தனியுரிமைக் கொள்கை

அமலுக்கு வரும் தேதி பிப்ரவரி 26, 2024

Snap Inc. இன் தனியுரிமைக் கொள்கைக்கு வரவேற்கிறோம். உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு சேகரித்துப் பயன்படுத்துகிறோம் மற்றும் உங்கள் தகவல்களை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இந்தக் கொள்கை விளக்குகிறது. எங்களது தனியுரிமை நடைமுறைகளின் விரைவான சுருக்கத்தைத் தேடுகிறீர்களா? இந்தப் பக்கம் அல்லது இந்த காணொளி -ஐப் பார்க்கவும். நீங்கள் குறிப்பிட்ட தயாரிப்பின் தனியுரிமைத் தகவலைத் தேடுகிறீர்கள் என்றால், எடுத்துக்காட்டாக, உங்கள் அரட்டைகள் மற்றும் Snap களை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பதைப் பார்க்க, எங்களது தயாரிப்பு வாரியாக தனியுரிமைப் பக்கத்தைப் பார்க்கவும். இந்த ஆவணங்களுக்குக் கூடுதலாக, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை உங்களுக்கு வழங்கும் செயலியில் உள்ள அறிவிப்புகளையும் உங்களுக்குக் காட்டுகிறோம்.

வெளிப்படைத்தன்மை என்பது Snap இல் எங்களது முக்கிய மதிப்புகளில் ஒன்றாகும். நாங்கள் சேகரிக்கும் தரவு மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றிய ஆச்சரியங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம் - அதனால்தான் நாங்கள் அதை எவ்வாறு செயலாக்குவோம் என்பதைப் பற்றி வெளிப்படையாக இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உங்கள் அனுபவத்திற்கு மிகவும் பொருத்தமான, மற்றும் மிகவும் பொருத்தமான விளம்பரங்களைப் பற்றிய உள்ளடக்கம் மற்றும் தகவல்களை உங்களுக்குக் காட்டுவது உட்பட உங்களுக்கென அதிக தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க, உங்கள் தகவலை நாங்கள் செயலாக்குகிறோம். உங்கள் ஆர்வங்கள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்வது சிறந்த தயாரிப்பு அனுபவத்தை வழங்குவதில் எங்களுக்கு உதவுகிறது.

மேலும், உங்களது தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய தனித்துவமாக்கப்பட்ட அனுபவம் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். யதார்த்த வாழ்க்கையைப் போலவே, உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பகிர விரும்பும் சில தருணங்கள் உள்ளன மற்றும் பொதுவெளியில் நீங்கள் பகிர விரும்பும் சில தருணங்கள் உள்ளன. அதனால்தான் முதல் நாளில் இருந்து இயல்பாகவே உள்ளடக்கத்தை நீக்குவது மற்றும் Snapchat பயனர்களின் உள்ளடக்கத்திற்கு என்ன நடக்கிறது, யாரிடம் அதைப் பகிர விரும்புகிறார்கள் அல்லது எப்போது அதை சேமிக்க விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்ய அனுமதிக்கும் கருவிகளை வழங்கி கட்டுப்பாட்டை அவர்களிடம் கொடுப்பது எங்களின் தத்துவமாக இருந்து வருகிறது.

இந்தக் கொள்கை எங்களது Snapchat செயலி மற்றும் Bitmoji, Spectacles மற்றும் எங்களது விளம்பரம் செய்தல் மற்றும் வர்த்தக முன்முயற்சிகள் போன்ற எங்கள் பிற தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அம்சங்களை உள்ளடக்கியது. இந்த கொள்கையில் நீங்கள் "சேவைகள்" என்று படித்தால், நாங்கள் அவை அனைத்தையும் குறிக்கிறோம். மேலும், நாங்கள் எங்கள் "விதிமுறைகள்" என்று குறிப்பிடும்போது, நீங்கள் எங்களது சேவைகளுக்கு பதிவுசெய்யும் போது நீங்கள் ஒப்புக்கொண்ட சேவை நிபந்தனைகள்என்று அர்த்தம். இறுதியாக, நீங்கள் "Snapchat பயனர்" என்ற பதத்தைப் பார்த்தால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் எந்தப் பயனரையும் குறிக்க நாங்கள் அதைப் பயன்படுத்த்கிறோம்.

உங்கள் தகவல்களின் மீது உங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குவோம்:

உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு

உங்களின் தகவல் மற்றும் அமைப்புகள் மீதான கட்டுப்பாடு என்பது Snapchat அனுபவத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இங்கே, கிடைக்ககூடிய அமைப்புகளின் வகைகளைப் பற்றிய கூடுதல் விவரங்களை நாங்கள் வழங்குகிறோம்,மேலும் எங்கள் தரவு பதிவிறக்கக் கருவிக்கான இணைப்பு மற்றும் தரவு அல்லது தங்களின் கணக்கை எவ்வாறு நீக்குவது என்பது குறித்த வழிமுறைகளையும் வழங்குகிறோம்.

உங்கள் தகவலை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம், எனவே அதற்கானப் பல்வேறு கருவிகளை உங்களுக்கு வழங்குகிறோம், அவற்றில் அடங்குபவை:

 • உங்கள் தகவலை அணுகலாம் மற்றும் புதுப்பிக்கலாம். உங்களின் பெரும்பாலான அடிப்படைக் கணக்குத் தகவல்களை, எங்கள் சேவைகளின் மூலம் நீங்களே அணுகலாம் மற்றும் திருத்தலாம். உங்கள் அமைப்புகளுக்குச் செல்லவும், அதில் உங்களுக்குக் கிடைக்ககூடிய விருப்பத் தேர்வுகளைக் காண்பீர்கள்.

 • உங்கள் தகவலை நீக்கலாம். உங்கள் கணக்கை நீக்க விரும்பினால், அதை எப்படி மேற்கொள்வது என இங்கே அறியவும்.

  நினைவகங்களில் நீங்கள் சேமித்த உள்ளடக்கம்,My AI உடன் நீங்கள் பகிர்ந்த உள்ளடக்கம், ஸ்பாட்லைட் சமர்ப்பிப்புகள் போன்ற பல தகவல்களையும் எங்கள் சேவைகளில் இருந்து நீக்கலாம்.

 • உங்கள் உள்ளடக்கத்தை யார் பார்க்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தவும். நாங்கள் பல கருவிகளை உருவாக்கியுள்ளோம், அவை உங்கள் உள்ளடக்கத்தை யாருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்ய அனுமதிக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பலாம், மற்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பலாம். மேலும் அறிய,இங்குசெல்க.

 • உங்களை யார் தொடர்பு கொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம். Snapchat என்பது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆகையால் அதற்கேற்ப தங்களை யார் தொடர்பு கொள்ளலாம் என்பதை தீர்மானிக்க உதவும் வகையில் கட்டுப்பாடுகளை வடிவமைத்துள்ளோம். தேவையற்ற தகவல்தொடர்புகளைப் பெற்றால்,அந்த நபரை எப்போது வேண்டுமானாலும் தடைசெய்யலாம் மற்றும் புகாரளிக்கலாம். மேலும் அறிய, இங்குச் செல்க.

 • உங்கள் அனுமதிகளை மாற்றுங்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் அனுமதிகளை எப்போது வேண்டுமானாலும் விருப்பத்திற்கேற்ப மாற்றலாம். எடுத்துக்காட்டாக, நட்பை எளிதாக்க உங்கள் தொலைப்பேசித் தொடர்புகளுக்கு அணுகலை வழங்கினால், அதை உங்கள் அமைப்புகளில் பின்னர் மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் அவ்வாறு செய்தால், உங்கள் தொடர்புப் புத்தகத்தில் நண்பர்களைக் கண்டறிவது போன்ற சில அம்சங்கள் மற்றும் சேவைகள் இயங்காது.

