செப்டம்பர் 21, 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் புதுப்பித்துள்ளோம். செப்டம்பர் 21, 2026 வரை அனைத்துப் பயனர்களுக்கும் பொருந்தும் முந்தைய தனியுரிமைக் கொள்கையை நீங்கள் இங்கு பார்க்கலாம்.
தனியுரிமைக் கொள்கை
நடைமுறைக்கு வரும் தேதி: செப்டம்பர் 21, 2026
Snap Inc. இன் தனியுரிமைக் கொள்கைக்கு வரவேற்கிறோம். உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு சேகரித்துப் பயன்படுத்துகிறோம் மற்றும் உங்கள் தகவல்களை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இந்தக் கொள்கை விளக்குகிறது. எங்களது தனியுரிமை நடைமுறைகளின் விரைவான சுருக்கத்தைத் தேடுகிறீர்களா? இந்தப் பக்கம் அல்லது இந்த காணொளி -ஐப் பார்க்கவும். நீங்கள் குறிப்பிட்ட தயாரிப்புத் தனியுரிமைத் தகவலைத் தேடுகிறீர்கள் என்றால், எடுத்துக்காட்டாக, உங்கள் அரட்டைகள் மற்றும் Snapகளை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பது பற்றியவை, எங்கள் தயாரிப்பு வாரியாக தனியுரிமைப் பக்கத்தைக் காணுங்கள். இந்த ஆவணங்களுக்குக் கூடுதலாக, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை உங்களுக்கு வழங்கும் செயலியில் உள்ள அறிவிப்புகளையும் உங்களுக்குக் காட்டுகிறோம். நீங்கள் ஒரு SPECS பயனராக இருந்தால், நாங்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறோம் மற்றும் பயன்படுத்துகிறோம் என்பதை இங்கே காணலாம்.
வெளிப்படைத்தன்மை என்பது Snap இல் எங்களது முக்கிய மதிப்புகளில் ஒன்றாகும். நாங்கள் சேகரிக்கும் தரவு மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றிய ஆச்சரியங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம் - அதனால்தான் நாங்கள் அதை எவ்வாறு செயலாக்குவோம் என்பதைப் பற்றி வெளிப்படையாக இருக்கிறோம். உதாரணமாக, உங்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கம், தகவல்கள் மற்றும் விளம்பரங்களைக் காண்பிப்பது உள்ளிட்ட, உங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதற்காக நாங்கள் உங்கள் தகவல்களைச் செயலாக்குகிறோம். உங்கள் ஆர்வங்கள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்வது சிறந்த தயாரிப்பு அனுபவத்தை வழங்குவதில் எங்களுக்கு உதவுகிறது.
மேலும், உங்களது தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய தனித்துவமாக்கப்பட்ட அனுபவம் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். நிஜ வாழ்க்கையைப் போலவே, உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ள விரும்பும் சில தருணங்களும், பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள விரும்பும் வேறு சில தருணங்களும் உள்ளன. அதனால்தான் முதல் நாளில் இருந்து இயல்பாகவே உள்ளடக்கத்தை நீக்குவது மற்றும் Snapchat பயனர்களின் உள்ளடக்கத்திற்கு என்ன நடக்கிறது, யாரிடம் அதைப் பகிர விரும்புகிறார்கள் அல்லது எப்போது அதை சேமிக்க விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்ய அனுமதிக்கும் கருவிகளை வழங்கி கட்டுப்பாட்டை அவர்களிடம் கொடுப்பது எங்களின் தத்துவமாக இருந்து வருகிறது.
இந்தக் கொள்கை எங்களது Snapchat செயலி மற்றும் Bitmoji, SPECS மற்றும் எங்களது விளம்பரம் செய்தல் மற்றும் வர்த்தக முன்முயற்சிகள் போன்ற எங்கள் பிற தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அம்சங்களை உள்ளடக்கியது. இந்த கொள்கையில் நீங்கள் “சேவைகள்” என்று படித்தால், நாங்கள் அவை அனைத்தையும் குறிக்கிறோம். மேலும், எங்கள் “விதிமுறைகள்” எனக் குறிப்பிடுவதைப் பார்த்தால், நீங்கள் பதிவுசெய்யும்போது நீங்கள் ஒப்புக் கொண்ட எங்கள் சேவை நிபந்தனைகளைக் குறிக்கிறோம். இறுதியாக, "Snapchatter" என்ற சொல்லை நாங்கள் குறிப்பிட்டிருந்தால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் எந்தவொரு பயனரையும் சுருக்கமாகக் குறிக்கவே அதைச் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
உங்கள் தகவல்களின் மீது உங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குவோம்:
உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு
உங்களின் தகவல் மற்றும் அமைப்புகள் மீதான கட்டுப்பாடு என்பது Snapchat அனுபவத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் தகவலை நீங்கள் அணுகலாம், புதுப்பிக்கலாம், நீக்கலாம், உங்களை யார் தொடர்பு கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கலாம், Snapchat செயலியினுள் இருந்து உங்கள் தரவைப் பதிவிறக்கலாம். கிடைக்கக்கூடிய அமைப்புகளின் வகைகள் பற்றிய கூடுதல் விவரங்களை கீழே வழங்குகிறோம், எங்கள் தரவு பதிவிறக்கக் கருவிக்கான இணைப்பைக் கொடுக்கிறோம், மேலும் தரவு அல்லது உங்கள் கணக்கை எவ்வாறு நீக்குவது என்பது பற்றிய வழிகாட்டுதல்களையும் வழங்குகிறோம்.
உங்கள் தகவல்களின் கட்டுப்பாடு உங்களிடமே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், எனவே பின்வருபவை உட்பட பலவிதமான கருவிகளை உங்களுக்கு வழங்குகிறோம்:
உங்கள் தகவலை அணுகலாம் மற்றும் புதுப்பிக்கலாம். கணக்கு விவரங்கள் (உங்கள் பெயர், பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்தநாள் மற்றும் தொலைபேசி எண் போன்ற உங்களைப் பற்றிய தகவல்கள்) உள்ளிட்ட உங்கள் பெரும்பாலான அடிப்படைத் தகவல்களை எங்கள் சேவைகளிலேயே நீங்கள் அணுகலாம் மற்றும் திருத்தலாம். உங்கள் அமைப்புகளுக்குச் செல்லவும், அதில் உங்களுக்குக் கிடைக்ககூடிய விருப்பத் தேர்வுகளைக் காண்பீர்கள்.
உங்கள் தகவலை நீக்கலாம். உங்கள் கணக்கை நீக்க விரும்பினால், அதை எப்படி மேற்கொள்வது என இங்கே அறியவும். நினைவகங்களில் நீங்கள் சேமித்த உள்ளடக்கம்,My AI உடன் நீங்கள் பகிர்ந்த உள்ளடக்கம், ஸ்பாட்லைட் சமர்ப்பிப்புகள் போன்ற பல தகவல்களையும் எங்கள் சேவைகளில் இருந்து நீக்கலாம்.
உங்கள் உள்ளடக்கத்தை யார் பார்க்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தவும். நாங்கள் பல கருவிகளை உருவாக்கியுள்ளோம், அவை உங்கள் உள்ளடக்கத்தை யாருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்ய அனுமதிக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் உள்ளடக்கத்தை உங்கள் நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள நீங்கள் விரும்பலாம், பிற சந்தர்ப்பங்களில் நீங்கள் அதை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பலாம். மேலும் அறிய,இங்குசெல்க.
உங்களை யார் தொடர்பு கொள்ளலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். Snapchat என்பது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆகையால் அதற்கேற்ப தங்களை யார் தொடர்பு கொள்ளலாம் என்பதை தீர்மானிக்க உதவும் வகையில் கட்டுப்பாடுகளை வடிவமைத்துள்ளோம். தேவையற்ற தகவல்தொடர்புகளைப் பெற்றால்,அந்த நபரை எப்போது வேண்டுமானாலும் தடைசெய்யலாம் மற்றும் புகாரளிக்கலாம். மேலும் அறிய, இங்கு செல்க.
