Privacy, Safety, and Policy Hub

Spectacles 2024 துணை தனியுரிமை கொள்கை

அமலுக்கு வரும்: செப்டம்பர் 20, 2024

Snap Inc. இன் கூடுதல் தனியுரிமை கொள்கை Spectacles 2024. Spectacles 2024 டிவைஸ் மற்றும் துணை Spectacles செயலி (ஒன்றாக "Spectacles") ஐப் பயன்படுத்தும் நபர்களுக்கு கூடுதல் தகவலை வழங்குவதற்காக இந்தக் கொள்கையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தத் துணை கொள்கை எங்களின் தனியுரிமை கொள்கைக்கும் பிராந்திய குறிப்புகளுக்கும் கூடுதலாக இருக்கும், மேலும் Snap Spectacles இல் உள்ள உங்கள் தரவை எப்படி சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது மற்றும் எவ்வாறு பகிர்கிறது என்பதை இது விளக்குகிறது.

உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு

உங்கள் தகவலை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம், எனவே அதற்கானப் பல்வேறு கருவிகளை உங்களுக்கு வழங்குகிறோம், அவற்றில் அடங்குபவை:

  • இருப்பிட அனுமதி. இயல்பாகவே உங்கள் இருப்பிடத் தகவல் (ஜிபிஎஸ் சிக்னல்கள் மூலம் துல்லியமான இருப்பிடம்) நீங்கள் Spectacles App இல் அதை அனுமதிக்கும் வரை சேகரிக்கபடாது. உங்கள் Spectacles செயலியில் எப்போது வேண்டுமானாலும் இந்த அம்சத்தை நீங்கள் நிறுத்தி வைக்கலாம்.

  • கேமரா மற்றும் மைக்ரோஃபோன். உங்கள் Spectacles செயலியை உங்கள் Spectacles கருவி உடன் இணைக்கும்போது அது செயல்பட உங்கள் Spectacles கருவியில் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோனுக்கான அனுமதி தேவை. உங்கள் Spectacles கருவியை பயன்படுத்தி உங்கள் Spectacles கருவியின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனுக்கான Spectacles செயலியின் அணுகலை நீங்கள் அகற்றலாம்.

  • உங்கள் பிடிப்புகளை அழிக்கவும். உங்கள் Spectacles கருவியில் நீங்கள் எடுத்த படங்கள் அல்லது வீடியோ பதிவுகள் Spectacles செயலியை பயன்படுத்தி உங்கள் பிடிப்புகளை தரவிறக்கம் செய்யும்போது உங்கள் கருவியிலிருந்து தானாகவே நீக்கப்படும்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

நீங்கள் Spectacles-ஐ பயன்படுத்தும் போது, நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவலை நாங்கள் சேகரிக்கிறோம், நீங்கள் Spectacles-ஐ பயன்படுத்தும் போது நாங்கள் உருவாக்கும் தகவல்கள் அல்லது உங்கள் அனுமதியுடன் நாங்கள் பெற்ற பிற தகவல்கள், உட்பட:

  • கேமரா மற்றும் ஆடியோ தகவல். உங்களுக்கு Spectacles அனுபவத்தை வழங்க, உங்கள் கேமரா மற்றும் மைக்ரோஃபோனிலிருந்து தகவல்களை நாங்கள் சேகரிக்க வேண்டும்:

    • உங்கள் கைகள் பற்றிய தகவல். Spectaclesக்கு செல்ல உங்கள் கைகளை நீங்கள் ஈடுபடுத்த வேண்டும். உதாரணமாக, உங்கள் உள்ளங்கையைப் பார்ப்பதன் மூலம், இன்-லென்ஸ் மெனுவை அணுகலாம், மேலும் உங்கள் விரல் நுனிகளைப் பயன்படுத்தி AR பொருட்களை பின்ச், டிராக், மற்றும் புல் செய்யலாம். உங்கள் கைகள் தொடர்பான தகவல் சேகரிக்காமல் இது சாத்தியமாகாது. உங்கள் கைகளின் அளவையும், உங்கள் கைகளின் மூடுகளுக்கு இடையிலான மதிப்பிடப்பட்ட தூரம், உங்கள் கைகளின் நிலையையும், இயக்கங்களையும், கணக்கில் கொண்டு, AR அனிமேஷன் கைகளை உருவாக்கி பொருட்களை கைகளின் நிலை மற்றும் இயக்கம் ஆகியவற்றை நாங்கள் பரிசீலிப்போம்.

    • உங்கள் குரல் பற்றிய தகவல். Spectacles இல் உள்ள அம்சங்களுடன் தொடர்புகொள்வதற்கு — மைAI — போன்று குரல் கட்டளைகளை நீங்கள் பயன்படுத்தலாம், அதாவது டெக்ஸ்ட் டிரான்ஸ்கிரிப்ட்காளை உருவாக்க உங்கள் ஆடியோவை செயல்படுத்துவோம். நீங்கள் Spectacles ஐப் பயன்படுத்தும் போது மைக்ரோஃபோன் உங்களைச் சுற்றியுள்ள ஒலிகளை எடுக்கக்கூடும்.

