ஜூன் 20, 2025
ஜூலை 1, 2025
Snap-இன் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய கண்ணோட்டங்களைத் தெரிவிக்க, இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கையை ஆண்டுக்கு இருமுறை வெளியிடுகிறோம். பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான எங்கள் உறுதியேற்பின் ஒரு பகுதியாக, நாங்கள் எங்கள் உள்ளடக்க பரிசோதனை, சட்ட அமலாக்க செயல்பாடுகள், மற்றும் Snapchat சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக ஆழமான கவனம் செலுத்தும் பல பங்குதாரர்களுக்காக இந்த அறிக்கைகளை மேலும் விரிவான மற்றும் தகவல் செறிந்ததாகவும் மாற்ற தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.
இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கை 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கானது (ஜூலை 1 - டிசம்பர் 31). பயனர்களின் அறிக்கைகள் மற்றும் Snap -ஆல் முன்கூட்டியே கண்டறிதல்; சமூக வழிகாட்டுதல்களின் விதிமீறல்களின் குறிப்பிட்ட வகைப்பிரிவுகளில் எங்கள் பாதுகாப்பு குழுக்களின் அமலாக்கங்கள்; சட்ட அமலாக்கம் மற்றும் அரசாங்கங்களின் கோரிக்கைகளுக்கு நாங்கள் எவ்வாறு பதிலளித்தோம்; மற்றும் பதிப்புரிமை மற்றும் வணிகமுத்திரை மீறல் அறிவிப்புகளுக்கு நாங்கள் எவ்வாறு பதிலளித்தோம் ஆகியவற்றைப் பற்றிய உலகளாவிய தரவுகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இணைக்கப்பட்ட பக்கங்களின் தொடரில் நாடு சார்ந்த கண்ணோட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம்.
Snapchat -இல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கான கூடுதல் வளங்களைக் கண்டறிய, பக்கத்தின் கீழே எங்களின் வெளிப்படைத்தன்மை அறிக்கையிடல் பற்றி என்ற டேப்-ஐ பார்க்கவும்.
இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கையின் மிகவும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ஆங்கிலப் பதிப்பு என்பதை நினைவில் கொள்க.
எங்கள் சமூக வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதற்காக எங்கள் டரஸ்ட் & சேஃப்டி டீம்ஸ் இன் செயல்பாடுகளின் கண்ணோட்டம்
இந்த அறிக்கையின் பின்வரும் பிரிவுகளில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, எங்கள் பாதுகாப்புக் குழுக்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை முன்கூட்டியே (தானியங்கி கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம்) மற்றும் எதிர்வினையாற்றும் விதமாக (புகார்களுக்குப் பதிலளிக்கும் விதமாக) அமலாக்குகின்றன. இந்தப் புகாரளிப்புச் சுழற்சியில் (H2 2024), எங்கள் பாதுகாப்புக் குழுக்கள் பின்வரும் எண்ணிக்கைகளில் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தன:
மொத்த அமலாக்கங்கள்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
10,032,110
5,698,212
சமூக வழிகாட்டுதல்களின் மீறல் வகைகளைப் பொறுத்து விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில், மீறலை (முன்கூட்டியே அல்லது புகாரை பெற்றவுடன்) கண்டறியப்பட்ட நேரத்துக்கும், அதற்கான சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரத்துக்கும் இடையிலான மத்திய காலத்தைச் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது:
கொள்கைக் காரணம்
மொத்த அமலாக்கங்கள்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
கண்டறிதல் முதல் இறுதிச் செயல் வரை சராசரி திருப்ப நேரம் (நிமிடங்கள்)
பாலியல் உள்ளடக்கம்
3,860,331
2,099,512
2
குழந்தை பாலியல் சுரண்டல்
961,359
