Privacy, Safety, and Policy Hub
சமூக வழிகாட்டுதல்கள்

சட்டவிரோத அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகள்

சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்

புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 2025

மேலோட்டம்

சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான எங்கள் தடை Snapchat முழுவதும் பாதுகாப்பு குறித்த எங்கள் உறுதியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த விதிகளை நிலைநிறுத்துவது எங்கள் தளம் சட்டவிரோத நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படாததை உறுதி செய்வதோடு, Snapchat பயனர்களை கடுமையாக பாதிக்கும் அபாயங்களில் இருந்து பாதுக்காக்க உதவுகிறது. இந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல, எங்கள் சமூகத்திற்கு கல்வி வளங்களை வழங்குவதற்கும் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்புப் பங்குதாரர்களான, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள அதிகார வரம்புகளில் சட்டங்களும் விதிமுறைகளும் வேறுபடுகின்றன - மேலும் Snapchat ஒரு உலகளாவிய சமூகம் - எங்கள் கொள்கைகள் பொதுவாக பொது பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அல்லது மனித உரிமைகள், அமெரிக்காவின் சட்டங்கள் அல்லது பயனர் அமைந்துள்ள நாட்டின் சட்டங்களை மீறும் எந்தவொரு செயலையும் தடை செய்கின்றன.

எல்லா சந்தர்ப்பங்களிலும், தடைசெய்யப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் பின்வருபவை உள்ளடங்கும்; குற்றவியல் நடவடிக்கையை ஊக்குவிப்பது; இணையக் குற்றத்திற்கு உதவுவது அல்லது அதில் பங்கேற்பது; மற்றும் சட்ட விரோதமான அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட மருந்துகள், கள்ளப் பொருட்கள், ஆயுதங்கள் அல்லது போலியான பொருட்கள் அல்லது ஆவணங்களை வாங்குதல், விற்பது அல்லது விற்பனைக்கு உதவுதல்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்

எங்கள் விதிகள் பின்வருவனவற்றைத் தடைசெய்கின்றன: 

  • எந்தவொரு சட்டவிரோதச் செயல்பாட்டிற்கும் Snapchat-ஐப் பயன்படுத்துதல். சட்ட விரோதமான அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட போதைப்பொருட்களை வாங்குதல் மற்றும் விற்றல், கடத்தல் (குழந்தைகள் மீதான பாலியல் துர்பிரயோகம் அல்லது வன்புணர்வை காட்டும் படங்கள் போன்றவை), சட்டவிரோதப் பொருட்கள், அழிந்து வரும் விலங்குகள், ஆயுதங்கள் அல்லது போலியான பொருட்கள் அல்லது ஆவணங்களை வாங்குவது, விற்பது, பரிமாற்றம் செய்வது அல்லது விற்பனைக்கு உதவுவது போன்றவை இதில் அடங்கும். மனித கடத்தல் அல்லது பாலியல் கடத்தல் உட்பட எந்தவொரு சுரண்டலையும் ஊக்குவிப்பது அல்லது அதற்கு வழிவகுப்பது இதில் அடங்கும்.

  • ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் அல்லது தொழில்களை சட்டவிரோதமாக ஊக்குவித்தல். Snap-இலிருந்து முன்கூட்டிய அனுமதி தேவையான கட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடுகளின் உதாரணங்கள்: ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளை வசதி செய்யுதல்; மது, புகையிலை, அல்லது வேப் பொருட்களை விற்பனை செய்தல்; மற்றும் THC தொழில்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும். Snapchat இல் பொருத்தமான வர்த்தகம் மற்றும் விளம்பரச் செயல்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதலுக்கு இந்த ஆதாரத்தை அணுக வணிகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

சட்டத்தைப் மீறும் மற்றும் Snapchat பயனர்களின் பாதுகாப்புக்கு தீவிர ஆபத்து விளைவிக்கும் ஆன்லைன் நடத்தை மற்றும் நடவடிக்கைகளின் வகைகள் குறித்து இயன்றவரை அதிகத் தகவலை Snapchat பயனர்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இலாப நோக்கமற்ற நிறுவனங்களுடனான கூட்டணி மற்றும் பல்வேறு பாதுகாப்பு பங்குதாரர்களுடன் இணைவதன் மூலம் அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் Snapchat பயனர்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதில் Here for You மற்றும் Heads Up போன்ற செயலியில் உள்ள வளங்கள் மற்றும் பாதுகாப்புப் பங்குதாரர்களுடனான ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும். குற்றத்திற்கான ஆதாரங்களை வழங்கக்கூடிய Snapchat செயல்பாடுகள் தொடர்பான சரியான சட்ட செயல்முறைகளுக்கு பதிலளிக்கும் வகையில் சட்ட அமலாக்க முகவர்களுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.

எடுத்துக்கொள்ள வேண்டியது

பொது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், Snapchat பயனர்களை தீங்கு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் எங்கள் பங்கைச் செய்வது நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் பொறுப்பாகும்.

இந்த முயற்சிகளை நாங்கள் தொடரும் போது, எங்கள் அணுகுமுறையின் செயல்திறனின் வெளிப்படையாக நுணுக்கங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளின் மூலம், சட்டவிரோத அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக எங்கள் அமலாக்கங்கள் தொடர்பான தகவலை வழங்குகிறோம். கூடுதல் விவரங்களை வழங்க, எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான மீறல்களுக்கான எங்கள் புகாரளிப்பு மற்றும் அமலாக்கத் தரவைப் பிரித்துள்ளோம், மேலும் இந்த மீறல்கள் குறித்த விரிவான விவரங்களை எங்கள் எதிர்கால அறிக்கைகளில் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

Snapchat-ஐப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்க உதவும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகளின் நிகழ்வுகளைப் புகாரளிக்க பயனர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கம் அல்லது நடத்தைக்கு தீர்வு காண்பதற்கான எங்கள் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம், மேலும் இந்த நோக்கங்களை நாங்கள் பொறுப்புடன் முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்புச் சமூகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து எங்கள் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் கொள்கை மையத்தைப் பார்வையிடவும்.