Privacy, Safety, and Policy Hub
Recommendation Eligibility

Disturbing or Violent Content

Not Eligible for Recommendation:

Any disturbing or violent content that is prohibited in our Community Guidelines is prohibited anywhere on Snapchat. For content to be eligible for recommendation to a wider audience, it must not contain:

கிராபிக் அல்லது பொருத்தமற்ற படம்

எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றிய கிராபிக் அல்லது பொருத்தமற்ற படங்களைத் தடை செய்கின்றன. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் வன்முறையின் கிராபிக் அல்லது பொருத்தமற்ற சித்தரிப்புகளை மட்டுமல்லாது கடுமையான நோய், காயம் அல்லது மரணத்தின் சித்தரிப்புகளையும் தடை செய்கின்றன. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மருத்துவ அல்லது ஒப்பனை நடைமுறைகளைக் குறிக்கும் உள்ளடக்கத்தைக் தடை செய்யாது (எடுத்துக்காட்டாக, முகப்பருவை வெடிக்க வைத்தல், காதுகளைச் சுத்தம்செய்தல், கொழுப்பை உறிஞ்சுதல் போன்றவை), ஆனால் அது கிராபிக் படத்தைச் சித்தரிப்பதாக இருந்தால் பரிந்துரைக்குத் தகுதி பெறாது. இந்தச் சூழலில் “கிராபிக்" என்பது சலம், இரத்தம், சிறுநீர், மலம், பித்தநீர், தொற்றுநோய், சிதைவு போன்ற உடல் திரவங்கள் அல்லது கழிவுகளை நிஜமாகக் காட்சிப்படுத்தும் படங்கள் ஆகும். சருமம் அல்லது கண்களுக்கு அருகில் கூரான பொருட்கள் அல்லது வாய்க்கு அருகில் கிருமிகள் இருப்பது போன்ற உள்நோக்கத்துடன், பார்ப்பதற்குத் தொந்தரவளிக்கும் மனித உடல் சார்ந்த படங்களைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கிறோம். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் விலங்கு துன்புறுத்தப்படுவதைக் காட்டும் உள்ளடக்கத்தைத் தடை செய்தாலும், கூடுதலாக இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் விலங்குகளுக்கு ஏற்படும் கடுமையான துன்பம் (எடுத்துக்காட்டாக, திறந்த காயங்கள், உடல் மெலிதல், உடல் பாகங்கள் உடைதல் அல்லது சிதைக்கப்படுதல்) அல்லது மரணத்தைக் காட்டும் படங்களைத் தடை செய்கின்றன.

வன்முறையைப் புகழ்தல்

எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் எந்த நபருக்கும் எதிரான வன்முறைக்கு ஆதரவு அளிப்பதை அல்லது வன்முறையை ஊக்குவிப்பதைத் தடை செய்கின்றன. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் ஒரு படி மேலே சென்று வன்முறைக்கான சந்தேகத்திற்குரிய ஆதரவு அல்லது மறைமுக ஒப்புதலைக்கூட தடை செய்கின்றன.

சுய தீங்கைப் பெருமைப்படுத்துதல்

எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் சுய காயம், தற்கொலை அல்லது உண்ணுதல் குறைபாடுகளை ஊக்குவிப்பதைத் தடை செய்கின்றன. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் ஒரு படி மேலே சென்று அதன் விளிம்பு நிலை நேர்வுகளையும் பரிந்துரைப்பதை நிராகரிக்கின்றன (எடுத்துக்காட்டாக, “உனது கணக்கை நீக்கி kys" என நகைச்சுவைக்காக சொல்வது அல்லது ஏதேனும் “thinspo” அல்லது “pro-ana” உள்ளடக்கம்).

ஆபத்தான நடத்தையை ஊக்குவித்தல்

எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் காயம், நோய், மரணம், தீங்கு அல்லது சொத்து இழப்புகளுக்கு வழிவகுக்கும் "சவால்கள்" அல்லது சண்டைக் கலை போன்ற தொழில்முறை நிபுணர் அல்லாதவர்களால் நிகழ்த்தப்படும் ஆபத்தான செயல்பாடுகளைக் காட்சிப்படுத்தும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கின்றன.

