Snap ன் நேரத்தை வரம்பில்லை என்று அமைக்கவும். அரட்டையில் சேமிக்கப்பட்ட Snap-கள் உட்பட நீங்கள் அனுப்பிய எந்த செய்தியையும் எப்போதும் நீக்கலாம். சேமிப்பை நீக்க அழுத்திப் பிடிக்கவும். நீங்கள் ஒரு Snap-ஐ சேமிக்கும்போது, அல்லது அனுப்புவதற்கு முன் அல்லது அதற்கு பிறகு அது உங்கள் நினைவுகளின் ஒரு அங்கமாக மாறும். உங்கள் நண்பர் நீங்கள் அவருக்கு அனுப்பிய ஒரு Snap-ஐ சேமிக்கும்போது, அது அவர்களின் நினைவுகளின் ஒரு அங்கமாக மாறும். நினைவுகள் பற்றிய விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள நினைவுகள் பிரிவைப் பார்க்கவும்.
குரல் மற்றும் வீடியோ அரட்டை உங்கள் நண்பர்களுடன் தொடர்பிலிருக்க உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு குரல் செய்தியை அனுப்ப விரும்பினால், நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம், குரல் செய்தியைப் பதிவு செய்ய மைக்ரோஃபோனை அழுத்திப் பிடிக்கவும். Snapchat பயனர்கள், எங்களது குரல் குறிப்பு டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தையும் பயன்படுத்தலாம், இது குரல் அரட்டையைப் படிக்கும் வகையில் அவற்றின் டிரான்ஸ்கிடிப்ட்களை உருவாக்கி கிடைக்கச் செய்கிறது.
உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு இடையிலான குரல் மற்றும் வீடியோ அரட்டைகள் உட்பட Snaps மற்றும் அரட்டைகள் தனிப்பட்டது மற்றும் இயல்பாகவே நீக்கப்படும் — அதாவது, நாங்கள் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க, பரிந்துரைகளை வகுக்க அல்லது விளம்பரங்களை காண்பிக்க அவற்றின் உள்ளடக்கத்தை ஸ்கேன் செய்வதில்லை. இதன் பொருள், வரம்பிடப்பட்ட, பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலைகளில் (உதாரணத்திற்கு, நாங்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் பொருட்டு குறிக்கப்பட்ட உள்ளடக்கத்தின் ஒரு அறிக்கையை பெற்றால், அல்லது உங்களுக்கு மால்வேர் அல்லது மற்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அனுப்புவதிலிருந்து ஸ்பேமர்களைத் தடுக்க உதவுவதற்கு) அல்லது நீங்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டாலொழிய (உதாரணத்திற்கு, நீங்கள் எங்கள் குரல் அரட்டை டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தைப் பயன்படுத்தினால்) நீங்கள் என்ன அரட்டை அடிக்கிறீர்கள் அல்லது Snap செய்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது.
இணையத்திற்கான Snapchat
இணையத்திற்கான Snapchat உங்கள் கணினியிலேயே Snapchat செயலியைப் பயன்படுத்தும் அனுபவத்தைப் பெற உங்களுக்கு உதவுகிறது. தொடங்குவதற்கு, உங்கள் Snapchat தகவல்களுடன் உள்நுழையவும். உள்நுழைந்த பிறகு, அது உண்மையிலேயே நீங்கள் தானா என்பதை உறுதி செய்ய, நாங்கள் உங்கள் Snapchat செயலிக்கு ஒரு புஷ் அறிவிப்பை அனுப்பலாம்.
நீங்கள் இயக்கியதும், இணையத்திற்கான Snapchat அம்சம் Snapchat செயலி அனுபவத்தைப் போலவே இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள், ஆனால் சில வேறுபாடுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உதாரணத்திற்கு, நீங்கள் இணையத்திற்கான Snapchat-இல் யாரையாவது அழைக்கிறீர்கள் என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட லென்ஸ்களுக்கு மட்டுமே உங்களிடம் அணுகல் இருக்கும், மேலும் அனைத்து ஆக்கப்பூர்வக் கருவிகளும் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். நீங்கள் மேலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம், மேலும் அறிய கீழே உள்ள ஆதாரங்களைப் பார்க்கவும்!
