எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் அதிகமாக வெளிப்படுத்தாத பாலுணர்வைத் தூண்டும் படங்களைப் பகிரும் Snapchat பயனர்களைத் தடுக்கவில்லை என்றாலும், இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் அடிக்கடி பாலியல்ரீதியாகப் பார்க்கப்படும் உடல் உறுப்புகளை (எடுத்துக்காட்டு, மார்பகங்கள், பின்பக்கம், தொடை இடுக்கு) போன்றவற்றை கேமரா, ஆடை, தோற்றம் அல்லது பிற கூறுகளின் மூலம் பாலியல்ரீதியாகத் தூண்டும் வகையில் காட்டும் படங்களைத் தடை செய்கின்றன. குறிப்பிட்ட தனிநபர் நிர்வாணமாக இல்லாவிட்டாலும் அல்லது அவர் உண்மையான நபராக இல்லாவிட்டாலும் (அனிமேஷ்ன்கள் அல்லது ஓவியங்களுக்கும்) இது பொருந்தும். இதில் பாலியல் சார்ந்த உடல் உறுப்புகளின் உடலற்ற கிளோஸ்ஸப்களும் அடங்கும். உடலுறவுகொள்ளும் நிலைகளில் போஸ் கொடுப்பது, பாலியல் செயல்களைப் பிரதிபலிப்பது, பாலியல் பொம்மைகளைக் காட்சிப்படுத்துவது அல்லது பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் பொருட்களுடன் தொடர்புகொள்வது போன்ற உருவகப்படுத்தப்பட்ட பாலியல் செயல்பாடுகளும் இதில் அடங்கும்.