உங்கள் கணக்கில் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இரண்டையும் சேர்த்து, அவற்றைச் சரிபார்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்களைத் தொடர்புகொள்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் எங்களுக்குக் கிடைக்கும், மேலும் நீங்கள் தான் (வேறு ஒருவர் அல்ல!) என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நாங்கள் உறுதிப்படுத்த முடியும். நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றினால், உங்கள் மின்னஞ்சல் கணக்கின் அணுகலை இழந்தால் அல்லது உங்கள் கடவுச்சொல்லை மாற்ற விரும்பினால், இது மிக முக்கியமாகும். உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்ப்பது எப்படி என்பது குறித்த வழிமுறைகளை இங்கு பார்வையிடுங்கள்.
மாறாக, உங்களுக்குச் சொந்தமில்லாத தொலைபேசி எண்ணையோ மின்னஞ்சல் முகவரியையோ உங்கள் Snapchat கணக்கில் சேர்க்க வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கை மற்றவர்கள் அணுகலாம். உங்கள் கணக்கில் யாரேனும் தங்கள் தொலைபேசி எண்ணையோ மின்னஞ்சல் முகவரியையோ சேர்க்கும்படி கேட்டால், எங்களுக்குத் தெரிவியுங்கள்.