புதிய ஆராய்ச்சி: 2024 ஆம் ஆண்டில் ஆன்லைன் அபாய பாதிப்பு அதிகரித்துள்ளது, அதேவேளையில் உதவிக்காக ஜென் Z விடுக்கும் கோரிக்கைகளும் அதிகரித்துள்ளன
பிப்ரவரி 10, 2025
2024 ஆம் ஆண்டில் இணையச் சூழல் ஜெனரேஷன் Z-க்கு மிகவும் ஆபத்தானதாக மாறிவிட்டது, குறைந்தது ஒரு ஆன்லைன் அபாயத்தையாவது எதிர்கொண்டுள்ளதாக 10 இல் எட்டு பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். நல்லவேளையாக, அபாய பாதிப்புகள் அதிகரித்த போதிலும் டிஜிட்டல் சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தால் உதவியை நாடியதாக அதிகமான பதின்பருவத்தினர் தெரிவித்தனர், மேலும் தங்கள் பதின்ம வயதுப் பிள்ளைகள் ஆன்லைன் அனுபவத்தைச் சிறப்பாகக் கையாள அவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடியாக அதிகமான பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்தக் காரணிகளின் காரணமாக Snap Inc.-இன் டிஜிட்டல் நல்வாழ்வுக் குறியீடு (DWBI) ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டில் இருந்ததை விட ஒரு சதவீதப் புள்ளி அதிகரித்து மூன்றாம் ஆண்டில் 63 ஆக உள்ளது.
ஆறு நாடுகளில் வசிக்கும் 13 முதல் 24 வயதுடையவர்களில் எண்பது சதவீதம் பேர் 2024 ஆம் ஆண்டில் ஆன்லைன் அபாயத்தை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கின்றனர், இது 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பில் கிடைத்த முடிவுகளில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து சதவீதப் புள்ளிகள் அதிகரிப்பாகும். இதில் ஏமாற்றுதல் என்பது பொதுவான அபாயச் சூழலாக உள்ளது, ஆன்லைனில் தங்கள் அடையாளத்தை மறைத்துப் பொய்யுரைக்கும் நபர்களை எதிர்கொண்டுள்ளதாக ஜென் Z-க்களில் 59% பேர் குறிப்பிடுகின்றனர். (Snap இந்த ஆராய்ச்சியை நடத்துகிறது, ஆனால் இது Snapchatஇல் மட்டும் குறிப்பாகக் கவனம் செலுத்தாமல் அனைத்து ஆன்லைன் தளங்கள் மற்றும் சேவைகளில் ஜென் Z பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் அனுபவங்களை உள்ளடக்கியதாக இது அமைகிறது.)
“ஏமாற்று மற்றும் மோசடிகளை அனைவரும் - குறிப்பாக இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது வருந்தத்தக்கதாகும்,” என ConnectSafely CEO லாரி மாஜிட் தெரிவிக்கிறார். "துரதிருஷ்டவசமாக, இது மின்னஞ்சல், உரைச் செய்திகள், அரட்டை, சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் அனுபவங்களில் பலரும் எதிர்கொள்ளும் ஓர் யதார்த்தமாகும். அனைத்து வயதுப் பயனர்களையும் பாதுகாக்க உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், நடைமுறைக்கேற்ற சட்டவாக்கத்துடன் ஊடகக் கல்வியறிவு, மேம்பட்ட சிந்தனைத் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான கல்வி தொடர்பான விஷயங்களில் அனைத்துப் பொறுப்புதாரர்களும் தங்களின் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதற்கான அவசியத்தை இது வலுப்படுத்துகிறது.”
