தென்கொரியா தனியுரிமை அறிவிப்பு

செயல்திறனானது: மே 22, 2024

தென்கொரியாவில் உள்ள பயனர்களுக்காக இந்த அறிவிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். தென்கொரியாவில் உள்ள பயனர்களுக்கு தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டம் உட்பட தென்கொரிய சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தனியுரிமை உரிமைகள் உள்ளன.  எங்கள் தனியுரிமை கோட்பாடுகள் மற்றும் நாங்கள் வழங்கும் தனியுரிமை கட்டுப்பாடுகள் அனைத்து பயனர்களுக்கும் இந்த சட்டங்களுக்கு ஏற்ப இருக்கும்—இந்த அறிவிப்பு தென்கொரியாவின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. உதாரணமாக அனைத்துப் பயனர்களும் தங்கள் தரவின் நகலைக் கோரலாம், நீக்குவதற்குக் கோரலாம் மற்றும் செயலியில் தங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம். முழு விவரத்திற்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

தரவு கட்டுப்படுத்தி

நீங்கள் தென்கொரியாவில் உள்ள பயனராக இருந்தால், Snap Inc. உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

மூன்றாம் நபருக்கு தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துதல்

இங்கேவிவரித்துள்ளவாறு சில மூன்றாம் நபர் சேவை வழங்குநர்கள் மற்றும்/அல்லது Snap Inc குழு நிறுவனங்களில் உள்ள சில Snap துணை அமைப்புகள் Snap சார்பாக சில செயல்களைச் செய்யலாம் மற்றும் அந்தச் செயல்களைச் செய்யத் தேவைப்படும் உங்கள் தனிப்பட்ட தகவலுக்கு அவர்களுக்கு அணுகல் இருக்கலாம்.

Snapchat இல் வேடிக்கையான புதிய அம்சங்களை சேர்க்க நாங்கள் பணிபுரியும் கூட்டாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எங்கள் சேவைகளில் மூன்றாம் நபர்களால் சேகரிக்கப்படும் தகவல்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, எங்கள்உதவித் தளத்திற்குச்செல்க. பொருந்தக்கூடிய தக்கவைப்பு காலங்களுக்கு ஒவ்வொரு கூட்டாளர் தனியுரிமைக் கொள்கையையும் பார்க்கவும்.

சட்டத்தால் அனுமதிக்கப்பட்டால் தவிர உங்களுடைய ஒப்புதல் இல்லாமல் உங்கள் தனிப்பட்ட தகவலை மூன்றாம் நபர்களுடன் பக்கிரமாட்டோம் என்பதைக் குறிப்பில் கொள்க.

தனிப்பட்ட தகவலை அழிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் முறைகள்

நீங்கள் ஒப்புக்கொண்ட காலம் காலாவதியான பிறகு அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல் சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்குத் தேவைப்படாமல் போகும்போது உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் அழித்துவிடுவோம். எங்கள் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் எப்போதாவது Snapchat பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்தால், உங்கள் கணக்கை நீக்கிவிடும்படி எங்களிடம் கேட்கலாம். நீங்கள் சிறிது காலம் செயலற்ற நிலையில் இருந்த பிறகு உங்களைப் பற்றி நாங்கள் சேகரித்த பெரும்பாலான தகவல்களை நீக்குகிறோம் - கவலைப்பட வேண்டாம், முதலில் உங்களைத் தொடர்பு கொள்ள நாங்கள் முயற்சிப்போம்! உங்கள் தரவை நாங்கள் அழிக்கும்போது, தனிப்பட்ட தகவல்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவதை உறுதிசெய்ய வணிக ரீதியாக நியாயமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இயன்ற நடவடிக்கைகளை எடுப்போம்.

உங்கள் உரிமைகள்

உங்கள் தகவலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க நாங்கள் விரும்புகிறோம், எனவே உங்கள் தனிப்பட்ட தகவல் தொடர்பான பல உரிமைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். தனியுரிமைக் கொள்கையின் உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு என்றப் பிரிவைப் பார்க்கவும்.

சர்வதேச தரவு பரிமாற்றங்கள்

வெளிநாட்டு Snap Inc. நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்.  உங்களுக்கு எங்கள் சேவைகளை வழங்க, Snap சார்பாக இங்கு விவரித்துள்ளவாறு அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியே நீங்கள் வசிக்கும் நாடுகளில், உங்கள் தனிப்பட்ட தகவலை Snap Inc குழு நிறுவனங்கள் மற்றும் சில மூன்றாம் நபர் சேவை வழங்குனர்களிடமிருந்து சேகரிக்கலாம், அவர்களுக்குப் பரிமாற்றலாம், தகவலை அவர்களிடம் சேமித்துச் செயலாக்கலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வெளியே நாங்கள் தகவல்களைப் பகிரும்போதெல்லாம், உங்கள் தனிப்பட்ட தகவல் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதற்காக உங்கள் உள்ளூர் சட்டத்துடன் பரிமாற்றம் இணங்குவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

  • தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் செய்யப்படும் நாடு: அமெரிக்கா

  • பரிமாற்ற தேதி மற்றும் முறை: சேமிப்பு மற்றும் செயலாக்கத்திற்கு சமர்ப்பிக்கும் போது பரிமாற்றப்பட்டது

  • பரிமாற்றப்பட்ட தனிப்பட்ட தகவல்: தனியுரிமைக் கொள்கையின் நாங்கள் சேகரிக்கும் தகவல் பகுதியை பார்க்கவும்

  • தனிப்பட்ட தகவல்களைத் தக்கவைப்பது: தனியுரிமைக் கொள்கையின் உங்கள் தகவலை நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருப்போம் பகுதியைப் பார்க்கவும் 

வெளிநாட்டு கூட்டாளர்கள்.  Snapchat இல் வேடிக்கையான புதிய அம்சங்களைச் சேர்க்க, கொரியா குடியரசிற்கு வெளியே உள்ள, நாங்கள் பணிபுரியும் கூட்டாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் உங்களைப் பற்றிய தகவலைப் பகிரலாம். எங்கள் கூட்டாளர்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, எங்கள் ஆதரவுத் தளத்தைப் பார்க்கவும்.

  • தனிப்பட்ட தகவல் பரிமாற்றப்படும் நாடு: இங்கே அணுகக்கூடிய கூட்டாளர் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும் ஆதரவுத் தளம்

  • பரிமாற்ற தேதி மற்றும் முறை: சேமிப்பு மற்றும் செயலாக்கத்திற்கு சமர்ப்பிக்கும் போது பரிமாற்றப்பட்டது

  • பரிமாற்றப்பட்ட தனிப்பட்ட தகவல்: தனியுரிமைக் கொள்கையின் நாங்கள் சேகரிக்கும் தகவல் பகுதியை பார்க்கவும்

  • தனிப்பட்ட தகவலைத் தக்கவைத்தல்: இங்கே அணுகக்கூடிய கூட்டாளர் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும் ஆதரவுத் தளம்

தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் மற்றும் புகார்களைக் கையாளும் துறை

Snapஇன் தனியுரிமை அலுவலரைப் பின்வரும் Snapஇன் உள்ளூர் முகவர் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்: General Agent Co. Ltd (பிரதிநிதி: Ms. யூன்-மி கிம்)
முகவரி: Rm. 1216, 28, Saemunan-ro 5ga-gil, Jongno-gu, Seoul
தொலைபேசி: 02 735 6118
மின்னஞ்சல்: snap @ generalagent.co.kr
ஒப்படைக்கப்பட்ட பணி: தனிப்பட்ட தகவல் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நெட்வொர்க் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உள்நாட்டு பிரதிநிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள்

கூடுதலாக, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நீங்கள் Snap-இன் தனியுரிமை அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.

Snap Inc.
கவனத்திற்கு: சட்டத் துறை: (கொரியா உறுப்பினர் வினவல்கள்)
3000 31st Street
Santa Monica, CA 90405
USA
தொலைபேசி: 02 735 6118
மின்னஞ்சல்: koreaprivacy @ snap.com