எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தொந்தரவளித்தல் மற்றும் துன்புறுத்தலின் அனைத்து வடிவங்களையும் தடை செய்கின்றன, ஆனால் சங்கடத்திற்குள்ளாக்கும் நோக்கம் தெளிவற்றதாக இருக்கும் சந்தேகிக்கப்படும் நேர்வுகளில் கடுமையான தரநிலைகளைப் பின்பற்றுகின்றன (எடுத்துக்காட்டாக, ரோஸ்ட்" வகையைச் சேர்ந்த Snap ஒன்றில் பங்கேற்பாளர்கள் கேமராவிற்கு முன் கேலி செய்யப்படுவதை விரும்புகிறாரா என்பது தெளிவாக இல்லாதிருக்கும் நேர்வு). இது இழிவுபடுத்தும் அல்லது சிறுமைப்படுத்தும் பேச்சுகளுக்கும் பொருந்தும். தோற்றத்தின் அடிப்படையில் மற்றவர்களை இழிவுபடுத்துவதும் இதில் அடங்கும், இழிவுபடுத்தப்படுபவர்கள் பிரபலமான நபர்களாக இருந்தாலும் கூட.
குறிப்பு: பருவ வயதில் உள்ள பிரபல நபர்கள் அல்லது நிறுவனங்களின் பேச்சுகள் அல்லது செயல்பாடுகளை விமர்சிப்பது அல்லது நையாண்டி செய்வது தொந்தரவளித்தல் அல்லது துன்புறுத்தலாகக் கருதப்படாது.அனைத்து வகை
பாலியல் தொந்தரவளித்தல்களும் (மேலே “பாலியல் உள்ளடக்கம்,” என்பதைப் பார்க்க) Snapchat முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளன.