எங்கள் விளம்பரங்களை பொருத்தமானவையாக உருவாக்க, உங்களுக்கு சரியான விளம்பரங்களை சரியான நேரத்தில் காட்ட முயல உங்களைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ளும் தகவல் மற்றும் எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இதன் அர்த்தம், நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் உங்கள் ஆர்வங்கள் என நாங்கள் நினைப்பவை, எங்கள் தளத்தில் உங்கள் செயல்பாடு மற்றும் உங்களைப் பற்றி எங்கள் கூட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் வழங்கும் தகவல்கள் ஆகியவற்றால் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன.
நாங்கள் சேகரிக்கும் அல்லது பெறும் ஒவ்வொரு வகையானத் தகவலும் எங்களின் விளம்பரங்கள் அமைப்பின் மீது தாக்கம் விளைவிப்பவை மற்றும் சில வகைகள் மற்றவற்றை விட அதிக முக்கியத்துவம் கொண்டவை. ஒவ்வொரு விளம்பரமும் விளம்பரதாரரால் உருவாக்கப்பட்ட அதன் சொந்த இலக்கு மற்றும் உகந்ததாக்க அமைப்புகளைக் கொண்டுள்ளதால், நிறைகள் (கீழே கோடிட்டு காட்டியுள்ளவாறு) அந்த அமைப்புகளின் விளைவாக மாறுபடலாம்.
தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் எங்களது விளம்பர அமைப்புக்களில் அவற்றின் பொது ஒப்பீட்டு முக்கியத்துவம் (அடைப்புக்குறிகளுக்குள் வழங்கப்பட்டவை) உட்பட நாங்கள் சேகரிக்கும் முக்கிய வகையான தகவல்களானவை:
நாங்கள் உங்களிடமிருந்து நேரடியாகப் பெறும் தகவல்
கணக்குப் பதிவுத் தகவல். நீங்கள் Snapchat-க்குப் பதிவுசெய்யும் போது, உங்களைப் பற்றிய சில தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.
வயது. (அதிக முக்கியத்துவம்) நீங்கள் உங்கள் பிறந்த நாளை எங்களுக்கு வழங்குகிறீர்கள், அதை நாங்கள் உங்கள் வயதைத் தீர்மானிக்கப் பயன்படுத்துகிறோம் (மற்றும் உங்கள் அமைப்புகளைச் சார்ந்து, உங்கள் நண்பர்கள் உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூற அனுமதிப்பது போன்ற பிற வேடிக்கையான அனுபவங்களுக்கும் வழிவகுக்கிறது!). கீழே மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் வயதை நாங்கள் அனுமானிக்க முற்படுகிறோம், இது பிற விஷயங்களுடன் கூடவே விளம்பரங்கள் சரியான மற்றும் பொருத்தமான பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்பை அதிகரிக்க கூடுதல் வழியாகும்.
நாடு/மொழி. (அதிக முக்கியத்துவம்) நீங்கள் வசிக்கும் நாடு மற்றும் உங்களுக்கு விருப்பமான மொழி ஆகியவற்றை பல காரணங்களுக்காகச் சேகரிக்கிறோம், அவை உள்ளூர் மயமாக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் சேவைகளை Snapchat உங்களுக்கு வழங்க அனுமதிப்பது, உங்கள் இடம் மற்றும் மொழிக்குப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்கு வழங்குவது மற்றும் உங்களுக்கு நாங்கள் காட்டும் விளம்பரங்கள் உங்கள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வது ஆகியவையாகும். இந்த நோக்கங்களுக்காக உங்கள் இருப்பிடத்தையும் (கீழே விவரிக்கப்பட்டுள்ளவாறு) நாங்கள் பயன்படுத்தலாம்.
Snapchat-இல் உங்கள் செயல்பாடு
கேமரா, கதைகள், Snap வரைபடம், ஸ்பாட்லைட், Snapகள், லென்ஸஸ், My AI (My AI மற்றும் விளம்பரங்கள் குறித்த அதிகத் தகவல்களுக்கு கீழே பார்க்கவும்) மற்றும் Snapchat-இல் உள்ள பிற உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கும்போது அல்லது அவற்றைப் பயன்படுத்தும்போது, உங்களுக்கு எதில் ஆர்வம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்கிறோம் (சில சமயங்களில் ஊகிக்கிறோம்). எடுத்துக்காட்டாக, நீங்கள் கூடைப்பந்து பற்றி அதிகமாக ஸ்பாட்லைட் Snapகளை பார்த்தால் அல்லது உருவாக்கினால், நாங்கள் உங்களுக்கு தொழில்முறை கூடைப்பந்து நுழைவுச்சீட்டுகளுக்கான ஒரு விளம்பரத்தைக் காட்டலாம்.
