தொந்தரவளித்தல் & துன்புறுத்தல்

சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்

புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 2023

  • எந்த வகைத் துன்புறுத்தல் அல்லது தொந்தரவளித்தலையும் நாங்கள் தடைசெய்கிறோம். பிற பயனர்களுக்கு வெளிப்படையான பாலியல் அல்லது நிர்வாணப் படங்களை அனுப்புவது உட்பட அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. உங்களை யாரேனும் தடை செய்தால், வேறு கணக்கிலிருந்து அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம்.

  • மற்றொரு நபரின் தனிப்பட்ட தகவல்களையும் — குளியலறை, படுக்கையறை, ஆடை மாற்றும்அறை அல்லது மருத்துவமனை போன்ற — தனிப்பட்ட இடங்களிலுள்ள நபர்களின் Snapகளையும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் ஒப்புதலின்றி பகிர்வது அனுமதிக்கப்படவில்லை.

  • உங்கள் Snap-இல் சித்தரிக்கப்பட்ட யாராவது அதை அகற்றச் சொன்னால், தயவுசெய்து அகற்றுங்கள்! மற்றவர்களின் தனியுரிமை உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்.

மேலோட்டம்


Snapchat இல் கொடுமைப்படுத்துதல் மற்றும் தொந்தரவளித்தலுக்கு இடமில்லை. இந்த வகையான தீங்குகள் பல வடிவங்களை எடுக்கலாம், எனவே இந்த ஆபத்துகளை ஊக்கமிக்க வகையில் மற்றும் பன்முகத்தன்மையுடன் எதிர்கொள்ள பயனர்களுடன் பொருள் பாதுகாப்புகள் மற்றும் வளங்களுடன் எங்கள் கொள்கை அணுகுமுறையை இணைத்துள்ளோம்.

அடிப்படையாக, எங்கள் கொள்கைகள் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இழிவுபடுத்தும், அவதூறான அல்லது பாரபட்சமான உள்ளடக்கதிதிலிருந்து பாதுகாக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்களது தனிப்பட்ட தகவல் அல்லது Snapகளைப் பகிர்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகளை சீராக செயல்படுத்துவதற்குக் கூடுதலாக, இந்த விதிகளை மீறும் தீங்கு விளைவிக்கும் நடத்தையைக் கட்டுப்படுத்த உதவ எங்கக் தயாரிப்பு வடிவமைப்பைப் பயன்படுத்துகிறோம். நண்பர்கள் இருவர் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்புவதற்கு முன் இணைப்பை ஏற்கவேண்டிய அவசியம் மற்றும் தனிப்பட்ட Snapகள், செய்திகள் மற்றும் சுயவிவரங்களின் ஸ்கிரீன் ஷாட்கள் எடுக்கப்படும்போது பயனர்களுக்கு அறிவிப்பை வழங்குவது போன்ற இயல்புநிலை அமைப்புகளும் இதில் அடங்கும்.


எங்களின் Here for You அம்சங்கள் மூலம், கொடுமைப்படுத்துதல் மற்றும் தொந்தரவளித்தலைக் கண்டறிய உதவும் செயலியின் உள் உள்ள வளங்கள் மற்றும் தகவல்களுக்கான அணுகலை பயனர்கள் பெறுவதை உறுதி செய்கிறோம். Snapchat இல் உள்ள எந்த மீறும் நடத்தையையும் எளிதாகப் புகாரளிக்கப்படுவதை உறுதி செய்ய்ம் கருவிகளையும் நாங்கள் வழங்குகிறோம்.


நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்

எங்களின் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் கொள்கைகளின் மீறல்களில், ஒரு சாமானியனுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய தேவையற்ற நடத்தையும் அடங்கும். இதில் அவமதிப்பு, பிற பயனர்களை அச்சுறுத்துவது அல்லது அவமானப்படுத்துவது மற்றும் ஒருவரை சங்கடப்படுத்தும் அல்லது அவமானப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டும் எந்த நடத்தையும் அடங்கும்.

