25 அக்டோபர், 2024
29 நவம்பர், 2024
எங்கள் ஐரோப்பிய ஒன்றியம் (EU) வெளிப்படைத்தன்மை பக்கத்திற்கு வரவேற்கிறோம், இங்கு நாங்கள் டிஜிட்டல் சேவைகள் சட்டம் (DSA), ஒலிபரப்புப் பணிகள் தொடர்பான ஊடக சேவை ஆணை (AVMSD), டச்சு ஊடக சட்டம் (DMA), மற்றும் இணைய வழி பயங்கரவாத உள்ளடக்க ஒழுங்குமுறை (TCO) ஆகியவற்றால் தேவைப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறிப்பிட்ட தகவலை நாங்கள் வெளியிடுகிறோம். இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கையின் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அமெரிக்க ஆங்கில மொழியில் காணப்படும் என்பதை நினைவில் கொள்க.
Snap Group Limited, Snap B.V.-ஐ DSA-இன் நோக்கங்களுக்காக அதன் சட்ட பிரதிநிதியாக நியமித்துள்ளது. DSA தொடர்பாக நீங்கள் dsa-enquiries [at] snapchat.com முகவரியில் பிரதிநிதியை தொடர்பு கொள்ளலாம், AVMSD மற்றும் DMA தொடர்பாக vsp-enquiries [at] snapchat.com முகவரியிலும், TCO தொடர்பாக tco-enquiries [at] snapchat.com முகவரியிலும், எங்கள் ஆதரவு தளத்தின் மூலம் [ இங்கு ],அல்லது கீழே கொடுக்கப்பட்ட முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்:
Snap B.V.
B.V.Keizersgracht 165, 1016 DP
ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
நீங்கள் சட்ட அமலாக்க முகமை எனில் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள படிகளைப் பின்தொடர்க.
எங்களைத் தொடர்புகொள்ளும் போது ஆங்கிலம் அல்லது டச்சில் தொடர்பு கொள்ளவும்.
DSA-க்கு நாங்கள் ஐரோப்பிய கமிஷன் மற்றும் தி நெதர்லாண்ட்ஸ் ஆதாரிட்டி ஃபார் கன்ஸூமர்ஸ் அண்ட் மார்க்கெட்ஸ் (ACM) ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகிறோம். AVMSD மற்றும் DMA ஆகியவற்றுக்கு நாங்கள் டச்சு மீடியா ஆணையத்தால் (CvdM)-ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறோம். TCO தொடர்பாக, நாங்கள் நெதர்லாந்து இணையதள பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் குழந்தைகள் பாலியல் சூறைச் செயல்கள் தடுப்பு ஆணையத்தின் (ATKM) கட்டுப்பாட்டில் இருக்கிறோம்.
கடைசியாகப் புதுப்பித்தது: 25 அக்டோபர் 2024
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) டிஜிட்டல் சேவைகள் சட்டம் (ஒழுங்குமுறை (EU) 2022/2065) (“DSA”) விதிகள் 15, 24, 42 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையளித்தல் தேவைகளுக்கு ஏற்ப Snapchatஇல் எங்கள் உள்ளடக்க நெறிப்படுத்தல் முயற்சிகள் தொடர்பான இந்த அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம். வேறு வகையில் குறிப்பட்டவற்றைத் தவிர, இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் 1 ஜனவரி 2024 - 30 ஜூன் 2024 (H1 2024) அறிக்கைக் காலத்திற்கானது மற்றும் DSAவால் ஒழுங்குபடுத்தப்படும் Snapchatஇன் உள்ளடக்க நெறிப்படுத்தல் அம்சங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கியதாகும்.
நாங்கள் எங்கள் அறிக்கையளித்தலை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறோம். இந்த அறிக்கைக் காலத்தில் (H1 2024), எங்கள் உள்ளடக்க நெறிப்படுத்தல் முயற்சிகள் குறித்த மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவை வழங்குவதற்காக புதிய மற்றும் கூடுதல் வகைப்பாட்டுடன் கூடிய அட்டவணைகளுடன் எங்கள் அறிக்கைக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்துள்ளோம்.
