Privacy, Safety, and Policy Hub
சமூக வழிகாட்டுதல்கள்

தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது ஏமாற்றும் நடைமுறைகள்

சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்

புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 2025

மேலோட்டம்

பொறுப்புணர்வுமிக்க ஒரு தகவல் சூழலை வளர்த்தெடுப்பது Snapஇன் முக்கிய முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஏமாற்றும் நடவடிக்கைகள் பல வடிவங்களில் மேற்கொள்ளப்படுகின்றன, அவை நம்பிக்கையைப் பாதிப்பதுடன் Snapchat பயனர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன. தவறான தகவல்களின் பரவலைக் குறைப்பதையும், பல்வேறு வகையான சூழ்நிலைகளில் மோசடி மற்றும் ஸ்பேமிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதையும் எங்கள் கொள்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

  • தீங்கு விளைவிக்கும் அல்லது தீய நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்புவதை நாங்கள் தடைசெய்கிறோம். எடுத்துக்காட்டாக, துயர நிகழ்வுகள் நடந்ததை மறுத்தல், ஆதாரமற்ற மருத்துவக் கூற்றுகள், குடிமைச் செயல்முறைகளின் ஒருமைப்பாட்டை கெடுத்தல், தவறான அல்லது தவறாக வழிநடத்தும் நோக்கங்களுக்காகக் கையாளப்பட்ட உள்ளடக்கம் (உருவாக்க AI மூலமாகவோ அல்லது ஏமாற்றும் வகையிலான எடிட்டிங் உட்பட) போன்றவை.

  • நீங்கள் வேறு ஒருவராக (அல்லது வேறொன்றாக) நடிப்பதை அல்லது நீங்கள் யார் என்பதைக் குறித்து மக்களை ஏமாற்ற முயற்சிப்பதை நாங்கள் தடைசெய்கிறோம். உங்கள் நண்பர்கள், சகாக்கள், பிரபலங்கள், பிராண்டுகள் அல்லது பிற நபர்களை அல்லது நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதும் இதில் அடங்கும்.

  • நாங்கள் மோசடி மற்றும் ஏமாற்றும் நடைமுறைகளைத் தடைசெய்கிறோம், இதில் மோசடிகள், பணமோசடி, மோசடிப் பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.

  • நாங்கள் ஸ்பேம்மைத் தடைசெய்கிறோம், இதில் கோரப்படாத அல்லது செயற்கையாக ஊதிப்பெரிதாக்கப்படும் உள்ளடக்கம் அல்லது ஈடுபாடு போன்றவையும் அடங்கும்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்

தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது ஏமாற்றும் நடைமுறைகளுக்கான எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தனித்துவமான, ஆனால் தொடர்புடையவற்றை உள்ளடக்குகின்றன, தீங்கு வகைகள்: (1) தீங்கு விளைவிக்கும் தவறான தகவல், (2) மோசடி, மற்றும் 3) ஸ்பேம்.

1. தீங்கிழைக்கும் தவறானத் தகவல்

உண்மைகளை சிதைக்கும் உள்ளடக்கம் பயனர்கள் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் குறிப்பாக விரைவாக பரவும் முக்கிய நிகழ்வுகள் அல்லது அறிவியல், சுகாதாரம் மற்றும் உலக விவகாரங்களின் சிக்கலான விஷயங்கள் என வரும்போது எது துல்லியமானது என்பதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இந்த காரணத்திற்காக, தகவல் துல்லியமற்றதா அல்லது தவறாக வழிநடுத்துகிறதா என்பதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிப்பதற்கான சாத்தியத்தின் மீதும் எங்கள் கொள்கைகள் கவனம் செலுத்துகிறது.

பல வகையான தகவல்கள் உள்ளன, அதில் உண்மைகளை தவறாக சித்தரிப்பது தனித்துவமான ஆபத்துக்களை ஏற்படுத்தும். இந்தப் பகுதிகள் முழுவதும் தவறான முறையீடுகள் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தவறாக வழிநடத்தும் அல்லது துல்லியமாற்ற உள்ளடக்கத்திற்கு எதிராக எங்கள் குழுக்கள் நடவடிக்கை எடுக்கின்றன. இந்த முறையில், தவறான தகவல், தவறாக வழிநடத்தும் தகவல், பொய்யான தகவல் மற்றும் கையாளப்பட்ட ஊடகம் உள்ளிட்ட அனைத்து வகையான தகவல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக எங்கள் கொள்கைகள் செயல்படுகின்றன.

