துன்புறுத்தல் மற்றும் தொந்தரவளித்தல்
சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்
புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 2026
மேலோட்டம்
துன்புறுத்தல் மற்றும் தொந்தரவளித்தல் ஆகியவை Snapchat-இன் மதிப்புகளுக்கு எதிரானவை. இந்த தீங்குகள் பல வடிவங்களை எடுக்கலாம், எனவே அவற்றை எதிர்த்துப் போராட உதவும் பன்முக அணுகுமுறையை நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்கள் கொள்கை மற்றும் அமலாக்கத்துடன் சேர்ந்து, தயாரிப்பு பாதுகாப்புத் தணிப்புகளைப் பயன்படுத்துகிறோம் மற்றும் பயனர்களுக்கு வளங்களை வழங்குகிறோம்.
ஒரு அடிப்படைக் கொள்கையாக, ஒரு நபரின் உடல் தோற்றம், ஆளுமை, நுண்ணறிவு அல்லது தனிப்பட்ட பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏளனம் செய்யும், அவமானப்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் உள்ளடக்கம் மற்றும் நடத்தை ஆகியவற்றை எங்கள் கொள்கைகள் தடைசெய்கின்றன. மேலும் ஒருவரை தொடர்ந்து தவறாக நடத்துவது அல்லது தேவையற்ற முறையில் தொடர்பு கொள்வதும் தடை செய்யப்படுகின்றன. குறிப்பாக சிறார்கள், வீடு இல்லாத மக்கள் அல்லது மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் அல்லது உதவி தேவைப்படுவோருக்கான தங்குமிடங்களில் இருப்பவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அல்லது படங்களை அவர்களுக்குத் தெரியாமல் அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பகிறவதையும் நாங்கள் தடை செய்கிறோம்.
இந்தக் கொள்கைகளை சீராக செயல்படுத்துவதற்குக் கூடுதலாக, இந்த விதிகளை மீறும் தீங்கு விளைவிக்கும் நடத்தையைக் கட்டுப்படுத்த உதவ எங்கக் தயாரிப்பு வடிவமைப்பைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, நாங்கள் இயல்புநிலை அமைப்புகளைப் பயன்படுத்துகிறோம், இது இரு நண்பர்களும் ஒருவருடன் ஒருவர் அரட்டை அடிக்கும் முன்பு இணைப்பை ஏற்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட நடத்தை
எங்களின் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் கொள்கைகளின் மீறல்களில், ஒரு சாமானியனுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய தேவையற்ற நடத்தையும் அடங்கும். பின்வருவனவற்றை நாங்கள் தடைசெய்கிறோம்:
ஒரு நபரின் உடல் தோற்றம், ஆளுமை, நுண்ணறிவு அல்லது தனிப்பட்ட பண்புகளின் அடிப்படையில் கேலி செய்யும், அவமானப்படுத்தும், இழிவுபடுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் உள்ளடக்கத்தை பதிவிடுதல், இதில் ஆக்ரோஷமான அல்லது ஆபாசமான வசவுச் சொற்களைப் பயன்படுத்துவது அடங்கும்.
வதந்திப் பரப்புதல், அதாவது அநாமதேய முறையில் தனிநபர்களை கொடுமைப்படுத்துவது அல்லது அவமானப்படுத்துவது ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட கணக்குகள் அடங்கும்.
வன்முறை, மரணம் அல்லது சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களை கேலி செய்வது அல்லது அடுத்தவர் மீது வன்முறை, மரணம் அல்லது சோகம் நிகழ வேண்டும் என விரும்புவது
தனிப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்த நபரை துன்புறுத்துமாறு மற்றவர்களைத் தூண்டுவதன் மூலம் துன்புறுத்தலுக்கு வழிவகுப்பது (எ.கா. “doxxing”).
மற்றொரு நபரின் கையாளப்பட்ட படங்களை (AI-இல் உருவாக்கப்பட்ட, டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட, கையாளப்பட்ட, விளக்கப்பட்ட படங்கள் (கார்ட்டூன்கள் அல்லது திருத்தப்பட்ட ஸ்டிக்கர்கள் போன்றவை) அவமானப்படுத்தும் நோக்கத்திற்காகப் பகிர்ந்துகொள்வது.
தொடர்ச்சியாக தேவையற்ற தொடர்பு, இதில் முன்பு தடுக்கப்பட்டோ அல்லது தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட பிறகு ஒருவரைத் தொடர்பு கொள்ள புதிய கணக்கைப் பயன்படுத்துவது அடங்கும்.
அத்தகைய உள்ளடக்கம் பாகுபாடு, தொந்தரவளித்தல் அல்லது வன்முறை அல்லது தீங்கு விளைவிப்பதற்கான அழைப்புகள் இல்லாத வகையில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பொதுப் பிரபலங்கள் பற்றிய கருத்து மற்றும் விமர்சனத்தை Snap அனுமதிக்கிறது.
