மேலோட்டம்
தீங்கு விளைவிக்கும் அல்லது தவறான உள்ளடக்கத்திலிருந்து Snapchat பயனர்களை நாங்கள் பாதுகாக்கிறோம்.
அந்த அளவிற்கு பயனர்கள் வேண்டாத பாலியல் உள்ளடக்கம் அல்லது துஷ்பிரயோகத்திற்கு வெளிப்படாமல் Snapchat-இல் தங்களை இயல்பாக வெளிப்படுத்தவும் தடையின்றி தொடர்புகொள்ளவும் உறுதி செய்யும் நோக்கத்துடன் சமூக வழிகாட்டுதல்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த விதிமுறைகள் ஆபாசம், பாலியல் நிர்வாணம் அல்லது பாலியல் சேவைகள் உள்ளிட்ட அப்பட்டமாக பாலியலை வெளிப்படுத்தும் உள்ளடக்கத்தை பகிர்வதை, விளம்பரப்படுத்துவதை அல்லது விநியோகிப்பதை தடை செய்கின்றன -- மேலும் சிறாரை சுரண்டும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் கடுமையாக கண்டிக்கிறது.
குழந்தைகளின் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகப் படங்களைப் பகிர்தல், உறவில் வசப்படவைத்தல் அல்லது பாலியல் வஞ்சகம் (பாலியல் மிரட்டல்) அல்லது குழந்தைகளைப் பாலியல் ரீதியாக சித்தரித்தல் உள்ளிட்ட சிறார் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகம் அடங்கிய எந்த ஒரு செயலையும் நாங்கள் தடை செய்கிறோம். அத்தகை நடத்தையில் ஈடுபடும் முயற்சிகள் உட்பட சிறார் பாலியல் சுரண்டல் பற்றி கண்டறியப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் நாங்கள் அதிகாரிகளிடம் புகாரளிக்கிறோம். 18 வயதுக்கு கீழ் உள்ள எவரையும் ஈடுபடுத்தும் நிர்வாண அல்லது பாலியலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் உள்ளடக்கத்தை ஒருபோதும் இடுகையிட, சேமிக்க, அனுப்ப, முன்னனுப்ப, விநியோகிக்க அல்லது கேட்க வேண்டாம் (இதில் உங்களது அத்தகையப் படங்களை அனுப்புவது அல்லது சேமிப்பதும் அடங்கும்).
ஆபாச உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துவது, விநியோகிப்பது அல்லது பகிர்வது, அத்துடன் ஆபாசப் படங்கள் அல்லது பாலியல் தொடர்புகள் (இணையம் வழியே அல்லது நேரடியாக) தொடர்புடைய வணிக நடவடிக்கைகளை நாங்கள் தடைசெய்கிறோம்.
பாலியல் அல்லாத சூழல்களில் தாய்ப்பாலூட்டுவது மற்றும் நிர்வாணத்தின் பிற சித்தரிப்புகள் பொதுவாக அனுமதிக்கப்படுகின்றன.