பாலியல் உள்ளடக்கம்

சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்

புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 2024

  • குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அல்லது முறைதவறி நடந்துகொள்ளுதல் தொடர்பான படங்களைப் பகிர்தல் உட்பட சிறாரை பாலியல் ரீதியாக பயன்படுத்துதல் அல்லது துன்புறுத்துதல், பாலியல் ரீதியாக வசப்படவைத்தல் அல்லது மிரட்டி பாலுறவு கொள்ளுதல் (செக்ஸ்டார்ஷன்) ஆகியவை சம்பந்தப்பட்ட எந்தவொரு செயலையும் நாங்கள் தடைசெய்கிறோம். இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டறியும் போது, இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான முயற்சிகள் உள்பட, குழந்தைகளைப் பாலியல் ரீதியாக பயன்படுத்துதல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் அதிகாரிகளிடம் புகாரளிப்போம். 18 வயதுக்குட்பட்ட எவரையும் உள்ளடக்கிய நிர்வாண அல்லது வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை ஒருபோதும் இடுகையிடவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, முன்னனுப்பவோ, விநியோகிக்கவோ அல்லது கேட்கவோ கூடாது (இதில் உங்களின் அத்தகைய படங்களை அனுப்புவது அல்லது சேமிப்பதும் அடங்கும்).

  • ஆபாச உள்ளடக்கத்தை விளம்பரம் செய்வது, விநியோகிப்பது அல்லது பகிர்வதை நாங்கள் தடை செய்கிறோம். ஆபாச அல்லது பாலியல் ஊடாடல்கள் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) தொடர்பான வணிகச் செயல்பாடுகளையும் கூட நாங்கள் அனுமதிப்பதில்லை. பாலியல் அல்லாத சூழல்களில் தாய்ப்பாலூட்டுவது மற்றும் நிர்வாணத்தின் பிற சித்தரிப்புகள் பொதுவாக அனுமதிக்கப்படுகின்றன.மேலோட்டம்

தீங்கு விளைவிக்கும் அல்லது தவறான உள்ளடக்கத்தை எதிர்கொள்வதிலிருந்து அனைத்து Snapchat பயனர்களையும் பாதுக்காக்க விரும்புகிறோம். அந்த அளவிற்கு பயனர்கள் வேண்டாத பாலியல் உள்ளடக்கம் அல்லது துஷ்பிரயோகத்திற்கு வெளிப்படாமல் Snapchat-இல் தங்களை இயல்பாக வெளிப்படுத்தவும் தடையின்றி தொடர்புகொள்ளவும் உறுதி செய்யும் நோக்கத்துடன் சமூக வழிகாட்டுதல்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தக் கொள்கைகள் ஆபாசம், பாலியல் நிர்வாணம் அல்லது பாலியல் சேவைகள் உள்ளிட்ட அப்பட்டமாக பாலியலை வெளிப்படுத்தும் உள்ளடக்கத்தை பகிர்வதை, விளம்பரப்படுத்துவதை அல்லது விநியோகிப்பதை தடை செய்கின்றன --மேலும் மேலும் சிறாரை சுரண்டும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் கடுமையாக கண்டிக்கிறது.


நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்


பாலியல் ரீதியான தூண்டுதலை முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கும் நிர்வாணம் அல்லது பாலியல் தூண்டுதலை சித்தரிக்கும் நிர்வாணம் உள்ளிட்ட ஆபாச உள்ளடக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆபாச உள்ளடக்கத்தின் எடுத்துக்காட்டுகளில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அல்லது மிகவும் யதார்த்தமான அனிமேஷன், வரைபடங்கள் அல்லது வெளிப்படையான பாலியல் செயல்பாடுகளைப் பகிர்தல் ஆகியவை அடங்கும். ஆனால், எடுத்துக்காட்டாக, நிர்வாணத்தின் நோக்கமானது கலை வெளிப்பாடு அல்லது தாய்ப்பால் ஊட்டுதல், மருத்துவ நடைமுறைகள் அல்லது பொது நலனுக்கான தற்போதைய நிகழ்வுகள் அல்லது வரலாற்று நிகழ்வுகள் போன்ற பாலியல் ரீதியாக அல்லாத சூழலில் நிர்வாணத் தோற்றம் ஆகியவற்றுக்குப் பொருந்தாது.


இந்தக் கொள்கைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகள் உள்ளிட்ட பாலியல் சேவைகள் (எடுத்துக்காட்டாக கிளர்ச்சியூட்டும் மசாஜ் போன்றவை) மற்றும் ஆன்லைன் அனுபவங்கள்(எடுத்துக்காட்டாக பாலியல் அரட்டை அல்லது வீடியோ சேவைகள் வழங்குவதை) வழங்குவதை தடை செய்கின்றன.