577,682
23
துன்புறுத்தல் மற்றும் தொந்தரவளித்தல்
2,716,966
2,019,439
7
அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை
199,920
156,578
8
சுய தீங்கு மற்றும் தற்கொலை
15,910
14,445
10
தவறான தகவல்
6,539
6,176
1
ஆள்மாறாட்டம்
8,798
8,575
2
வேண்டாத மின்னஞ்சல்
357,999
248,090
1
போதை மருந்துகள்
1,113,629
718,952
6
ஆயுதங்கள்
211,860
136,953
1
பிற ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள்
247,535
177,643
8
வெறுப்பைத் தூண்டும் பேச்சு
324,478
272,025
27
பயங்கரவாதம் & வன்முறை தீவிரவாதம்
6,786
4,010
5
புகாரளிக்கும் காலத்தில், 0.01 சதவிகிதம் மீறும் பார்வை விகிதத்தை (VVR) பார்த்தோம், அதாவது Snapchat இல் ஒவ்வொரு 10,000 Snap மற்றும் கதைப் பார்வைகளிலும், 1 உள்ளடக்கம் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சமூக வழிகாட்டுதல்கள் மீறல்கள் எங்களின் ட்ரஸ்ட் & சேஃப்டி டீம்ஸ்க்கு தெரிவிக்கப்பட்டது
ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை, எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக செயலியில் வந்த புகார்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, Snap-இன் பாதுகாப்புக் குழுக்கள் உலகளவில் மொத்தம் 6,346,508 அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தன, இதில் 4,075,838 தனிப்பட்ட கணக்குகளுக்கு எதிரான அமலாக்கங்களும் அடங்கும். எங்களின் பாதுகாப்பு குழுக்கள் அந்தப் புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அமலாக்க நடவடிக்கை எடுப்பதற்கான சராசரி நேரம் ~6 நிமிடங்களாக இருந்தன. புகாரளிக்கும் ஒவ்வொரு வகைப்பிரிவுக்கான தனித்தனி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மொத்த உள்ளடக்கம் மற்றும் கணக்கு அறிக்கைகள்
மொத்த அமலாக்கங்கள்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
19,379,848
6,346,508
4,075,838
கொள்கைக் காரணம்
உள்ளடக்கம் மற்றும் கணக்கு அறிக்கைகள்
மொத்த அமலாக்கங்கள்
Snap செயல்படுத்திய மொத்த அறிக்கைகளின் %
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
கண்டறிதல் முதல் இறுதிச் செயல் வரை சராசரி திருப்ப நேரம் (நிமிடங்கள்)
பாலியல் உள்ளடக்கம்
5,251,375
2,042,044
32.20%
1,387,749
4
குழந்தை பாலியல் சுரண்டல்
1,224,502
469,389
7.40%
393,384
133
துன்புறுத்தல் மற்றும் தொந்தரவளித்தல்
6,377,555
2,702,024
42.60%
2,009,573
7
அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை
1,000,713
156,295
2.50%
129,077
8
சுய தீங்கு மற்றும் தற்கொலை
307,660
15,149
0.20%
13,885
10
தவறான தகவல்
536,886
6,454
0.10%
6,095
1
ஆள்மாறாட்டம்
678,717
8,790
0.10%
8,569
2
வேண்டாத மின்னஞ்சல்
1,770,216
180,849
2.80%
140,267
1
போதை மருந்துகள்
418,431
244,451
3.90%
159,452
23
ஆயுதங்கள்
240,767
6,473
0.10%
5,252
1
பிற ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள்
606,882
199,255
3.10%
143,560
8
வெறுப்பைத் தூண்டும் பேச்சு
768,705
314,134
4.90%
263,923
27
பயங்கரவாதம் & வன்முறை தீவிரவாதம்
197,439
1,201
<0.1%
1,093
4
