Snap Values

ஆராய்ச்சியாளர் தரவு அணுகல் வழிமுறைகள்

நோக்கம் மற்றும் செயல்முறை கண்ணோட்டம்

நீங்கள் வணிகம் சாராத நோக்கங்கள் கொண்ட ஓர் ஆராய்ச்சியாளராக இருந்து, டிஜிட்டல் சேவைச் சட்டத்திற்கு (DSA) ஏற்ப Snapchat தரவிற்கான அணுகலைக் கோர விரும்பினால், நீங்கள் ஐரோப்பிய கமிஷனால் பராமரிக்கப்படும் DSA தரவு அணுகல் போர்ட்டலைப் பயன்படுத்தி உங்கள் ஆராய்ச்சிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

DSA தரவு அணுகல் போர்ட்டல் மூலம் தரவு அணுகல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், அந்தக் கோரிக்கை டச்சு டிஜிட்டல் சேவைகள் ஒருங்கிணைப்பாளரால் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆராயப்படும். ஒப்புதலளிக்கப்பட்டதும் அந்தக் கோரிக்கை Snapக்கு அனுப்பி வைக்கப்படும்.

தயவுசெய்து கவனிக்க, மேற்குறிப்பிட்ட போர்ட்டல் மூலம் சமர்ப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் சேவைகள் ஒருங்கிணைப்பாளரால் மதிப்பாய்வு செய்து ஒப்புதலளிக்கப்பட்ட தரவு அணுகல் கோரிக்கைகள் மட்டுமே செயலாக்கப்படும்.

Snap DSA தரவுப் பட்டியல்

தரவுக் கட்டமைப்பு மற்றும் மெட்டாடேட்டாவுடன் அணுக்கக்கூடிய தரவுச் சொத்துகள் பற்றிய விளக்கத்தைக் கீழே காணலாம்:

  1. ஸ்பாட்லைட் உள்ளடக்கம்

    • பயனர் அடையாளத்தகவல்

    • சமர்ப்பிப்பு தேதி

    • நாடு 

    • ஈடுபாட்டுத் தரவு

    • உள்ளடக்க ஐடி

    • பொது இணைப்பு

  2. பொதுக் கதை உள்ளடக்கம்

    • நாடு

    • பயனர் அடையாளத்தகவல்

    • சமர்ப்பிப்பு தேதி

    • உள்ளடக்க ஐடி

    • பொது இணைப்பு

  3. வரைபடக் கதை உள்ளடக்கம்

    • உள்ளடக்க ஐடி

    • பயனர் அடையாளத்தகவல்

    • சமர்ப்பிப்பு தேதி

    • நாடு 

    • ஈடுபாட்டுத் தரவு

    • பொது இணைப்பு

  4. ஸ்பாட்லைட் கருத்துகள்

    • உள்ளடக்க ஐடி

    • சமர்ப்பிப்பு தேதி

    • கருத்துச் சரம்

    • பயனர் அடையாளத்தகவல்

    • நாடு 

  5. பொதுச் சுயவிவரத் தரவு

    • பயனர் அடையாளத்தகவல்

    • ஈடுபாட்டுத் தரவு

    • பொது இணைப்பு

தரவு அணுகலின் நடைமுறை

Snap தரவு அணுகலுக்காகப் பாதுகாக்கப்பட்ட கிளவுட் சேமிப்பு இணைப்பை வழங்கும்.

Snap தொடர்புப் புள்ளி

இந்தச் செயல்முறை தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு பின்வரும் மின்னஞ்சல் முகவரி மூலம் ஆராய்ச்சியாளர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்: DSA-Researcher-Access[at]snapchat.com