Snapchat-இல் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் நாங்கள் பிற விஷயங்களையும் அனுமானிக்கிறோம், இவை கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, பிற ஆதாரங்களில் இருந்து நாங்கள் சேகரிக்கும் தகவலின் மூலம் தெரிவிக்கப்படலாம். அனுமானங்களில் அடங்குபவை:
வயது. (அதிக முக்கியத்துவம்) உதாரணமாக, நீங்கள் பதிவுசெய்யும் போது உங்கள் பிறந்தநாளை உள்ளிடும்போது, Snapchat-இல் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் உங்கள் வயதையும் நாங்கள் அனுமானிக்கிறோம் — இந்த அனுமானம் எங்கள் இளைய Snapchat பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்கள் வயதுத் தரவின் துல்லியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவினர் குறிப்பிட்ட விளம்பரத்தை அதிகம் ஏற்பார்கள் என்பதால் விளம்பரதாரர்கள் அவர்களுக்கு சில தயாரிப்புகளை சந்தைப்படுத்த விரும்பலாம் அல்லது விளம்பரம் பொருந்தாத அல்லது தொடர்புடையதாக இல்லாத குழுக்களை அவர்கள் தவிர்க்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் 21 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அமெரிக்காவில் உங்களுக்கு மதுபானங்களுக்கான விளம்பரங்களைக் காட்டமாட்டோம்.
பாலினக் குழு. (அதிக முக்கியத்துவம்) உங்கள் Bitmoji, பயனர்பெயர் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட பெயர், நண்பர் புள்ளிவிவரங்கள் மற்றும் Snapchat-இல் உங்கள் செயல்பாடு ஆகியவை உள்ளிட்ட பல சமிக்ஞைகளின் அடிப்படையில் உங்கள் பாலினக் குழுவையும் நாங்கள் அனுமானிக்கிறோம். உங்கள் ஆர்வங்களைத் தீர்மானிப்பது போலவே, அனுமானிக்கப்பட்ட உங்கள் பாலினக் குழு உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்கு காட்ட எங்கள் விளம்பரதாரர்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, ஒரு விளம்பரதாரர் ஒரு குறிப்பிட்ட பாலின உணர்வுடன் Snapchat பயனர்களுக்கு விளம்பரங்களைக் காட்ட விரும்பலாம், மேலும் அந்த கூட்டுறவுடன் மிக நெருக்கமாக தொடர்புடைய பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிப்பதில் உதவ அனுமானிக்கப்பட்ட பாலினக் குழுவைப் பயன்படுத்துகிறோம்.
ஆர்வங்கள். (அதிக முக்கியத்துவம்) எங்கள் விளம்பரங்களை முடிந்தளவு உங்களுக்குப் பொருந்தும் வகையில் உருவாக்க முயற்சிசெய்கிறோம், எனவே உங்கள் ஆர்வங்களைப் பற்றி அனுமானிக்கிறோம். உதாரணமாக, நீங்க பந்தய கார் ஓட்டுநர்களை பின்தொடர்கிறீர்கள், புதிய கார்கள் அல்லது பந்தயம் பற்றி பார்க்க அல்லது கதைகளை உருவாக்க நீங்கள் விரும்பினால் அல்லது பந்தய தொடர்புடைய கருவிகள்/பொருட்கள் Snapchat விளம்பரங்கள் மீது கிளிக் செய்தால், நீங்கள் "வாகன ஆர்வலர்" என நாங்கள் யூகிக்கலாம். இந்த ஊகங்களில் சிலவற்றை நாங்கள் "வாழ்க்கைமுறை வகைகள்" என்று அழைக்கிறோம், மேலும் Snapchat-இல் உங்களைப் பற்றி நாங்கள் யூகித்தவற்றை வாழ்க்கைமுறை வகைகளில் மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் அந்த வாழ்க்கைமுறை வகைகளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றலாம் அல்லது அழிக்கலாம். உங்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய உள்ளடக்கத்தை உங்களுக்குக் கட்ட எங்களுக்கு உதவுகின்ற உங்கள் ஆர்வங்களையும் நாங்கள் அனுமானிக்கிறோம் — உதாரணமாக நீங்கள் தொடர்புகொள்ளும் Snap-இல் உள்ள உள்ளடக்கத்தை வகைப்படுத்தப்படும் "Snapchat உள்ளடக்க வகைப்பிரிவுகள்" எங்களிடம் உள்ளன. உங்கள் தரவைஇங்கேவிவரித்துள்ளவாறு பதிவிறக்கி இந்த உள்ளடக்க வகைப்பிரிவுகள் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
உங்கள் நண்பர்கள். (குறைவான முக்கியத்துவம்) பல நண்பர்களுக்கு ஒத்த ஆர்வங்கள் உள்ளன. விளம்பரங்கள் அல்லது உள்ளடக்கத்துடன் உங்களின் நண்பர்களின் ஊடாடல்களைப் பற்றிய தகவலை அந்த விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க நாங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் நண்பர்கள் ஒரு புதிய ஜோடி ஷூக்கான விளம்பரத்தின் மீது கிளிக் செய்தால், அதே விளம்பரத்தை உங்களுக்குக் காட்ட அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கலாம்.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிரிட்டனில் இருக்கிறீர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர் என்றால், உங்கள் பாலினக் குழு, ஆர்வங்கள் அல்லது நண்பர்களின் ஆர்வங்களை நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைத் தனிப்பயனாக்க நாங்கள் அனுமானங்களைப் பயன்படுத்துவதில்லை.