முந்தைய அறிக்கையிடல் காலத்துடன் ஒப்பிடும்போது, அனைத்துப் பாலிசி வகைகளிலும் சராசரி டர்ன்அரவுண்ட் நேரங்களைச் சராசரியாக 90% குறைத்துள்ளோம். இந்தக் குறைப்பு பெருமளவு எங்கள் மீளாய்வுத் திறனை விரிவுபடுத்துவதற்கும், தீங்கின் தீவிரத்தின் அடிப்படையில் அறிக்கைகளை முன்னுரிமைப்படுத்தலை மேம்படுத்துவதற்குமான ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக இருந்தது. அறிக்கையிடல் காலத்தில் எங்கள் பாதுகாப்பு முயற்சிகளில் பல இலக்கு மாற்றங்களையும் செய்தோம், அவை இங்கு அறிக்கையிடப்பட்ட தரவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தின, இதில் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் பயனர்பெயர்கள் மற்றும் காட்சிப் பெயர்களுக்கான கணக்குகளைச் செயல்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளின் விரிவாக்கம், Snapchat-இல் சமூகங்களுக்கான அதிகரித்த அறிக்கையிடல் மற்றும் பாதுகாப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் குரல் குறிப்புகள் போன்ற கூடுதல் வகை ஊடகங்களுக்கான அறிக்கையிடலை நேரடியாகச் செயலியில் அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
முந்தைய அறிக்கையிடல் காலத்துடன் ஒப்பிடும்போது, இந்த மாற்றங்களும், பிற பாதுகாப்பு முயற்சிகளும், வெளிப்புற சக்திகளும், குறிப்பாக சில கொள்கைப் பகுதிகளைப் பாதித்தன. இந்தக் கொள்கை வகைப்பிரிவுகளில் பின்வருவன அடங்கும்: சந்தேகிக்கப்படும் குழந்தைப் பாலியல் சுரண்டல் & துஷ்பிரயோகம் (CSEA), தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்கள் மற்றும் வேண்டாத செய்தி ஆகியவை தொடர்பான உள்ளடக்கம். குறிப்பாக:
CSEA: 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், நாங்கள் CSEA தொடர்பான அறிக்கைகளில் 12% குறைவைக் கண்டோம், மேலும் அறிக்கையிடப்பட்ட CSEA-க்குப் பதிலளிப்பதற்கான எங்கள் சராசரி டர்ன்அரவுண்ட் நேரத்தை 99% குறைத்தோம். இந்தப் போக்குகள் பெரும்பாலும் எங்கள் முனைப்பான கண்டறிதல் முயற்சிகளில் உள்ள தொடர்ச்சியான முன்னேற்றங்களால் வழிநடத்தப்படுகின்றன, இது CSEA உள்ளடக்கத்தை எங்களுக்குத் தெரிவிப்பதற்கு முன்பே அகற்றவும், CSEA பற்றிய அறிக்கைகளை மீளாய்வு செய்து நடவடிக்கை எடுக்க எங்கள் செயல்முறைகளில் நாங்கள் செய்த மேம்பாடுகளை மிகவும் திறமையாக செய்யவும் உதவியது. இந்த மேம்பாடுகள் இருந்தாலும், எங்கள் CSEA டர்ன்அரவுண்ட் நேரம் மற்ற கொள்கைப் பகுதிகளை விட அதிகமாக உள்ளது, ஏனெனில் உள்ளடக்கம் சிறப்புப் பயிற்சி பெற்ற முகவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுடன் இரட்டை மீளாய்வை உள்ளடக்கிய ஒரு சிறப்புச் செயல்முறைக்கு உட்பட்டது.
தீங்கு நிறைந்த தவறான தகவல்கள்: நவம்பர் 2024 அமெரிக்கத் தேர்தல் உட்பட அரசியல் நிகழ்வுகளால் முதன்மையாக இயக்கப்படும் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல் தொடர்பான அறிக்கைகளின் அளவு 26% அதிகரித்ததை நாங்கள் கண்டோம்.
வேண்டாத செய்தி: இந்த அறிக்கையிடல் காலத்தில், சந்தேகத்திற்குரிய வேண்டாத செய்தி தொடர்பான புகார்களுக்குப் பதிலளிக்கும் விதமாக மொத்த அமலாக்கங்களில் ~50% குறைவையும், செயல்படுத்தப்பட்ட மொத்த தனிப்பட்ட கணக்குகளில் ~46% குறைவையும் கண்டோம், இது எங்கள் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அமலாக்கக் கருவிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கிறது. கணக்கு சமிக்ஞைகள் மூலம் வேண்டாத செய்தியைக் குறிவைத்து, தளத்தில் வேண்டாத செய்திகளை அனுப்புபவர்களை விரைவில் அகற்றுவதற்கான எங்கள் முயற்சிகளின் தொடர்ச்சியாக இது உள்ளது. கடந்த அறிக்கையிடல் காலத்தில் இந்த முயற்சி ஏற்கனவே நடந்து கொண்டிருந்தது, அந்த நேரத்தில் வேண்டாத செய்திகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட மொத்த அமலாக்கங்களும் மொத்த தனித்துவமான கணக்குகளும் முறையே ~65% மற்றும் ~60% குறைந்தது.
எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் மீறல்களை முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகள்
எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மீறப்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து, சில சந்தர்ப்பங்களில், அவற்றுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்க நாங்கள் தானியங்கிக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். இந்தக் கருவிகளில் ஹாஷ்-மேட்சிங் தொழில்நுட்பம் (PhotoDNA மற்றும் Google-இன் குழந்தை பாலியல் துஷ்பிரயோக உளக்காட்சி (CSAI) Match உட்பட), Google-இன் உள்ளடக்கப் பாதுகாப்பு API மற்றும் தவறான உரை மற்றும் ஊடகத்தைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட பிற தனிப்பயனான தொழில்நுட்பம், சில நேரங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் ஆகியவை உள்ளடங்குகின்றன.
2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், தானியங்கி கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் மீறல்களை முன்கூட்டியே கண்டறிந்த பிறகு பின்வரும் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தோம்:
மொத்த அமலாக்கங்கள்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
3,685,602
1,845,125
கொள்கைக் காரணம்
மொத்த அமலாக்கங்கள்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
கண்டறிதல் முதல் இறுதிச் செயல் வரை சராசரி திருப்ப நேரம் (நிமிடங்கள்)
பாலியல் உள்ளடக்கம்
1,818,287
828,590
<1
குழந்தை பாலியல் சுரண்டல்
491,970
188,877
1
துன்புறுத்தல் மற்றும் தொந்தரவளித்தல்
14,942
11,234
8
அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை
43,625
29,599
9
சுய தீங்கு மற்றும் தற்கொலை
761
624
9
தவறான தகவல்
85
81
10
ஆள்மாறாட்டம்
8
6
19
வேண்டாத மின்னஞ்சல்
177,150
110,551
<1
போதை மருந்துகள்
869,178
590,658
5
ஆயுதங்கள்
205,387
133,079
<1
பிற ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள்
48,280
37,028
9
வெறுப்பைத் தூண்டும் பேச்சு
10,344
8,683
10
பயங்கரவாதம் & வன்முறை தீவிரவாதம்
5,585
2,951
21
Combatting Child Sexual Exploitation & Abuse
எங்கள் சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரையும், குறிப்பாக சிறார்களை பாலியல் சுரண்டல் செய்வது சட்டவிரோதமானது, வெறுக்கத்தக்கது மற்றும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களால் தடைசெய்யப்பட்டுள்ளது. எங்கள் தளத்தில் CSEA-ஐத் தடுப்பது, கண்டறிவது, ஒழிப்பது Snap-இன் முதன்மை இலக்காகும், இவற்றையும் பிற வகைக் குற்றங்களையும் எதிர்ப்பதற்கான எங்கள் திறன்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துகிறோம்.
CSEA தொடர்பான உள்ளடக்கத்தை அடையாளம் காண உதவும் செயல்நிலைத் தொழில்நுட்பக் கண்டறிதல் கருவிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தக் கருவிகளில் ஹாஷ்-மேட்சிங் கருவிகள் (PhotoDNA மற்றும் Google-இன் CSAI Match உட்பட, முறையே CSEA-இன் அறியப்பட்ட சட்டவிரோதமான படங்கள் மற்றும் காணொளிகளை அடையாளம் காண்பதற்கானவை) மற்றும் Google உள்ளடக்கப் பாதுகாப்பு API (புதிய, "இதற்கு முன் ஒருபோதும் ஹேஷ் செய்யப்படாத" சட்டவிரோதமான படங்களை அடையாளம் காண்பதற்கானது) ஆகியவை அடங்கும். கூடுதலாக, சில சந்தர்ப்பங்களில், சந்தேகிக்கப்படும் பிற CSEA செயல்பாட்டுக்கு எதிராக அமல்படுத்த நடத்தைசார் சமிக்ஞைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். CSEA தொடர்பான உள்ளடக்கத்தை, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான யு.எஸ். நேஷனல் சென்டருக்கு (NCMEC), சட்டப்படி நாங்கள் புகாரளிக்கிறோம். பின்னர் NCMEC, தேவைக்கேற்ப உள்நாட்டு அல்லது சர்வதேச சட்ட அமலாக்கத்துடன் ஒருங்கிணைக்கிறது.