 • விளம்பர செய்திகளிலிருந்து விலகலாம். SMS அல்லது பிற செய்தியிடல் தளங்கள் மூலம் அனுப்பப்படும் விளம்பர செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களிலிருந்து விலக அல்லது குழுவிலக உங்களுக்குத் தெரிவு இருக்கிறது. அவ்வாறு செய்ய, குழுவிலகுதல் இணைப்பு அல்லது அதன் ஒத்த செயல்பாடு போன்றவற்றின் மூலம் செய்திகளில் உள்ள வழிமுறைகளைப் பின்தொடர வேண்டும்.

 • உங்கள் தரவை பதிவிறக்க. Snapchat இல் கிடைக்காத தகவல்களின் நகலை கையடக்க வடிவத்தில் பெற, என் தரவை பதிவிறக்கு என்ற வசதியைப் பயன்படுத்தலாம், இதன் மூலம், நீங்கள் எங்கு விரும்புகிறீர்களோ அங்கு அதை நகர்த்தலாம் அல்லது சேமிக்கலாம்.

 • செயலாக்கத்தை எதிர்த்தல். நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாங்கள் செயலாக்கும் குறிப்பிட்ட தரவைப் பொறுத்தும், நாங்கள் செயலாக்குவதை எதிர்ப்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கலாம். இது சற்று தொழில்நுட்பமானது, எனவே இதை விரிவாக இங்கு விளக்கியுள்ளோம்.

 • விளம்பர விருப்பத்தேர்வுகளை அமைத்தல். உங்களின் விருப்பத்திற்கேற்பப் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிக்க முயற்சிக்கிறோம், ஆனால் நீங்கள் குறைவான தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தைப் பெற விரும்பினால், snapchat செயலியில் உங்கள் விளம்பர அமைப்புகளை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். இங்கு மேலும் அறிக.

 • கண்காணிப்பு. iOS 14.5 அல்லது அதற்கு மேல் உள்ள iPhone ஐப் பயன்படுத்துபவர்களுக்கு சில குறிப்பிட்ட தேவைகள் பொருந்தும்,அதை நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

இந்தப் பிரிவு நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் குறித்த விவரங்களை உங்களுக்கு வழங்குகிறது. நாங்கள் இதை ஒரு சில பிரிவுகளாக ஒழுங்கமைத்துள்ளோம்: நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல், நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் அடிப்படையில் நாங்கள் உருவாக்கும் தகவல் மற்றும் மற்றவர்களிடமிருந்து நாங்கள் பெறும் தகவல். சில நேரங்களில், உங்கள் அனுமதியுடன் கூடுதல் தகவல்களையும் நாங்கள் சேகரிக்கலாம்.

Snapchat போன்ற எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம், எங்கள் சேவைகளை பயன்படுத்தும் போது தகவல்களை உருவாக்குகிறோம், சில சந்தர்ப்பங்களில் மற்றவர்களிடமிருந்து தரவைப் பெறுகிறோம்.
இவற்றை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

நீங்கள் வழங்கும் தகவல்கள்

எங்களின் பல சேவைகளை நீங்கள் ஒரு கணக்கை அமைக்க வேண்டும். இதைச் செய்ய, உங்கள் கணக்கு விவரங்களை (உங்கள் பெயர், பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த நாள் மற்றும் தொலைபேசி எண் போன்ற உங்களைப் பற்றிய தகவல்கள்) எங்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்கள் தகவல் குறிப்பை அமைக்கும் போது, தகவல் குறிப்பு விவரங்களையும் (உங்கள் Bitmoji மற்றும் தகவல் குறிப்புப் படம் போன்றவை) எங்களுக்கு வழங்குவீர்கள். நீங்கள் எங்கள் வணிகத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு பொருளை வாங்கும் போது, சமீபத்திய ஸ்னீக்கர்கள் போன்று, நாங்கள் உங்களிடம் பணம்செலுத்துதல் மற்றும் அதன் தொடர்புடைய தகவல்களைக்கேட்கலாம் (அதாவது உங்கள் இருப்பிட முகவரி , இதன் மூலம் நாங்கள் தயாரிப்புகளை உங்களுக்கு அனுப்பலாம், கட்டணத் தகவல், நாங்கள் கட்டணத்தை செயலாக்கலாம், மற்றும் பரிவர்த்தனை வரலாறு).

எங்கள் சேவைகளில் நீங்கள் அனுப்பும் அல்லது சேமித்த தகவலையும் எங்களுக்கு வழங்குவீர்கள்.
இந்தத் தகவல்களில் சிலவற்றை தனிப்பட்ட உள்ளடக்கம் மற்றும் தகவல்தொடர்புகளாக நாங்கள் கருதுகிறோம் (நண்பர்களுடனான Snaps மற்றும் அரட்டைகள், நண்பர்களுக்கு அமைக்கப்பட்ட என் கதை, தனிப்பட்ட கதைகள், குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மற்றும் என் கண்கள் மட்டும் என்பதில் சேமிக்கப்படும் உள்ளடக்கம் போன்றவை). மறுப்பக்கம், எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் அனுப்பும் அல்லது சேமிக்கும் சில தகவல்கள், அனைவரும் அணுகக்கூடிய வகையில் பொது உள்ளடக்கமாகஇருக்கலாம் ( அதாவது என் கதை அனைவருக்கும் அமைக்கப்பட்டது உட்பட, பகிரப்பட்ட கதைகள் , சமூக கதைகள், ஸ்பாட்லைட் அல்லது Snap வரைபடம் சமர்ப்பிப்புகள் மற்றும் பொது தகவல் பக்கம் உள்ளிட்ட பொது கதை உள்ளடக்கங்கள்). உங்கள் Snaps, அரட்டைகள் மற்றும் வேறு எந்த உள்ளடக்கத்தையும் காணும் Snapchat பயனர்கள், அந்த உள்ளடக்கத்தை எப்போதும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம், சேமிக்கலாம், அல்லது Snapchat செயலிக்கு வெளியே நகலெடுக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே பிறர் சேமிக்கவோ அல்லது பகிரவோ விரும்பாத செய்திகள் மற்றும் உள்ளடக்கங்களை நீங்கள் அனுப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம்.

கடைசியாக, நீங்கள் வாடிக்கையாளர் சேவை (சேவை குழுவுடன் பகிரப்பட்ட உள்ளடக்கம் மற்றும் தகவல்தொடர்புகள்) அல்லது எங்கள் பாதுகாப்பு குழுவைத் தொடர்பு கொள்ளும்போது அல்லது வேறு எந்த வகையிலும் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது , எங்களதுஆராய்ச்சி முயற்சிகள் மூலமாகவும் (அதாவது ஆய்வுக்கான பதில்கள், நுகர்வோர் குழுக்கள் அல்லது பிற ஆராய்ச்சி கேள்விகள் போன்றவை) , நீங்களாக அளிக்கும் அல்லது உங்கள் கேள்வியைத் தீர்க்க எங்களுக்குத் தேவைப்படும் எந்தத் தகவலையும் நாங்கள் சேகரிப்போம்.

நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களுக்குக் கிடைக்கும் தகவல்

நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, நீங்கள் எந்தச் சேவைகளைப் பயன்படுத்தினீர்கள், அவற்றை எப்படிப் பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிப்போம். இது எங்கள் சமூகம் எங்கள் சேவைகளை பயன்படுத்தும் முறையை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது, இதன் மூலம் நாங்கள் மேம்படுத்த முடியும்.

