புதிய Snap ஆராய்ச்சி: Gen Z இணையப் பாலியல் மோசடிக்கு ஒரு இலக்காக உள்ளது, ஆனால் முன்னேற்றத்தின் அறிகுறியாகவும் உள்ளது
அக்டோபர் 29, 2024
கடந்த மூன்று ஆண்டுகளில், இணைய ஆபத்து "பாலியல் மோசடியில்" அதிர்ச்சிதரும் அதிகரிப்பைக் கண்டுள்ளது - முதன்மையாக டீனேஜர்கள் மற்றும் இளம் வயதினர்களையும் அந்தரங்க புகைப்படங்களைப் பகிரக்கோரும் மோசடி, இது விரைவில் மிரட்டலாக மாறக்கூடும். புதிய துறை முழுவதுமான ஆராய்ச்சி அபாயங்கள் தொடர்வதைக் காட்டும் அதே நேரம், குற்றவாளிகளைத் தடுத்து இலக்காகும் சாத்தியமுள்ளவர்களுக்கு கற்பிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுவரும் அறிகுறிகள் ஊக்கம் தருவதாக இருக்கின்றன. (Snap Inc இந்த ஆராய்ச்சியை அறிமுகம் செய்து இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் இது பொதுவில் Snapchat மீது எந்த குறிப்பிட்ட கவனமும் இல்லாமல், அனைத்து இணைய தளங்களிலும் உள்ள ஜென் Z டீனேஜர்கள் மற்றும் இளம் வயதினர்களின் அனுபவங்களை உள்ளடக்கியது.)
அனைத்துத் தளங்கள் மற்றும் சேவைகளில் ஆறு நாடுகளில் ஆய்வு செய்யப்பட்ட 113 முதல் 24 வயதினர்களில் கிட்டத்தட்ட கால்வாசி நபர்கள் (23%) தாங்கள் 2இணைய பாலியல் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்கள். இதற்கிடையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51%) சில இணைய சூழ்நிலைகளுக்குள் இழுக்கப்பட்டதாக அல்லது பாலியல் மோசடிக்கு வழிவகுத்த ஆபத்தான டிஜிட்டல் நடத்தைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதில் அடங்குபவை "உறவில் வசப்படவைத்தல் 3” (37%), போலியான சுயவிவரத்தின் மூலம் ஏமாற்றப்படுதல் (30%), ஹேக் செய்யப்படுவது (26%) அல்லது இணையத்தில் அந்தரங்கமான புகைப்படங்களைப் பகிர்வது (17%). முக்கியமாக, பல குழுக்கள் நடத்தும் விழிப்புணர்வு உருவாக்குவது மற்றும் கல்வி பிரச்சாரங்கள் "இலக்காகும்" இளைஞர்கள் இத்திட்டங்கள் மூலம் பாதிக்கப்படுவது உண்மையில் குறைந்ததுள்ளதை எதிரொலிக்கிறது.
தனிப்பட்ட தகவலைப் பகிர அல்லது பாலியல் படங்களை உருவாக்க ஒரு இலக்கை கவர்ந்திழுக்க குற்றவாளிகள் வேறு ஒருவராக நடிக்கும்போது ஆன்லைன் கேட்ஃபிஷிங் ஏற்படுகிறது. ஹேக்கிங் என்பது அந்தரங்க புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கு இலக்கின் சாதனங்கள் அல்லது இணைய கணக்குகளின் அங்கீகரிக்கப்படாத அணுகலை குற்றவாளி பெறுவதை உள்ளடக்கியது. இரு சூழல்களிலும் பெரும்பாலான பகுதிக்கு, பெறப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது பிற தனிப்பட்ட தகவல்கள் பின்னர் சமரசம் செய்யும் படங்களை பாதிக்கப்பட்டவரின் நண்பர்களுக்கும் வெளியிடாமல் இருப்பதற்கு ஈடாக குற்றவாளியின் கோரிக்கைகளுக்கு இணங்க பாதிக்கப்பட்டவரை மிரட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இளைஞர்களிடையே தன்னார்வமாக டிஜிட்டல் அந்தரங்க புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வது 21 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் பாலியல் ஆய்வாக கருத்தப்படுகிறது மற்றும் அந்த குணாதிசாயம் ஆராய்ச்சியால் ஆதரிக்கப்படுகிறது. ஆனால் பாலியல் மோசடி மற்றும் தவறான சித்தரிப்பு மற்றும் பொய்களில் இருந்து வெளிப்படும் பிற சாத்தியமான தீங்குகளுக்கு இந்த நடைமுறை ஒரு முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி 17% பதிலளிப்பவர்களில் அந்தரங்க புகைப்படங்களைப் பகிர்ந்ததாக அல்லது விநியோகித்ததாக ஒப்புக்கொண்ட , 63% பேர் குற்றவாளிகள் தங்களிடம் பொய் கூறியதாகவும் 58% புகைப்படங்களை அனுப்பிய பிறகு கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறினார். அந்தரங்க புகைப்படங்களைப் பகிர்ந்த 18 வயதுக்குட்பட்டவர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள்: 76% பேர் துஷ்பிரயோகம் செய்தவர்கள் தங்களிடம் பொய் கூறியதாகவும் 66% புகைப்படங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறினார்கள்.