அமெரிக்காவில் பாதுகாப்பான இணைய நாள் (SID) நிகழ்வின் அதிகாரப்பூர்வ ஏற்பாட்டாளரான ConnectSafelyஉடன் இணைந்து செயலாற்றுவதில் Snap பெருமிதம் கொள்கிறது, இந்த ஆண்டின் தேசிய நிகழ்வு SIDஇன் 21ஆவது ஆண்டு விழாவாகும், இதில் எங்கள் சமீபத்திய ஆராய்ச்சியின் சில கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் SID நிகழ்வு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடனும், மரியாதையுடனும், சிந்தனைத்திறத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, பல்வேறு தளங்களில் டிஜிட்டல் நல்வாழ்வு குறித்த ஆராய்ச்சிகளை நடத்தி, அதன் முழுமையான முடிவுகளை SID-க்கான Snap-இன் தொடர் பங்களிப்பாக வெளியிட்டு வருகிறோம். இந்த முடிவுகள் ஒட்டுமொத்தத் தொழில்நுட்பச் சூழல் அமைப்பையும் அறிந்துகொள்ள உதவுகின்றன, அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, இன்னும் நேர்மறையான டிஜிட்டல் அனுபவத்தை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் நமக்கு உதவகூடிய சான்றுரீதியிலான அடித்தளமாக அமைகின்றன.
சில ஊக்கமளிக்கும் போக்குகள்
ஊக்கமளிக்கும் விதத்தில், ஆன்லைன் அபாயத்தை எதிர்கொண்ட பிறகு அது பற்றி பிறருடன் பேசியதாக அல்லது உதவியை நாடியதாக கடந்த ஆண்டில் (முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது) அதிகமான ஜென் Zகள் தெரிவித்துள்ளனர் என சமீபத்திய முடிவுகள் தெரிவிக்கின்றன. 13 முதல் 24 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 10 இல் ஆறு பேர் (59%) உதவியை நாடியதாகத் தெரிவித்துள்ளனர், இது 2023 ஆம் ஆண்டில் இருந்து ஒன்பது சதவீதப் புள்ளிகள் அதிகரிப்பாகும். அதேபோல, 13 முதல் 19 வயதுடையவர்களின் பெற்றோர்களில் பாதிப்பேருக்கு மேல் (51%) தங்கள் பதின்பருவத்தினரின் ஆன்லைன் வாழ்க்கை குறித்து அவர்களுடன் உரையாடியதாகத் தெரிவிக்கின்றனர், இது 2 ஆம் ஆண்டில் இருந்து ஒன்பது சதவீதப் புள்ளிகள் அதிகரிப்பாகும். அதேவேளையில், சிறிதளவு அதிகமான பெற்றோர்கள் (2ஆம் ஆண்டின் 43% உடன் ஒப்பிடும்போது தற்போது 45%) அவர்களின் பதின்பருவப் பிள்ளைகள் ஆன்லைனில் பொறுப்புடன் செயல்படுவார்கள் என நம்புவதாகும், தொடர்ந்து கண்காணிக்கும் தேவை ஏற்படவில்லை என்று நினைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மற்றொரு சாதகமான கண்டுபிடிப்பு கடந்த ஆண்டில் இளைஞர்களைச் சுற்றியுள்ள "ஆதரவு நபர்கள்" அதிகரித்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஆதரவு நபர்கள் என்பது ஓர் இளைஞரின் வாழ்வில், வீட்டிலோ பள்ளியிலோ சமூகத்திலோ இருக்கும், ஜென் Zகள் தங்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசக்கூடிய, அவர்களின் பேச்சிற்குச் செவிசாய்க்கக்கூடிய, அவர்களின் வெற்றி மீது நம்பிக்கைவைத்துள்ள நபர்கள் என்று வரையறுக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் ஆதரவு நபர்களைக் கொண்ட இளைஞர்கள் சிறந்த டிஜிட்டல் நல்வாழ்வை அனுபவிக்கின்றனர் என்று ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து காட்டுவதில் ஆச்சரியமில்லை. எனவே தான் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதின்பருவத்தினர், இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதில் நமது பொறுப்புகளை நாம் அனைவரும் செய்வது அவசியமாக உள்ளது.