இதில் பயன்பாட்டுத் தகவல்கள்(நீங்கள் எங்கள் சேவைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள், எ. கா. நீங்கள் பார்க்கும் மற்றும் பயன்படுத்தும் லென்ஸ்கள், நீங்கள் பார்க்கும் கதைகள் மற்றும் பிற Snapchat பயனர்களுடன் எவ்வளவு அடிக்கடி தொடர்பு கொள்கிறீர்கள் என்பது போன்றவை) மற்றும் உள்ளடக்கத் தகவல்கள் (நீங்கள் உருவாக்கும் அல்லது வழங்கும் உள்ளடக்கம் பற்றிய தகவல்கள், கேமரா மற்றும் ஆக்கப்பூர்வ கருவிகளுடன் உங்கள் ஈடுபாடு, My AI உடன் நீங்கள் தொடர்புகொள்வது மற்றும் மேற்தரவு போன்றவை எடுத்துக்காட்டாக, உள்ளடக்கத்தைப் பற்றிய தகவல் அதை பதிவிட்டத் தேதி மற்றும் நேரம் மற்றும் யார் பார்க்கிறார்கள்) ஆகியவை இதில் அடங்கும். உள்ளடக்கத் தகவலில் படம், வீடியோ அல்லது ஆடியோவின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலான தகவல்கள் அடங்கும் — எனவே நீங்கள் ஒரு கூடைப்பந்து விளையாட்டின் ஸ்பாட்லைட்டை பதிவுசெய்தால், கூடைப்பந்தாட்டத்தைப் பற்றிய கூடுதல் உள்ளடக்கத்தை ஸ்பாட்லைட்டில் காண்பிக்க அத்தகைய தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.

இதில் சாதனத் தகவல்களும்அடங்கும் (உங்கள் வன்பொருள் அல்லது மென்பொருள், இயங்கு தளம், சாதன நினைவகம், விளம்பர அடையாளங்காட்டிகள், நிறுவப்பட்ட பயன்பாடுகள், உலாவி வகை, உங்கள் சாதனத்தின் இயக்கத்தை அளவிடும் சாதன உணரிகளின் தகவல் அல்லது திசைகாட்டி மற்றும் ஒலிவாங்கிகள், உங்கள் ஹெட்ஃபோன் இணைத்துள்ளீர்களா, உங்கள் வயர்லெஸ் மற்றும் மொபைல் இணைப்புகள் பற்றிய தகவல்கள் உட்பட),இருப்பிடத் தகவல் (IP முகவரி), குக்கீகளால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அதன் ஒத்த தொழில்நுட்பங்கள்,உங்கள் அமைப்புகளைச் சார்ந்து (குக்கீகள், வெப் பீக்கன்கள் ( ஒரு பயனர் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டாரா மற்றும் எத்தனை முறை பார்வையிட்டார் என்பது போன்ற, பயனர்களின் செயல்பாட்டை அடையாளம் காணும் சிறிய கிராஃபிக் தரவு), வலை சேமிப்பு, தனித்துவமான விளம்பர அடையாளங்காட்டிகள்) மற்றும் பதிவுத் தகவல்கள் (நீங்கள் எங்கள் சேவைகளை எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய விவரங்கள், அணுகல் நேரங்கள், பார்க்கப்பட்ட பக்கங்கள், IP முகவரி மற்றும் குக்கீகள் போன்ற தனித்துவமான அடையாளங்காட்டிகள்).

சாதன அளவிலான அனுமதிகளை நீங்கள் வெளிப்படையாக வழங்கியிருந்தால்,சாதனத் தகவலில் உங்கள் சாதனத்தின் தொலைபேசிப் புத்தகம் (தொடர்புகள் மற்றும் அதன் தொடர்பான தகவல்கள்), படங்கள் மற்றும் உங்கள் சாதனத்தின் கேமரா, புகைப்படங்கள் மற்றும் ஒலிவாங்கிகள் (படங்கள், வீடியோக்கள் எடுக்கும் திறன் , சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் வீடியோ பதிவு செய்யும் போது ஆடியோவைப் பதிவு செய்ய ஒலிவாங்கியை அணுகுதல் மற்றும் இருப்பிடத் தகவல் (GPS போன்ற முறைகளை உள்ளடக்கிய உங்கள் சரியான இருப்பிடத்தைப் பற்றிய தகவல்கள்).

மற்றவர்களிடமிருந்து நாம் பெறும் தரவுகள்

நாங்கள் சேகரிக்கும் கடைசி வகை தரவு என்பது உங்களைப் பற்றிய தகவல்களாகும், அவை மற்ற பயனர்கள், எங்கள் துணை நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறலாம். இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவை தரவு (உங்கள் Snapchat கணக்கை மற்றொரு சேவையுடன் இணைக்கும்போது நாங்கள் பெறும் தகவல்),விளம்பரதாரர்களிடமிருந்து தரவு (விளம்பரதாரர்கள், செயலி உருவாக்குநர்கள், பதிப்பாளர்கள் மற்றும் விளம்பரங்களின் செயல்திறனை இலக்கு வைக்க அல்லது அளவிட உதவும் பிற மூன்றாம் தரப்பினரிடமிருந்து தகவலைப் பெறலாம்), மற்ற Snapchat பயனர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறும் தொடர்புத் தகவல் (மற்றொரு Snapchat பயனர் உங்கள் தகவலை உள்ளடக்கிய அவர்களின் தொடர்புப் பட்டியலைப் பதிவேற்றினால், நீங்கள் யாருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள பிற தகவலுடன் நாங்கள் அதை இணைக்கலாம். உங்கள் தொடர்புத் தகவலை நீங்கள் எங்களுக்கு வழங்கினால் SMS, மின்னஞ்சல் அல்லது பிற செய்தி சேவைகள் போன்ற பிற வழிகளில் நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பதை தீர்மானிக்க இதைப் பயன்படுத்தலாம் மற்றும் எங்கள் விதிமுறைகளின் சாத்தியமான விதிமீறல்களுடன் தொடர்புடைய தரவு(வலைத்தள வெளியீட்டாளர்கள், சமூக வலைப்பின்னல் வழங்குநர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் பிறர் உள்ளிட்ட மூன்றாம் நபர்களிடமிருந்து எங்கள் சேவை நிபந்தனைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறுபவர்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பெறலாம்).

உங்கள் அனுமதியுடன், பிற தகவல்கள்

கூடுதலாக, எங்கள் சேவைகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது கூடுதல் தகவல்களை சேகரிக்க உங்கள் அனுமதியை நாங்கள் கேட்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் சாதனத்தின் கேமரா சுருள் அல்லது தொடர்புப் புத்தகத்தை அணுகுவதற்கு முன்.

நாங்கள் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம்

நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை இப்பகுதி விளக்குகிறது. மற்றவற்றுடன், நாங்கள் சேகரிக்கும் தகவலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்கவும், உருவாக்கவும் மேம்படுத்தவும் நாங்கள் கடினமாக உழைக்கிறோம். கீழே, நாம் தகவல்களைப் பயன்படுத்துவதற்கான ஒவ்வொரு நோக்கத்தையும் விரிவாகப் பார்ப்போம். நாங்கள் சேகரிக்கும் தரவின் நோக்கத்திற்கான வரைப்படத்தைப் பார்க்க விரும்பினால் , இங்கேஅதற்கான ஒரு அட்டவணை உள்ளது.