    • உங்கள் சுற்றுப்புறத்தை பற்றிய தகவல்: நீங்கள் இருக்கும் இடத்தை பற்றி நாங்கள் தகவல்களை சேகரிக்கிறோம். எடுத்துக்காட்டாக, உங்களை சுற்றியுள்ள பொருட்களான சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும், மேலும் அந்த பொருட்களின் அளவு, வடிவம் மற்றும் தூரத்தை நாங்கள் மதிப்பிடுகிறோம். இந்த தகவல் உங்களுக்கு ஒரு அதிவேக AR அனுபவத்தை வழங்குகிறது.

  • பொருத்தம் சரிசெய்தல். Spectacles உங்களுக்கு பொருத்தமானதா என்பதை உறுதிபடுத்த உங்களுடைய பொருத்தம் மற்றும் விருப்பங்கள் தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்:

    • கண் தூரம். உங்கள் கண்களுக்கு இடையில் உள்ள தூரம் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். இது உங்களுக்கு வசதியாகவும், காட்சி தெளிவும் மற்றும் சிறந்த AR அனுபவத்தை அளிக்கும். Spectaclesக்கு ஆப் மூலம் இந்தத் தகவலை நீங்களே எங்களுக்கு வழங்கலாம் அல்லது நீங்கள் முதலில் Spectacles ஐப் பயன்படுத்தும் போது கேமரா மூலம் அதை உங்களுக்காக நாங்கள் மதிப்பீடு செய்து சேகரிப்போம். சேகரிக்கப்பட்ட கண்களின் தூரம் பற்றிய தகவல் உங்கள் Spectacles கருவியில் தொடர்ந்து இருக்கும். Spectacles செயலியில் இல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பொருத்ததை மாற்றலாம்.

    • உங்கள் கண்ணின் தூரத்தை மதிப்பிட ஸ்பெக்டகில்ஸ் iOS செயலியை ஐப் பயன்படுத்தும் போது, துல்லியமான கண் தூரம் முகத்தரவை படமெடுக்க உங்கள் ஃபோனில் TrueDepth கேமராவைப் பயன்படுத்துகிறோம். குறிப்பு, எனினும்,TrueDepth கேமராவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் நிகழ்நேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன - நாங்கள் இந்தத் தகவல்களை எங்களது சேவையகங்களில் சேமிக்கவோ மூன்றாம் தரப்பினருடன் பகிரவோ மாட்டோம்.

  • இருப்பிடத் தகவல்கள். உங்கள் இருப்பிடத்தை செயல்படுத்துவது, அந்த இடம் சார்ந்த லென்ஸ்கள், ஸ்டிக்கர்கள், ஃபில்ட்டர்கள் ஆகியவற்றை சேர்க்க உங்களை அனுமதிக்கும், மற்றும் நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுடன் இந்த தகவலை சேமிக்கலாம்.

  • எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள். Spectacles மூலம் புகைப்படங்கள் எடுக்க அல்லது வீடியோக்கள் பதிவு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் எடுத்த உள்ளடக்கத்தை Spectacles செயலியை ஐப் பயன்படுத்தி பதிவிறக்கும் வரை உங்கள் கருவியில் இருக்கும்.

நாங்கள் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம்

எங்கள் தனியுரிமை கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, Spectacles ஐ இயக்குதல், விநியோகித்தல், பராமரித்தல் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக உங்கள் தகவலை  நாங்கள் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, உங்கள் தகவலை நாங்கள் இதற்க்காக பயன்படுத்துகிறோம்:

  • உங்கள் தகவலை பயன்படுத்தி, உங்கள் Spectacles ஐ தனிப்பயனாக்குவதன் மூலம் பொருத்தத்தை சரி பார்க்கலாம்.

  • ஆக்மேன்டட் ரீயாலிட்டிக்காக எங்களின் இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்கி மேம்படுத்தலாம்.

  • உங்கள் தகவல்களை, குறிப்பாக லென்ஸ்கள் மூலமாக ஈடுபாடுகள் மற்றும் மெட்டாடடேட்டாவை போல போக்குகள் மற்றும் பயன்பாட்டு முறைகள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றை ஆராய்ந்து தேவைகளைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவும். 

நாங்கள் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம்

எங்கள் தனியுரிமை கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பல்வேறு காரணங்களுக்காக உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எடுத்துக்காட்டாக, கோலோகேடட் லென்ஸ்கள், உங்கள் காட்சி பெயர், கருவியின் தகவல், பிட்மோஜி, சில கேமரா தரவு மற்றும் கோலோகேடட் லென்ஸ் இல் உள்ள மற்ற பங்கேற்பாளர்களுடன் நீங்கள் எடுக்கும் செயல்களைப் பகிரலாம். எங்கள் லென்ஸஸ் டெவலப்பர்கள் உட்பட சேவை வழங்குநர்களுடன் உங்கள் தகவலை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

Spectacles இல் My AI ஐப் பயன்படுத்தினால், உங்கள் வழிகாட்டுதலின் படி யூடூப் போன்ற மூன்றாம் தரப்பு வழங்குநர்களுடன் அவரகளின் API சேவை மூலம் சிறந்த தேடல் முடிவுகளையோ அல்லது கேள்விகளுக்கான பதில்களையோ உங்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் தகவலை பகிர்ந்து கொள்ளலாம். My AI. உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை அறிய கூகிளின் தனியுரிமை கொள்கையை படிக்க நேரம் ஒதுக்குங்கள்.

எங்களைத் தொடர்புகொள்க

இந்த கொள்கை அல்லது எங்கள் தனியுரிமை நடைமுறைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் எங்களை இங்கே தொடர்பு கொள்ளலாம்.