3 ஆம் ஆண்டில் கிடைத்த கூடுதல் உயர்மட்டக் கண்டுபிடிப்புகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஆறு நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பதிலளித்த 6,004 ஜென்Zகளில் 23% பேர் பாலியல்ரீதியான மிரட்டலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51%) பாலியல்ரீதியான மிரட்டலுக்கு வழிவகுத்த ஆபத்தான டிஜிட்டல் நடத்தைகளில் ஈடுபட்டதாக அல்லது அதுபோன்ற சில இணையச் சூழ்நிலைகளுக்குள் இழுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இதில் "ஏமாற்றப்படுதல்" (37%), "போலி சுயவிவரத்தின்" மூலம் ஏமாற்றப்படுதல் (30%), ஹேக் செய்யப்படுதல் (26%), அல்லது அந்தரங்கமான புகைப்படங்களைப் பகிர்தல் (17%) ஆகியவை அடங்கும். (இவற்றில் சில கண்டுபிடிப்புகளை கடந்த அக்டோபரில் வெளியிட்டோம்.)
ஆன்லைனில் அந்தரங்கப் படங்களுடனான ஜென் Z-இன் ஈடுபாடு பெற்றோர்களுக்குத் தெரியாத விஷயமாகவே இருந்துள்ளது. பதின்பருவத்தினரின் பெற்றோர்களில் ஐந்தில் ஒருவர் (21%) தங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் பாலியல் படங்களில் ஈடுபாடுகாட்டியதே இல்லை என்று நினைத்ததாகக் கூறியுள்ளனர். உண்மையில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பதின்பருவத்தினர் (36%) அத்தகைய செயல்பாட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர் – இது 15 சதவீதப் புள்ளி இடைவெளி ஆகும்.
பதிலளித்த ஜென் Zகளில் 24% பேர் பாலியல் இயல்பிலான AI உருவாக்கிய படங்கள் அல்லது வீடியோக்களை ஏதோ ஒரு வகையில் பார்த்துள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த வகை உள்ளடக்கத்தைப் பார்த்ததாகத் தெரிவித்தவர்களில் 2% பேர் அந்தப் படங்கள் சிறிய அளவிலானவை என்று நம்புவதாகக் கூறியுள்ளனர். (இந்தத் தரவுகளில் சிலவற்றை நவம்பரில் நாங்கள் வெளியிட்டோம்.)
இந்த முடிவுகள் ஜென் Zஇன் டிஜிட்டல் நல்வாழ்வு குறித்த Snapஇன் தொடர் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் உள்ள பதின்பருவத்தினர் (13-17 வயதினர்) மற்றும் இளைஞர்கள் (18-24 வயதினர்) ஆன்லைனில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதற்கான அளவீடான DWBIஇன் சமீபத்திய மதிப்பாகும், மேலும் ஆன்லைன் அபாயங்களுக்கான 13 முதல் 19 வயதுப் பிள்ளைகளின் வெளிப்பாடு பற்றி அவர்களின் பெற்றோர்களிடமும் கருத்துக்கணிப்பு நடத்துகிறோம். இந்தக் கருத்துக்கணிப்பு ஜூன் 3 மற்றும் ஜூன் 19, 2024 இடையேயான காலத்தில் நடத்தப்பட்டது, இதில் மூன்று வயதுப் பிரிவுகளில் ஆறு புவியியல் பகுதிகளைச் சேர்ந்த 9,007 பேர் பதிலளித்தனர்.
