தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது ஏமாற்றும் தகவல்

சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்

புதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 2023

  • நிகழ்ந்த சோகமான நிகழ்வுகளை மறுப்பது, ஆதாரமற்ற மருத்துவக் கோரிக்கைகள், குடிமைச் செயல்முறைகளின் ஒருமைப்பாட்டை கெடுப்பது அல்லது தவறான அல்லது தவறாக வழிநடத்தும் நோக்கங்களுக்காக உள்ளடக்கத்தைக் கையாளுதல் போன்ற தீங்கு விளைவிக்கும் அல்லது கெடுக்கும் தவறான தகவலைப் பரப்புவதை நாங்கள் தடைசெய்கிறோம்.

  • நீங்கள் வேறு ஒருவராக (அல்லது வேறொன்றாக) நடிப்பதை அல்லது நீங்கள் யார் என்பதைக் குறித்து மக்களை ஏமாற்ற முயற்சிப்பதை நாங்கள் தடைசெய்கிறோம். உங்கள் நண்பர்கள், பிரபலங்கள், பிராண்டுகள் அல்லது பிற நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதும் இதில் அடங்கும்.

  • Snapchat அல்லது Snap Inc ஐப் போன்று போலியாக சித்தரிப்பது உள்ளிட்ட ஸ்பேம் மற்றும் ஏமாற்றும் நடைமுறைகளை நாங்கள் அனுமதிப்பதில்லை.



மேலோட்டம்


பொறுப்பான தகவல் சூழலை ஆதரிப்பதில் எங்கள் பங்கைச் செய்வது Snap இல் முக்கிய முன்னுரிமையாக உள்ளது. ஏமாற்றும் நடைமுறைகள் பல வடிவங்களைப் பெறுகின்றன, மேலும் அவை நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் Snapchat பயனர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் கொள்கைகள் தவறான தகவல்களின் பரவலைக் குறைப்பதோடு, பல்வேறு சூழ்நிலைகளில், மோசடி மற்றும் ஸ்பேமிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்


தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது ஏமாற்றும் தகவலுக்கான எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் அடிப்படையில் இரண்டு தனித்துவமான ஆனால் தீங்கு வகைகளுடன் தொடர்புடைய அம்சங்களை உள்ளடக்கியது: (1) தவறானத் தகவல் மற்றும் (2) மோசடி அல்லது ஸ்பேம் நடத்தை.


1. தவறானத் தகவல்


உண்மைகளை சிதைக்கும் உள்ளடக்கம் பயனர்கள் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் குறிப்பாக விரைவாக பரவும் முக்கிய நிகழ்வுகள் அல்லது அறிவியல், சுகாதாரம் மற்றும் உலக விவகாரங்களின் சிக்கலான விஷயங்கள் என வரும்போது எது துல்லியமானது என்பதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இந்த காரணத்திற்காக, தகவல் துல்லியமற்றதா அல்லது தவறாக வழிநடுத்துகிறதா என்பதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிப்பதற்கான சாத்தியத்தின் மீதும் எங்கள் கொள்கைகள் கவனம் செலுத்துகிறது.

பல வகையான தகவல்கள் உள்ளன, அதில் உண்மைகளை தவறாக சித்தரிப்பது தனித்துவமான ஆபத்துக்களை ஏற்படுத்தும். இந்தப் பகுதிகள் முழுவதும் தவறான முறையீடுகள் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் தவறாக வழிநடத்தும் அல்லது துல்லியமாற்ற உள்ளடக்கத்திற்கு எதிராக எங்கள் குழுக்கள் நடவடிக்கை எடுக்கின்றன. இந்த வழியில், தவறான தகவல், பொய் தகவல், மற்றும் கையாளப்பட்ட ஊடகம் உள்ளிட்ட அனைத்து வகையான தகவல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக எங்கள் கொள்கைகள் செயல்படுகின்றன.