விஷயங்களை தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருத்தல்(அதாவது எங்கள் சேவைகளை இயக்கவும், வழங்கவும், பராமரிக்கவும்)

எங்கள் சேவைகளை இயக்குவதற்கும், வழங்குவதற்கும், பராமரிப்பதற்கும் நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு நண்பருக்கு அனுப்ப விரும்பும் Snap-ஐ வழங்குவதன் மூலம் அல்லது Snap வரைபடத்தில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டால், உங்கள் அருகில் நீங்கள் விரும்பும் இடங்களைப் போன்ற ஆலோசனைகளைக் காட்ட, மற்றவர்கள் வரைபடத்தில் பதிவிட்ட உள்ளடக்கம் அல்லது உங்கள் நண்பர்கள் தங்கள் இருப்பிடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வது. எங்கள் தயாரிப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க உதவும் சில தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம், எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகள் , சமீபத்திய இயங்கு தளங்களிலும் மற்றும் சாதனங்களுடன் செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த தகவல்கள் உதவுகிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்குதல் & விடயங்களுக்குச் சூழல் கொடுத்தல்

Snapchat பயனர்களுக்கு தனிப்பட்ட சேவைகளை வழங்குகிறோம். நாங்கள் இதைச் செய்வதற்கான வழிகளில் ஒன்று, நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு பொருத்தமான அல்லது நீங்கள் ரசிக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் உள்ளடக்கத்தைக் காண்பிப்பதாகும். அவ்வாறு செய்ய, உங்கள் Snapchat அனுபவத்தில் சூழலைச் சேர்க்க, சேவைகளின் பல்வேறு பகுதிகளில் உங்களைப் பற்றிய தகவலைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, உள்ளடக்கம், உங்கள் இருப்பிடம் அல்லது நாளின் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் லேபிள்களுடன் உள்ளடக்கத்தை தானாகவே குறியிடுவோம். உங்கள் புகைப்படத்தில் ஒரு நாய் இருந்தால், "நாய்" என்ற வார்த்தை மூலம் நினைவுகளில் அதைத் தேடலாம்",நீங்கள் நினைவகத்தை உருவாக்கிய இடத்தின் வரைபடத்தில் காண்பிக்கும். ேடலாம்",அது நீங்கள் நாய்களை விரும்புகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியப்படுத்தும், இதன்மூலம் எங்கள் சேவைகளின் பிற பகுதிகளான ஸ்பாட்லைட் போன்றவற்றில் வேடிக்கையான நாய் வீடியோக்கள் மற்றும் நாய் உணவு விளம்பரங்களை நாங்கள் வெளிப்படுத்த முடியும்.

தனிப்பயனாக்கம் நண்பர்களை பரிந்துரைக்க உதவுகிறது அல்லது நீங்கள் யாருடன் அதிகம் Snap செய்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு Snap அனுப்ப புதிய நண்பரை பரிந்துரைக்க உதவுகிறது. Snap வரைபடத்தில், பரிந்துரைக்கப்பட்ட இடங்களைக் காட்டலாம், ஸ்டிக்கர்களை உருவாக்கலாம் அல்லது Snap மற்றும் பிற உள்ளடக்கங்களை , AI பயன்படுத்தி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், உங்கள் உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டின் அடிப்படையில் உங்கள் ஆர்வங்களை ஊகிக்கவும் அல்லது விளம்பரங்கள் உட்பட நாங்கள் காண்பிக்கும் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்கவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஸ்பாட்லைட்டில் பாரிஸ்டா உள்ளடக்கத்தைப் பார்த்தால், உங்களுக்குப் பிடித்த எஸ்பிரெசோ இயந்திரத்தைப் பற்றி My AI உடன் பேசினால் அல்லது உங்கள் நினைவகங்களில் காபி தொடர்பான நிறைய புகைப்படங்களைச் சேமித்தால், நீங்கள் ஒரு புதிய நகரத்திற்குச் செல்லும்போது Snap வரைபடத்தில் காபி கடைகளை நாங்கள் முன்னிலைப்படுத்தலாம் அல்லது நீங்கள் சுவாரசியமான அல்லது பொருத்தமானதாகக் கருதக்கூடிய காபி பற்றிய உள்ளடக்கத்தைக் காண்பிக்கலாம். அல்லது, நீங்கள் பல இசை அரங்குகளுடன் தொடர்பு கொண்டால், நகரத்தில் வரவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களைக் காண்பிக்க அதைப் பயன்படுத்தலாம். தனிப்பயனாக்கம் என்பது உங்கள் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு உங்கள் அனுபவத்தை வடிவமைப்பதை உள்ளடக்கியது, உங்கள் நண்பர்கள் உருவாக்கும், விரும்பும் அல்லது உங்கள் நண்பர்களிடையே பிரபலமான ஸ்பாட்லைட் அல்லது விருப்பமான இடப்பரிந்துரைகளில் உள்ள உள்ளடக்கத்தை உங்களுக்குக் காண்பிக்கும்.

எங்கள் குறிக்கோள் தொடர்ந்து உங்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை வழங்குவதாகும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் நிறைய விளையாட்டு உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள், ஆனால் முடி மற்றும் ஒப்பனை உதவிக்குறிப்புகளுடன் வரும் உள்ளடக்கத்தைத் தவிர்த்தால், எங்கள் பரிந்துரை வழிமுறைகள் அந்த ஒப்பனை குறிப்புகள் அல்லாமல் விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். Snapchat பயனர்களின் விருப்பங்களை நாங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், தரவரிசைப்படுத்துகிறோம் மற்றும் உள்ளடக்கத்தை மிதப்படுத்துகிறோம் என்பதைப் பற்றி நீங்கள் இங்குமேலும் அறியலாம்.


தனிப்பயனாக்கத்தின் நன்மைகளையும், தனியுரிமை குறித்த எங்கள் Snapchat பயனர்களின் எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்துவது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் நினைவகங்களில் சேமிக்கும் Snap-களை அதன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் தானாகவே குறிக்கலாம் (எ. கா. , Snap-ல் ஒரு நாய் இருந்தது), பின்னர் அந்த குறிச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கலாம், பரிந்துரைகளைச் செய்யலாம் அல்லது விளம்பரங்களைக் காட்டலாம் (நாய்களைக் கொண்ட ஸ்பாட்லைட் Snap-களைக் காண்பிப்பது போன்றவை).

உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பும் தனிப்பட்ட உள்ளடக்கத்தையும் தகவல்தொடர்புகளையும் கொண்டு உங்கள் அனுபவத்தை தனிப்பயனாக்கவோ, பரிந்துரைகளை வழங்கவோ அல்லது விளம்பரங்களைக் காட்டவோ நாங்கள் பயன்படுத்த மாட்டோம்.

தொடர்புடைய விளம்பரங்களை வழங்குதல்

தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்குவதற்கான மற்றொரு வழி, நாங்கள் காண்பிக்கும் விளம்பரங்கள். விளம்பரங்களை தனிப்பயனாக்குவதற்கும், இலக்கு வைப்பதற்கும், அளவிடுவதற்கும் நாங்கள் சேகரித்த தகவல்களிலிருந்த உங்கள் ஆர்வங்களையும் விருப்பங்களையும் பயன்படுத்துகிறோம். விளம்பரங்கள் பொருத்தமானதாக இருக்கும்போது அவை சிறந்தவை என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால்தான் நாங்கள் சரியான விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து, சரியான நேரத்தில் அவற்றை உங்களுக்குக் காண்பிக்கிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வீடியோ கேம்களுக்கான விளம்பரங்களுடன் தொடர்பு கொண்டால், நீங்கள் வீடியோ கேம்களை விரும்புகிறீர்கள் என்று நாங்கள் ஊகிக்கலாம், மேலும் இதேபோன்ற விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிப்போம், ஆனால் அவை மட்டுமே நீங்கள் பார்க்கும் விளம்பரங்களாக இருக்காது. எங்கள் உள்ளடக்க உத்தியைப் போலவே, நீங்கள் பல்வேறு வகையான விளம்பரங்களைப் பெறுவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம். நீங்கள் ஆர்வம் காட்டாத விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிப்பதைத் தவிர்க்கவும் உங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு டிக்கெட் விற்கும் தளம் நீங்கள் ஏற்கனவே ஒரு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளீர்கள் என்று எங்களிடம் சொன்னால் - அதற்கான விளம்பரங்களைக் காண்பிப்பதை நாங்கள் நிறுத்தலாம். பல்வேறு வகையான விளம்பரங்களைப் பற்றியும், நீங்கள் பெறும் விளம்பரங்களைப் பற்றிய உங்கள் விருப்பங்களைப் இங்கு பெறலாம்.