Gen AI ✨
Generative AI is a type of technology that learns from large amounts of data and is designed to create new content – like text, images or visuals, and videos. Generative AI is part of the Snapchat experience and we are committed to its responsible development. We are constantly working on new ways to enhance our features with the use of generative AI to make Snapchat more interactive and personalized to you. For example, by offering generative AI Lenses that take you back to the 90s or imagine your next summer job. Many features are powered with generative AI, including My Selfies, AI Lenses, My AI (discussed in more detail below), Dreams, AI Snaps, and more
We may indicate that a feature or a piece of content is powered by generative AI by including a sparkle icon ✨, adding specific disclaimers, or tool tips. When you export or save your visual content, we add a Snap Ghost with sparkles ✨ to indicate that the visual was generated by AI.
We are constantly improving our technology. In order to do that, we may use the content and feedback you submit and the generated content to improve the quality and safety of our products and features. This includes improving the underlying machine learning models and algorithms that make our generative AI features work and may include both automated and manual (i.e., human) review or labeling of the content and any feedback you submit.
To make Snapchat’s generative AI features safe and meaningful for all users, please adhere to our Community Guidelines and our dos and don’ts of generative AI on Snapchat.
My AI 🤖 ✨
My AI என்பது பாதுகாப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவாக்க AI ✨ தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட சாட்பாட் 🤖 ஆகும். நீங்கள் My AI-உடன் நேரடியாக உரையாடலாம் அல்லது உரையாடல்களில் My AI-ஐ @ mention செய்யலாம். உருவாக்க AI என்பது பக்கச்சார்பான, தவறான, தீங்கு விளைவிக்கும் அல்லது தவறாக வழிநடத்தும் படிகளை வழங்கக்கூடிய ஒரு வளரும் தொழில்நுட்பமாகும். எனவே, அதன் ஆலோசனையை நீங்கள் முற்றிலும் சார்ந்திருக்கக்கூடாது. நீங்கள் எந்தவொரு ரகசியமான அல்லது உணர்திறன் தகவல்களையும் பகிரக்கூடாது — அப்படி நீங்கள் பகிர்ந்தால் அந்தத் தகவல்கள் My AIஆல் பயன்படுத்தப்படும்.
My AI -உடனான உங்கள் உரையாடல்கள் உங்கள் நண்பர்களுடனான அரட்டைகள் மற்றும் Snap செய்தல்களுடன் வித்தியாசமாக செயல்படுகின்றன — நீங்கள் My AI-க்கு அனுப்பும் மற்றும் அங்கிருந்து பெறும் உள்ளடக்கத்தை நீங்கள் நீக்கும் வரை அல்லது உங்கள் கணக்கை நீக்கும் வரை நாங்கள் தக்க வைக்கிறோம் (Snapகள் மற்றும் அரட்டைகள் போன்று). My AIஐ நீங்கள் தொடர்புகொள்ளும்போது, My AIஇன் பாதுகாப்பை மேம்படுத்துதல், விளம்பரங்கள் உள்ளிட்ட உங்கள் அனுபவங்களைத் தனிப்பயனாக்குதல் போன்ற Snap தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு நீங்கள் பகிரும் உள்ளடக்கம், உங்கள் இருப்பிடம் (Snapchat உடன் இருப்பிடத்தைப் பகிர்வதைச் செயல்படுத்தியிருந்தால்) ஆகியவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
நீங்கள் எந்த நகரத்தில் உள்ளீர்கள் அல்லது My AIஇன் பதில்களில் சுயவிவரத்திற்காக நீங்கள் அமைக்கும் நகரம் போன்ற உங்கள் பொதுவான இருப்பிடத்தையும் My AI குறிப்பிடும் (இதில் உரையாடல்களில் @ என My AIஐக் குறிப்பிட்டுப் பதிவுசெய்பவையும் அடங்கும்).