குறிப்பாக தீங்கு விளைவிக்கக்கூடியதாக நாங்கள் கருதும் தகவல் வகைகளின் எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்:

  • துயரமான நிகழ்வுகள் இருப்பதை மறுக்கும் உள்ளடக்கம். எடுத்துக்காட்டாக, யூத இன படுகொலை அல்லது சாண்டி ஹூக் பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்களை மறுக்கும் உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம். இத்தகைய துயரங்கள் தொடர்பான தவறான விளக்கங்கள் மற்றும் ஆதாரமற்ற சதி கோட்பாடுகள் வன்முறை மற்றும் வெறுப்புக்கு பங்களிக்கக்கூடும், மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் பாதிக்கப்பட்ட பயனர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்.

  • நிலைநாட்டப்படாத மருத்துவ உரிமைகோரல்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் எடுத்துக்காட்டாக, கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக சோதிக்கப்படாத சிகிச்சைகளைப் பரிந்துரைக்கும் அல்லது தடுப்பூசிகள் பற்றிய ஆதாரமற்ற சதி கோட்பாடுகளைக் கொண்டுள்ள உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிக்கவில்லை. மருத்துவத் துறை தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகும் அதே சமயம் பொது சுகாதார முகமைகள் அடிக்கடி வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம், அத்தகைய நம்பகமான நிறுவனங்கள் தரங்கள் மற்றும் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவை, மேலும் நாங்கள் பொறுப்பான சுகாதாரம் மற்றும் மருத்துவ வழிகாட்டுதலுக்கான அளவுகோலை வழங்க நாங்கள் அவர்களை நம்பிக்கையுடன் பார்க்கலாம்.

  • குடிமை செயல்முறைகளின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உள்ளடக்கம். தேர்தல்கள் மற்றும் பிற குடிமை செயல்முறைகள் உரிமைகளை மதிக்கும் சமூகங்களின் செயல்பாட்டில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன, மேலும் தகவல் கையாளுதலுக்கான தனித்துவமான இலக்குகளையும் முன்வைக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளைச் சுற்றியுள்ள தகவல் சூழலைப் பாதுகாக்க, பொதுச் செயல்முறைகளுக்கு பின்வரும் வகையான அச்சுறுத்தல்களுக்குப் பொருந்த எங்கள் கொள்கைகளைச் செயல்படுத்துகிறோம்:

    • செயற்படும் முறை சார்ந்த குறுக்கீடு:முக்கிய தேதிகள் மற்றும் நேரங்கள் அல்லது பங்கேற்புக்கான தேவைகளை தவறாக சித்தரித்தல் போன்ற உண்மையான தேர்தல் அல்லது குடிமைச் செயல்முறைகள் தொடர்புடைய தவறானத் தகவல்.

    • பங்கேற்பு சார்ந்த குறுக்கீடு: தேர்தல் அல்லது குடிமைச் செயல்பாட்டில் பங்கேற்பதைத் தடுக்க தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது வதந்திகளைப் பரப்புவது ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடக்கம்.

    • மோசடியான அல்லது சட்டவிரோத பங்கேற்பு: குடிமைச் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக அல்லது சட்டவிரோதமாக வாக்குகளை சட்டத்திற்குப் புறம்பாக அளிக்க அல்லது வாக்குச்சீட்டை அழிப்பதற்கு மக்கள் தங்களைத் தவறாகச் சித்தரிக்க ஊக்குவிக்கும் உள்ளடக்கம்.