குறிப்பாக தீங்கு விளைவிக்கக்கூடியதாக நாங்கள் கருதும் தகவல் வகைகளின் எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்:

  • துயரமான நிகழ்வுகள் இருப்பதை மறுக்கும் உள்ளடக்கம். எடுத்துக்காட்டாக, Holocaust போன்ற சர்ச்சைக்குரிய அல்லது
    அமெரிக்காவில் Sandy Hook பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்களை மறுக்கின்ற உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம். இதுபோன்ற துயரங்கள் தொடர்பான தவறான விளக்கங்கள் மற்றும் ஆதாரமற்ற கோட்பாடுகள், வன்முறை மற்றும் வெறுப்புக்கு பங்களிக்கக்கூடும், மேலும் இதுபோன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பயனர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.

  • நிலைநாட்டப்படாத மருத்துவ உரிமைகோரல்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் எடுத்துக்காட்டாக, கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காகச் சோதிக்கப்படாத சிகிச்சைகளைப் பரிந்துரைக்கும்; தடுப்பூசிகள் பற்றிய ஆதாரமற்ற சதி கோட்பாடுகளைக் கொண்டுள்ள; அல்லது "மாற்றுச் சிகிச்சை" என்று அழைக்கப்படுபவை போன்ற நீக்கப்பட்ட, தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம். மருத்துவத் துறை தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகும் அதே சமயம் பொது சுகாதார முகமைகள் அடிக்கடி வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம், அத்தகைய நம்பகமான நிறுவனங்கள் தரங்கள் மற்றும் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவை, மேலும் நாங்கள் பொறுப்பான சுகாதாரம் மற்றும் மருத்துவ வழிகாட்டுதலுக்கான அளவுகோலை வழங்க அவர்களை நம்பிக்கையுடன் பார்க்கலாம்.

  • குடிமை செயல்முறைகளின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உள்ளடக்கம். தேர்தல்கள் மற்றும் பிற குடிமை செயல்முறைகள் உரிமைகளை மதிக்கும் சமூகங்களின் செயல்பாட்டில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன, மேலும் தகவல் கையாளுதலுக்கான தனித்துவமான இலக்குகளையும் முன்வைக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளைச் சுற்றியுள்ள தகவல் சூழலைப் பாதுகாக்க, குடிமைச் செயல்முறைகளுக்கு பின்வரும் வகையான அச்சுறுத்தல்களுக்குப் பொருந்த எங்கள் கொள்கைகளைச் செயல்படுத்துகிறோம்:

  • செயற்படும் முறை சார்ந்த குறுக்கீடு:முக்கிய தேதிகள் மற்றும் நேரங்கள் அல்லது பங்கேற்புக்கான தகுதித் தேவைகளை தவறாக சித்தரித்தல் போன்ற உண்மையான தேர்தல் அல்லது குடிமைச் செயல்முறைகள் தொடர்புடைய தவறானத் தகவல்.

  • பங்கேற்பு சார்ந்த குறுக்கீடு: தேர்தல் அல்லது குடிமைச் செயல்பாட்டில் பங்கேற்பதைத் தடுக்க தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது வதந்திகளைப் பரப்புவது ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடக்கம்.

  • மோசடியான அல்லது சட்டவிரோத பங்கேற்பு: குடிமைச் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக அல்லது சட்டவிரோதமாக வாக்குகளை சட்டத்திற்குப் புறம்பாக அளிக்க அல்லது வாக்குச்சீட்டை அழிப்பதற்கு மக்கள் தங்களைத் தவறாகச் சித்தரிக்க ஊக்குவிக்கும் உள்ளடக்கம்.

  • குடிமைச் செயல்முறைகளின் நெறியகற்றம்: தேர்தல் முடிவுகளைப் பற்றிய தவறான அல்லது தவறாக வழிநடத்தும் கூற்றுகளின் அடிப்படையில் ஜனநாயக நிறுவனங்களை நெறியகற்றுவதை நோக்கமாகக் கொண்ட உள்ளடக்கம், எடுத்துக்காட்டாக.


தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான எங்கள் கொள்கைகள் விரிவான தயாரிப்பு வடிவமைப்பு பாதுகாப்புகள் மற்றும் விளம்பர விதிகளுடன் இணைந்து செயல்படுகின்றன, அவை கட்டில்லாமல் பரவுவதைக் கட்டுப்படுத்துகின்றன, வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கின்றன மற்றும் எங்கள் தளம் முழுவதும் நம்பகத்தன்மையின் பங்கை உயர்த்துகின்றன. இந்த இலக்குகளை ஆதரிக்கும் வகையில் எங்கள் தளம் கட்டமைக்கப்பட்ட வழிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு இந்த வலைப்பதிவைப் பார்வையிடவும்.