அடுத்து உங்களுக்கு எந்த விளாபரங்களைக் காட்டவேண்டும் (அல்லது காட்டக்கூடாது) என்பதைத் தீர்மானிக்க நீங்கள் முன்னர் எந்த விளம்பரங்களுடன் ஊடாடினீர்கள் என்ற தகவலையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒரே விளம்பரத்தை மீண்டும் மீண்டும் பார்க்க யாரும் விரும்புவதில்லை என்பது ஒரு ரகசியமல்ல!
எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களிடமிருந்து நாங்கள் பெறும் தகவல்
எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களின் வலைத்தளங்கள் மற்றும் தளங்களில் உங்கள் செயல்பாடு. (அதிக முக்கியத்துவம்) எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்கள் அவர்களின் சொந்த செயலிகள், வலைத்தளங்கள் மற்றும் தளங்களில் இருந்து எங்களுக்குத் தரவை வழங்குகிறார்கள். அதை நாங்கள் காட்டும் விளம்பரங்களுக்குத் தகவல் தெரிவிக்க பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, Snap உடன் தரவைப் பகிரும் வலைத்தளத்தில் ஒரு திரைப்படத்தை நீங்கள் தேடினால், அது போன்ற திரைப்படங்களுக்கான விளம்பரங்களை நீங்கள் பார்க்கலாம்.
நாங்கள் இந்தத் தகவலை Snap பிக்ஸல் மற்றும் Snap இன் கன்வர்ஷன் API ஆகியவை உள்ளிட்ட சில வழிகளில் பெறுகிறோம். இரண்டு சந்தர்ப்பங்களிலும் மூன்றாம் நபர் தளங்களில்(அந்தத் தளங்களில் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகள் குறித்தத் தகவலை சேகரிக்கும் திங்க் வலைத்தளங்கள் மற்றும் செயலிகள்) ஒரு சிறிய குறியீடு உட்பொதிக்கப்பட்டிருக்கும். அவர்களின் விளம்பரங்கள் பற்றிய செயல்திறன் பற்றிய அறிக்கைகளை விளம்பரதாரர்களுக்கு வழங்கவும் இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது பிரிட்டனிலோ வசிக்கிறீர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர் என்றால், எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களின் வலைத்தளங்கள் மற்றும் தளங்களில் உங்கள் செயல்பாடுகளில் இருந்து Snap சேகரித்தத் தகவலை உங்களுக்கு எந்த விளம்பரங்களைக் காட்டுவது என்பதைத் தீர்மானிக்க நாங்கள் பயன்படுத்துவதில்லை. அதேபோல், பிற அதிகார வரம்புகளில் அவற்றின் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க இந்தத் தகவலின் பயன்பாட்டை குறிப்பிட்ட வயது வரம்புகளுக்கு நாங்கள் குறைக்கலாம்.