இந்த விதிகள் அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடை செய்கின்றன. தேவையற்ற பாலியில் நோக்குடன் முன்னெடுத்தல், கிராஃபிக் மற்றும் கோரப்படாத உள்ளடக்கத்தைப் பகிர்தல் அல்லது பிற பயனர்களுக்கு ஆபாசமான கோரிக்கைகள் அல்லது அழைப்புகளை அனுப்புதல் ஆகியவை இதில் அடங்கும். அனுமதியின்றி எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட பாலியல் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள், அத்துடன் "பழிவாங்கும் நோக்கத்துடன் கூடிய ஆபாசங்கள்" அல்லது தனிநபர்களின் அந்தரங்கப் படங்களை அல்லது வீடியோக்களை பகிரவோ, சுரண்டவோ அல்லது அம்பலப்படுத்தவோ அச்சுறுத்தும் நடத்தை உட்பட, ஒப்புதல் இல்லாத அந்தரங்கப் புகைப்படங்களைப் (NCII) பகிர்வதை நாங்கள் துளியும் சகித்துக் கொள்வதில்லை.

இந்த விதிகளின் படி ஒருவருக்கொருவர் மற்றவரின் தனிப்பட்ட தனியுரிமையை மதிப்பதும் அடங்கும். இந்தக் கொள்கை மீறல்களைத் தவிர்க்க உதவ, பயனர்கள் மற்றவர்களின் அனுமதியின்றி அவர்களைப் புகைபடங்கள் அல்லது வீடியோ எடுக்கக்கூடாது, மேலும் அவர்களின் வீட்டு முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண்கள் போன்ற அவர்கள் பற்றிய தனிப்பட்டத் தகவலைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றிய படம் அல்லது தகவலை நீக்குமாறு உங்களிடம் கேட்டால், அவ்வாறே செய்யவும்..

இந்த விதிகளின் மீறல்களை பயனர்கள் அனுபவித்தாலோ அல்லது பார்த்தலோ அதை புகாரளிக்க அவர்களை ஊக்குவிக்கிறோம். Snapchat ஐப் பயன்படுத்தி ஒவ்வொரு பயனரும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதிசெய்வதை எங்கள் மட்டுப்படுத்தும் குழுக்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் மோசமான நடத்தையைப் புகாரளிப்பதன் மூலம், அந்த இலக்கை முன்னெடுக்க பயனர்கள் எங்களுக்கு உதவ முடியும்.


முக்கிய அம்சம்

Snapchat பயனர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு பாதுகாப்பான சமூகத்தை பேணுவதே எங்கள் நோக்கம், மேலும் எந்த வகையிலும் தொந்தரவளித்தல் மற்றும் கொடுமைப்படுத்துதலை சகித்துக் கொள்ள மாட்டோம். கொடுமைப்படுத்துதல் மற்றும் தொந்தரவளித்தல் பல வடிவங்களில் வருகின்றன, எங்களது தளத்தைப் பயன்படுத்தும் போது பயனர்கள் எப்படி உணர்கிறார்கள் என்ற மனச்சான்றுக்கு கட்டுப்படுவதே எங்கள் அணுகுமுறை.

பிறரின் கண்ணியம் மற்றும் தனியுரிமை குறித்து அக்கறை கொள்ளவும் -- அவர்கள் அசௌகரியமாக உணரவுதை வெளிப்படுத்தினால் அவர்களின் உணர்வுகளை மதிக்கவும், அவர்களைப் பற்றிய உள்ளடக்கத்தை நீக்குமாறு கோரினால், அவ்வாறே செய்யவும்; மேலும் ஒருவரின் அனுமதியின்றி அவரின் புகைபடங்கள் அல்லது தகவலைப் பகிர்வதைத் தவிர்க்கவும். நீங்கள் எப்போதாவது சங்கடமாக உணர்ந்தால் எங்களுக்கு புகாரை அனுப்ப மற்றும் அந்தப் பயனரை தடைசெய்யத் தயங்காதீர்கள். இந்த அம்சங்கள் உங்கள் பாதுகாப்பிற்காகவே வழங்கப்பட்டுள்ளன.

தீங்கிழைக்கும் உள்ளடக்கம் அல்லது நடத்தைக்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்த, எங்கள் கொள்கைகளின் செயல்பாட்டைத் தொடர்ந்து மதிப்பாராய்வு செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பயனர் அறிக்கைகள் எங்கள் அணுகுமுறையை தெரிவிக்க உதவும்போது, இந்த இலக்குகளை பொறுப்புடன் முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்ய பாதுகாப்பு சமூகத்தின் பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். எங்கள் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, values.snap.com/news. ஐப் பார்வையிடவும்.