ஆண்டு 3 DWBI
பல்வேறு உணர்வுரீதியான கூற்றுகளுடன் உடன்படுவதைப் பொறுத்து ஒவ்வொரு பதிலளிப்பவருக்கும் 0 இலிருந்து 100க்குள் ஒரு மதிப்பெண்ணை DWBI ஒதுக்கீடு செய்கிறது. தனிப்பட்ட பதிலளிப்பவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்டின் மதிப்பெண்ணும் ஆறு நாடுகளின் சராசரியும் கணக்கிடப்படுகிறது. ஆறு புவியியல் பகுதிகளின் சராசரி, 2024 DWBI மதிப்பெண்ணானது ஒரு சதவீதப் புள்ளி உயர்ந்து 2022, 2023 ஆம் ஆண்டுகளில் இருந்த 62 என்பதில் இருந்து அதிகரித்து 63 ஆக உள்ளது. எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, இது ஒரு சராசரி அளவீடாக இருந்தாலும், பதின்பருவத்தினர், இளைஞர்கள் இருவருக்குமான பாதிப்பு வெளிப்பாட்டின் உயர்வைக் கருத்தில் கொண்டால், நிகர அளவில் இது நேர்மறையான மதிப்பாகும். தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இந்தியா அதிகபட்ச மதிப்பில் 67 ஆக உள்ளது, 2023 ஆண்டு மதிப்பில் இருந்து மாற்றமில்லை. இது வலுவான பெற்றோர் ஆதரவுக் கலாச்சாரத்தை மீண்டும் ஒருமுறை பிரதிபலிப்பதாக உள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் மதிப்புகள் இரண்டும் ஒரு சதவீதப் புள்ளி அதிகரித்து முறையே 63 மற்றும் 65 ஆக உள்ளன, அதேவேளையில் ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி மதிப்புகள் மாற்றங்கள் இல்லாமல் 59 மற்றும் 60 ஆக உள்ளன. ஆஸ்திரேலியா மட்டுமே DWBI மதிப்பு குறைந்த ஒரே நாடு ஆகும், ஒரு சதவீதப் புள்ளி குறைந்து 62 ஆக உள்ளது.
இந்தக் குறியீடு நல்வாழ்வு குறித்த நிறுவப்பட்ட கருத்தாக்கத்தின் மாறுபாடான PERNA மாடலைப் பயன்படுத்துகிறது 1, இதில் ஐந்து வகைப்பாடுகளைச் சேர்ந்த 20 உணர்வு சார்ந்த கூற்றுகள் அடங்கியுள்ளன: Positive Emotion (நேர்மறை உணர்வு), Engagement (ஈடுபாடு), Relationships (உறவுகள்), Negative Emotion (எதிர்மறை உணர்வு), மற்றும் Achievement (சாதனை). Snapchat மட்டுமல்லாது கடந்த மூன்று மாதங்களில் பதிலளிப்பவர்கள் பயன்படுத்திய அனைத்துச் சாதனங்களையும் செயலிகளையும் மனதில் வைத்து, 20 கூற்றுகளில் ஒவ்வொன்றுடனும் அவர்களின் உடன்பாட்டின் அளவைப் பதிவுசெய்யுமாறு கேட்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, நேர்மறை உணர்வு வகையில் “பொதுவாக ஆன்லைனில் நான் செய்தவை மதிப்புள்ளதாகவும் பயனுள்ளதாகவும் உணர்ந்தேன்,” மற்றும் உறவுகள் வகையின் கீழ் “ஆன்லைனில் நான் கூறுவதைக் கேட்கும் நண்பர்கள் உள்ளனர்”. (இந்த இணைப்பைப் பார்க்கவும், 20 DWBI கூற்றுகளின் முழுப் பட்டியலுக்கு.)
ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பதின்பருவத்தினர்: எங்கள் புதிய டிஜிட்டல் நல்வாழ்வு கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கவும்
கடந்த ஆண்டில், ஆன்லைனில் பதின்பருவத்தினருக்கான எங்கள் தொடர் உறுதிப்பாடு மற்றும் எங்கள் சமீபத்திய ஆராய்ச்சிக்கு உயிரூட்ட உதவுவதற்காக எங்கள் டிஜிட்டல் நல்வாழ்வு கவுன்சிலை (CDWG) அமெரிக்காவில் உள்ள பதின்பருவத்தினருக்கு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தினோம், இது 13 முதல் 16 வயதினருக்கான கேட்டறிதல், கற்றல் மற்றும் டிஜிட்டல் அனுபவங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். சுருக்கமாகக் கூறினால், அந்தத் திட்டம் அறிவூட்டுவதாகவும், பலனளிப்பதாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. எனவே இந்த ஆண்டில் அதை நாங்கள் விரிவுபடுத்தி ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் (இங்கிலாந்து உட்பட) இரண்டு புதிய "சகோதரி" கவுன்சில்களை சேர்க்கிறோம். அந்தப் பகுதிகளில் விண்ணப்பச் செயல்முறைகள் மிக விரைவில் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதற்கிடையில் SID 2025 உடன் இணைந்து, அமெரிக்காவைச் சேர்ந்த எங்கள் கவுன்சில் உறுப்பினர்களில் சிலர் ஆன்லைன் குடும்பப் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி பதின்பருவத்தினர் மற்றும் பெற்றோருக்கான முக்கிய டிஜிட்டல் பாதுகாப்புத் தலைப்புகளில் தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டர். FOSI இணையதளத்தில் உள்ள இந்த வலைப்பதிவைப் பார்த்து சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல், தளங்கள் மற்றும் பிறரிடம் கவலைகளைத் தெரிவிப்பதன் முக்கியத்துவம், பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்து பெற்றோருடன் பேசுவதற்கான பரிந்துரைகள் மற்றும் பலவற்றைக் குறித்த எங்கள் CDWG உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்கலாம். இந்தத் தனித்துவமான வாய்ப்பிற்காக FOSIக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், இதில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலும் கருத்துக்களும் உலகெங்கிலும் உள்ள குடும்பங்களில் எதிரொலிக்கும் என நம்புகிறோம்.
எங்கள் CDWG திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம் உலகின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கும் இதுபோன்ற வாய்ப்பை அளிப்பதில் நாங்கள் உற்சாகமடைகிறோம். அதுவரை, SIDஇல் இன்று மற்றும் 2025 முழுவதிலும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான தங்களின் பொறுப்பை நிறைவேற்றுமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறோம்!
முந்தைய மாதங்களில் Gen Zஇன் ஆன்லைன் அபாயங்களுக்கான வெளிப்பாடு, அவர்களின் உறவுகள், அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்த அவர்களின் எண்ணங்கள் ஆகியவற்றைப் பற்றிய கண்டுபிடிப்புகளை எங்கள் டிஜிட்டல் நல்வாழ்வு ஆராய்ச்சிகள் வழங்குகின்றன. ஒற்றை வலைப்பதிவில் எங்களால் பகிர முடிவதை விட ஆராய்ச்சி குறித்த தகவல்கள் இன்னும் அதிகமாக உள்ளன. டிஜிட்டல் நல்வாழ்வு குறியீடு மற்றும் ஆராய்ச்சி பற்றி மேலும் அறிய, பின்வருவன்றறைப் பார்க்கவும் எங்கள் இணையதளம், மற்றும் இந்தப் புதுப்பிக்கப்பட்ட விளக்கம், முழு ஆராய்ச்சி முடிவுகள், பின்வரும் ஆறு நாடுகளுக்கான மொழிபெயர்க்கப்பட்ட விளக்கப்படங்கள்: ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இங்கிலாந்துஅமெரிக்கா, மற்றும் புதிய ஆவணமான, “டிஜிட்டல் நல்வாழ்விற்கான குரல்கள்,” இந்த ஆராய்ச்சியின் மதிப்புகள் குறித்து எங்கள் கூட்டாளர்கள் மற்றும் கூட்டுப் பணியாளர்களின் கருத்துக்களைத் தொகுத்து வழங்குகிறது.
— ஜேக்லின் பியூஷர், தளப் பாதுகாப்புப் பிரிவின் உலகத் தலைவர்