பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்கள்

What you need to know about our Recommendation Eligibility Guidelines:
படைப்பாளரின் நண்பர்கள் அல்லது சந்தாதாரர்களைத் தாண்டி அல்காரிதம் சார்ந்த பரிந்துரைகளுக்குத் தகுதிபெற (எடுத்துக்காட்டாக, கதைகள், ஸ்பாட்லைட் அல்லது வரைபடம் ஆகியவற்றில்), உள்ளடக்கமானது இந்தப் பக்கத்தில் உள்ளடக்க வழிகாட்டுதல்களில் விவரிக்கப்பட்ட கூடுதல், கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் எங்கே பொருந்தும்?
Snapchat என்பது முதன்மையாக ஒரு காட்சி சார்ந்த செய்தியிடல் செயலியாகும். மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அல்காரிதம் சார்ந்த பரிந்துரைகளின் மூலமாக பொது உள்ளடக்கம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும் பகுதிகளும் இந்தச் செயலியில் உள்ளன. அத்தகைய உள்ளடக்கம் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கம் என வரையறுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டிற்கு:
கதைகள் தாவலில், Snapchat பயனர்கள் தொழில்முறை ஊடகக் கூட்டாளர்கள் மற்றும் பிரபலமான படைப்பாளர்களின் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காணலாம்.
ஸ்பாட்லைட்டில், Snapchat பயனர்கள் எங்கள் சமூகத்தால் உருவாக்கி சமர்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கலாம்.
வரைபடத்தில், Snapchat பயனர்கள் உலகெங்கிலும் இருந்து நிகழ்வுகள், பரபரப்பான செய்திகள் மற்றும் பலவற்றின் Snapகளைப் பார்க்கலாம்.
1. இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன?
தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்பாய்வு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி கண்காணித்து இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களை நாங்கள் அமல்படுத்துகிறோம். Snapchat பயனர்கள் ஆட்சேபனைக்குறியதாகக் நினைக்கும் உள்ளடக்கத்தை புகாரளிக்க நாங்கள் செயலியினுள் கருவிகளை வழங்குகிறோம். பயனர் புகார்களுக்கு நாங்கள் விரைவாக பதிலளிக்கிறோம், மற்றும் அனைத்து Snapchat பயனர்களுக்கும் உள்ளடக்க அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் கருத்துக்களைப் பயன்படுத்துகிறோம்.
இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களில் உள்ள பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதிபெறுவதற்கான வழிகாட்டுதல்கள் கூட்டாளர், தனிப்பட்ட படைப்பாளர் அல்லது ஏதேனும் நிறுவன வகை என எந்தவொரு மூலத்திலிருந்து வந்த உள்ளடக்கத்திற்கும் சமமாகப் பொருந்தும்.
1. தனிப்பயனாக்கம் மற்றும் உணர்திறன் உள்ளடக்கம்
Snapchat பயனர்கள் பல்வேறு வயது, கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், மேலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட அனைத்துப் பயனர்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, மதிப்புமிக்க அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். பல Snapchat பயனர்கள் உள்ளடக்கத்தை விரும்பி தேர்வு செய்யாமல் பார்க்கக்கூடும் என்பதை உணர்வதன்னால், பொருத்தமற்ற அல்லது தேவையற்ற அனுபவங்களிலிருந்து Snapchat பயனர்களைப் பாதுகாக்க இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தின் உள்ளாக, நாங்கள் பரிந்துரைகளைத் தனிப்பயனாக்க முயற்சிக்கிறோம் குறிப்பாக "உணர்திறன்மிக்க" உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குகிறோம். எடுத்துக்காட்டாக, உணர்திறன் உள்ளடக்கத்தில் இவை அடங்கலாம்:
முகப்பரு சிகிச்சைகளைக் காட்டுபவை, இது சில Snapchat பயனர்களுக்கு அருவருப்பூட்டுவதாக இருக்கலாம், அதேநேரம் பிறர் அதைப் பயனுள்ளதாக அல்லது ஆர்வமூட்டுவதாகக் கருதலாம்; அல்லது
சூழல் அல்லது பார்வையாளரின் எண்ணத்தைப் பொறுத்து கவர்ச்சியான வகையில் நீச்சலுடையில் உள்ள நபர்களைக் காட்டுபவை.
சில உணர்திறன் உள்ளடக்கம் பரிந்துரைக்கத் தகுதிபெற்றதாக இருந்தாலும், சில snapchat பயனர்களின் வயது, இடம், முன்னுரிமைகள், அல்லது பிற அளவுகோல்களைப் பொறுத்து அதைப் பரிந்துரைப்பதை நாங்கள் தவிர்க்கலாம். இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களில் உள்ள உணர்திறன் அளவுகோல்கள் விரிவான எடுத்துக்காட்டுகளின் பட்டியல் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மட்டுறுத்தல் வரலாறு, பயனர் கருத்து, ஈடுபாட்டு சமிக்ஞைகள் அல்லது எங்கள் தலையங்கத்திற்கான சொந்த விருப்பங்களின் அடிப்படையில் ஏதேனும் உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதை நாங்கள் தடுக்கலாம் அல்லது மறுக்கலாம்.
Snap இன் உரிமைகள் தக்கவைக்கப்படுதல்
எங்கள் விருப்பப்படி இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தவும் அவற்றை அமல்படுத்துவதற்காக எந்தவொரு நடவடிக்கையை எடுக்கவும் நாங்கள் உரிமை கொண்டுள்ளோம். இதில் பிற விஷயங்களுடன் அகற்றுதல், பகிர்வை வரம்பிடுதல், இடைநீக்கம் செய்தல், விளம்பரத்தை வரம்பிடுதல் அல்லது உங்கள் உள்ளடக்கத்திற்கு வயதுக் கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியன அடங்கும்.
எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் அல்லது சேவை நிபந்தனைகள் ஆகியவற்றை மீறும் படைப்பாளர்கள் அல்லது கூட்டாளர்கள் இந்த உள்ளடக்க வழிகாட்டுதல்களை மீறல் செய்ததாகக் கருதப்படுவார்கள்.
கூடுதலாக, அணைத்து உள்ளடக்கமும் எங்கு பகிரப்பட்டாலும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கும் உங்களுடன் எங்களின் உள்ளடக்க ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும். மேலே குறிப்பிட்டவை மீறப்பட்டதாக நாங்கள் கருதும் இடங்களில், மீறிய அந்த உள்ளடக்கத்தை அகற்ற நாங்கள் அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளோம்.

நினைவில் கொள்
Snapchat இல் எல்லா இடங்களிலும் உள்ள பொது அல்லது தனிப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களும், எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.
பரிந்துரைத்தல் தகுதி