உங்கள் அனுமதிகளை மாற்றுங்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் அனுமதிகளை எப்போது வேண்டுமானாலும் விருப்பத்திற்கேற்ப மாற்றலாம். எடுத்துக்காட்டாக, இயல்பாகவே நீங்கள் வழங்கிய உங்கள் தொலைபேசி எண் மற்றும்/அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் மற்றவர்களால் உங்களைக் கண்டறிய முடியும். நீங்கள் கண்டறியப்படுவதை விரும்பவில்லை என்றால், உங்கள் அமைப்புகளை எப்பொழுது வேண்டுமாலும் மாற்றலாம். அல்லது நட்பை எளிதாக்குவதற்காக உங்கள் தொலைபேசி அல்லது மூன்றாம் தரப்பு தளத் தொடர்புகளுக்கான அணுகலை நீங்கள் வழங்கினால், உங்கள் செயலி அமைப்புகளில் அதை பின்னர் மாற்றலாம். நீங்கள் அவ்வாறு செய்தால், உங்கள் தொடர்புப் புத்தகத்தில் நண்பர்களைக் கண்டறிவது போன்ற சில அம்சங்கள் மற்றும் சேவைகள் இயங்காது.
விளம்பர செய்திகளிலிருந்து விலகலாம். SMS அல்லது பிற செய்தியிடல் தளங்கள் மூலம் அனுப்பப்படும் விளம்பர செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களிலிருந்து விலக அல்லது குழுவிலக உங்களுக்குத் தெரிவு இருக்கிறது. அவ்வாறு செய்ய, குழுவிலகுதல் இணைப்பு அல்லது அதன் ஒத்த செயல்பாடு போன்றவற்றின் மூலம் செய்திகளில் உள்ள வழிமுறைகளைப் பின்தொடர வேண்டும்.
உங்கள் தரவை பதிவிறக்க. உங்கள் Snapchat தகவலின் நகலை ஏற்றுமதி செய்வதற்கு எங்கள் என் தரவுகளைப் பதிவிறக்குக என்ற கருவியில் நீங்கள் கோரிக்கை வைக்கலாம்.
செயலாக்கத்தை எதிர்த்தல். நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாங்கள் செயலாக்கும் குறிப்பிட்ட தரவைப் பொறுத்தும், நாங்கள் செயலாக்குவதை எதிர்ப்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கலாம். இது சற்றே தொழில்நுட்பம் சார்ந்ததாக இருப்பதால், இதைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே விளக்கியுள்ளோம்.
விளம்பர விருப்பத்தேர்வுகளை அமைத்தல். உங்களின் விருப்பத்திற்கேற்பப் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிக்க முயற்சிக்கிறோம், ஆனால் நீங்கள் குறைவான தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தைப் பெற விரும்பினால், snapchat செயலியில் உங்கள் விளம்பர அமைப்புகளை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். மேலும் அறிக இங்கு .
கண்காணிப்பு. iOS 14.5 அல்லது அதற்கு மேல் உள்ள iPhone ஐப் பயன்படுத்துபவர்களுக்கு சில குறிப்பிட்ட தேவைகள் பொருந்தும்,அதை நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
நாங்கள் சேகரிக்கும் தகவல்களைப் பற்றிய விவரங்களை இந்தப் பிரிவு உங்களுக்கு வழங்குகிறது: நீங்கள் எங்களுக்கு எதை வழங்குகிறீர்கள், நீங்கள் Snapchat-ஐப் பயன்படுத்தும் போது நாங்கள் எவற்றைச் சேகரிக்கிறோம் மற்றும் உங்கள் Snapchat கணக்குடன் இணைக்கப்பட்ட பிற நிறுவனங்கள் அல்லது செயலிகளிலிருந்து நாங்கள் எவற்றைப் பெறுகிறோம் போன்ற தகவல்கள். சில நேரங்களில், உங்கள் அனுமதியுடன் கூடுதல் தகவல்களையும் நாங்கள் சேகரிக்கலாம்.
Snapchat போன்ற எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம், எங்கள் சேவைகளை பயன்படுத்தும் போது தகவல்களை உருவாக்குகிறோம், சில சந்தர்ப்பங்களில் மற்றவர்களிடமிருந்து தரவைப் பெறுகிறோம்.
இவற்றை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
எங்களின் பல சேவைகளில் நீங்கள் ஒரு கணக்கை அமைக்க வேண்டும். இதைச் செய்ய, கணக்கு விவரங்களை எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். உங்கள் தகவல் குறிப்பை அமைக்கும் போது, தகவல் குறிப்பு விவரங்களையும் (உங்கள் Bitmoji மற்றும் தகவல் குறிப்புப் படம் போன்றவை) எங்களுக்கு வழங்குவீர்கள். எங்களின் வணிகச் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் ஏதேனும் பொருட்களை (உதாரணமாக, நவீன ரக ஸ்னீக்கர்கள்) வாங்கும்போது, அதற்கான கட்டணம் மற்றும் அது தொடர்பான தகவல்களைநாங்கள் உங்களிடம் கேட்கக்கூடும் (எடுத்துக்காட்டாக, பொருளை உங்களுக்கு அனுப்புவதற்கான உங்கள் முகவரி, கட்டணத்தைச் செயலாக்குவதற்கான விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை வரலாறு போன்றவை). உங்கள் வட்டாரத்தின் அடிப்படையில், உங்கள் வயதை மதிப்பிடுவதற்கு அல்லது ஊகிக்க நீங்கள் வழங்கும் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் வயதை சரிபார்க்கும்படி உங்களிடம் கேட்கலாம்.
மேலும், எங்கள் சேவைகளின் மூலம் நீங்கள் அனுப்பும் அல்லது சேமிக்கும் தகவல்களுடன் அந்த உள்ளடக்கம் பற்றிய தகவல்களும், எங்கள் AI அம்சங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டு உருவாக்கும் உள்ளடக்கமும் (உரை, படங்கள், வீடியோ, ஆடியோ, துல்லியமான இருப்பிடம், ஈடுபாடு உள்ளிட்ட உள்ளடக்கம், My AI உடன் நீங்கள் பகிரும் உள்ளடக்கம் உள்ளிட்டவை, பதில்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் உள்ளடக்கம், அல்லது "வெளியீடுகள்" உட்பட) எங்களுக்கு வழங்கப்படும். இந்தத் தகவல்களில் சிலவற்றை தனிப்பட்ட உள்ளடக்கம் மற்றும் தகவல்தொடர்புகள் (உங்கள் நண்பர்களுடனான Snaps மற்றும் அரட்டைகள், குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மற்றும் என் கண்கள் மட்டும் என்பதில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கம் போன்றவை) என்று நாங்கள் கருதுகிறோம். அல்லது குறிப்பிட்ட பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உள்ளடக்கம் தனிப்பட்ட மற்றும் நண்பர் கதைகள்(நண்பர்களுக்கான எனது கதைகள், தனிப்பட்டகதைகள்). மறுப்பக்கம், எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் அனுப்பும் அல்லது சேமிக்கும் சில தகவல்கள், அனைவரும் அணுகக்கூடிய வகையில் பொது உள்ளடக்கமாகஇருக்கலாம் (அதாவது என் கதை அனைவருக்கும் அமைக்கப்பட்டது உட்பட, பகிரப்பட்ட கதைகள் , சமூக கதைகள், ஸ்பாட்லைட் அல்லது Snap வரைபடம் சமர்ப்பிப்புகள் மற்றும் பொது தகவல் பக்கம் உள்ளிட்ட பொது கதை உள்ளடக்கங்கள்). உங்கள் Snaps, அரட்டைகள் மற்றும் வேறு எந்த உள்ளடக்கத்தையும் காணும் Snapchat பயனர்கள், அந்த உள்ளடக்கத்தை எப்போதும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம், சேமிக்கலாம், அல்லது Snapchat செயலிக்கு வெளியே நகலெடுக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே பிறர் சேமிக்கவோ அல்லது பகிரவோ விரும்பாத செய்திகள் மற்றும் உள்ளடக்கங்களை நீங்கள் அனுப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம்.
கடைசியாக, நீங்கள் வாடிக்கையாளர் சேவை (சேவை குழுவுடன் பகிரப்பட்ட உள்ளடக்கம் மற்றும் தகவல்தொடர்புகள்) அல்லது எங்கள் பாதுகாப்பு குழுவைத் தொடர்பு கொள்ளும்போது அல்லது வேறு எந்த வகையிலும் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது , எங்களதுஆராய்ச்சி முயற்சிகள் மூலமாகவும் (அதாவது ஆய்வுக்கான பதில்கள், நுகர்வோர் குழுக்கள் அல்லது பிற ஆராய்ச்சி கேள்விகள் போன்றவை) , நீங்களாக அளிக்கும் அல்லது உங்கள் கேள்வியைத் தீர்க்க எங்களுக்குத் தேவைப்படும் எந்தத் தகவலையும் நாங்கள் சேகரிப்போம்.
நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, நீங்கள் எந்தச் சேவைகளைப் பயன்படுத்தினீர்கள், அவற்றை எப்படிப் பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிப்போம். இது எங்கள் சமூகம் எங்கள் சேவைகளை பயன்படுத்தும் முறையை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது, இதன் மூலம் நாங்கள் மேம்படுத்த முடியும்.
இதில் பயன்பாட்டுத் தகவலும் அடங்கும் (எங்கள் சேவைகளுடன் நீங்கள் எவ்வாறு தொடர்புகொள்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள் - எடுத்துக்காட்டாக, நீங்கள் பார்க்கும் லென்ஸஸ், நீங்கள் பயன்படுத்தும் பிரீமியம் சந்தாக்கள், நீங்கள் பார்க்கும் கதைகள், மற்றும் பிற Snapchat பயனர்களுடன் எவ்வளவு அடிக்கடி தொடர்பு கொள்கிறீர்கள்) மற்றும் உள்ளடக்கத் தகவல் (நீங்கள் உருவாக்கும் அல்லது வழங்கும் உள்ளடக்கம், கேமரா மற்றும் ஆக்கப்பூர்வக் கருவிகளுடன் உங்கள் ஈடுபாடு, My AI உடனான உங்கள் தொடர்புகள், மெட்டாடேட்டா — எடுத்துக்காட்டாக, உள்ளடக்கம் பற்றிய தகவல்கள் அது வெளியிடப்பட்ட தேதி மற்றும் நேரம், அதை யார் பார்த்தார்கள் போன்றவை). உள்ளடக்கத் தகவல்கள் இதில் படம், வீடியோ அல்லது ஆடியோ உள்ளடக்கத்தின் அடிப்படையிலான தகவல்கள் அடங்கும் — எனவே நீங்கள் ஒரு கூடைப்பந்து விளையாட்டின் ஸ்பாட்லைட்டைப் பதிவிட்டால், கூடைப்பந்து பற்றி ஸ்பாட்லைட்டில் கூடுதல் உள்ளடக்கத்தை உங்களுக்குக் காட்ட நாங்கள் அந்தத் தகவலைப் பயன்படுத்தலாம், அல்லது நீங்கள் சில முகக் குழு அம்சங்களைச் செயல்படுத்தினால், ஒரே நபர் இடம்பெற்றிருக்கும் Snapகளை ஒழுங்கமைக்கவும் கண்டுபிடிக்கவும் உங்களுக்கு உதவ, உங்கள் நினைவுகளில் கண்டறியப்பட்ட முகங்கள் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.
இதில் இவையும் அடங்கும், சாதனத் தகவல்கள் (உங்கள் சாதன வன்பொருள் அல்லது மென்பொருள், இயங்கு தளம், சாதன நினைவகம், விளம்பர அடையாளங்காட்டிகள், நிறுவப்பட்ட செயலிகள், உலாவி வகை, உங்கள் சாதனத்தின் இயக்கத்தை அளவிடும் சாதன சென்சார்களின் தகவல்கள் அல்லது திசைகாட்டிகள் மற்றும் மைக்ரோஃபோன்கள் போன்றவை, உங்கள் ஹெட்ஃபோனை இணைத்துள்ளீர்களா, உங்கள் வயர்லெஸ் மற்றும் மொபைல் இணைப்புகள் பற்றிய தகவல்கள் உட்பட, IP முகவரி அடிப்படையிலான இருப்பிடத் தகவல் (IP முகவரி), குக்கீகள் மற்றும் அதையொத்த தொழில்நுட்பங்களால் சேகரிக்கப்பட்ட தகவல்கள், உங்கள் அமைப்புகளைப் பொறுத்தது (குக்கீகள், பிக்சல்கள் ( ஒரு பயனர் ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டாரா மற்றும் எத்தனை முறை பார்வையிட்டார் என்பது போன்ற, பயனர்களின் செயல்பாட்டை அடையாளம் காணும் சிறிய கிராஃபிக் தரவு), வலை சேமிப்பு, தனித்துவமான விளம்பர அடையாளங்காட்டிகள்) மற்றும் பதிவுத் தகவல்கள் (நீங்கள் எங்கள் சேவைகளை எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய விவரங்கள், அணுகல் நேரங்கள், பார்க்கப்பட்ட பக்கங்கள், IP முகவரி மற்றும் குக்கீகள் போன்ற தனித்துவமான அடையாளங்காட்டிகள் போன்றவை).
சாதன அளவிலான அனுமதிகளை நீங்கள் வெளிப்படையாக வழங்கியிருந்தால், சாதனத் தகவலில் உங்கள் சாதனத்தின் தொலைபேசிப் புத்தகம் (தொடர்புகள் மற்றும் அதன் தொடர்பான தகவல்கள்), படங்கள் மற்றும் உங்கள் சாதனத்தின் கேமரா, புகைப்படங்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் (படங்கள், வீடியோக்கள் எடுக்கும் திறன் , சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் வீடியோ பதிவு செய்யும் போது ஆடியோவைப் பதிவு செய்ய மைக்ரோஃபோனை அணுகுதல் போன்றவை) மற்றும் துல்லியமான இருப்பிடத் தகவல் (GPS சிக்னல்கள் போன்ற முறைகளை உள்ளடக்கிய துல்லியமான இருப்பிடத்தைப் பற்றிய தகவல்கள்).
நாங்கள் சேகரிக்கும் கடைசி வகை தரவு என்பது உங்களைப் பற்றிய தகவல்களாகும், அவை மற்ற பயனர்கள், எங்கள் துணை நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறலாம். இதில் இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவைத் தரவு (உங்கள் Snapchat கணக்கை மற்றொரு சேவையுடன் இணைக்கும்போது நாங்கள் பெறும் தகவல்), விளம்பரதாரர்களிடமிருந்து வரும் தரவு (விளம்பரங்களை இலக்கு வைக்க அல்லது அவற்றின் செயல்திறனை அளவிட உதவும் வகையில் விளம்பரதாரர்கள், செயலி உருவாக்குநர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறப்படும் தகவல்) ஆகியவை அடங்கும். மற்ற Snapchat பயனர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெறும் தொடர்புத் தகவல் (மற்றொரு Snapchat பயனர் உங்கள் தகவலை உள்ளடக்கிய அவர்களின் தொடர்புப் பட்டியலைப் பதிவேற்றினால், நீங்கள் யாருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள பிற தகவலுடன் நாங்கள் அதை இணைக்கலாம். உங்கள் தொடர்புத் தகவலை நீங்கள் எங்களுக்கு வழங்கினால் SMS, மின்னஞ்சல் அல்லது பிற செய்தி சேவைகள் போன்ற பிற வழிகளில் நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பதை தீர்மானிக்க இதைப் பயன்படுத்தலாம் மற்றும் எங்கள் விதிமுறைகளின் சாத்தியமான விதிமீறல்களுடன் தொடர்புடைய தரவு(வலைத்தள வெளியீட்டாளர்கள், சமூக வலைப்பின்னல் வழங்குநர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் பிறர் உள்ளிட்ட மூன்றாம் நபர்களிடமிருந்து எங்கள் சேவை நிபந்தனைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறுபவர்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பெறலாம்).
கூடுதலாக, எங்கள் சேவைகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது கூடுதல் தகவல்களை சேகரிக்க உங்கள் அனுமதியை நாங்கள் கேட்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் சாதனத்தின் கேமரா சுருள் அல்லது உங்கள் சாதனம் அல்லது மூன்றாம் தரப்பு தொடர்புப் புத்தகத்தை அணுகுவதற்கு முன்.
நாங்கள் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம்
நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை இப்பகுதி விளக்குகிறது. மற்றவற்றுடன், நாங்கள் சேகரிக்கும் தகவலைப் பயன்படுத்தி, தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்கவும், உருவாக்கவும் மேம்படுத்தவும் நாங்கள் கடினமாக உழைக்கிறோம். கீழே, நாம் தகவல்களைப் பயன்படுத்துவதற்கான ஒவ்வொரு நோக்கத்தையும் விரிவாகப் பார்ப்போம். நாங்கள் சேகரிக்கும் தரவின் நோக்கத்திற்கான வரைப்படத்தைப் பார்க்க விரும்பினால் , இங்கேஅதற்கான ஒரு அட்டவணை உள்ளது.
நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எங்கள் சேவைகளை இயக்குவதற்கும் வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு நண்பருக்கு அனுப்ப விரும்பும் Snap-ஐ வழங்குவதன் மூலம் அல்லது Snap வரைபடத்தில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டால், உங்கள் அருகில் நீங்கள் விரும்பும் இடங்களைப் போன்ற ஆலோசனைகளைக் காட்ட, மற்றவர்கள் வரைபடத்தில் பதிவிட்ட உள்ளடக்கம் அல்லது உங்கள் நண்பர்கள் தங்கள் இருப்பிடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வது. எங்கள் தயாரிப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க உதவும் சில தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம், எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகள் , சமீபத்திய இயங்கு தளங்களிலும் மற்றும் சாதனங்களுடன் செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த தகவல்கள் உதவுகிறது.
Snapchat பயனர்களுக்கு தனிப்பட்ட சேவைகளை வழங்குகிறோம். நாங்கள் இதைச் செய்வதற்கான வழிகளில் ஒன்று நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு பொருத்தமான அல்லது நீங்கள் ரசிக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் உள்ளடக்கத்தைக் காண்பிப்பதாகும். அவ்வாறு செய்ய, உங்கள் Snapchat அனுபவத்தில் சூழலைச் சேர்க்க, சேவைகளின் பல்வேறு பகுதிகளில் உங்களைப் பற்றிய தகவலைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, உள்ளடக்கம், உங்கள் இருப்பிடம் அல்லது நாளின் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் லேபிள்களுடன் உள்ளடக்கத்தை தானாகவே குறியிடுவோம். உங்கள் புகைப்படத்தில் ஒரு நாய் இருந்தால், "நாய்" என்ற வார்த்தை மூலம் நினைவுகளில் அதைத் தேடலாம், அது நீங்கள் நினைவகத்தை உருவாக்கிய இடத்தின் வரைபடத்தில் காண்பிக்கும், நீங்கள் நாய்களை விரும்புகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியப்படுத்தும், இதன்மூலம் எங்கள் சேவைகளின் பிற பகுதிகளான ஸ்பாட்லைட் போன்றவற்றில் வேடிக்கையான நாய் வீடியோக்கள் மற்றும் நாய் உணவு விளம்பரங்களை நாங்கள் காட்சிப்படுத்த முடியும். நீங்கள் குறிப்பிட்ட முகக் குழு அம்சங்களைச் செயல்படுத்தினால், நினைவுகளில் தேடல், அமைப்பு மற்றும் தனிப்பயனாக்கத்தை மேம்படுத்த உங்கள் நினைவுகளில் உள்ள முகங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம் (எடுத்துக்காட்டாக, அதே நண்பருடனான நினைவுகளைப் பரிந்துரைப்பதன் மூலம்).
தனிப்பயனாக்கம் நண்பர்களை பரிந்துரைக்க உதவுகிறது அல்லது நீங்கள் யாருடன் அதிகம் Snap செய்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு Snap அனுப்ப புதிய நண்பரை பரிந்துரைக்க உதவுகிறது. நாங்கள் Snap Map-இல் பரிந்துரைக்கப்பட்ட இடங்களைக் காட்டலாம், எங்கள் AI அம்சங்கள் மூலம் ஸ்டிக்கர்கள் அல்லது Snaps போன்ற உள்ளடக்கத்தை உருவாக்கலாம், உங்கள் உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டின் அடிப்படையில் உங்கள் வயது அல்லது ஆர்வங்களை ஊகிக்கலாம் அல்லது விளம்பரங்கள் உள்ளிட்ட நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கும் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஸ்பாட்லைட்டில் பாரிஸ்டா உள்ளடக்கத்தைப் பார்த்தால், உங்களுக்குப் பிடித்த எஸ்பிரெசோ இயந்திரத்தைப் பற்றி My AI உடன் பேசினால் அல்லது உங்கள் நினைவகங்களில் காபி தொடர்பான நிறைய புகைப்படங்களைச் சேமித்தால், நீங்கள் ஒரு புதிய நகரத்திற்குச் செல்லும்போது Snap வரைபடத்தில் காபி கடைகளை நாங்கள் முன்னிலைப்படுத்தலாம் அல்லது நீங்கள் சுவாரசியமான அல்லது பொருத்தமானதாகக் கருதக்கூடிய காபி பற்றிய உள்ளடக்கத்தைக் காண்பிக்கலாம். அல்லது, நீங்கள் பல இசை அரங்குகளுடன் தொடர்பு கொண்டால், நகரத்தில் வரவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களைக் காண்பிக்க அதைப் பயன்படுத்தலாம். தனிப்பயனாக்கம் என்பது நீங்கள் அடிக்கடி யாருடன் தொடர்புகொள்கிறீர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு உங்கள் அனுபவத்தை வடிவமைப்பதை உள்ளடக்கியது. இதில் உங்கள் நண்பர்கள் உருவாக்கும், விரும்பும் அல்லது உங்கள் நண்பர்களிடையே பிரபலமான ஸ்பாட்லைட் அல்லது இடப் பரிந்துரைகளில் நீங்கள் விரும்பும் உள்ளடக்கத்தைக் காண்பிப்பதும் அடங்கும்.
எங்கள் குறிக்கோள் தொடர்ந்து உங்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை வழங்குவதாகும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் நிறைய விளையாட்டு உள்ளடக்கத்தைப் பார்க்கிறீர்கள், ஆனால் முடி மற்றும் ஒப்பனை உதவிக்குறிப்புகளுடன் வரும் உள்ளடக்கத்தைத் தவிர்த்தால், எங்கள் பரிந்துரை வழிமுறைகள் அந்த ஒப்பனை குறிப்புகள் அல்லாமல் விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். Snapchat பயனர்களின் விருப்பங்களை நாங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், தரவரிசைப்படுத்துகிறோம் மற்றும் உள்ளடக்கத்தை மிதப்படுத்துகிறோம் என்பதைப் பற்றி நீங்கள் இங்குமேலும் அறியலாம்.
தனிப்பயனாக்கத்தின் நன்மைகளையும், தனியுரிமை குறித்த எங்கள் Snapchat பயனர்களின் எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்துவது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் நினைவகங்களில் சேமிக்கும் Snap-களை அதன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் தானாகவே குறிக்கலாம் (எ. கா. , Snap-ல் ஒரு நாய் இருந்தது). பின்னர் அந்த குறிச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கலாம், பரிந்துரைகளைச் செய்யலாம் அல்லது விளம்பரங்களைக் காட்டலாம் (நாய்களைக் கொண்ட ஸ்பாட்லைட் Snap-களைக் காண்பிப்பது போன்றவை).
உங்கள் நண்பர்களாக இருக்கும் நபர்களுக்கு நீங்கள் அனுப்பும் தனிப்பட்ட உள்ளடக்கத்தையும் தகவல்தொடர்புகளையும் உங்கள் அனுபவத்தை தனிப்பயனாக்கவோ, பரிந்துரைகளை வழங்கவோ அல்லது விளம்பரங்களைக் காட்டவோ நாங்கள் பயன்படுத்த மாட்டோம்.
தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்குவதற்கான மற்றொரு வழி, நாங்கள் காண்பிக்கும் விளம்பரங்கள். விளம்பரங்களை தனிப்பயனாக்குவதற்கும், இலக்கு வைப்பதற்கும், அளவிடுவதற்கும் நாங்கள் சேகரித்த தகவல்களிலிருந்த உங்கள் ஆர்வங்களையும் விருப்பங்களையும் பயன்படுத்துகிறோம். விளம்பரங்கள் பொருத்தமானதாக இருக்கும்போது அவை சிறந்தவை என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால்தான் நாங்கள் சரியான விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து, சரியான நேரத்தில் அவற்றை உங்களுக்குக் காண்பிக்கிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வீடியோ கேம்களுக்கான விளம்பரங்களுடன் தொடர்பு கொண்டால், நீங்கள் வீடியோ கேம்களை விரும்புகிறீர்கள் என்று நாங்கள் ஊகிக்கலாம், மேலும் இதேபோன்ற விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிப்போம், ஆனால் அவை மட்டுமே நீங்கள் பார்க்கும் விளம்பரங்களாக இருக்காது. எங்கள் உள்ளடக்க உத்தியைப் போலவே, நீங்கள் பல்வேறு வகையான விளம்பரங்களைப் பெறுவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம். நீங்கள் ஆர்வம் காட்டாத விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிப்பதைத் தவிர்க்கவும் உங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு டிக்கெட் விற்கும் தளம் நீங்கள் ஏற்கனவே ஒரு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளீர்கள் என்று எங்களிடம் சொன்னால் - அதற்கான விளம்பரங்களைக் காண்பிப்பதை நாங்கள் நிறுத்தலாம். பல்வேறு வகையான விளம்பரங்களைப் பற்றியும், நீங்கள் பெறும் விளம்பரங்களைப் பற்றிய உங்கள் விருப்பங்களைப் இங்கு பெறலாம்.
விளம்பர நோக்கங்களுக்காக உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்ந்து கொள்கிறோம் என்பது பற்றி இங்கு மேலும் அறியலாம்.
குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களால் சேகரிக்கப்படும் தகவல்கள்பற்றிய குறிப்பு: எங்கள் கூட்டாளர்களில் ஒருவரின் மூலம் நாங்கள் வழங்கும் சேவைகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது தகவல்களை சேகரிக்க இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக உங்களுக்கு அதிக பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட விளம்பரதாரரின் வலைத்தளங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். பெரும்பாலான இணைய உலாவிகள் இயல்பாக குக்கீகளை ஏற்க அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பினால், உங்கள் உலாவி அல்லது சாதனத்தில் உள்ள அமைப்புகள் மூலம் உலாவியின் குக்கீகளை அகற்றலாம் அல்லது நிராகரிக்கலாம். இருப்பினும் நினைவில் கொள்ளுங்கள், குக்கீகளை அகற்றுவது அல்லது நிராகரிப்பது எங்கள் சேவைகளின் கிடைக்கும் தன்மையையும் செயல்பாட்டையும் பாதிக்கலாம். நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் எங்கள் சேவைகளில் குக்கீகளை எப்படிப் பயன்படுத்துகிறோம் மேலும் உங்களின் வாய்ப்புகள் பற்றி மேலும் அறிய எங்கள் குக்கீக் கொள்கையைப் பாருங்கள்.
எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கான புதிய அம்சங்கள் மற்றும் வழிகளை எங்கள் குழுக்கள் தொடர்ந்து முன்வைக்கின்றன. இதைச் செய்வதற்காக, கணிப்பு நெறிகளையும்இயந்திரக் கற்றல் மாதிரிகளையும் (குறிப்பிடத்தக்க அளவிலான தரவுகளை ஆய்வு செய்து அமைப்பு முறைகளை கண்டறியும் அல்லது கணிப்புகளை உருவாக்கும் கணிப்பு நெறிகளையும் குறிக்கிறது) நாங்கள் உருவாக்குகிறோம், அவை எங்கள் அம்சங்களையும் சேவைகளையும் வேலை செய்ய வைக்கின்றன, எங்கள் AI அம்சங்கள் உட்பட. எங்கள் AI அம்சங்கள் பொதுவாக உருவாக்க AI-ஐப் பயன்படுத்துகின்றன (உருவாக்க மாடல்களைப் பயன்படுத்தி உரை, படங்கள் அல்லது பிற ஊடகங்களை உருவாக்கக்கூடிய திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு. உருவாக்கும் AI மாதிரிகள் அவற்றின் உள்ளீட்டு பயிற்சி தரவுகளின் வடிவங்கள் மற்றும் கட்டமைப்பைக் கற்றுக் கொள்கின்றன, பின்னர் ஒத்த குணாதிசயங்களைக் கொண்ட புதிய தரவை உருவாக்குகின்றன). தனிப்பயனாக்கம், விளம்பரம், பாதுகாப்பு, நியாயத்தன்மை மற்றும் உள்ளடக்குதல், இணைப்பு நிஜமாக்கம், மற்றும் துர்பிரயோகம் அல்லது பிற விதிமுறைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்கள் மீறல்களைத் தடுக்க நாங்கள் கணிப்பு நெறிகள் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகள், உருவாக்க AI-ஐப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, எங்கள் வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகள், My AI-யுடன் Snapchat பயனர்கள் நடத்தும் உரையாடல்களைக் கருத்தில் கொண்டு, My AI-யின் பதில்களை மேம்படுத்துகின்றன.
உங்கள் தகவல்கள் எந்த வகையான மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க எங்களுக்கு உதவக்கூடும், ஆனால் நாங்கள் எப்போதும் தனியுரிமையில் கவனம் செலுத்துகிறோம், மேலும் எங்கள் அம்சங்கள் மற்றும் மாதிரிகளை உருவாக்க தேவையானதை விட உங்கள் தனிப்பட்ட தகவல்களை அதிகம் பயன்படுத்த விரும்பவில்லை.
எங்கள் சேவைகளை எவ்வாறு உருவாக்குவது அல்லது மேம்படுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள, எங்கள் அம்சங்களுக்கான போக்குகள் மற்றும் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, குழுவின் அதிகபட்ச அளவு போன்ற அம்சத்தின் பகுதிகளை மாற்ற வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க உதவும் மேற்தரவு மற்றும் குழு உரையாடல் பயன்பாட்டைப் பற்றிய போக்குகளை நாங்கள் கண்காணிக்கிறோம். Snapchat பயனர்களின் தரவுகளை ஆராய்வது மக்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளில் போக்குகளைக் கண்டறிய உதவும். இது Snapchat-ஐ பெரிய அளவில் மேம்படுத்த எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. போக்குகள் மற்றும் பயன்பாட்டை அடையாளம் காண, கண்காணிக்க மற்றும் பகுப்பாய்வு செய்ய பகுப்பாய்வுகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், மற்றவற்றுடன் சேர்த்து, எங்கள் பயனர்களைப் பற்றிய தகவல்களை உருவாக்கி, தேவைகளைப் புரிந்துகொள்ள உதவுவோம்.
பொது நுகர்வோர் ஆர்வங்கள், போக்குகள் மற்றும் எங்கள் சேவைகளை நீங்களும் எங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களும் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள நாங்கள் ஆராய்ச்சி செய்கிறோம். இந்தத் தகவல், பகுப்பாய்வுகளுடன் (மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி), எங்கள் சமூகத்தைப் பற்றியும், எங்கள் சேவைகள் எங்கள் சமூகத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை பற்றியும் மேலும் புரிந்துகொள்ள உதவுகிறது. புதிய நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை (எ.கா., புதிய இயந்திர கற்றல் மாதிரிகள் அல்லது SPECS போன்ற வன்பொருள்) உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் நாங்கள் ஈடுபடுகிறோம். எங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் சில நேரங்களில் Snapchatஇல் உள்ள அம்சங்களில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் நாங்கள் சில நேரங்களில் ஒட்டுமொத்த நடத்தைகள் மற்றும் நுகர்வோர் போக்குகள் போன்றவற்றைப் பற்றிய ஆவணங்களை வெளியிடுகிறோம் (இதில் எங்கள் பயனர் தளம் முழுவதும் திரட்டப்பட்ட தரவு மட்டுமே இருக்கும், மேலும் உங்கள் தனிப்பட்ட உள்ளடக்கம் மற்றும் தகவல்தொடர்புகள் அல்லது குறிப்பாக உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் எதுவும் இருக்காது).
எங்கள் சேவைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், Snapchat பயனரின் அடையாளம் அல்லது வயதை சரிபார்க்கவும், மோசடி அல்லது பிற அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோத செயல்பாட்டைத் தடுக்கவும் உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, நாங்க உங்கள் கணக்கைப் பாதுகாக்க இரு காரணி அங்கீகாரத்தை வழங்குகிறோம். மேலும் ஏதேனும் சந்தேகப்படும்படியான செயலைக் நாங்கள் கவனித்தால் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது உரைச் செய்தியை அனுப்புவோம். Snapchat-இல் அனுப்பப்படும் URL-களையும் அந்த வலைப்பக்கம் தீங்கு ஏற்படுத்தும் சாத்தியமுள்ளதா எனப் பார்க்க நாங்கள் ஸ்கேன் செய்து அதைபற்றிய எச்சரிக்கையையும் உங்களுக்கு கொடுக்க முடியும்.
தீங்கு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத செயல்பாடு உள்ளிட்ட எங்கள் விதிமுறைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் சாத்தியமான மீறல்களைக் கண்டறிவதற்கும், வயதுக்கு பொருத்தமான பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் தானியங்கி கருவிகளைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவிகள் இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள சிக்னல்களைப் பயன்படுத்தலாம், கணக்கு, சாதனம், பயன்பாடு மற்றும் உள்ளடக்கம் தொடர்பான தகவல்கள் போன்றவை.
