Privacy, Safety, and Policy Hub
பாலிசி மையம்

பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்கள்

படைப்பாளரின் நண்பர்கள் அல்லது சந்தாதாரர்களைத் தாண்டி அல்காரிதம் சார்ந்த பரிந்துரைகளுக்குத் தகுதிபெற (எடுத்துக்காட்டாக, கதைகள், ஸ்பாட்லைட் அல்லது வரைபடம் ஆகியவற்றில்), உள்ளடக்கமானது இந்தப் பக்கத்தில் உள்ளடக்க வழிகாட்டுதல்களில் விவரிக்கப்பட்ட கூடுதல், கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் எங்கே பொருந்தும்?

Snapchat என்பது முதன்மையாக ஒரு காட்சி சார்ந்த செய்தியிடல் செயலியாகும். மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அல்காரிதம் சார்ந்த பரிந்துரைகளின் மூலமாக பொது உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும் பகுதிகளும் இந்தச் செயலியில் உள்ளன. அத்தகைய உள்ளடக்கம் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கம் என வரையறுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டிற்கு:

  • கதைகள் தாவலில், Snapchat பயனர்கள் தொழில்முறை ஊடகக் கூட்டாளர்கள் மற்றும் பிரபலமான படைப்பாளர்களின் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காணலாம்.

  • ஸ்பாட்லைட்டில், Snapchat பயனர்கள் எங்கள் சமூகத்தால் உருவாக்கி சமர்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கலாம்.

  • வரைபடத்தில், Snapchat பயனர்கள் உலகெங்கிலும் இருந்து நிகழ்வுகள், பரபரப்பான செய்திகள் மற்றும் பலவற்றின் Snapகளைப் பார்க்கலாம்.

இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன?

தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்பாய்வு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி கண்காணிப்பதன் மூலம் இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களை நாங்கள் அமல்படுத்துகிறோம். Snapchat பயனர்கள் ஆட்சேபனைக்குறியதாகக் நினைக்கும் உள்ளடக்கத்தை புகாரளிக்க நாங்கள் செயலியினுள் கருவிகளை வழங்குகிறோம். பயனர் புகார்களுக்கு நாங்கள் விரைவாக பதிலளிக்கிறோம், மற்றும் அனைத்து Snapchat பயனர்களுக்கும் உள்ளடக்க அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் கருத்துக்களைப் பயன்படுத்துகிறோம்.

இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களில் பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதிபெறுவதற்கான வழிகாட்டுதல்கள் கூட்டாளர், தனிப்பட்ட படைப்பாளர் அல்லது ஏதேனும் நிறுவன வகை என எந்தவொரு மூலத்திலிருந்து வந்த உள்ளடக்கத்திற்கும் சமமாகப் பொருந்தும்.

Snap இன் உரிமைகளை தக்கவைத்தல்

எங்கள் விருப்பப்படி இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தவும் அவற்றை அமல்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கையை எடுக்கவும் நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். இதில் பிற விஷயங்களுடன் அகற்றுதல், பகிர்வை வரம்பிடுதல், இடைநீக்கம் செய்தல், விளம்பரத்தை வரம்பிடுதல் அல்லது உங்கள் உள்ளடக்கத்திற்கு வயதுக் கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியன அடங்கும்.

எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் அல்லது சேவை நிபந்தனைகள் ஆகியவற்றை மீறும் படைப்பாளர்கள் அல்லது கூட்டாளர்கள் இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களை மீறல் செய்ததாகக் கருதப்படுவார்கள்.

கூடுதலாக, அணைத்து உள்ளடக்கமும் எங்கு பகிரப்பட்டாலும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கும் உங்களுடன் எங்களின் உள்ளடக்க ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும். மேற்குறிப்பிட்டவை மீறப்பட்டதாக நாங்கள் கருதும் இடங்களில், மீறிய அந்த உள்ளடக்கத்தை அகற்ற நாங்கள் அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளோம்.