நீங்கள் 18 வயதிற்குட்பட்டவர் என்றால், உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் போன்ற ஒரு நம்பகமான பெரியவர் நீங்கள் My AI உடன் அரட்டையடித்தீர்களா என்பதைப் பார்க்கவும் My AI-க்கான உங்கள் அணுகலை ஆன் அல்லது ஆஃப் செய்யவும் குடும்ப மையத்தைப் பயன்படுத்தலாம். நம்பகமான பெரியவர்கள் நீங்கள் My AI உடன் உரையாடிய உள்ளடக்கத்தைப் பார்க்க முடியாது.
My AI சேவையை வழங்குவதற்காக, எங்கள் சேவை வழங்குநர்கள் மற்றும் விளம்பரக் கூட்டாளர்கள் உடன் நாங்கள் உங்கள் தகவல்களைப் பகிரக்கூடும்.
My AI ஐ மேம்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். My AI தொடர்பான சிக்கலை நீங்கள் புகாரளிக்க விரும்பினால், அரட்டை பதிலை அழித்திப் பிடித்து 'புகார்' என்பதைத் தட்டி செயலியில் அதைச் செய்யலாம்.
மேலும் அறிய கீழே உள்ள வளங்களைப் பாருங்கள்!
கதைகள்
உங்களுக்கு விருப்பமான பார்வையாளர்களுடன் உங்கள் தருணங்களை பகிர்வதற்கு Snapchat-இல் பல்வேறு கதை வகைகள் உள்ளன. தற்போது, நாங்கள் பின்வரும் கதை வகைகளை வழங்குகிறோம்:
தனிப்பட்ட கதை. நீங்கள் ஒரு கதையை தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்களுடன் பகிர விரும்பினால், நீங்கள் தனிப்பட்ட கதை விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.
BFF கதை. நீங்கள் உங்கள் கதையை உங்களின் நெருங்கிய நண்பர்களுடன் பகிர விரும்பினால், நீங்கள் BFF கதை வடிவத்தைத் தேர்வு செய்யலாம்.
என் கதை - நண்பர்கள். என் கதை நண்பர்கள் உங்களின் அனைத்து நண்பர்களுடனும் ஒரு கதையை பகிர உங்களை அனுமதிக்கிறது. நினைவில் கொள்ளவும், நீங்கள் உங்கள் என் கதை நண்பர்களை அமைப்புகளில் 'அனைவராலும்' பார்க்கக்கூடிய வகையில் அமைத்தால், உங்களின் என் கதை பொதுவானதாக கருதப்படும் மற்றும் யாரிடம் வேண்டுமானாலும் காட்டப்படக்கூடும்.
பகிரப்பட்ட கதைகள். பகிரப்பட்ட கதைகள் என்பது உங்களுக்கும் பிற Snapchat பயனர்களுக்கும் இடையில் பகிரப்பட்ட கதைகள் ஆகும்.
சமூகக் கதைகள். நீங்கள் Snapchat-இல் உள்ள ஒரு சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்தால், நீங்கள் சமூகக் கதையில் சமர்ப்பிக்கலாம். இந்த உள்ளடக்கம் பொதுவானதாகவும் கருதப்படும் மற்றும் சமூக உறுப்பினர்களால் இதை கான முடியும்.
என் கதை - பொதுவானது. உங்கள் கதை பொதுவானதாக இருக்கவும் பல பார்வையாளர்களைச் சென்றடையவும் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்கள் கதையை என் கதை பொதுவானது என்பதில் சமர்ப்பிக்கலாம், மேலும் இது டிஸ்கவர் போன்று செயலியின் பிற பகுதிகளில் இடம்பெறலாம்.
Snap வரைபடம். Snap வரைபடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கதைகள் பொதுவானவை மற்றும் Snap வரைபடத்திலும் Snapchat-ற்கு வெளியேயும் காண்பிக்க தகுதியுடையவை.
நீங்கள் அமைப்புகளை மாற்றினாலொழிய, உங்கள் பொது சுயவிவரத்தில் கதையை சேமித்தாலொழிய அல்லது நீங்கள் அல்லது ஒரு நண்பர் அரட்டையில் சேமித்தாலொழிய பெரும்பாலான கதைகள் 24 மணி நேரத்திற்கு பிறகு நீக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் கதை ஒன்றை இடுகையிட்ட உடன் அவற்றுடன் உங்கள் நண்பர்கள் மற்றும் பிறர் கலந்துரையாடலாம். உதாரணத்திற்கு, அவர்கள் நீங்கள் பயன்படுத்திய லென்ஸ்களைப் பயன்படுத்தலாம், Snap-ஐ ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது நண்பர்களுடனும் மற்றவர்களுடனும் பகிரலாம்.