விளம்பர நோக்கங்களுக்காக உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்ந்து கொள்கிறோம் என்பது பற்றி இங்கு மேலும் அறியலாம்.

குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களால் சேகரிக்கப்படும் தகவல்கள் பற்றிய குறிப்பு: எங்கள் கூட்டாளர்களில் ஒருவரின் மூலம் நாங்கள் வழங்கும் சேவைகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது தகவல்களை சேகரிக்க இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக உங்களுக்கு அதிக பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட விளம்பரதாரரின் வலைத்தளங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். பெரும்பாலான இணைய உலாவிகள் இயல்பாக குக்கீகளை ஏற்க அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பினால், உங்கள் உலாவி அல்லது சாதனத்தில் உள்ள அமைப்புகள் மூலம் உலாவியின் குக்கீகளை அகற்றலாம் அல்லது நிராகரிக்கலாம். இருப்பினும் நினைவில் கொள்ளுங்கள், குக்கீகளை அகற்றுவது அல்லது நிராகரிப்பது எங்கள் சேவைகளின் கிடைக்கும் தன்மையையும் செயல்பாட்டையும் பாதிக்கலாம். நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் எங்கள் சேவைகளில் குக்கீகளை எப்படிப் பயன்படுத்துகிறோம் மேலும் உங்களின் வாய்ப்புகள் பற்றி மேலும் அறிய எங்கள் குக்கீக் கொள்கையைப் பாருங்கள்.

அம்சங்கள், வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்

எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கான புதிய அம்சங்கள் மற்றும் வழிகளை எங்கள் குழுக்கள் தொடர்ந்து முன்வைக்கின்றன. இதைச் செய்வதற்காக, எங்கள் அம்சங்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகளை (வடிவங்களைக் கண்டறிய அல்லது கணிப்புகளைச் செய்ய கணிசமான அளவிலான தரவைத் தேடும் ஒரு வழிமுறையின் வெளிப்பாடு) நாங்கள் உருவாக்கி மேம்படுத்துகிறோம்,
உருவாக்கக்கூடிய AI அம்சங்கள்(உருவாக்கும் மாதிரிகளைப் பயன்படுத்தி உரை, படங்கள் அல்லது பிற ஊடகங்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் AI மாதிரிகள் அவற்றின் உள்ளீட்டு பயிற்சி தரவுகளின் வடிவங்கள் மற்றும் கட்டமைப்பைக் கற்றுக் கொள்கின்றன, பின்னர் ஒத்த குணாதிசயங்களைக் கொண்ட புதிய தரவை உருவாக்குகின்றன). தனிப்பயனாக்கம், விளம்பரம், பாதுகாப்பு , நேர்மை , உள்ளடக்கம், மிகுவித்த மெய்ந்நிலை, மற்றும் துஷ்பிரயோகம் அல்லது பிற சேவை விதிமுறை மீறல்களைத் தடுக்க நாங்கள் வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, எங்கள் வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகள், My AI-யுடன் Snapchat பயனர்கள் நடத்தும் உரையாடல்களைக் கருத்தில் கொண்டு, My AI-யின் பதில்களை மேம்படுத்துகின்றன.

உங்கள் தகவல்கள் எந்த வகையான மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க எங்களுக்கு உதவக்கூடும், ஆனால் நாங்கள் எப்போதும் தனியுரிமையில் கவனம் செலுத்துகிறோம், மேலும் எங்கள் அம்சங்கள் மற்றும் மாதிரிகளை உருவாக்க தேவையானதை விட உங்கள் தனிப்பட்ட தகவல்களை அதிகம் பயன்படுத்த விரும்பவில்லை.

பகுப்பாய்வு

எங்கள் சேவைகளை எவ்வாறு உருவாக்குவது அல்லது மேம்படுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள, எங்கள் அம்சங்களுக்கான போக்குகள் மற்றும் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, குழுவின் அதிகபட்ச அளவு போன்ற அம்சத்தின் பகுதிகளை மாற்ற வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க உதவும் மேற்தரவு மற்றும் குழு உரையாடல் பயன்பாட்டைப் பற்றிய போக்குகளை நாங்கள் கண்காணிக்கிறோம். Snapchat பயனர்களின் தரவுகளை ஆராய்வது மக்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளில் போக்குகளைக் கண்டறிய உதவும். இது Snapchat-ஐ பெரிய அளவில் மேம்படுத்த எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. போக்குகள் மற்றும் பயன்பாட்டை அடையாளம் காண, கண்காணிக்க மற்றும் பகுப்பாய்வு செய்ய பகுப்பாய்வுகளை நாங்கள் மேற்கொள்கிறோம்
இந்தத் தகவல்களின் அடிப்படையில், மற்றவற்றுடன் சேர்த்து, எங்கள் பயனர்களைப் பற்றிய தகவல்களை உருவாக்கி, தேவைகளைப் புரிந்துகொள்ள உதவுவோம்.

ஆராய்ச்சி

பொது நுகர்வோர் ஆர்வங்கள், போக்குகள் மற்றும் எங்கள் சேவைகளை நீங்களும் எங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களும் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள நாங்கள் ஆராய்ச்சி செய்கிறோம். இந்தத் தகவல், பகுப்பாய்வுகளுடன் (மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி), எங்கள் சமூகத்தைப் பற்றியும், எங்கள் சேவைகள் எங்கள் சமூகத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை பற்றியும் மேலும் புரிந்துகொள்ள உதவுகிறது. புதிய நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை (எ. கா. , புதிய இயந்திர கற்றல் மாதிரிகள் அல்லது Spectacles போன்ற வன்பொருள்) உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபடுகிறோம். எங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் சில சமயங்களில் Snapchat இல் உள்ள அம்சங்களில் பயன்படுத்தப்படும், மேலும் சில நேரங்களில் ஒட்டுமொத்த நடத்தைகள் மற்றும் நுகர்வோர் போக்குகள் (எங்கள் பயனர் தளம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு மட்டுமே இருக்கும், குறிப்பாக உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் எதுவும் இருக்காது) போன்ற விஷயங்களைப் பற்றிய ஆவணங்களை நாங்கள் வெளியிடுகிறோம்.

எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்

எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம்,
Snapchat பயனர்களின் அடையாளத்தை சரிபார்த்து மோசடி அல்லது பிற அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடுக்க உங்களின் தகவல்கள் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நாங்க உங்கள் கணக்கைப் பாதுகாக்க இரு காரணி அங்கீகாரத்தை வழங்குகிறோம். மேலும் ஏதேனும் சந்தேகப்படும்படியான செயலைக் நாங்கள் கவனித்தால் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது உரைச் செய்தியை அனுப்புவோம். Snapchat-இல் அனுப்பப்படும் URL-களையும் அந்த வலைப்பக்கம் தீங்கு ஏற்படுத்தும் சாத்தியமுள்ளதா எனப் பார்க்க நாங்கள் ஸ்கேன் செய்து அதைபற்றிய எச்சரிக்கையையும் உங்களுக்கு கொடுக்க முடியும்.