1 அக்டோபர் 2024 நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் 92.9 மில்லியன் சராசரி மாதாந்திர செயலில் உள்ள பெறுநர்கள் (“AMAR”) எங்கள் Snapchat செயலிக்கு உள்ளனர். அதாவது, 30 செப்டம்பர் 2024 அன்று முடிவடைந்த 6 மாத காலகட்டத்தில் சராசரியாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பதிவுசெய்யப்பட்ட பயனர்களில் 92.9 மில்லியன் பயனர்கள் மாதத்தில் ஒருமுறையாவது Snapchat செயலியைத் திறந்துள்ளனர்.
உறுப்பினர் நாடு அடிப்படையில் இந்த எண்ணிக்கை பின்வருமாறு பிரிக்கப்படுகிறது:
இந்தப் புள்ளிவிவரங்கள் தற்போதைய DSA விதிகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கணக்கிடப்பட்டவை ஆகும், DSA நோக்கங்களுக்காக மட்டுமே இவற்றைச் சார்ந்திருக்க வேண்டும். மாறும் உள்ளார்ந்த கொள்கை, ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப காலப்போக்கில் இந்தப் புள்ளிவிவரங்களைக் கணக்கிடும் முறையை நாங்கள் மாற்றியுள்ளோம், வெவ்வேறு காலப்பகுதிகளுக்கு இடையேயான புள்ளிவிவரங்களை ஒப்பிடுவது இதன் நோக்கமல்ல. இது பிற நோக்கங்களுக்காக நாங்கள் வெளியிடும் மற்ற செயலில் உள்ள பயனர் புள்ளிவிவரங்களுக்காக பயன்படுத்தப்படும் கணக்கீடுகளிலிருந்து வேறுபடலாம்.
இந்த அறிக்கைக் காலத்தில் (H1 2024), குறிப்பாக அடையாளம் காணப்பட்ட உள்ளடக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பூச்சிய (0) ஆணைகளை EU உறுப்பினர் நாடுகளின் அதிகார அமைப்புகளிலிருந்து பெற்றோம், DSA விதி 9க்கு ஏற்ப வழங்கப்பட்டவையும் இதில் அடங்கும்.
இந்த எண்ணிக்கை பூச்சியம் (0) என்பதால், சட்டவிரோத உள்ளடக்க வகை அல்லது ஆணை வழங்கிய உறுப்பினர் நாடு அல்லது பெற்றுக்கொண்டதற்கு ஒப்புகை வழங்க அல்லது ஆணைகளைச் செயல்படுத்த எடுத்துக் கொண்ட இடைநிலை நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் இதை எங்களால் பிரித்துக் காட்ட முடியாது.
இந்த அறிக்கைக் காலத்தில் (H1 2024), EU உறுப்பினர் நாடுகளின் அதிகார அமைப்புகளிலிருந்து பயனர் தரவை வெளிப்படுத்துவதற்கான பின்வரும் ஆணைகளைப் பெற்றோம், DSA விதி 10க்கு ஏற்ப வழங்கப்பட்டவையும் இதில் அடங்கும்:
தகவல்களைக் கோரும் இந்த ஆணைகளை நாங்கள் பெற்றுக் கொண்டோம் என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தெரிவிக்க ஆகும் இடைநிலை நேரம் 0 நிமிடங்கள் ஆகும் — பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்த தானியங்கு பதிலை நாங்கள் அனுப்புகிறோம்.
தகவல்களைக் கோரும் இந்த ஆணைகளைச் செயல்படுத்த ஆகும் இடைநிலை நேரம் ~7 நாட்கள் ஆகும். இந்த அளவீடு Snap ஆணையைப் பெற்றதில் இருந்து அந்த விவகாரம் முழுமையாகத் தீர்க்கப்பட்டது என Snap கருதுவது வரையான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது, ஒவ்வொரு வழக்குக்கான கால அளவும் ஆணையைச் செயல்படுத்த Snapக்குத் தேவைப்படும் தெளிவுபடுத்தலுக்கான ஏதேனும் கோரிக்கைகளுக்குச் சம்பந்தப்பட்ட உறுப்பு நாட்டின் அதிகார அமைப்பு பதிலளிக்கும் வேகத்தைப் பகுதியாகச் சார்ந்து இருக்கும்.
குறிப்பு, தகவல்களைக் கோரும் மேற்குறிப்பிட்ட ஆணைகளைச் சம்பந்தப்பட்ட சட்டவிரோத உள்ளடக்கத்தின் வகைகளைப் பிரித்துக் காட்டி நாங்கள் வழங்குவதில்லை, ஏனெனில் பொதுவாக இந்தத் தகவல்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை.
Snapchatஇல் உள்ள அனைத்து உள்ளடக்கமும் எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சில உள்ளடக்கங்கள் கூடுதல் வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் கடைபிடிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, எங்கள் பொது வெளியீட்டுப் பரப்புகளில் பரந்த பார்வையாளர்களுக்கான அல்காரிதப் பரிந்துரைகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கம் எங்கள் பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்களில் வழங்கப்பட்ட கூடுதலான உயர் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், விளம்பரங்கள் எங்கள் விளம்பரக் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும்.
நாங்கள் தொழில்நுட்பத்தையும் மனித மறுஆய்வையும் பயன்படுத்தி இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துகிறோம். Snapchat பயனர்கள் சட்டவிரோத உள்ளடக்கம் மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட மீறல்களை நேரடியாகச் செயலியில் அல்லது எங்கள் இணையதளத்தின் மூலம் புகாரளிப்பதற்கான வழிமுறைகளையும் நாங்கள் வழங்குகிறோம். முன்கூட்டியே கண்டறிதல் வழிமுறைகள் மற்றும் புகார்கள் உடனடியாக மதிப்பாய்வுச் செயல்முறையைத் தூண்டுகின்றன, இது தானியங்குக் கருவிகள் மற்றும் மனித நெறியாளர்களின் கலவையைப் பயன்படுத்தி எங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப பொருத்தமான நடவடிக்கை எடுக்கிறது.
நாங்கள் H1 2024இல் எங்கள் பொதுப் பரப்புகளில் எங்கள் உள்ளடக்க நெறிப்படுத்தல் பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே வழங்குகிறோம்.
DSA விதி 16க்கு ஏற்ப, பயனர்கள் மற்றும் பயனர்கள் அல்லாதவர்கள் Snapchatஇல் தாங்கள் சட்டவிரோதமாகக் கருதும் குறிப்பிட்ட தகவல் உருப்படிகள் இருப்பது குறித்து Snapக்குத் தெரிவிக்க உதவுவதற்கான வழிமுறைகளை Snap செயல்படுத்தியுள்ளது. அவர்கள் நேரடியாக Snapchat செயலியில் அல்லது எங்கள் இணையதளத்தில் உள்ளடக்கம் அல்லது கணக்குகளின் குறிப்பிட்ட பகுதிகளைப் புகாரளிப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.