நினைவில் கொள்ளவும்: யார் வேண்டுமானாலும் ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம் அல்லது ஒரு கதையைப் பதிவு செய்யலாம்!
தகவல் பக்கங்கள்
நீங்கள் அதிகம் விரும்பும் தகவல்களையும் Snapchat அம்சங்களையும் கண்டறிவதை தகவல் பக்கங்கள் எளிதாக்குகின்றன. என் தகவல் பக்கம், நட்பு தகவல் பக்கங்கள், குழு தகவல் பக்கங்கள் மற்றும் பொதுத் தகவல் பக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல் பக்கங்கள் Snapchat-இல் உள்ளன.
உங்கள் Bitmoji, வரைபடத்தில் இடம், நண்பர் தகவல் மற்றும் பல, உங்கள் Snapchat தகவல்களை என் தகவல் பக்கம் கொண்டிருக்கும். ஒவ்வொரு நட்பிற்கும் நட்பு சுயவிவரம் தனித்துவமானது, இங்குதான் நீங்கள் சேமித்த புகைப்படங்கள் மற்றும் அரட்டைகள், Bitmoji போன்ற உங்கள் நண்பரின் Snapchat தகவல் மற்றும் வரைபடத்தில் இருப்பிடம் (அவர்கள் உங்களின் அதை பகிர்கிறார்கள் என்றால்) ஆகியவற்றைக் காணலாம், மேலும் இங்குதான் உங்கள் நட்பை நிர்வகிக்கலாம் மற்றும் புகாரளிக்கலாம், நண்பரைத் தடைச்செய்யலாம் அல்லது அகற்றலாம். குழு சுயவிவரங்கள் உங்கள் சேமித்த Snaps மற்றும் அரட்டைகளை குழு உரையாடல் மற்றும் நண்பர்கள் Snapchat தகவல் ஆகியவற்றின் கீழ் காண்பிக்கின்றன.
பொது சுயவிவரங்கள் Snapchat-இல் Snapchat பயனர்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது. பெரும்பாலான பகுதிகளில், நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் ஒரு பொது சுயவிவரத்திற்கு தகுதி அடைவீர்கள். உங்களின் பொது சுயவிவரத்தைப் பயன்படுத்தும் போது, நீங்கள் உங்களுக்கு விருப்பமான பொது கதைகள், ஸ்பாட்லைட்கள், லென்ஸஸ் மற்றும் பிற தகவல்களை வெளிப்படுத்தலாம். உங்கள் பொதுத் தகவல் பக்கத்தை மற்ற Snapchat பயனர்களால் பின்தொடர முடியும். உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இயல்பாக அணைக்கப்பட்டிருக்கும், ஆனால் நீங்கள் விரும்பினால் அமைப்புகளில் அதனை இயக்கலாம்.
ஸ்பாட்லைட்
Snapchat உலகை ஒரே இடத்தில் கண்டறியவும், எவர் உருவாக்கிய மிகவும் பொழுதுபோக்கான Snapகளை அடையாளப்படுத்தவும் ஸ்பாட்லைட் உங்களுக்கு உதவுகிறது!
ஸ்பாட்லைட்டில் சமர்பிக்கப்பட்ட Snapகள் மற்றும் கருத்துகள் பொதுவில் உள்ளவை, மற்ற Snapchat பயனர்களால் Snapchat இற்கு உள்ளேயும் வெளியேயும் அவற்றை பகிர்வதற்கும் மற்றும் 'ரீமிக்ஸ்' செய்வதற்கும் முடியும். எடுத்துக்காட்டாக, அவர்கள் உங்கள் வேடிக்கையான நடனத்தை எடுத்து அதன் மீது எதிர்வினையை அடுக்கலாம். நீங்கள் சமர்ப்பித்த ஸ்பாட்லைட் Snap-களின் கண்ணோட்டத்தை உங்கள் சுயவிவரத்தில் கட்டுப்படுத்தவும் பார்க்கவும் முடியும். நீங்கள் ஸ்பாட்லைட் உள்ளடக்கத்தைப் பிடித்ததாகக் குறிக்கலாம் மற்றும் அவ்வாறு நீங்கள் செய்தால், நாங்கள் அதனை உங்களுடைய எனக்குப் பிடித்தவை பட்டியலில் சேர்த்து விடுவோம் மற்றும் உங்கள் ஸ்பாட்லைட் அனுபவத்தினை தனிப்பயனாக்க பயன்படுத்துவோம்.