உங்களை தொடர்பு கொள்வது

சில நேரங்களில் புதிய அல்லது ஏற்கனவே உள்ள அம்சங்களை விளம்பரப்படுத்த நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம். அனுமதிக்கப்பட்ட இடங்களில் Snapchat, மின்னஞ்சல், SMS அல்லது பிற செய்தி தளங்கள் மூலம் Snapchat பயனர்களுக்கு தகவல்களை அனுப்புவது இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் விளம்பர சலுகைகள் பற்றிய தகவல்களைப் பகிர, உங்களுக்கு ஆர்வமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள, Snapchat செயலி, மின்னஞ்சல், SMS அல்லது பிற செய்தி தளங்களை நாங்கள் பயன்படுத்தலாம்.

மற்ற நேரங்களில், தகவல்களை, எச்சரிக்கைகளை வழங்க அல்லது எங்கள் பயனர்கள் தங்கள் கோரிக்கையின் பேரில் வழங்கும்படி கேட்கும் செய்திகளை அனுப்ப நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இது Snapchat, மின்னஞ்சல், SMS அல்லது பிற செய்தி தளங்கள் மூலம் தகவல்தொடர்புகளை அனுப்புவதை உள்ளடக்கியிருக்கலாம், கணக்கு நிலை புதுப்பிப்புகள், பாதுகாப்பு விழிப்பூட்டல்கள் மற்றும் அரட்டை அல்லது நட்பு நினைவூட்டல்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டால்; இது Snapchat அல்லாதவர்களுக்கு அழைப்புகள் அல்லது Snapchat உள்ளடக்கத்தை அனுப்ப எங்கள் பயனர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதையும் உள்ளடக்கியிருக்கலாம்.

உதவி

நீங்கள் உதவி கோரும் போது, முடிந்தவரை விரைவாக உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். உங்களுக்கும், ஸ்னாப்சாட்டர் சமூகத்திற்கும், எங்கள் வணிகக் கூட்டாளர்களுக்கும் எங்கள் சேவைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தேவையான உதவியை வழங்க, நாங்கள் சேகரித்த தகவலைப் பதிலளிக்க அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

எங்கள் விதிமுறைகள் & கொள்கைகளை நடைமுறைப்படுத்தல்

நாங்கள் சேகரிக்கும் தரவை எங்கள் விதிமுறைகளையும் சட்டத்தையும் அமல்படுத்த பயன்படுத்துகிறோம். எங்கள் விதிமுறைகள், கொள்கைகள் அல்லது சட்டத்தை மீறும் நடத்தைகளை அமல்படுத்துவது, விசாரிப்பது மற்றும் புகாரளிப்பது, சட்ட அமலாக்கத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது மற்றும் சட்டத் தேவைகளுக்கு இணங்குவது ஆகியவை இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, சட்டவிரோதமான உள்ளடக்கம் எங்கள் சேவைகளில் பதிவேற்றப்பட்டால், எங்கள் விதிமுறைகள் மற்றும் பிற கொள்கைகளை நாங்கள் அமல்படுத்த வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில், சட்ட அமலாக்கக் கோரிக்கைகளுடன் ஒத்துழைக்க, பாதுகாப்புச் சிக்கல்களை சட்ட அமலாக்கம், தொழில் கூட்டாளிகள் அல்லது பிறருக்கு அல்லது எங்கள் சட்டக் கடமைகளுக்கு இணங்க உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம் அல்லது பகிரலாம். மேலும் அறிய எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையைப் பார்க்கவும்.

நாங்கள் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம்

நாம் யாருடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம், அந்த தகவல்கள் என்னென்னவற்றை உள்ளடக்கியிருக்கலாம், மற்றும் அந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காரணங்கள், சேகரிக்கப்பட்ட நாட்டிற்கு வெளியே அதை எப்போது மாற்ற வேண்டும் என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது.

பெறுநர்கள் மற்றும் பகிர்வுக்கான காரணங்கள்
 • Snapchat. உங்களுக்கும் மற்றும் எங்கள் சமூகத்திற்கும் எங்கள் சேவைகளை வழங்குவதற்காக, நாங்கள் Snapchat-ல் உள்ள உங்கள் நண்பர்களுடனோ அல்லது பிற Snapchat பயனர்களுடனோ தகவல்களைப் பகிரலாம். உதாரணமாக, நீங்கள் கதைகளில் பதிவுசெய்யும் உள்ளடக்கத்தை நீங்கள் அனுமதித்தால் உங்கள் நண்பர்களால் பார்க்க முடியும். உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு பிரிவு மற்றும் உங்கள் அமைப்புகளில், யார் எதை எப்போது பார்க்கிறார்கள் என்பதில் உங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைப் பார்க்கலாம்.

 • குடும்ப மையப் பங்கேற்பாளர்கள். நீங்கள் குடும்ப மையத்தை இயக்கியிருந்தால், இணைக்கப்பட்ட கணக்கு பற்றிய தகவலைப் பகிர்ந்து கணக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றிய உள்நுணுக்கங்களை வழங்குகிறோம், எடுத்துக்காட்டாக, Snapchat-ல் உங்கள் நண்பர்கள் யார் என்பதைப் போன்றவை. நாங்கள் செய்தி உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்வதில்லை. மேலும் அறிக.

 • பொதுவானவை. Snapchat-ல் உள்ள பெரும்பாலான அம்சங்கள் தனியார் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே, ஆனால் ஸ்பாட்லைட், Snap வரைபடம், சமூக கதைகள் அல்லது உங்கள் பொதுத் தகவல் பக்கம் போன்ற உங்கள் சிறந்த Snaps-களை உலகத்திற்கு வெளிப்படுத்த அனுமதிக்கும் பொது அம்சங்களை நாங்கள் வழங்குகிறோம்.
  நீங்கள் இதைச் செய்யும்போது, Snapchat-க்கு வெளியேயும் அந்த Snaps கண்டறியக்கூடியதாக இருக்கலாம், உதாரணமாக இணையத்தில்.
  உங்கள் பயனர்பெயர், Bitmoji போன்ற உங்களின் சில தகவல்கள் பொதுவில் தெரியும்.

 • மூன்றாம் தரப்பு செயலிகள். சில நேரங்களில், மூன்றாம் தரப்பு செயலிகளுடன் இணைக்க உங்களை அனுமதிக்கும் அம்சங்களை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் Snapchat கணக்கை மூன்றாம் தரப்பு செயலியுடன் இணைக்க முடிவு செய்தால், பகிருமாறு நீங்கள் அறிவுறுத்திய கூடுதல் தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.

 • சேவை வழங்குநர்கள். உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களை எங்கள் சேவை வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், அவர்கள் அந்த தகவலை எங்கள் சார்பாக செயலாக்குகிறார்கள். எடுத்துக்காட்டாக, கட்டணங்களை எளிதாக்க அல்லது விளம்பரங்களின் செயல்திறனை அளவிட மற்றும் மேம்படுத்த அத்தகைய சேவை வழங்குநர்களை நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. சேவை வழங்குநர்களின் வகைகளின் பட்டியலை நாங்கள் இங்கு பராமரிக்கிறோம்.

