ஆஸ்திரேலியா தனியுரிமை அறிவிப்பு
செயலாக்கம்: டிசம்பர் 10, 2025
தனியுரிமைச் சட்டம் 1988 மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் 2021இன் சமூக ஊடகத்திற்கான குறைந்தபட்ச வயது (“SMMA”) தேவைகள் உட்பட ஆஸ்திரேலிய சட்டங்களுக்கு இணங்க தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை விளக்குவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு குறிப்பாக இந்த அறிவிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
எங்கள் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் அனைத்து பயனர்களுக்கும் நாங்கள் வழங்கும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள் இந்தச் சட்டங்களுக்கு ஏற்ப உள்ளன. உதாரணமாக அனைத்துப் பயனர்களும் தங்கள் தரவின் நகலைக் கோரலாம், நீக்குவதற்குக் கோரலாம் மற்றும் செயலியில் தங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம். பிற அனைத்து உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.
அணுகல், நீக்கம், திருத்தம் மற்றும் பெயர்வுத்திறன் ஆகியவற்றின் உரிமைகள்
தனியுரிமைக் கொள்கையின் உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு என்ற பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளவாறு அணுகல் மற்றும் திருத்தத்திற்கான உங்கள் உரிமைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
சர்வதேச தரவு பரிமாற்றங்கள்
நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, அதை இடமாற்றி, நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் சேமிக்கலாம், செயலாக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக வெளிநாட்டு பெறுநர்கள் ஆஸ்திரேலிய தனியுரிமைச் சட்டங்களை மீறாமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கிறோம். நாங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் மூன்றாம் நபர்களின் வகைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் இங்குக் காணலாம்.
SMMA சட்டத்துக்கு இணங்க வயதுச் சரிபார்ப்பு
SMMA சட்டத்தின்படி, 16 வயதிற்குட்பட்ட ஆஸ்திரேலியப் பயனர்கள் குறிப்பிட்ட சில சேவைகளில் கணக்கு வைத்திருக்கக்கூடாது.
உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் நீங்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பவரா மற்றும் 16 வயதிற்குட்பட்டவரா என்பதை மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். இதில் பின்வருவன அடங்கும், உங்கள்:
பிறந்தநாள்
IP முகவரி
பயன்பாட்டுத் தகவல்கள் (Snapchatஐ எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய நடத்தைத் தகவல்கள் – எடுத்துக்காட்டாக, எந்தெந்த லென்ஸஸைப் பார்க்கிறீர்கள் மற்றும் பயன்படுத்துகிறீர்கள், உங்கள் பிரீமியம் சந்தாக்கள், நீங்கள் பார்க்கும் கதைகள், மற்ற Snapchat பயனர்களுடன் எத்தனை முறை உரையாடுகிறீர்கள்)
உள்ளடக்கத் தகவல்கள் (நீங்கள் உருவாக்கும் அல்லது வழங்கும் உள்ளடக்கம் பற்றிய தகவல்கள், ஒளிப்படக்கருவி மற்றும் ஆக்கப்பூர்வக் கருவிகள் உடனான உங்கள் ஈடுபாடு, My AI உடனான உங்கள் உரையாடல்கள் மற்றும் மெட்டாடேட்டா – எடுத்துக்காட்டாக உள்ளடக்கம் பதிவிடப்பட்ட தேதி மற்றும் நேரம், அதை யார் பார்த்தது போன்ற தகவல்கள்)
நட்புத் தகவல்கள், உங்கள் Snapchat நண்பர்களின் வயதுகள் உட்பட.
நீங்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பவராக இருந்தால், Snapchatஐத் தொடர்ந்து பயன்படுத்த எங்கள் மூன்றாம் நபர் சேவை வழங்குநர் k-ID உடன் வயதுச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைக் கூடுதலாக மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். இந்த நடவடிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு எங்கள் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
தனிப்பட்ட தகவல் சேகரிப்பைக் குறைப்பதற்காக நீங்கள் 16 வயதுக்கு மேற்பட்டவரா இல்லையா என்பதற்கு “ஆம்/இல்லை” என்ற இரண்டு பதில்களை மட்டுமே Snap பெறும், பொருந்தினால் Snapchat அணுகலை உங்களுக்குத் தொடர்ந்து வழங்க இந்த முடிவைப் பயன்படுத்தும். நீங்கள் 16 வயதிற்குட்பட்டவர் என இந்த முடிவில் குறிப்பிடப்பட்டால், உங்கள் கணக்கு பூட்டப்படும். உங்கள் முக ஸ்கேன்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது k-ID சரிபார்ப்புச் செயல்முறையின்போது நீங்கள் வழங்கும் பிற தனிப்பட்ட தகவல் எதையும் நாங்கள் பெற மாட்டோம்.
பொருந்தும் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த அறிவிப்பை நாங்கள் புதுப்பிக்கலாம்.
புகார்கள் அல்லது கேள்விகள்?
உங்களின் எந்தவொரு கேள்விகளையும் எங்கள் தனியுரிமை ஆதரவுக் குழு அல்லது தரவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு dpo [at] snap [dot] com என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கலாம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
தனியுரிமை புகார் ஒன்றை அளிக்க நீங்கள் ஆஸ்திரேலிய தகவல் ஆணையரின் அலுவலகத்தைத் (OAIC) தொடர்பு கொள்ளலாம்.