2024-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், Snapchat -இல் CSEA-ஐ அடையாளம் கண்டறிந்து (முன்னெச்சரிக்கையாக அல்லது ஒரு புகாரை பெற்றவுடன்) பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தோம்:
செயற்படுத்திய மொத்த உள்ளடக்கம்
முடக்கிய மொத்த கணக்குகள்
NCMEC-க்கான மொத்த சமர்ப்பிப்புகள்*
1,228,929
242,306
417,842
*NCMEC க்கு சமர்பிக்கப்படும் ஒவ்வொரு உள்ளடக்கமும் பல துண்டுகளாகவும் முடியும் என்பதை நினைவில் கொள்க. NCMEC-க்குச் சமர்ப்பிக்கப்படும் மொத்த தனிப்பட்ட ஊடகத் துண்டுகள், அமலாக்க நடவடிக்கையெடுக்கப்பட்ட எங்கள் மொத்த உள்ளடக்கத்திற்குச் சமமாகும்.
தேவைப்படும் Snapchat பயனர்களுக்கு வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகள்
தேவைப்படும் Snapchat பயனர்களுக்கு வளங்களையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம், கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவ Snapchat நண்பர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
எங்கள் Here For You தேடல் கருவியானது மனநலம், பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள், துக்கம் மற்றும் கொடுமைப்படுத்துதல் தொடர்பான சில தலைப்புகளைத் தேடும்போது, நிபுணர்களிடமிருந்து வளஆதாரங்களை வழங்குகிறது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், நிதி சார்ந்த பாலியல் மிரட்டல், மற்றும் பாலியல் அபாயங்கள் மற்றும் தீங்குகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்தையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் உலகளாவிய பாதுகாப்பு வளங்களின் பட்டியல் அனைத்துப் Snapchat பயனர்களுக்கும் எங்கள் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் கொள்கை மையத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கின்றது.
எங்கள் பாதுகாப்புக் குழுக்கள் ஒரு Snapchat பயனர் துயரத்தில் இருப்பதை அறிந்தால், சுய-தீங்கு தடுப்பு மற்றும் ஆதரவு வளஆதாரங்களை வழங்கவும், தேவைக்கேற்ப அவசர சேவைகளுக்குத் தெரியப்படுத்தவும் தயாராக உள்ளனர். நாங்கள் பகிரும் அந்த ஆதாரங்கள் எங்களின் உலகளாவிய பாதுகாப்பு ஆதாரங்களின் பட்டியலில் உள்ளன, மேலும் இவை அனைத்து Snapchat பயனர்களுக்குக் கிடைக்கும்.
பகிரப்பட்ட தற்கொலை ஆதாரங்களின் மொத்த எண்ணிக்கை
64,094
மேல்முறையீடுகள்
2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்கள் கணக்கைப் பூட்டுவதற்கான எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரிய பயனர்களிடமிருந்து நாங்கள் பெற்ற மேல்முறையீடுகள் பற்றிய தகவல்களைக் கீழே வழங்குகிறோம்:
கொள்கைக் காரணம்
மொத்த முறையீடுகள்
மொத்த மறுசீரமைப்புகள்
உறுதிசெய்யப்பட்ட மொத்த முடிவுகள்
முறையீடுகளைச் செயலாக்குவதற்கான இடைநிலை முடிப்பு நேரம் (நாட்கள்)
மொத்தம்
493,782
35,243
458,539
5
பாலியல் உள்ளடக்கம்
162,363
6,257
156,106
4
குழந்தை பாலியல் சுரண்டல்
102,585
15,318
87,267
6
துன்புறுத்தல் மற்றும் தொந்தரவளித்தல்
53,200
442
52,758
7
அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை
4,238
83
4,155
5
சுய தீங்கு மற்றும் தற்கொலை
31
1
30
5
தவறான தகவல்
3
0
3
<1
ஆள்மாறாட்டம்
847
33
814
7
வேண்டாத மின்னஞ்சல்
19,533
5,090
14,443
9
போதை மருந்துகள்
133,478
7,598
125,880
4
ஆயுதங்கள்
4,678
136
4,542
6
பிற ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள்
9,153
168
8,985
6
வெறுப்பைத் தூண்டும் பேச்சு
3,541
114
3,427
7
பயங்கரவாதம் & வன்முறை தீவிரவாதம்
132
3
129
9
பிராந்தியம் மற்றும் நாடு பற்றிய மேலோட்டம்
இந்தப் பிரிவு, புவியியல் பகுதிகளின் மாதிரியாக்கத்தில், முன்கூட்டியே மற்றும் செயலியில் ஏற்படும் மீறல்கள் குறித்த புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக, எங்கள் சமூக வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த எங்கள் பாதுகாப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் குறித்த கண்ணோட்டத்தை வழங்குகிறது. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் Snapchat -இல் உள்ள அனைத்து உள்ளடக்கத்திற்கும்— இடங்கருதாது—உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து Snapchat பயனர்களுக்கும் பொருந்தும்.