 • தொழில் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டாளர்கள். சேவைகளை வழங்குவதற்காக உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களை தொழில் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உதாரணமாக, நீங்கள் ஒரு அட்டவணையை முன்பதிவு செய்ய Snapchat -ல் OpenTable -ஐப் பயன்படுத்தலாம். இதில் தனியார் தகவல்தொடர்புகள் உள்ளடக்கப்படுவதில்லை. நாங்கள் இங்கே இந்த கூட்டாளர்களின் பட்டியலை பராமரிக்கிறோம்.

 • மோசடி எதிர்ப்பு கூட்டாளிகள். சாதனம் மற்றும் பயன்பாட்டுத் தகவல் போன்ற உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களை, மோசடியைத் தடுக்கப் பணியாற்றும் தொழில் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

 • சட்டம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டாளர்கள். பின்வரும் சட்டம், பாதுகாப்பு மற்றும் பத்திரமாக்குதல் காரணங்களுக்காக உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களை அவசியமான அளவு பகிர்ந்து கொள்கிறோம்:

  • ஏதேனும் செல்லுபடியாகும் சட்டச் செயல்முறை, அரசாங்கக் கோரிக்கை அல்லது பொருந்தக்கூடிய சட்டம், விதி அல்லது ஒழுங்குமுறைக்கு இணங்க.

  • சாத்தியமான சேவை நிபந்தனைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் மீதான மீறல்களை விசாரிக்கவும், தீர்வுசெய்யவும் அல்லது செயல்படுத்தவும்.

  • எங்கள், எங்களது பயனர்கள் அல்லது பிறரின் உரிமைகள், சொத்து அல்லது ஏமத்தைப் பாதுகாக்க.

  • ஏதேனும் மோசடி அல்லது பாதுகாப்புச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க.

 • துணை அமைப்புகள். Snap Inc. நிறுவனம் எங்களுக்கு சொந்தமான பல்வேறு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
  எங்கள் சேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான உள் துணை நிறுவனங்களுக்குள் உங்கள் தகவலை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

 • இணைப்பு அல்லது கையகப்படுத்தல் நோக்கங்களுக்காக. எங்களத் தொழிலை வாங்குபவருக்கு அல்லது சாத்தியமான வாங்குபவருக்கு விற்க அல்லது பேச்சுவார்த்தை நடத்தினால், அந்த பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக உங்கள் தனிப்பட்ட தகவலை வாரிசு அல்லது துணை நிறுவனத்திற்கு மாற்றலாம்.

ஒருங்கிணைந்த கூட்டாளர்கள்

எங்கள் சேவைகளில் எங்கள் ஒருங்கிணைந்த கூட்டாளர்களால் வழங்கப்படும் உள்ளடக்கம் மற்றும் ஒருங்கிணைப்புகள் இருக்கலாம். லென்ஸ்கள், கேமரா திருத்துவதற்கான கருவிகள், ஸ்கேன் முடிவுகளை வழங்குதல் மற்றும் மூன்றாம் நபர் வடிவமைத்த ஒருங்கிணைப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த ஒருங்கிணைப்புகள் மூலமாக நீங்கள் ஒருங்கிணைந்த கூட்டாளர்களுக்கும் Snap-க்கும் உங்கள் தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கலாம். அந்த கூட்டாளர்கள் உங்கள் தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறார்கள் அல்லது பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எப்போதும் போல, எங்கள் சேவைகளின் மூலம் நீங்கள் ஊடாடும் மூன்றாம் நபர்கள் உள்ளிட்ட, நீங்கள் பார்வையிடும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு மூன்றாம் நபர் சேவையின் தனியுரிமைக் கொள்கைகளையும் மீளாய்வு செய்யுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். நீங்கள் இங்கே Snapchat-ல் எங்கள் ஒருங்கிணைப்புகள் பற்றி மேலும் அறிய முடியும்.

iOS -ல் லென்ஸ்களின் தரத்தை மேம்படுத்த Apple இன் TrueDepth கேமராவைப் பயன்படுத்துகிறோம். குறிப்பு, எனினும்,TrueDepth கேமராவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் நிகழ்நேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன - நாங்கள் இந்தத் தகவல்களை எங்களது சேவையகங்களில் சேமிக்கவோ மூன்றாம் தரப்பினருடன் பகிரவோ மாட்டோம்.

சர்வதேச தரவு பரிமாற்றங்கள்

உலகெங்கிலும் உள்ள உங்கள் நண்பர்களுடன் எங்கள் சேவைகள் உங்களை இணைக்கின்றன. அதை சாத்தியமாக்க,நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, அதை இடமாற்றி, நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே, அமெரிக்கா அல்லது பிற நாடுகளில் சேமிக்கலாம் மற்றும் செயல்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வெளியே தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம், நீங்கள் வசிக்கும் இடத்தின் சட்டத்தின்படி தரவைப் பாதுகாக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இதைப் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால்பிராந்தியம் சார்ந்த தகவல்கள் என்ற பகுதியைப் பார்க்கவும்.

உங்கள் தகவலை நாங்கள் எவ்வளவு காலம் சேமித்து வைக்கிறோம்

இந்தப் பிரிவில், உங்கள் தகவலை நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம், உங்கள் தகவலை ஏன் வைத்திருக்கிறோம் என்பது பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம், மேலும் சட்டங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பிற கடமைகளுக்கு இணங்க உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதையும் முதன்மைப்படுத்துகிறோம்.


ஒரு பொது விதியாக, நீங்கள் எங்களிடம் கூறும் வரையில் அல்லது எங்கள் சேவைகளை வழங்க எங்களுக்குத் தேவைப்படும் வரை அல்லது சட்டத்தால் கோரப்படும் வரை நாங்கள் தகவல்களை வைத்திருக்கிறோம். உதாரணமாக, நினைவுகளில் நீங்கள் ஏதாவது சேமித்து வைத்திருந்தால், உங்களுக்குத் தேவைப்படும் வரை அதை நங்கள் வைத்திருப்போம், ஆனால் நீங்கள் ஒரு நண்பருடன் அரட்டையடிக்கும்போது, ​​உங்கள் நண்பர் அதைப் படித்த 24 மணி நேரத்திற்குள்(அல்லது தானாகவே பார்த்த பிறகு - உங்கள் அமைப்புகளுக்கேற்ப இது செயல்படும்) நீங்கள் அனுப்பும் அரட்டைகளை நீக்கும் வகையில் எங்கள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் தரவை நாங்கள் தக்கவைத்துக்கொள்வதா என்பது ஒரு குறிப்பிட்ட அம்சம், உங்கள் அமைப்புகள் மற்றும் நீங்கள் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் தகவலை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது நாங்கள் கருத்தில் கொள்ளும் மேலும் சில காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

 • எங்கள் சேவைகளை இயக்க அல்லது வழங்க எங்களுக்கு தகவல் தேவைப்படலாம்.
  எடுத்துக்காட்டாக, உங்கள் கணக்கை பராமரிக்க உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் அடிப்படை கணக்கு விவரங்களை நாங்கள் சேமிக்கிறோம்.

 • எங்கள் சேவைகளிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்வதற்கு தேவையானபடி மற்றும் இந்த தனியுரிமைக் கொள்கையில் நாங்கள் விவரித்துள்ளபடி. உதாரணமாக, உங்களை வெளிப்படுத்துவதற்கு நண்பர்கள் முக்கியம் என்பதால், அவற்றை நீக்கும்படி நீங்கள் கேட்கும் வரை உங்கள் நண்பர்கள் பட்டியலை நாங்கள் பராமரிக்கிறோம்.
  மாறாக, Snapchat -ல் அனுப்பப்படும் Snaps மற்றும் அரட்டைகள், உங்கள் இயல்புநிலை அமைப்புகளை நீங்கள் மாற்றவில்லை அல்லது எதையாவது சேமிக்க முடிவு செய்யவில்லையெனில் எல்லா பெறுநர்களாலும் திறக்கப்பட்டுள்ளது அல்லது காலாவதியாகிவிட்டது என்பதை நாங்கள் கண்டறிந்த 24 மணி நேரத்திற்குள் எங்கள் சேவையகங்களிலிருந்து இயல்பாக நீக்கப்படும்.