பார்வையாளர்கள். (அதிக முக்கியத்துவம்) எங்கள் விளம்பரதாரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் பட்டியளையும் Snap-இல் பதிவேற்றலாம், இதன் மூலம் அவர்கள் அந்த வாடிக்கையாளர்களுக்கு (அல்லது Snapchat இல் உள்ள அவர்களின் வாடிக்கையாளர்களைப் போன்ற தனிநபர்கள்) விளம்பரங்களை இலக்காகக் கொள்ளலாம். பொதுவாக, இந்தப் பொருத்தம் உங்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சளின் ஹாஷ் செய்யப்பட்ட பதிப்பின் அடிப்படையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் காமிக் புத்தகங்களின் தீவிர நுகர்வோர் என வைத்துக்கொள்வோம். ஒரு புதிய காமிக் புத்தகம் வெளியிடப்பட்டால், பதிப்பாளர் தங்களின் Snap-க்கு தங்கள் விசிறிகள் பட்டியலைப் பகிரலாம், இதன் மூலம் அவர்களின் சமீபத்திய வெளியீட்டைப் பற்றிய ஒரு விளம்பரத்தை நீங்கள் பார்ப்பது உறுதிசெய்யப் படுகிறது.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது பிரிட்டனிலோ வசிக்கிறீர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர் என்றால், உங்களை தனிப்பயன் பார்வையாளர்களின் நாங்கள் சேர்ப்பதில்லை.
எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களிடமிருந்து நாங்கள் பெறும் பிற தரவு. எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளவாறு எந்த விளம்பரங்களைக் நாங்கள் காட்டுவோம் என்பதைத் தெரிவிக்க எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களிடமிருந்து உங்களைப் பற்றி நாங்கள் பெற்ற பிற தரவுகளையும் நாங்கள் பயன்படுத்தலாம்.
உங்கள் சூழல், சாதனம் மற்றும் இடம் குறித்து நாங்கள் சேகரிக்கும் தகவல்
சாதனத் தகவல்கள். (குறைந்த முக்கியத்துவம்) நீங்கள் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவலை நாங்கள் சேகரிப்போம், இது இயங்குதளம், திரை அளவு, மொழித் தேர்வு, நிறுவப்பட்ட செயலிகள் மற்றும் பிற பண்புகளை புரிந்துகொள்ள உதவுகிறது. இது உங்கள் சாதனத்துடன் இணக்கமான விளம்பரங்களை, நீங்கள் விரும்பும் மொழியில், குறிப்பிட்ட இயங்குதளங்களை இலக்காகக் கொண்டு, உங்கள் ஆர்வங்களுக்கு இணக்கமான விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு ஐஃபோன் பயன்படுத்தினால் iOS-இல் மட்டுமே கிடைக்கும் ஒரு செயலிக்கான விளம்பரத்தை நாங்கள் உங்களுக்குக் காட்டுவோம். இதேபோல், உங்கள் சாதனத்தின் மொழி ஃபார்சி என அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் மாண்டரின் மொழி விளம்பரங்களைப் பார்க்கமாட்டீர்கள்.
இருப்பிடத் தகவல்கள். (குறைந்த முக்கியத்துவம்) உங்கள் இருப்பிடத்திற்குப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவது முக்கியம் என நாங்கள் நினைக்கிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஜெர்மனியில் இருந்தால், அமெரிக்காவில் மட்டுமே பிளே ஆகும் திரைப்படங்களுக்கான விளம்பரங்களை ஒரு விளம்பரதாரர் உங்களுக்குக் காட்டுவதில் மகிழ்ச்சியோ அர்த்தமோ இருக்காது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களுக்கு நீங்கள் வழங்கும் உங்கள் IP முகவரி உள்ளிட்ட சில தரவின் அடிப்படையில் மற்றும் நீங்கள் அதைச் சேகரிக்க எங்களுக்கு அனுமதி வழங்கினால், GPS அடிப்படையில் உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் தீர்மானிப்போம். உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட, உங்களுக்கு அருகிலுள்ள இடங்களையும் நாங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு காபி ஷாப் அருகில் இருந்தால், ஒரு விளம்பரதாரர் தங்கள் காபிக்கான விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட விரும்பலாம்.
நீங்கள் கலிபோர்னியாவில் இருந்தால், உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட உங்கள் துல்லியமான இருப்பிட வரலாற்றைப் பயன்படுத்துவது உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட தகவலை Snap பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நீங்கள்கோரிக்கை விடுக்கலாம்.
விளம்பரங்களைக் காட்ட மேலே விளக்கப்பட்டுள்ள பல ஆதரங்களில் இருந்து தரவை Snap பயன்படுத்தலாம் என்பதைக் கவனத்தில் கொள்க. எடுத்துக்காட்டாக, ஒரு விளம்பரதாரர் 35-44 வயதுடைய தோட்டக்கலை ஆர்வமுள்ளவர்கள் போன்ற குறிப்பிட்ட Snapchat பயனர்களுக்கு விளம்பரங்களை காட்ட விரும்பலாம். அந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் அந்த பார்வையாளர்களில் பொருந்தினால் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட நாங்கள் உங்கள் வயது மற்றும் Snapchat-இல் அல்லது பிற தளங்களில் உங்கள் செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.