தொந்தரவளிக்கக்கூடிய சம்பவங்களின் கொடூரமான

அல்லது பரபரப்பான செய்தி அறிக்கை. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தொந்தரவளிக்கும் சம்பவங்களைப் பற்றிய உள்ளடக்கத்தைத் தடை செய்வதில்லை, ஆனால் இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் செய்தி முக்கியத்துவம் கொண்டிராத வன்முறை அல்லது பாலியல் குற்றங்கள் அல்லது சிறார்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மீது கவனம் செலுத்தும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதை நிராகரிக்கின்றன. உள்ளடக்கம் "செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக" கருதப்பட வேண்டுமெனில் அது அக்காலத்திற்குரியதாக மற்றும் முக்கிய நபர், குழு அல்லது பொது நலனில் உள்ள பிரச்சினை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

கூருணர்வுமிக்கவை:

பின்வருபவை பரிந்துரைக்குத் தகுதியானவையாக உள்ளது, ஆனால் சில Snapchat பயனர்களுக்கு வயது, இருப்பிடம், விருப்பத்தேர்வுகள் அல்லது பிற அளவுகோல்களின் அடிப்படையில் அதன் தெரிவுநிலையை நாங்கள் வரையறுக்கலாம்.

வன்முறை

தேசியச் செய்தி, கல்வி அல்லது பொது உரையாடல்கள் ஆகிய சூழ்நிலைகளில் மரணம் அல்லது உறுப்புச் சிதைப்பு தொடர்பான ஊடகப் படங்கள் இல்லாதவை. பாலியல் அல்லது வன்முறைக் குற்றங்கள் போன்ற தொந்தரவளிக்கும் சம்பவங்கள் சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும்போது மற்றும் முக்கிய நபர், குழு அல்லது பொது நலன் சார்ந்த பிரச்சினை தொடர்புடையதாக இருக்கும்போது செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்

சுய தீங்கை எதிர்கொள்வது குறித்த கலந்துரையாடல்

உண்ணுதல் குறைபாடுகள் உட்பட.

Non-graphic depictions of health issues

Procedures, medical settings or equipment. This includes preserved body organs in educational or newsworthy contexts.

ஒப்பனை வழிமுறைகள்

சருமம் பாதிக்கப்படாத இடத்தில்.

உடல் மாறுதல்கள்

தோலின் மீது பச்சை குத்தும் ஊசிகள் அல்லது துளையிடுதல் போன்றவை.

இயற்கையான அமைப்புகளில் ஆபத்தில் அல்லது துன்பத்தில் இருக்கும் விலங்குகள்

மரணம் அல்லது காயத்தைக் காட்டும் கிராஃபிக் இல்லா படங்கள்.

பொதுவான பயத்தைத் தூண்டும் உயரினங்களான

சிலந்தி, பூச்சிகள் அல்லது பாம்புகள் போன்றவை.

கற்பனையான ஆனால் நிஜம் போலத் தோற்றமளிக்கும், தொந்தரவளிக்கச் சாத்தியமுள்ள படங்கள். பொழுதுபோக்கு சூழல்களில் வன்முறையும் இதில் அடங்கும் (எடுத்துக்காட்டாக, ஒரு திரைப்படத்தில், வீடியோ கேம் அல்லது நகைச்சுவை குறும்படத்தில்). இதில் திகிலூட்டும் உள்ளடக்கம் அடங்கும் (உதாரணமாக பிரத்யேக ஒப்பனை, ஆடைகள், பொருட்கள்). புலனுறுப்புகளைத் தூண்டப் பயன்படுத்தப்படும் படங்களும் இதில் அடங்கும் (உதாரணமாக, டிரிபோபோபியாவைத் தூண்டும் நுண்துளைப் பொருள்கள், தோலை உரிப்பதை உருவகப்படுத்த பசை அல்லது உண்ணிகளை உருவகப்படுத்த விதைகள்).

ஆபாசச் சொல்

ஒரு தனிநபரை நோக்கியதாக, குழுவை இழிவுபடுத்துவதாக மற்றும் பாலியல் வெளிப்படையான சூழலில் இல்லாத போது. இது பொதுவான விரக்தியைத் தெரிவிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகளுக்கும் பொருந்தும் (எடுத்துக்காட்டாக, "s***" மற்றும் "f***").

Up Next:

False or Deceptive Information

Read Next