சில நேரங்களில் புதிய அல்லது ஏற்கனவே உள்ள அம்சங்களை விளம்பரப்படுத்த நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம். அனுமதிக்கப்பட்ட இடங்களில் Snapchat, மின்னஞ்சல், SMS அல்லது பிற செய்தி தளங்கள் மூலம் Snapchat பயனர்களுக்கு தகவல்களை அனுப்புவது இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் விளம்பர சலுகைகள் பற்றிய தகவல்களைப் பகிர, உங்களுக்கு ஆர்வமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள, Snapchat செயலி, மின்னஞ்சல், SMS அல்லது பிற செய்தி தளங்களை நாங்கள் பயன்படுத்தலாம்.
மற்ற நேரங்களில், தகவல்களை, எச்சரிக்கைகளை வழங்க அல்லது எங்கள் பயனர்கள் தங்கள் கோரிக்கையின் பேரில் வழங்கும்படி கேட்கும் செய்திகளை அனுப்ப நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இது Snapchat, மின்னஞ்சல், SMS அல்லது பிற செய்தி தளங்கள் மூலம் தகவல்தொடர்புகளை அனுப்புவதை உள்ளடக்கியிருக்கலாம், கணக்கு நிலை புதுப்பிப்புகள், பாதுகாப்பு விழிப்பூட்டல்கள் மற்றும் அரட்டை அல்லது நட்பு நினைவூட்டல்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டால்; இது Snapchat அல்லாதவர்களுக்கு அழைப்புகள் அல்லது Snapchat உள்ளடக்கத்தை அனுப்ப எங்கள் பயனர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதையும் உள்ளடக்கியிருக்கலாம்.
நீங்கள் உதவி கோரும் போது, முடிந்தவரை விரைவாக உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். உங்களுக்கும், ஸ்னாப்சாட்டர் சமூகத்திற்கும், எங்கள் வணிகக் கூட்டாளர்களுக்கும் எங்கள் சேவைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தேவையான உதவியை வழங்க, நாங்கள் சேகரித்த தகவலைப் பதிலளிக்க அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
எங்கள் விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் சட்டத்தை அமலாக்க நாங்கள் சேகரிக்கும் தரவைப் பயன்படுத்துகிறோம். எங்கள் விதிமுறைகள், கொள்கைகள் அல்லது சட்டத்தை மீறும் நடத்தைகளை அமல்படுத்துவது, விசாரிப்பது மற்றும் புகாரளிப்பது, சட்ட அமலாக்கத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது மற்றும் சட்டத் தேவைகளுக்கு இணங்குவது ஆகியவை இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, சட்டவிரோதமான உள்ளடக்கம் எங்கள் சேவைகளில் பதிவேற்றப்பட்டால், எங்கள் விதிமுறைகள் மற்றும் பிற கொள்கைகளை நாங்கள் அமல்படுத்த வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில், சட்ட அமலாக்க நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்க, பாதுகாப்புச் சிக்கல்களைக் குறித்து சட்ட அமலாக்கம், தொழில் கூட்டாளர்கள் அல்லது பிறருக்குத் தெரிவிக்க அல்லது எங்கள் பயனர்களின் வயதை சரிபார்ப்பது உள்ளிட்ட எங்கள் சட்டக் கடமைகளுக்கு இணங்க, உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம் அல்லது பகிர்ந்து கொள்ளலாம். மேலும் அறிய எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையைப் பார்க்கவும்.
இதனுடன், எங்கள் சேவைகளை நீங்கள் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் தகவலை புதிய, வித்தியாசமான அல்லது குறிப்பிட்ட முறையில் பயன்படுத்துவதற்காக உங்கள் அனுமதியை நாங்கள் கேட்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம்.
நாங்கள் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம்
நாங்கள் யாருடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம், அந்த தகவல்கள் என்னென்னவற்றை உள்ளடக்கியிருக்கலாம் மற்றும் அந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காரணங்கள், சேகரிக்கப்பட்ட நாட்டிற்கு வெளியே அதை எப்போது மாற்ற வேண்டும் என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது.
Snapchat. உங்களுக்கும் எங்கள் சமூகத்திற்கும் எங்கள் சேவைகளை வழங்க, உங்கள் தகவல்களில் சிலவற்றை Snapchat இல் உள்ள உங்கள் நண்பர்கள் அல்லது பிற Snapchat பயனர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் கதைகளில் பதிவிடும் உள்ளடக்கம், உங்கள் தற்போதைய அல்லது சமீபத்திய செயல்பாட்டு நிலை அல்லது பிரீமியம் சந்தாதாரர் என்ற உங்கள் நிலை போன்றவற்றை, நீங்கள் அனுமதித்தால் உங்கள் நண்பர்கள் பார்க்கலாம். உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு பிரிவு மற்றும் உங்கள் அமைப்புகளில், யார் எதை எப்போது பார்க்கிறார்கள் என்பதில் உங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைப் பார்க்கலாம்.
குடும்ப மையப் பங்கேற்பாளர்கள். நீங்கள் குடும்ப மையத்தை இயக்கியிருந்தால், இணைக்கப்பட்ட பதின்ம வயதினர் கணக்கு பற்றிய தகவலைப் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கணக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம், எடுத்துக்காட்டாக, Snapchat-இல் உங்கள் நண்பர்கள் யார் அல்லது எந்த நண்பர்களுடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொள்கிறீர்கள் போன்றவை. தனிப்பட்ட உள்ளடக்கம் மற்றும் தகவல்தொடர்புகளின் உள்ளடக்கத்தை நாங்கள் பகிர்ந்து கொள்வதில்லை. மேலும் அறிக.
பொதுவானவை. Snapchat-ல் உள்ள பெரும்பாலான அம்சங்கள் தனிப்பட்டவை மற்றும் நண்பர்களுக்கு மட்டுமானவை, ஆனால் ஸ்பாட்லைட், Snap Map அல்லது உங்கள் பொதுச் சுயவிவரம் போன்ற உங்கள் சிறந்த Snap-களை உலகத்திற்கு வெளிப்படுத்தும் பொது உள்ளடக்கத்தை உருவாக்க மற்றும் பகிர உங்களை அனுமதிக்கும் அம்சங்களை நாங்கள் வழங்குகிறோம்.
நீங்கள் இதைச் செய்யும்போது, Snapchat-க்கு வெளியேயும் அந்த Snaps கண்டறியக்கூடியதாக இருக்கலாம், உதாரணமாக இணையத்தில்.
உங்கள் பயனர்பெயர், Bitmoji போன்ற உங்களின் சில தகவல்கள் பொதுவில் தெரியவரும். மேலும் அறிக.மூன்றாம் தரப்பு செயலிகள். சில நேரங்களில், மூன்றாம் தரப்பு செயலிகளுடன் இணைக்க உங்களை அனுமதிக்கும் அம்சங்களை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் Snapchat கணக்கை மூன்றாம் நபர் செயலியுடன் இணைக்க நீங்கள் முடிவு செய்தால், இணைப்பு கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக நீங்கள் எங்களுக்கு உத்தரவிடும் உங்கள் கணக்குடன் தொடர்புடைய எந்தவொரு கூடுதல் தகவல்களையும் நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.
சேவை வழங்குநர்கள். உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களை எங்கள் சேவை வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், அவர்கள் அந்த தகவலை எங்கள் சார்பாக செயலாக்குகிறார்கள். எடுத்துக்காட்டாக, பணம் செலுத்துதல்களை எளிதாக்குவதற்கும், விளம்பரங்களின் செயல்திறனை அளவிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் அல்லது சேவைகளைப் பாதுகாப்பதற்கும் அத்தகைய சேவை வழங்குநர்களை நாங்கள் சார்ந்திருக்கிறோம். எங்கள் சேவை வழங்குநர்கள் தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த தனிப்பட்ட உள்ளடக்கத்தையும் தகவல்தொடர்புகளையும் நாங்கள் பகிர்ந்து கொள்வதில்லை. சேவை வழங்குநர்களின் வகைகளின் பட்டியலை நாங்கள் இங்கு பராமரிக்கிறோம்.