பயனர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். Snap பின்வருவதைத் தடைசெய்கிறது:
மற்றொரு நபரின் தனிப்பட்ட அல்லது தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களைப் (PII) பகிர்ந்துகொள்வது.
தனிப்பட்ட படங்கள் அல்லது உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது பதிவுகள் உட்பட தனிப்பட்ட உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்.
சிறுவர்கள், வீடு இல்லாத நபர்கள், மனதிறன் குறைபாடுடையவர்கள் மற்றும் மருத்துவ வசதி, நர்சிங் ஹோம் அல்லது உதவி தேவைப்படுபவர்களுக்கான இடம் ஆகியவற்றில் இருப்பவர்கள் உட்பட தங்கள் உள்ளடக்கம் பதிவாகவோ அல்லது பகிரப்படுவதற்கு ஒப்புதல் அளிக்க முடியாத பாதிக்கப்படக்கூடிய நபர்களைக் கொண்ட உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்வது.
பயனர்களைப் பாதுகாக்கும் எங்கள் முயற்சிகள்
பயனர்களைப் பாதுகாக்கும் எங்கள் அணுகுமுறையில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பொதுப் பகுதிகளில் (ஸ்பாட்லைட், பொதுக் கதைகள் மற்றும் வரைபடங்கள் போன்றவை) பயனர்கள் தொந்தரவளித்தல் அல்லது கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகாமல் தடுக்க தானியங்கிக் கருவிகள் மற்றும் மனித மதிப்பாய்வின் கலவையைப் பயன்படுத்துகிறோம்.
உண்மையான நண்பர்களை இணைக்கவும் தேவையற்ற வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் Snapchat ஐ நாங்கள் உருவாக்கியுள்ளோம். இயல்பாக, பயனர்கள் தாங்கள் நண்பர்களாகச் சேர்த்தவர்களிடமிருந்து மட்டுமே செய்திகளைப் பெற முடியும். பயனர்கள் தங்கள் சுயவிவரங்களை தனிப்பட்டதாக மாற்றலாம், பிற பயனர்கள் அவர்களைப் பார்ப்பதையோ அல்லது தொடர்பு கொள்வதையோ தடைசெய்யலாம். 18 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கு, சுயவிவரங்கள் இயல்பாகவே தனிப்பட்டதாகும், 16 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கு, சுயவிவரங்கள் தனிப்பட்டதாக மட்டுமே வைத்திருக்க முடியும்.
இந்த விதிகளின் மீறல்களை பயனர்கள் அனுபவித்தாலோ அல்லது பார்த்தலோ அதை புகாரளிக்க அவர்களை ஊக்குவிக்கிறோம். துன்புறுத்தல் மற்றும் தொந்தரவளித்தல் ஆகியவற்றை மதிப்பிடும்போது ஒரு பயனர் அத்தகைய நடத்தைக்கு இலக்காகும்போது ஒரு சூழ்நிலையை கொடுமைப்படுத்துதல் அல்லது தொந்தரவளித்தல் என கருதுகிறார்களா என்பதைக் கருத்தில் கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நாங்கள் கையாள்கிறோம். Snapchat ஐப் பயன்படுத்தி ஒவ்வொரு பயனரும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணர்வதை உறுதிசெய்வதை எங்கள் நெறிப்படுத்துதல் குழுக்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
முக்கிய அம்சம்
தொந்தரவளித்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றை நாங்கள் தடைசெய்கிறோம். Snapchat-ஐப் பயன்படுத்தும் போது எங்கள் பயனர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் எப்போதாவது சங்கடமாக உணர்ந்தால் தயவுசெய்து எங்களுக்கு புகாரை அனுப்ப மற்றும் அந்தப் பயனரை தடைசெய்யத் தயங்காதீர்கள். இந்த அம்சங்கள் உங்கள் பாதுகாப்பிற்காகவே வழங்கப்பட்டுள்ளன. எங்களின் Here for You போர்டல் மூலம், கொடுமைப்படுத்துதல் மற்றும் தொந்தரவளித்தலைக் கண்டறிய உதவும் செயலியின் உள்ள வளங்கள் மற்றும் தகவல்களுக்கான அணுகலை பயனர்கள் பெறுவதை உறுதி செய்கிறோம். Snapchat-இல் எந்தவொரு மீறல் நடத்தையையும் எளிதாகப் புகாரளிக்க உதவும் கருவிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.
தயவுசெய்து மக்களின் கண்ணியம் மற்றும் தனியுரிமை குறித்து அக்கறை கொள்ளுங்கள். அவர்கள் அசௌகரியத்தை வெளிப்படுத்தினால் அவர்களின் எல்லைகளை மதிக்கவும். அவர்கள் தங்களைப் பற்றிய உள்ளடக்கத்தை அகற்றுமாறு உங்களிடம் கேட்டால், தயவுசெய்து அப்படியே செய்யுங்கள், பொதுவாக அவர்களின் அனுமதியின்றி அவர்களின் படங்கள் அல்லது தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
சட்டவிரோத அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகள்