எங்கள் தனியுரிமைக் கோட்பாடுகள்
Snap-இல் உங்கள் தனியுரிமையை முன்னுரிமையாக்குகிறோம். நீங்கள் Snapchat அல்லது எங்கள் பிற தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் உங்கள் நம்பிக்கை ஈட்டப்படுவதை நாங்கள் அறிவோம்.
உங்கள் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் சேர்த்துவைப்பதில்லை மற்றும் நீங்கள் இதுவரை போஸ்ட் செய்த அனைத்தின் டைம்லைனையும் பொதுவெளியில் காட்சிப்படுத்துவதில்லை. நீங்கள் மற்றவர்களுடன் பகிர நினைப்பதை எவ்வளவு காலம் பகிர நினைக்கிறீர்களோ அதை மட்டுமே அவர்கள் பார்க்கும் விதமாக Snapchat வடிவைக்கப்பட்டுள்ளது. இது Snapchat-ஐ ஒரு நிரத்தரப் பதிவு என்று நினைப்பதை விட நண்பர்களுடனான உரையாடல் என்று நினைக்கவைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் தயாரிப்புகள் தொடர்ந்து மேம்பட்டு வந்தாலும், எங்கள் தனியுரிமைக் கொள்கைகள் மாறாமல் உள்ளன:
நாங்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தொடர்பு கொள்கிறோம்
நீங்கள் Snap-இன் சேவைகளைப் பயன்படுத்தும் போது, எங்களுடன் தகவல்களைப் பகிர்கிறீர்கள். எனவே, அந்தத் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள உதவுவது எங்களது பொறுப்பாகும். எங்கள் தனியுரிமைக் கொள்கைநாங்கள் எவ்வாறு தகவல்களைச் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை விளக்குகிறது - நீங்கள் சிறப்பம்சங்களைஇங்கேபடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அம்சம் உங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால், தயாரிப்பு மூலம் தனியுரிமை விஷயங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக்குகிறது. எங்கள் செயலிகளுக்குள்ளும், எங்கள் ஆதரவு தளத்திலும் அம்சங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதையும் நாங்கள் விளக்குகிறோம். உங்களுக்குத் தேவையானதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் எப்போதும் எங்களைக் கேட்கலாம்!
உங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்
சுய வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்கு தனியுரிமை அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் நீங்கள் யாரிடம் அவற்றைப் பகிர்கிறீர்கள், அவற்றை எவ்வாறு பகிர்கிறீர்கள் மற்றும் Snapchat பயனர்கள் அவற்றை எவ்வளவு நேரம் பார்க்கலாம் மற்றும் அவ்வாறு தேர்வு செய்தால் பொதுமக்கள் எவ்வளவு நேரம் அதைப் பார்க்கலாம் என்பவை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உங்கள் கதையை யார் பார்க்கலாம், எந்த நண்பர்கள் உங்கள் Bitmoji-ஐ Snap வரைபடத்தில் பார்க்கலாம், உங்கள் நண்பர்களுடனான Snapகள் எவ்வளவு நேரம் இருக்கும் என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். ஒரு விஷயத்தை நீங்கள் உங்களுக்கு உங்கள் நண்பருக்கும் இடையில் மட்டும் பகிரலாம், அல்லது ஒரு தருணத்தை முழு உலகுடனும் பகிரலாம்! மேலும் அறிக.
நாங்கள் மனதில் தனியுரிமையை வைத்து வடிவமைக்கிறோம்
புதிய அம்சங்களுக்கு தீவிரமான தனியுரிமை மறுஆய்வு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் அவற்றைப் பற்றி பேசுகிறோம், அவற்றை விவாதிக்கிறோம், நாங்கள் பெருமிதம் கொள்ளும் மற்றும் பயன்படுத்த விரும்பும் தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அனைத்திற்கும் பிறகு நாம் இந்தத் தயாரிப்புகளையும் சேவைகளையும் ஒவ்வொரு நாளும் நமது பணியிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்துகிறோம். எங்களின் மீது, எங்கள் நிறுவனத்தின் மீது, எங்கள் குடும்பத்தின் மீது மற்றும் எங்கள் நண்பர்கள் மீது எதிர்பார்க்கும் அதே அக்கறையுடன் உங்கள் தகவலையும் கையாள்கிறோம்.
உங்கள் தகவலை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள்
உங்கள் தகவலைக் கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு உள்ளது. அதனால் தான் உங்கள் தகவலை அணுக மற்றும் புதுப்பிக்க, எங்களுடனும் மற்றவர்களுடனும் எவ்வளவு தகவலைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதை அட்ஜஸ்ட் செய்ய நாங்கள் உங்கள் தகவலை அல்லது கணக்கையே முழுமையாக நீக்கவேண்டும் என்று கோருகிறீர்கள் ஆகியவற்றுக்கு எளிதான வழிகளை வழங்குகிறோம். எங்கள் மொபைல் செயலிகளில் நீங்கள் உங்களின் பெரும்பாலான தனியுரிமை அமைப்புகளை கட்டுப்படுத்தலாம். மேலும் நீங்கள் உங்கள் Snapchat தகவலை இங்கேஉள்நுழைவு செய்து பதிவிறக்கலாம். உங்களுக்கு எப்போதாவது உங்கள் தரவைப் பற்றிய திட்டவட்டமான கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ள தயங்கவேண்டாம்!
நீக்குதல் எங்கள் இயல்புநிலை
Snapchat நேரடியாக நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் உணர்வைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது — அதனால் தான் Snapகள் மற்றும் நண்பர்களுடனான அரட்டைகளை பார்த்தவுடன் அல்லது அவை காலாவதியானவுடன் (உங்கள் அமைப்புகளைப் பொறுத்து) எங்கள் சேவையாகங்களில் இருந்து நீக்குவதற்கு எங்கள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு Snap அல்லது நண்பருடனான அரட்டை நீக்கப்பட்ட பிறகு, எங்களால் முக்கியமாக அட்டைப்படை விவரங்களைப் பார்க்க முடியும் (இதை நாங்கள் "மெட்டாடேட்டா" என்றழைக்கிறோம்) — அது எப்போது அனுப்பப்பட்டது மற்றும் யாருக்கு அனுப்பப்பட்டது போன்றவை). நீங்கள் எப்போது Snapகளை உங்கள் நினைவுகளில் சேமிப்பதைத் தேர்வு செய்யலாம். மேலும் அறிக.
My AI உடனான உங்கள் உரையாடல்கள் மற்றும் நீங்கள் பகிரும் உள்ளடக்கத்தை சிறிது வித்தியாசமாக நாங்கள் கையாள்கிறோம் — நீங்கள் அதை நீக்குமாறு அல்லது உங்கள் கணக்கை நீக்குமாறு கேட்கும் வரை அதைத் தக்க வைக்கிறோம்.
பிற Snapchat பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் அல்லது மூன்றாம் நபர் செயலி ஒன்றைப் பயன்படுத்தி எதையும் சேமிக்கலாம் என்பதை கவனத்தில் கொள்வது முக்கியமாகும். இறுதியில், நீங்கள் உண்மையில் நம்பும் நபர்களிடம் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை மட்டும் பகிர்வது சிறந்தது — நிஜ வாழ்க்கையில் நீங்கள் செய்வது போலவே!
ஹேப்பி ஸ்னாபிங்!