தொழில் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டாளர்கள். சேவைகளை வழங்குவதற்காக உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களை தொழில் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உதாரணமாக, நீங்கள் ஒரு அட்டவணையை முன்பதிவு செய்ய Snapchat -ல் OpenTable -ஐப் பயன்படுத்தலாம். இதில் தனிப்பட்ட உள்ளடக்கம் மற்றும் தகவல்தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வது அடங்காது. நாங்கள் இங்கே இந்த கூட்டாளர்களின் பட்டியலை பராமரிக்கிறோம்.
மோசடி எதிர்ப்பு கூட்டாளிகள். சாதனம் மற்றும் பயன்பாட்டுத் தகவல் போன்ற உங்கள் தகவலை பணிபுரியும் தொழில் கூட்டாளர்களுடன் மோசடியைத் தடுப்பதற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
சட்டம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டாளர்கள். பின்வரும் சட்டம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் தகவலை தேவைப்படும் அளவு பகிர்ந்து கொள்கிறோம்:
செல்லுபடியாகும் எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கை, அரசாங்கக் கோரிக்கை அல்லது பொருந்தக்கூடிய சட்டம், விதி அல்லது ஒழுங்குமுறைக்குக் கீழ்ப்படிதல்.
சாத்தியமான சேவை நிபந்தனைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் மீதான மீறல்களை விசாரிக்கவும், தீர்வுசெய்யவும் அல்லது செயல்படுத்தவும்.
எங்கள், எங்கள் பயனர்களின் அல்லது பிறரின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பைப் பாதுகாத்தல்.
ஏதேனும் மோசடி அல்லது பாதுகாப்புச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க.
துணை நிறுவனங்கள். Snap Inc. நிறுவனம் எங்களுக்கு சொந்தமான பல்வேறு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. உங்கள் வழிநடத்துதலின் பேரில், பிற பயனர்களின் வழிநடத்துதலின் பேரில், அல்லது எங்கள் சொந்த மற்றும் எங்கள் துணை நிறுவனங்களின் சேவைகளை மேற்கொள்ளத் தேவைப்படும் அடிப்படையில் உங்கள் தகவல்களை அந்த உள்ளார்ந்த துணை நிறுவனங்களுக்குள் நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
இணைப்பு அல்லது கையகப்படுத்தல் நோக்கங்களுக்காக. நாங்கள் எங்கள் வணிகத்தை ஒரு வாங்குபவருக்கோ அல்லது வாங்கக்கூடும் ஒருவருக்கோ விற்கவோ அல்லது விற்பனைக்கான பேச்சுவார்த்தை நடத்தவோ நேர்ந்தால், அந்தப் பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக உங்கள் தகவல்களை ஒரு வாரிசு நிறுவனத்திற்கோ அல்லது தொடர்புடைய நிறுவனத்திற்கோ நாங்கள் மாற்றக்கூடும்.
எங்கள் சேவைகளில் எங்கள் ஒருங்கிணைந்த கூட்டாளர்களால் வழங்கப்படும் உள்ளடக்கம் மற்றும் ஒருங்கிணைப்புகள் இருக்கலாம். எடுத்துக்காட்டுகளில் லென்ஸ்கள், கேமரா எடிட்டிங் கருவிகள் மற்றும் வரைபடம் மற்றும் எங்கள் சேவைகளுடனான மூன்றாம் நபர் டெவலப்பர் ஒருங்கிணைப்புகள் ஆகியவை அடங்கும். இந்த ஒருங்கிணைப்புகளின் மூலம் உங்கள் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டாளருக்கும் Snap-க்கும் வழங்கப்படலாம். அந்த கூட்டாளர்கள் உங்கள் தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறார்கள் அல்லது பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எப்போதும் போல, எங்கள் சேவைகளின் மூலம் நீங்கள் ஊடாடும் மூன்றாம் நபர்கள் உள்ளிட்ட, நீங்கள் பார்வையிடும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு மூன்றாம் நபர் சேவையின் தனியுரிமைக் கொள்கைகளையும் மீளாய்வு செய்யுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். நீங்கள் இங்கே Snapchat-ல் எங்கள் ஒருங்கிணைப்புகள் பற்றி மேலும் அறிய முடியும்.
iOS-ல் லென்ஸ்களின் தரத்தை மேம்படுத்த Apple-இன் TrueDepth கேமராவைப் பயன்படுத்துகிறோம். குறிப்பு, எனினும்,TrueDepth கேமராவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் நிகழ்நேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன - நாங்கள் இந்தத் தகவல்களை எங்களது சேவையகங்களில் சேமிக்கவோ மூன்றாம் தரப்பினருடன் பகிரவோ மாட்டோம்.
உலகெங்கிலும் உள்ள உங்கள் நண்பர்களுடன் எங்கள் சேவைகள் உங்களை இணைக்கின்றன. அதை சாத்தியமாக்க,நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, அதை இடமாற்றி, நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே, அமெரிக்கா அல்லது பிற நாடுகளில் சேமிக்கலாம் மற்றும் செயல்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வெளியே தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம், நீங்கள் வசிக்கும் இடத்தின் சட்டத்தின்படி தரவைப் பாதுகாக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இதைப் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால் பிராந்தியம் சார்ந்த தகவல்கள் என்ற பகுதியைப் பார்க்கவும்.
உங்கள் தகவலை நாங்கள் எவ்வளவு காலம் சேமித்து வைத்துள்ளோம்
இந்தப் பிரிவில், உங்கள் தகவலை நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம், உங்கள் தகவலை ஏன் வைத்திருக்கிறோம் என்பது பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறோம், மேலும் சட்டங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பிறகடமைகளுக்கு இணங்க உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதையும் முதன்மைப்படுத்துகிறோம்.
ஒரு பொது விதியாக, நீங்கள் எங்களிடம் கூறும் வரையில் அல்லது எங்கள் சேவைகளை வழங்க எங்களுக்குத் தேவைப்படும் வரை அல்லது சட்டத்தால் கோரப்படும் வரை நாங்கள் தகவல்களை வைத்திருக்கிறோம். உதாரணமாக, நினைவுகளில் நீங்கள் ஏதாவது சேமித்து வைத்திருந்தால், உங்களுக்குத் தேவைப்படும் வரை அதை நாங்கள் வைத்திருப்போம். ஆனால் நீங்கள் ஒரு நண்பருடன் அரட்டையடிக்கும்போது, நீங்கள் அனுப்பிய அரட்டைகளை உங்கள் நண்பர் படித்த 24 மணி நேரத்திற்குள் (நீங்கள் உங்கள் இயல்பான அமைவுகளை மாற்றி இருக்கவோ அல்லது சேமித்து வைத்திருக்கவில்லையெனில்) நீக்கும் வகையில் எங்கள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் தரவை நாங்கள் தக்கவைத்துக்கொள்வதா என்பது உங்கள் அமைவுகள், மற்றும் நீங்கள் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களையும் பொறுத்தது. உங்கள் தகவலை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது நாங்கள் கருத்தில் கொள்ளும் மேலும் சில காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
எங்கள் சேவைகளை இயக்க அல்லது வழங்க எங்களுக்கு தகவல் தேவைப்படலாம்.
எடுத்துக்காட்டாக, உங்கள் கணக்கை பராமரிக்க உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் அடிப்படை கணக்கு விவரங்களை நாங்கள் சேமிக்கிறோம்.எங்கள் சேவைகளிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்வதற்கு தேவையானபடி மற்றும் இந்த தனியுரிமைக் கொள்கையில் நாங்கள் விவரித்துள்ளபடி. உதாரணமாக, உங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் நண்பர்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், அவற்றை நீக்குமாறு நீங்கள் எங்களிடம் கோரும் வரை உங்கள் நண்பர்களின் பட்டியலை நாங்கள் பராமரிக்கிறோம்.