 • தகவல்கள் உட்பட. இருப்பிடத் தகவல்கள் எவ்வளவு துல்லியமானது, எந்தச் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதன் அடிப்படையில் இருப்பிடத் தகவல்களை வெவ்வேறு கால அளவிற்குச் சேமித்து வைக்கிறோம். நினைவகங்களில் சேமிக்கப்பட்டவை அல்லது Snap வரைபடத்தில் அல்லது ஸ்பாட்லைட்டில் பதிவிடப்பட்டவை போன்ற Snap உடன் தொடர்புடையதாக இருப்பிடத் தகவல்களாக இருந்தால், நாங்கள் Snap ஐச் சேமித்து வைத்திருக்கும் வரை அந்த இருப்பிடத் தகவல்களையும் தக்கவைப்போம்.
  நிபுணர் உதவிக்குறிப்பு: உங்கள் தரவைப் பதிவிறக்குவதன் மூலம் உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் இருப்பிடத் தரவை நீங்கள் பார்க்கலாம்.

 • சில சட்டக் கடமைகளுக்கு இணங்கத் தேவையான தகவலை எவ்வளவு காலத்திற்குத் தக்கவைத்திருக்க வேண்டும்.

 • தீங்குகளைத் தடுப்பது, எங்கள் சேவை விதிமுறைகள் அல்லது பிற கொள்கைகளின் விதிமீறல்களை ஆராய்வது, விதிமீறல் அறிக்கைகளை விசாரிப்பது அல்லது எங்களை அல்லது மற்றவர்களைப் பாதுகாப்பது போன்ற பிற நியாயமான நோக்கங்களுக்காக எங்களுக்குத் தேவைப்படலாம்.

 • தயாரிப்புகளுக்கான குறிப்பிட்ட தக்கவைப்புக் காலங்கள் குறித்த விவரங்களுக்கு எங்கள் தயாரிப்புகளின் தனியுரிமை பக்கத்தையும் ஆதரவு பக்கத்தையும்பாருங்கள்.

எங்கள் நீக்குதல் நடைமுறைகளைத் தானாகவே செயல்படுத்தும் வகையில் எங்கள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நீக்குதல் நடைபெறும் என்று எங்களால் உறுதியளிக்க முடியாது.

சில சந்தர்ப்பங்களில், உங்கள் தரவைச் சேமிப்பதற்கான சட்டத் தேவைகளுக்கு நாங்கள் இணங்க வேண்டும், இது உங்கள் தகவலை நீக்குவதைத் தடுக்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் உள்ளடக்கத்தின் நகலை வைத்திருக்குமாறு நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தால் அதற்கிணங்கி நாங்கள் செயல்பட வேண்டும். உங்கள் கணக்கு, உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் அல்லது பிற Snapchat பயனர்களுடன் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் போன்றவற்றின் தவறான பயன்பாடு அல்லது பிற சேவை விதிமுறைகளை மீறியதற்காக மற்றவர்களால் அல்லது எங்கள் அமைப்புகளால் கொடியிடப்பட்டிருத்தல் அல்லது தவறான பயன்பாடு, பிற விதிமுறைகள் அல்லது கொள்கை மீறல்கள் பற்றிய புகாரைப் பெறுதல் போன்றவை உங்கள் தரவின் நகலை நாங்கள் வைத்திருக்க வேண்டியதற்கான பிற காரணங்களாகும்.
இறுதியாக, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அல்லது சட்டத்தின் தேவைக்கு ஏற்பச் சில தகவல்களை நாங்கள் காப்புப்பிரதி எடுத்து வைக்கலாம்.

பல்வேறு வகையான உள்ளடக்கங்களை நாங்கள் எவ்வளவு காலம் சேமிக்கிறோம் என்பது பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு, உதவித் தளத்தைப் பார்க்கவும்.

பிராந்திய குறிப்பிட்ட தகவல்

நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, உங்களுக்கு கூடுதல் உரிமைகள் இருக்கலாம், இந்த பிரிவு பிராந்தியத்தின் குறிப்பிட்ட தகவலின் கூடுதல் விவரங்களை வழங்குகிறது.

எங்கள் கொள்கைகளை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்க நாங்கள் சிறந்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம், ஆனால் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, உங்களுக்கு கூடுதல் உரிமைகள் இருக்கலாம் அல்லது நீங்கள் அறிந்திருக்க வேண்டிய கூடுதல் தகவல்கள் இருக்கலாம். உங்களுக்கு எவையேனும் பொருந்துமா என்பதை பார்க்க கீழே உள்ள பட்டியலைக் காணுங்கள்!

சில அதிகார வரம்புகள், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தரவு செயலாக்குவதற்கு எங்கள் சட்டப்பூர்வ அடிப்படையை தெரிவிக்க கோருகின்றன. நீங்கள் அந்த தகவலை இங்கே காணலாம்.

எங்கள் பார்வையாளர்கள்

எங்கள் சேவைகள் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன.

எங்கள் சேவைகள் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை, மேலும் கணக்கை உருவாக்குவதற்கும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் 13 வயதிற்குக் குறைவானவர் (அல்லது உங்கள் மாநிலம், மாகாணம் அல்லது நாட்டில் பெற்றோரின் அனுமதியின்றி ஒருவர் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய குறைந்தபட்ச வயது, இதைவிட அதிகமாயிருப்பின்) என்பதை அறிந்தால், நாங்கள் உங்களுக்கு சேவைகளை வழங்குவதை நிறுத்திவிட்டு, உங்கள் கணக்கையும் தரவையும் நீக்குவோம்.

கூடுதலாக, 18 வயதுக்குட்பட்ட Snapchat பயனர்களின் சில தகவல்களை எவ்வாறு சேகரிப்பது, பயன்படுத்துவது மற்றும் சேமிப்பது என்பதையும் நாங்கள் கட்டுப்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்குச் சில செயல்பாடுகளை எங்களால் வழங்க முடியாது என்பதே இதன் பொருள்.

தனியுரிமைக் கொள்கையில் புதுப்பிப்புகள்

நாங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம், மேலும் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கும் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.

நாங்கள் இந்தத் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மாற்றலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யும்போது, ஏதாவது ஒரு வழியில் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். சில நேரங்களில், எங்கள் இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் இருக்கும் தனியுரிமைக் கொள்கையின் மேல் உள்ள தேதியைத் திருத்துவதன் மூலம் நாங்கள் உங்களுக்கு அதனைத் தெரியப்படுத்துவோம். மற்ற நேரங்களில், நாங்கள் உங்களுக்குக் கூடுதல் அறிவிப்பை வழங்கலாம் (எங்கள் இணையதளங்களின் முகப்புப் பக்கங்களில் அறிக்கையைச் சேர்ப்பது அல்லது செயலியிலேயே உங்களுக்கு அறிவிப்பை வழங்குவது போன்றவை).

எங்களைத் தொடர்புகொள்க

இங்குள்ள தகவல்களைப் பற்றி ஏதேனும் கேள்விகள் உள்ளதா? நீங்கள் எங்களை இங்கேதொடர்புகொள்ளலாம்.