2. மோசடி

மோசடியானது Snapchat பயனர்களை நிதி சார்ந்த பாதிப்பு, சைபர் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் சட்ட அபாயங்களுக்குக் கூட வெளிப்படுத்தும். இந்த ஆபத்துக்களைக் குறைக்க உதவ, எங்கள் சமூகத்தின் மீதான நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஏமாற்றுப் பழக்கங்களை நாங்கள் தடைசெய்கிறோம்.

தடைசெய்யப்பட்ட நடைமுறைகளில் அடங்குபவை: அனைத்து வகையான ஸ்கேம்களையும் ஊக்குவிக்கும் உள்ளடக்கம், கெட்-ரிச்-கிவிக் திட்டங்கள், அங்கீகரிக்கப்படாத அல்லது வெளிப்படுத்தப்படாத பணம் செலுத்தப்பட்ட அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம்; பலகட்டத்தில் சந்தைப்படுத்தல் அல்லது பிரமிட் திட்டங்கள்; மற்றும் கள்ளச் சரக்குகள் அல்லது ஆவணங்கள் உள்ளிட்ட மோசடிச் சரக்குகள் அல்லது சேவைகளின் விளம்பரம். நாங்கள் பணமோசடி செய்வதையும் (பணம் அனுப்புதல் அல்லது பணப்பரிமாற்றம் உட்பட) தடை செய்கிறோம். இதில் சட்டவிரோதமாக பெறப்பட்ட அல்லது வேறு ஒருவரின் சார்பாக அறியப்படாத ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட பணத்தைப் பெறுதல் மற்றும் மாற்றுதல், அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் அல்லது நாணய மாற்றுச் சேவைகள் மற்றும் இந்தச் சேவைகளை வேண்டுதல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவை அடங்கும்.

இறுதியாக, எங்களின் கொள்கைகள் நீங்கள் வேறு ஒருவராக (அல்லது வேறு ஒன்றாக) வேடம் போடுவதையோ அல்லது நீங்கள் யார் என்பது குறித்து மக்களை ஏமாற்ற முயற்சிப்பதையோ தடைசெய்கிறது. உங்கள் நண்பர்கள், சகாக்கள், பிரபலங்கள், பிராண்டுகள் அல்லது பிற நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதும் இதில் அடங்கும். இந்த விதிமுறைகள் Snapchat அல்லது Snap, Inc., பிராண்டிங்கைப் போல் நடப்பது ஒரு விதிமீறல் என்பதையும் குறிக்கிறது.


3. ஸ்பேம்

ஸ்பேம் ஆனது Snapchat பயனர்களுக்கு குழப்பமாகவும் மற்றும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கலாம். நாங்கள் அத்தகைய நடைமுறைகளைத் தடைசெய்கிறோம், இதில் பின்தொடர்பவர்களுக்கான ஊதியத் திட்டங்கள் அல்லது பிற பின்தொடர்பவர்-வளர்ச்சித் திட்டங்கள் போன்ற செயற்கையாக ஈடுபாட்டை ஊதிப் பெருக்குதல்; ஸ்பேம் பயன்பாடுகளை ஊக்குவித்தல்; அல்லது பெருமளவில், மீண்டும் மீண்டும் அல்லது அடிக்கடி இடுகையிடுதல் அல்லது பகிர்தல் உள்ளிட்டவை அடங்கும்.

தெரிந்து கொள்ளவேண்டியது

பொறுப்பான தகவல் சூழலை ஊக்குவிப்பதற்காக எங்களின் பங்களிப்பைச் செய்வது என்பது எங்கள் நிறுவனத்தின் முன்னுரிமையாக உள்ளது, தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது ஏமாற்றும் நடவடிக்கைகளின் அபாயங்களில் இருந்து Snapchat பயனர்களைப் பாதுகாக்க உதவும் புதுமையான அணுகுமுறைகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம்.

இந்த முயற்சிகளை நாங்கள் தொடரும் போது, எங்கள் அணுகுமுறையின் செயல்திறனின் வெளிப்படையாக நுணுக்கங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையின் மூலம், உலகளவில் தவறான தகவலுக்கு எதிராக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவலை நாடு வாரியாக வழங்குகிறோம், மேலும் எங்கள் எதிர்கால அறிக்கைகளில் இந்த மீறல்கள் குறித்த விரிவான கூடுதல் விளக்கங்களையும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அல்லது நடத்தையை எதிர்கொள்வதற்கான எங்கள் திறனை மேம்படுத்துவதற்காக எங்கள் கொள்கைகளின் செயல்பாட்டை அவ்வப்போது மறுசீரமைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் இந்த நோக்கங்களைப் பொறுப்புடன் முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்த உதவுவதற்காக உலகளாவிய பாதுகாப்புச் சமூகத்தின் பலதரப்பட்ட முன்னோடிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.