அதேபோல, எங்கள் செயலியின் அமைப்புகளில் அவற்றை நீக்குமாறு நீங்கள் எங்களிடம் கோரும் வரை, நீங்கள் பகிர்ந்துகொண்ட தொடர்புகளின் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம் (குறிப்பு: உங்கள் சாதனத்தின் அனுமதிகளைப் புதுப்பிப்பது Snapchat உடன் நீங்கள் முன்பு பகிர்ந்துகொண்ட தொடர்புகளை நீக்காமல் இருக்கலாம்). மேலும் அறிக. மாறாக, Snapchat -ல் அனுப்பப்படும் Snaps மற்றும் அரட்டைகள், உங்கள் இயல்புநிலை அமைப்புகளை நீங்கள் மாற்றவில்லை அல்லது எதையாவது சேமிக்க முடிவு செய்யவில்லையெனில் எல்லா பெறுநர்களாலும் திறக்கப்பட்டுள்ளது அல்லது காலாவதியாகிவிட்டது என்பதை நாங்கள் கண்டறிந்த 24 மணி நேரத்திற்குள் எங்கள் சேவையகங்களிலிருந்து இயல்பாக நீக்கப்படும்.தகவல்கள் உட்பட. எடுத்துக்காட்டாக, இருப்பிடத் தகவல்களை (IP-முகவரி அடிப்படையிலான அல்லது துல்லியமான, உங்கள் அனுமதிகளைப் பொறுத்தது) எவ்வளவு துல்லியமானது மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சேவைகளின் அடிப்படையில் வெவ்வேறு காலத்திற்கு நாங்கள் சேமிக்கிறோம். இருப்பிடத் தகவல்கள், Snap உடன் தொடர்புடையதாக இருந்தால் — நினைவுகளில் சேமிக்கப்பட்டவை அல்லது Snap Map அல்லது ஸ்பாட்லைட்டில் பதிவிடப்பட்டவை போன்றவை — நாங்கள் Snapஐச் சேமித்து வைத்திருக்கும் வரை அந்த இருப்பிடத் தகவல்களையும் தக்கவைப்போம். நிபுணர் உதவிக்குறிப்பு: உங்கள் தரவைப் பதிவிறக்குவதன் மூலம் உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் இருப்பிடத் தரவை நீங்கள் பார்க்கலாம்.
சில சட்டக் கடமைகளுக்கு இணங்கத் தேவையான தகவலை எவ்வளவு காலத்திற்குத் தக்கவைத்திருக்க வேண்டும்.
தீங்குகளைத் தடுப்பது, எங்கள் சேவை விதிமுறைகள் அல்லது பிற கொள்கைகளின் விதிமீறல்களை ஆராய்வது, விதிமீறல் அறிக்கைகளை விசாரிப்பது அல்லது எங்களை அல்லது மற்றவர்களைப் பாதுகாப்பது போன்ற பிற நியாயமான நோக்கங்களுக்காக எங்களுக்குத் தேவைப்படலாம்.
தயாரிப்புகளுக்கான குறிப்பிட்ட தக்கவைப்புக் காலங்கள் குறித்த விவரங்களுக்கு எங்கள் தயாரிப்புகளின் தனியுரிமை பக்கத்தையும் ஆதரவு பக்கத்தையும்பாருங்கள்.
எங்கள் நீக்குதல் நடைமுறைகளைத் தானாகவே செயல்படுத்தும் வகையில் எங்கள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நீக்குதல் நடைபெறும் என்று எங்களால் உறுதியளிக்க முடியாது.
சில சந்தர்ப்பங்களில், உங்கள் தரவைச் சேமிப்பதற்கான சட்டத் தேவைகளுக்கு நாங்கள் இணங்க வேண்டும், இது உங்கள் தகவலை நீக்குவதைத் தடுக்கிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் உள்ளடக்கத்தின் நகலை வைத்திருக்குமாறு நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தால் அதற்கிணங்கி நாங்கள் செயல்பட வேண்டும். உங்கள் கணக்கு, உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் அல்லது பிற Snapchat பயனர்களுடன் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் போன்றவற்றின் தவறான பயன்பாடு அல்லது பிற சேவை விதிமுறைகளை மீறியதற்காக மற்றவர்களால் அல்லது எங்கள் அமைப்புகளால் அடையாளப்பட்டிருத்தல் அல்லது தவறான பயன்பாடு, பிற விதிமுறைகள் அல்லது கொள்கை மீறல்கள் பற்றிய புகாரைப் பெறுதல் போன்றவை உங்கள் தரவின் நகலை நாங்கள் வைத்திருக்க வேண்டியதற்கான பிற காரணங்களாகும். இறுதியாக, குறிப்பிட்ட சில தகவல்களைக் குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது சட்டப்படி தேவைப்படும் பட்சத்தில் காப்புப் பிரதியாக நாங்கள் வைத்திருக்கலாம்.
பல்வேறு வகையான உள்ளடக்கங்களை நாங்கள் எவ்வளவு காலம் சேமிக்கிறோம் என்பது பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு, உதவித் தளத்தைப் பார்க்கவும்.
பிராந்திய குறிப்பிட்ட தகவல்
நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, உங்களுக்கு கூடுதல் உரிமைகள் இருக்கலாம். இந்த பிரிவு பிராந்தியத்தின் குறிப்பிட்ட தகவலின் கூடுதல் விவரங்களை வழங்குகிறது.
எங்கள் கொள்கைகளை முடிந்தவரை எளிமையாக வைத்திருக்க நாங்கள் சிறந்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஆனால் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, உங்களுக்கு கூடுதல் உரிமைகள் இருக்கக்கூடும் அல்லது நீங்கள் அறிந்திருக்க வேண்டிய கூடுதல் தகவல்களும் இருக்கக்கூடும். உங்களுக்கு எவையேனும் பொருந்துமா என்பதை பார்க்க கீழே உள்ள பட்டியலைக் காணுங்கள்!
குறிப்பு: மாநில அளவிலான தனியுரிமை சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சில அமெரிக்க மாநிலங்களில் வசிப்பவராக நீங்கள் இருந்தால் மட்டுமே உங்களுக்கு அமெரிக்க மாநில தனியுரிமை அறிவிப்பு பொருந்தும்.
குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தரவு செயலாக்குவதற்கு எங்கள் சட்டப்பூர்வ அடிப்படையை தெரிவிக்க சில அதிகார வரம்புகள் கோருகின்றன. நீங்கள் அந்த தகவலை இங்கே காணலாம்.
எங்கள் பார்வையாளர்கள்
எங்கள் சேவைகள் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன.
எங்கள் சேவைகள் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை, மேலும் கணக்கை உருவாக்குவதற்கும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் 13 வயதிற்குக் குறைவானவர் (அல்லது உங்கள் மாநிலம், மாகாணம் அல்லது நாட்டில் பெற்றோரின் அனுமதியின்றி ஒருவர் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய குறைந்தபட்ச வயது, இதைவிட அதிகமாயிருப்பின்) என்பதை அறிந்தால், நாங்கள் உங்களுக்கு சேவைகளை வழங்குவதை நிறுத்திவிட்டு, உங்கள் கணக்கையும் தரவையும் நீக்குவோம்.
கூடுதலாக, 18 வயதுக்குட்பட்ட Snapchat பயனர்களின் சில தகவல்களை எவ்வாறு சேகரிப்பது, பயன்படுத்துவது மற்றும் சேமிப்பது என்பதையும் நாங்கள் கட்டுப்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்குச் சில செயல்பாடுகளை எங்களால் வழங்க முடியாது என்பதே இதன் பொருள்.
பயனர்கள் குறைந்தபட்ச வயதுத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்களா அல்லது வயதுக்கு பொருத்தமான பாதுகாப்புகளைப் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கு உதவ, தானியங்கி கருவிகள் உள்ளிட்ட வயது-உத்தரவாத நடவடிக்கைகளை நாங்கள் பயன்படுத்தலாம்.
தனியுரிமைக் கொள்கையில் புதுப்பிப்புகள்
நாங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம், மேலும் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கும் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.
நாங்கள் இந்தத் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மாற்றலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யும்போது, ஏதாவது ஒரு வழியில் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். சில நேரங்களில், எங்கள் இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் இருக்கும் தனியுரிமைக் கொள்கையின் மேல் உள்ள தேதியைத் திருத்துவதன் மூலம் நாங்கள் உங்களுக்கு அதனைத் தெரியப்படுத்துவோம். மற்ற நேரங்களில், நாங்கள் உங்களுக்குக் கூடுதல் அறிவிப்பை வழங்கலாம் (எங்கள் இணையதளங்களின் முகப்புப் பக்கங்களில் அறிக்கையைச் சேர்ப்பது அல்லது செயலியிலேயே உங்களுக்கு அறிவிப்பை வழங்குவது போன்றவை).
எங்களைத் தொடர்புகொள்க
இங்குள்ள தகவல்களைப் பற்றி ஏதேனும் கேள்விகள் உள்ளதா அல்லது எங்கள் தரவு பாதுகாப்பு அதிகாரியைத் (DPO) தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் எங்களை இங்கேதொடர்புகொள்ளலாம்.