    • குடிமைச் செயல்முறைகளின் நெறியகற்றம்: தேர்தல் முடிவுகளைப் பற்றிய தவறான அல்லது தவறாக வழிநடத்தும் கூற்றுகளின் அடிப்படையில் ஜனநாயக நிறுவனங்களை நெறியகற்றுவதை நோக்கமாகக் கொண்ட உள்ளடக்கம், எடுத்துக்காட்டாக


தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான எங்கள் கொள்கைகள் விரிவான தயாரிப்பு வடிவமைப்பு பாதுகாப்புகள் மற்றும் விளம்பர விதிகளுடன் இணைந்து செயல்படுகின்றன, அவை கட்டில்லாமல் பரவுவதைக் கட்டுப்படுத்துகின்றன, வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கின்றன மற்றும் எங்கள் தளம் முழுவதும் நம்பகத்தன்மையின் பங்கை உயர்த்துகின்றன. இந்த இலக்குகளை ஆதரிக்கும் வகையில் எங்கள் தளம் கட்டமைக்கப்பட்ட வழிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு இந்த வலைப்பதிவைப் பார்வையிடவும்.

2. மோசடியான அல்லது ஸ்பேம் ஏற்படுத்தும் நடத்தைகள்

மோசடி மற்றும் ஸ்பேம் Snapchat பயனர்களை கணிசமான நிதி பாதிப்பு, சைபர் பாதுகாப்பு ஆபத்துகள் மற்றும் சட்டரீதியான வெளிப்பாட்டிற்கும் கூட உட்படுத்தலாம் (விரும்பத்தகாத மற்றும் எரிச்சலூட்டும் அனுபவங்கள் குறித்து சொல்லத் தேவையே இல்லை) இந்த ஆபத்துக்களைக் குறைக்க, எங்கள் சமூகத்தில் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஏமாற்றும் நடைமுறைகளை நாங்கள் தடை செய்கிறோம்.

தடைசெய்யப்பட்ட நடைமுறைகளில் அடங்குபவை அனைத்து வகையான ஸ்கேம்களையும் ஊக்குவிக்கும் உள்ளடக்கம், கெட்-ரிச்-கிவிக் திட்டங்கள், அங்கீகரிக்கப்படாத அல்லது வெளிப்படுத்தப்படாத பணம் செலுத்தப்பட்ட உள்ளடக்கம் மற்றும் கள்ளச் சரக்குகள், ஆவணங்கள் அல்லது சான்றிதழ்கள் உள்ளிட்ட மோசடி சரக்குகள் அல்லது சேவைகளின் விளம்பரம். pay-for-follower விளம்பரங்கள் அல்லது பிற follower-growth திட்டங்கள், ஸ்பேம் பயன்பாடுகளின் விளம்பரம்; மற்றும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லது பிரமிடு திட்டங்களின் விளம்பரத்தை நாங்கள் தடை செய்கிறோம்.  நாங்கள் பணமோசடி செய்வதையும் (பணம் அனுப்புதல் அல்லது பணப்பரிமாற்றம் உட்பட) தடை செய்கிறோம். இதில் சட்டவிரோதமாக பெறப்பட்ட அல்லது வேறு ஒருவரின் சார்பாக அறியப்படாத மூலத்திலிருந்து பெறப்பட்ட பணத்தைப் பெறுதல் மற்றும் மாற்றுதல், அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் அல்லது நாணய மாற்றுச் சேவைகள் மற்றும் இந்தச் செயல்பாடுகளைக் வேண்டுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். 

இறுதியாக, எங்களின் கொள்கைகள் நீங்கள் வேறு ஒருவராக (அல்லது வேறு ஒன்றாக) வேடம் போடுவதையோ அல்லது நீங்கள் யார் என்பது குறித்து மக்களை ஏமாற்ற முயற்சிப்பதையோ தடைசெய்கிறது. உங்கள் நண்பர்கள், பிரபலங்கள், பிராண்டுகள் அல்லது பிற நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வதும் இதில் அடங்கும். இந்த விதிகள் Snapchat அல்லது Snap, Inc. பிராண்டிங்கைப் போல் நடப்பது சரியல்ல என்பதையும் குறிக்கிறது.