அறிக்கைக் காலத்தில் (H1 2024), ஐரோப்பிய ஒன்றியத்தில் DSA விதி 16க்கு ஏற்ப சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் அறிவிப்புகளை நாங்கள் பெற்றோம்:
கீழே, இந்த அறிவிப்புகள் எப்படி செயலாக்கப்பட்டன என்ற கட்டமைவை நாங்கள் வழங்குகிறோம் – அதாவது, மனித மதிப்பாய்வை உள்ளடக்கிய செயல்முறையில் அல்லது முற்றிலும் தானியங்கு வழிமுறைகளில் செயலாக்குதல்:
செயலியில் அல்லது எங்கள் இணையதளத்தில் அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்ட மீறல்களை (எ.கா., வெறுப்புப் பேச்சு, போதைப் பொருள் பயன்பாடு அல்லது விற்பனை) பிரதிபலிக்கும் விருப்ப மெனுவில் இருந்து புகாரளிப்பதற்கான குறிப்பிட்ட காரணத்தைப் புகார்தாரர்கள் தேர்வு செய்யலாம். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டவிரோதமான உள்ளடக்கம் மற்றும் செயல்பாடுகளைத் தடை செய்கிறது, எனவே புகாரளிப்பதற்கான காரணங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டவிரோத உள்ளடக்கம் தொடர்பான குறிப்பிட்ட வகைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள புகார்தாரர்கள் தாங்கள் புகாரளிக்கும் உள்ளடக்கம் அல்லது கணக்கு எங்கள் புகாரளித்தல் மெனுவில் பிரத்தியேகமாகக் குறிப்பிடப்படாத காரணங்களுக்காகச் சட்டவிரோதமானதாக உள்ளது எனக் கருதினால், அவர்கள் "பிற சட்டவிரோத உள்ளடக்கம்" என்று பிரிவின் கீழ் அதைப் புகாரளிக்க முடியும் மற்றும் அவர்கள் புகாரளிப்பவை சட்டவிரோதமானது என ஏன் கருதுகிறார்கள் என்று விளக்குவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மதிப்பாய்வின்போது, புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கம் அல்லது கணக்கு எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக நாங்கள் தீர்மானித்தால் (சட்டவிரோதத்தன்மைக்கான காரணங்களுக்காக உட்பட), நாங்கள் (i) மீறும் உள்ளடக்கத்தை அகற்றலாம், (ii) சம்பந்தப்பட்ட கணக்குதாரரை எச்சரித்து அவர்களுக்கு எதிராக ஸ்டிரைக்கைப் பதிவுசெய்யலாம், மற்றும் / அல்லது (iii) சம்பந்தப்பட்ட கணக்கைப் பூட்டலாம், இவை விரிவாக எங்கள் Snapchat நெறிப்படுத்தல், அமலாக்கம் மற்றும் மேல்முறையீடுகளில் விளக்கப்பட்டுள்ளது.
H1 2024இல், ஐரோப்பிய ஒன்றியத்தில் DSA விதி 16க்கு ஏற்ப சமர்ப்பிக்கப்பட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் நாங்கள் பின்வரும் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தோம்:
H1 2024இல், "பிற சட்டவிரோத உள்ளடக்கம்" என்பதன் கீழ் நாங்கள் பெற்ற அனைத்துப் புகார்களுக்கு எதிராகவும் இறுதியில் எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் கீழ் நாங்கள் அமலாக்க நடவடிக்கை எடுத்தோம், ஏனெனில் எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டைத் தடை செய்கின்றன. மேலே உள்ள அட்டவணையில் தொடர்புடைய சமூக வழிகாட்டுதல்களின் மீறல் வகையின் கீழ் இந்த அமலாக்க நடவடிக்கைகளை நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம்.
மேற்குறிப்பிட்ட அமலாக்க நடவடிக்கைகளுடன் கூடுதலாக, பிற பொருந்தும் Snap கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப எங்களுக்குத் தெரிவிக்கப்படும் உள்ளடக்கத்திற்கு எதிராகவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம்:
எங்கள் பொது வெளியீட்டுப் பரப்புகளில் உள்ள உள்ளடக்கத்தைப் பொறுத்த வரை, புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கம் பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்களின் உயர் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், அல்காரிதப் பரிந்துரைகளுக்கு நாங்கள் அவற்றை நிராகரிக்கலாம் (அந்த உள்ளடக்கம் எங்கள் தகுதி வரையறைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால்) அல்லது உணர்திறன் பார்வையாளர்களுக்கு அந்த உள்ளடக்கம் பகிரப்படுவதை நாங்கள் வரம்பிடலாம் (அந்த உள்ளடக்கம் பரிந்துரைத்தலுக்கான எங்கள் தகுதிகளைப் பூர்த்தி செய்கிறது ஆனால் உணர்திறன்மிக்கதாக அல்லது முறையற்றதாக உள்ளது).
H1 2024இல், எங்கள் பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப EUவில் Snapchatஇன் பொது வெளியீட்டுப் பரப்புகளில் எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு எதிராக பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்: