மெக்சிகோ தனியுரிமை அறிவிப்பு

அமலுக்கு வரும் தேதி: செப்டம்பர் 30, 2021

மெக்சிகோவில் உள்ள பயனர்களுக்காக இந்த அறிவிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மெக்சிகோவில் உள்ள பயனர்கள் மெக்சிகன் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தனியுரிமை உரிமைகளைக் கொண்டுள்ளனர், இதில் Ley Federal de Protección de Datos Personales en Posesión de los Particulares விவரங்கள் அடங்கும். எங்கள் தனியுரிமை கோட்பாடுகள் மற்றும் நாங்கள் வழங்கும் தனியுரிமை கட்டுப்பாடுகள் அனைத்து பயனர்களுக்கும் இந்த சட்டங்களுக்கு ஏற்ப இருக்கும்—இந்த அறிவிப்பு மெக்சிகோவின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. உதாரணமாக அனைத்துப் பயனர்களும் தங்கள் தரவின் நகலைக் கோரலாம், நீக்குவதற்குக் கோரலாம் மற்றும் செயலியில் தங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம். முழு விவரத்திற்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

தரவு கட்டுப்படுத்தி

நீங்கள் மெக்சிகோவிலுள்ள பயனராக இருந்தால், 3000 31வது தெரு, சாண்டா மோனிகா, கலிபோர்னியா 90405 என்ற முகவரியிலுள்ள Snap Inc. உங்கள் தனிப்பட்ட தகவலின் கட்டுப்பாட்டாளராக உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

அணுகல், திருத்தம் மற்றும் இரத்து செய்தல் உரிமைகள்

தனியுரிமைக் கொள்கையின் உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு  என்ற பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளவாறு அணுகல், திருத்தம் மற்றும் ரத்து செய்தல் ஆகியவற்றை கொண்டு உங்கள் உரிமைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

எதிர்ப்பதற்கான அல்லது அறைகூவல் விடுவதற்கான உங்கள் உரிமை

உங்கள் தகவல்களின் எங்கள் பயன்பாட்டை எதிர்க்கும் அல்லது அறைகூவல் விடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. பல வகையான தரவுகளுடன், நாங்கள் அதைச் செயலாக்குவதை நீங்கள் இனி விரும்பவில்லை எனில், அதை நீக்குவதற்கான திறனை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். பிற வகைத் தரவுகளுக்கு, அந்த அம்சத்தை முழுவதுமாக முடக்குவதன் மூலம் உங்கள் தரவின் பயன்பாட்டை நிறுத்தும் திறனை உங்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். செயலியில் நீங்கள் இவற்றைச் செய்யலாம். நாங்கள் பிற வகையானத் தகவலைச் செயலாக்குவதை நீங்கள் ஏற்காவிட்டால், எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

குக்கீகள்

பெரும்பாலான இணையச் சேவைகளையும் மொபைல் செயலிகளையும் போலவே, உங்கள் செயல்பாடு, உலாவி, சாதனம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கக் குக்கீகள் மற்றும் வெப் பீக்கான்கள், இணையச் சேமிப்பகம், தனித்துவ விளம்பர அடையாளங்காட்டிகள் போன்ற பிற தொழில்நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்தலாம்.  எங்கள் சேவைகள் மற்றும் உங்கள் தெரிவுகளில் நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி மேலும் அறிய, தனியுரிமைக் கொள்கையின் குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பிரிவில் சேகரிக்கப்பட்ட தகவலைப் பார்க்கவும்.