நீங்கள் ஸ்பாட்லைட்டில் உள்ள உள்ளடக்கத்தை ஆராயும்போது மற்றும் அவற்றுடன் ஈடுபடும்போது, நாங்கள் உங்கள் ஸ்பாட்லைட் அனுபவத்தைக் குறிப்பாக வடிவமைத்து நீங்கள் விரும்பக்கூடும் என நாங்கள் நினைக்கும் உள்ளடக்கத்தை உங்களுக்கு அதிகமாகக் காண்பிப்போம். உதாரணத்திற்கு, நடன சவால்களை நீங்கள் தொடர்ந்து பார்த்தால், நடனம் தொடர்பான உள்ளடக்கங்களை அதிகமாகக் காட்டுவோம். ஸ்பாட்லைட் Snap-இல் நீங்கள் பகிர்ந்தீர்கள், பரிந்துரைத்தீர்கள் அல்லது கருத்து தெரிவித்தீர்கள் என்பதை நாங்கள் உங்கள் நண்பர்களிடம் தெரியப்படுத்தலாம்.
நீங்கள் ஸ்பாட்லைட்டிற்குச் Snapகளைச் சமர்பிக்கும்போது எங்கள் சமூக வழிகாட்டுதல்கள், ஸ்பாட்லைட் விதிமுறைகள், மற்றும் ஸ்பாட்லைட் வழிகாட்டுதல்களுடன் இணங்குமாறு நாங்கள் உங்களைக் கேட்போம். உங்கள் ஸ்பாட்லைட் சமர்ப்பிப்புகள் நீங்கள் அவற்றை நீக்கும் வரை எங்கள் சேவையகங்களில் சேமித்து வைக்கப்படும் மற்றும் நீண்ட காலத்திற்கு Snapchat-இல் பார்க்கலாம். ஸ்பாட்லைட்டில் நீங்கள் சமர்ப்பித்த Snapஐ அகற்ற விரும்பினால், உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று அதைச் செய்யலாம்.
நினைவுகள்
நினைவுகள் நீங்கள் சேமித்த Snap-ஐ மீண்டும் பார்ப்பதற்கும் அவற்றை திருத்தி மீண்டும் அனுப்புவதையும் எளிதாக்குகிறது! உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க உங்கள் நினைவகங்களில் (நீங்கள் அணுகலை வழங்கினால், உங்கள் சாதனத்தின் கேமரா ரோலில் உள்ள உள்ளடக்கமும்) Snapchat-இன் மாயாஜாலத்தை நாங்கள் சேர்க்கிறோம். உள்ளடக்கத்தின் அடிப்படையில் லேபிள்களை சேர்ப்பதன் மூலம் நாங்கள் இதைச் செய்கிறோம், எனவே உங்களால் அதை எளிதாகத் தேட முடியும், மற்றும் நினைவுகள் அல்லது ஸ்பாட்லைட் போன்ற எங்கள் சேவைகளின் பிற பகுதிகளில் இதே போன்ற உள்ளடக்கத்தை நாங்கள் காட்சிப்படுத்துவதற்காக நீங்கள் எந்த வகையான உள்ளடக்கத்தை விரும்புகிறீர்கள் என்பதை எங்களிடம் தெரியப்படுத்துகிறீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் நினைவுகளில் உங்கள் நாயின் பல Snap-களை சேமித்தால், ஒரு நாய் உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்து, அழகான நாய் பொம்மைகளைப் பற்றிய ஸ்பாட்லைட் Snap-கள் அல்லது விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிப்பதன் மூலம் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கலாம்!