எங்கள் சமூகத்தின் எந்த உறுப்பினரின் பாலியல் சுரண்டல், குறிப்பாக சிறார்கள், சட்டத்திற்குப் புறம்பானது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தடை செய்யப்பட்டது. சுரண்டலில் பாலியல் கடத்தல், நிர்வாணப் படங்களை வழங்க பயனர்களை வற்புறுத்தும் அல்லது கவர்ந்திழுக்கும் முயற்சிகள்; அத்துடன் எங்கள் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அல்லது அச்சுறுத்துவதற்கு பாலியல் நெருக்கமான படங்கள் அல்லது பாலியல் விஷயங்களைப் பயன்படுத்தும் எந்தவொரு நடத்தையும். அடங்கும். பாலியல் துஷ்பிரயோகம் அல்லது சுரண்டல் நோக்கத்துடன் சிறாரை வற்புறுத்த அல்லது வலியுறுத்த முயற்சிக்கும் அல்லது அச்சம் அல்லது அவமானத்தை தூண்டும் எந்தவொரு தொடர்பு அல்லது நடத்தையையும் நாங்கள் தடைசெய்கிறோம்.


இந்தக் கொள்கைகளை நாங்கள் எவ்வாறு செயல்படுத்துகிறோம்


எங்களது சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கம் அகற்றப்பாடுவதற்கு உட்பட்டது. மீறும் உள்ளடக்கத்தை பகிரும், விளம்பரப்படுத்தும் அல்லது விநியோகிக்கும் உள்ளடக்கம் மீறல் பற்றி அறிவிக்கப்படும். எங்கள் கொள்கைகளை கடுமையாக அல்லது மீண்டும் மீண்டும் மீறுவது பயனர்களின் கணக்கு அணுகலைப் பாதிக்கும்.


பாலியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என்று நீங்கள் நம்பும் Snap-ஐ நீங்கள் எப்போதாவது பெற்றாலோ அல்லது பார்த்தாலோ — நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் — எங்கள் செயலியில் உள்ள மெனுவை பயன்படுத்தத் தயங்காதீர்கள். புகாரளிக்கும் பயனரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பாதுகாக்க உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க அந்த புகார்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. வரவேற்கப்படாத செய்திகளை தடுப்பதை கருத்தில் கொள்ள பயனர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

ஸ்பாட்லைட் மற்றும் Discover உட்பட எங்களின் அதிகம் சென்றடையும் அம்சங்கள், முன்கூட்டிய கண்காணிப்பு மற்றும் பிற பாதுகாப்புகளுக்கு உட்பட்டவை. இந்தத் தளங்கள் எப்போதாவது அப்பட்டமாக பாலியலை வெளிப்படுத்துவதாக கருதப்படாத ஆபாசமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கலாம் (உதாரணமாக, நீச்சலுடைகளை வெளிப்படுத்துதல்); எவ்வாறாயினும், எங்களின் சமூக வழிகாட்டுதல்களுக்கு முரணானதாக நீங்கள் கருதும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் புகாரளிக்க பயனர்கள் வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

எங்கள் தளத்தில் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் அவர்களிடம் முறைதவறி நடந்துகொள்வது தொடர்பான படங்கள் (Child Sexual Exploitation and Abuse Imagery, CSEAI) பகிரப்படுவதைத் தடுப்பது, கண்டறிவது மற்றும் ஒழிப்பது எங்களின் முதன்மையான பணியாகும், மேலும் CSEAI மற்றும் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிற வகையான உள்ளடக்கத்தை நீக்குவதற்கான எங்கள் திறன்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். சட்டத் தேவைக்கு ஏற்ப இந்தக் கொள்கை மீறல்களை காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உடபட்ட சிறாருக்கான அமெரிக்க தேசிய மையத்திடம் NCMEC) புகாரளிக்கிறோம். NCMEC பின்னர், தேவைக்கேற்ப, உள்நாட்டு அல்லது சர்வதேச சட்ட அமலாக்கத்துடன் ஒருங்கிணைகிறது.


முக்கிய அம்சம்Snapchat பயனர்கள் தங்களை வெளிப்படுத்த ஒரு பாதுகாப்பான சமூகத்தை பேணுவதே எங்கள் இலக்காகும், மேலும் அப்பட்டமாக பாலியிலை வெளிப்படுத்தும் அல்லது சுரண்டும் உள்ளடக்கத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நீங்கள் எப்போதாவது சங்கடமாக உணர்ந்தால், உங்கள் வாழ்க்கையில் நம்பகமான நபரைத் தொடர்புகொள்ளவும், உள்ளடக்கத்தை மீறுவதாகப் புகாரளிக்கவும், புண்படுத்தும் பயனர்களைத் தடுக்கவும் தயங்காதீர்கள்.