அனைத்து EU உறுப்பு நாடுகள் உட்பட தனிப்பட்ட நாடுகளுக்கான தகவல்கள், இணைக்கப்பட்ட CSV கோப்பு வழியாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.
பிராந்தியம்
மொத்த அமலாக்கங்கள்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
வட அமெரிக்கா
3,828,389
2,117,048
ஐரோப்பா
2,807,070
1,735,054
உலகின் பிற பகுதிகள்
3,396,651
1,846,110
மொத்தம்
10,032,110
5,698,212
பிராந்தியம்
உள்ளடக்கம் மற்றும் கணக்கு அறிக்கைகள்
மொத்த அமலாக்கங்கள்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
வட அமெரிக்கா
5,916,815
2,229,465
1,391,304
ஐரோப்பா
5,781,317
2,085,109
1,378,883
உலகின் பிற பகுதிகள்
7,681,716
2,031,934
1,319,934
மொத்தம்
19,379,848
6,346,508
4,090,121
மொத்த அமலாக்கங்கள்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
1,598,924
837,012
721,961
417,218
1,364,717
613,969
3,685,602
1,868,199
விளம்பர கட்டுப்பாடு
அனைத்து விளம்பரங்களும் எங்கள் விளம்பரக் கொள்கைகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதி செய்வதில் Snap முழு உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது. அனைத்து Snapchat பயனர்களுக்கும் பாதுகாப்பான அனுபவத்தை உருவாக்கி, விளம்பரப்படுத்துவதில் பொறுப்பான அணுகுமுறையை நாங்கள் நம்புகிறோம். அனைத்து விளம்பரங்களும் எங்கள் மதிப்பாய்வுக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டவை. கூடுதலாக, பயனர் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் விளம்பரங்களை நீக்குவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம்.
கீழே, Snapchatல் வெளியிடப்பட்ட பிறகு எங்களுக்கு அறிவிக்கப்படும் செலுத்தப்பட்ட விளம்பரங்களுக்கான எங்கள் மிதமாக்கல் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்களை சேர்த்துள்ளோம். Snapchat இல் உள்ள விளம்பரங்கள் பல்வேறு காரணங்களுக்காக அகற்றப்படலாம், அவை Snap இன் விளம்பரக் கொள்கைகளில் விவரிக்கப்பட்டுள்ளன, இதில் ஏமாற்றும் உள்ளடக்கம், பெரியவர்களுக்கு உரிய உள்ளடக்கம், வன்முறை அல்லது கலங்க வைக்கும் உள்ளடக்கம், வெறுப்பு பேச்சு மற்றும் அறிவுசார் சொத்துக்குரிய மீறல்கள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, நீங்கள் இப்போதுSnapchat-இன் விளம்பர கேலரியை Snap-இன் வெளிப்படைத்தன்மை மையத்தில் காணலாம், இதை வழிசெலுத்தல் பட்டி வழியாக நேரடியாக அணுகலாம்.
புகார்செய்யப்பட்ட மொத்த விளம்பரங்கள்
நீக்கப்பட்ட மொத்த விளம்பரங்கள்
43,098
17,833