வேடிக்கையான லென்ஸைப் போன்ற ஒரு புதிய திருப்பத்துடன் உங்கள் நினைவுகள் மற்றும் கேமரா ரோல் உள்ளடக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை நாங்கள் பரிந்துரைக்கலாம் — ஆனால் எப்போது எங்கு பகிர்வது என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். உங்களின் அனைத்து நினைவுகளையும் காண்பதற்கு உங்களுக்கு நாங்கள் உதவுவோம், உதாரணத்திற்கு, உங்களுக்கு விருப்பமான நினைவுகளை உள்ளடக்கிய கதைகளை அல்லது ஸ்பாட்லைட் Snap-களை மிகவும் எளிதாக உருவாக்க ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது இடத்தைச் சுற்றி அவற்றை குழுவாக்குகிறோம்.
நினைவுகளை இணையத்தில் காப்புறுதி எடுத்து வைப்பது அவற்றைத் தொலைத்துவிடாமல் வைத்திருக்க உதவுகின்றன, ஆனால் அதன் பொருள் நீங்கள் உங்கள் தனியுரிமையையோ பாதுகாப்பையோ தியாகம் செய்ய வேண்டும் என்பதில்லை. அதனால் தான் நாங்கள் "என் கண்கள் மட்டும்" என்பதை உருவாக்கினோம், அது உங்கள் Snapகளை பாதுகாப்பாகவும் மறைகுறியிட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு கடவுச்சொல் மூலம் பத்திரமாகவும் வைத்திருக்க உங்களுக்கு உதவுகிறது. இவ்விதமாக ஒருவர் எப்படியாவது உங்கள் சாதனத்தை திருடி Snapchat இல் உள்நுழைந்தாலும் கூட அந்தத் தனிப்பட்ட Snaps அப்போதும் பாதுகாப்பாக இருக்கும். கடவுச்சொல் இல்லாமல், என் கண்கள் மட்டும் என்பதில் நீங்கள் சேமித்து வைத்த விஷயங்களை பிறகு யாராலும் பார்க்க முடியாது — எங்களாலும் கூட! எனினும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் இந்த மறைகுறியாக்கப்பட்ட Snapகளை மீட்டெடுக்க வழியே இல்லை.
கூடுதலாக, நினைவுகளில், AI-ஆல் உருவாக்கப்பட்ட உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களின் போர்ட்ரேட்களை நீங்கள் பார்க்கலாம். இந்த போர்ட்ரேட்களை உருவாக்க நீங்கள் பதிவேற்றிய செல்ஃபிகள், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களின் புதிய படங்களை உருவாக்க ஜெனரேட்டிவ் AI உதவியுடன் பயன்படுத்தப்படுகிறது.
லென்ஸஸ்
லென்ஸஸ் உங்களுக்கு நாய்க்குட்டியின் காதுகளை எப்படி வழங்குகிறது அல்லது உங்கள் முடியின் வண்ணத்தை எப்படி மாற்றுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
லென்ஸ்களுக்குப் பின்னால் உள்ள சில மாயங்களுக்கு "பொருள் கண்டறிதல்" காரணமாகும். பொருள் அடையாளம் காணுதல் என்பது பொதுவாக ஒரு படத்தில் உள்ள பொருட்கள் என்ன என்பதை ஒரு கணினி புரிந்துகொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். இந்த விஷயத்தில், ஒரு மூக்கை மூக்கு எனவும் கண்ணைக் கண் எனவும் நமக்குத் தெரிவிக்கிறது.
ஆனால், பொருள் கண்டறிதல் என்பது உங்கள் முகத்தை அடையாளம் காண்பதைப் போல் அல்ல. லென்ஸஸால் எது முகம் எது முகம் இல்லை என்று கூற முடியும் என்ற போதிலும், அது குறிப்பிட்ட முகங்களை அடையாளம் காண்பதில்லை!
எங்கள் லென்ஸஸில் பல, வேடிக்கையான அனுபவங்களை உருவாக்கி உங்கள் தோற்றத்தையும் அனுபவத்தையும் சிறப்பு வாய்ந்ததாக மாற்ற ஜெனரேட்டிவ் AI-ஐ சார்ந்துள்ளது.