இந்தக் கொள்கைகளை நாங்கள் எவ்வாறு செயல்படுத்துகிறோம்


தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது ஏமாற்றும் தகவலுக்கு எதிரான எங்கள் விதிகளை மீறும் உள்ளடக்கம் அகற்றப்படும். மீறும் உள்ளடக்கத்தை பகிரும் அல்லது விளம்பரப்படுத்தும் அல்லது விநியோக்கிக்கும் பயனர்களுக்கு மீறல் குறித்து அறிவிக்கப்படும் மற்றும் இந்தக் கொள்கைகளை மீறும் பயனர்களின் கணக்கிற்கான அணுகல் கட்டுப்படுத்தப்படும்.

2022 ஆம் ஆண்டில் தவறான தகவலுக்கான எங்களின் புகாரளிக்கும் மெனு வகைகளை நாங்கள் விரிவுபடுத்தினோம், இது பயனர்களுக்கு சமூக, அரசியல், மற்றும் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல் குறித்து மேலும் குறிப்பாக புகாரளிக்க உதவுகிறது. நீங்களோ அல்லது வேறு ஒருவரோ ஆள் மாறாட்டத்திற்கு உட்பட்டால் அல்லது ஸ்பேம் அல்லது தவறானத் தகவலை எதிர்கொண்டால் கட்டாயம் எங்களுடன் பகிருங்கள். நாங்கள் ஒரு புகாரைப் பெற்றவுடன், எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கள் ஆள்மாறாட்டத்தைக் கையாள அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் தொடர்ந்து தளத்தில் இருப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும்.


ஸ்பாட்லைட் மற்றும் Discover போன்ற எங்கள் அதிகம் சென்றடையும் அம்சங்களில், உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் தகவல் இணக்கத்தை மேம்படுத்த நாங்கள் முன்கூட்டிய அணுகுமுறையை மேற்கொள்வோம். ஆனால் இந்த அம்சங்களில் நீங்கள் எதிர்கொள்ளும் எந்த தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் பற்றிய கருத்து மற்றும் புகார்களுக்கு நாங்கள் மிகவும் மதிப்பளிக்கிறோம்; இந்த இடங்களில் தீங்கு விளைவிக்கும் தகவல்கள் இன்றி வைத்திருக்க எங்கள் செயல்முறைகளில் உள்ள எந்தவொரு பிரச்சனைகளும் எங்களுக்கு எச்சரிக்கை அளித்து உதவிக்கின்றன.



முக்கிய அம்சம்


பொறுப்பான தகவல் சூழலை மேம்படுத்துவதற்கு எங்களின் பங்களிப்பைச் செய்வது எங்கள் நிறுவனம் முழுவதும் முக்கிய முன்னுரிமையாக உள்ளது, மேலும் தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது ஏமாற்றும் உள்ளடக்கத்தின் அபாயங்களிலிருந்து Snapchat பயனர்களைப் பாதுகாப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம்.

இந்த முயற்சிகளை நாங்கள் தொடரும் போது, எங்கள் அணுகுமுறையின் செயல்திறனின் வெளிப்படையாக நுணுக்கங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையின் மூலம், உலகளவில் தவறான தகவலுக்கு எதிராக எங்கள் செயல்பட்டதை நாடு அளவிலான தகவலை நாங்கள் வழங்குகிறோம். மற்றும் எங்கள் எதிற்கால அறிக்கைகளில் இந்த மீறல்களின் கூடுதல் விரிவான விளக்கங்களை நாங்கள் வழங்குவோம்.

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அல்லது நடத்தையை தீர்க்க எங்கள் திறனை மேம்படுத்துவதற்கான எங்கள் கொள்கைகளை தொடர்ந்து மதிப்பாராய்வு செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மற்றும் இந்த இலக்குகளை பொறுப்புடன் முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்ய பாதுகாப்பு சமூகத்தின் பல்வேறு தலைவர்களுடன் பணி புரிவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, எங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடவும்.