"டீனேஜர்கள் தங்கள் பாதுகாப்பை இணையத்தில் மேம்படுத்த வலுவான ஒழுங்குமுறை மற்றும் தீர்வு முறைகள் வேண்டும் என விரும்புகிறார்கள்," என்கிறார் சேவ் தி சில்ட்ரன்-இன் பார்ட்னர்ஷிப்புடன் டெக் கோலிஷனின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இணை ஆய்விற்கு தலைமை வகுத்தமேற்கு சிட்னி பல்கலைகழகத்தில் 4 யங் மற்றும் ரெசிலியண்ட் ஆய்வு மையத்தின் இணை இயக்குனர் பேராசிரியர் அமண்டா தர்ட் கூறுகிறார். "அவர்கள் குழந்தைகளும் பெரியவர்களும் சிறந்த கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் அடிக்கடி அணுகும் டிஜிட்டல் தலங்கள் மோசடியாளர்கள், பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் இல்லாமல் இருப்பதையும், பாதுகாப்பாக மட்டுமல்லாமல் அவர்களுக்கு உகந்ததாக இருப்பதை உறுதிசெய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன்களின் ஆற்றலை பயன்படுத்த தளங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்."
"இணையத்தில் பாலியல் மோசடிகள் விரைவாக அதிகரிப்பதை எதிர்க்க மோசடியாளர்களை அடையாளம் காண குழந்தைகளுக்கு உதவக்கூடிய சிந்தனையார்ந்த, வயதுக்குப் பொருத்தமான வடிவமைப்பு, பொருத்தமற்ற கலந்துரையாடல்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதற்கான நிகழ்நேர ஆலோசனைகளை வழங்கவும், உயர்தர தகவல்களுடன் அவர்களை இணைக்கவும் உதவி நாடும் பாதைகள் போன்றவை தேவை," என்றும் அவர் கூறினார். , பேராசிரியர் தர்ட் Snap-இன் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
மற்ற முக்கிய முடிவுகள்
ஜென் Z பதிலளிப்பவர்களில் சுமார் பாதியளவு நபர்கள் (47%) ஏதோ ஒரு கட்டத்தில் அந்தரங்க புகைப்படங்களுடன் ஈடுபட்டுள்ளதாக கூறினர், 35% பாலியல் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர், 39% அவர்கள் படத்தைப் பெற்றதாக தெரிவித்தனர்.
ஜென் Z வயதுடன் பாலியல் படங்களுடனான ஈடுபாடு அதிகரித்தது.
13 முதல் 15 வயதுடையவர்களில், கிட்டத்தட்ட கால்வாசி நபர்கள் (23%) அந்தரங்க புகைப்படங்களை பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் மற்றும் (26%) படங்களைப் பெற்றனர். 13% மட்டுமே அதைப் பகிர்ந்ததாக ஒப்புக்கொண்டனர்.
16 மற்றும் 17 வயதுடையவர்களில் அந்த சதவிகிதம் 31%(கேட்டுக்கொள்ளப்பட்டவர்கள்) மற்றும் 35%(பெற்றவர்கள்)-க்கு அதிகரித்துள்ளது, அதே சமயம் அப்போதும் அந்தரங்க படங்களைப் பகிர்ந்ததாக 13% மட்டுமே ஒப்புக்கொண்டனர்.
18 மற்றும் 19 வயது மற்றும் 20 முதல் 24 வயதுடையவர்களில் சதவிகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது, 20 முதல் 24 வயதுக் குழு 43% (கேட்டுக்கொள்ளப்பட்டவர்கள்) மற்றும் 49% (பெற்றவர்கள்) உடன் முதலிடத்தில் உள்ளது. (விவரங்களுக்கான விளக்கப்படத்தைப் பார்க்கவும்).

இந்த ஆராய்ச்சி Snapஇன் டிஜிட்டல் நல்வாழ்வின் தற்போதைய ஆய்வின் பாகமாகும் - இது ஜென் ஜெட்-இன் இணைய உளவியல் ஆரோக்கியத்தின் ஒரு அளவாகும். Snap இந்த ஆராய்ச்சிக்கு நிதியுதவி அளித்துள்ளது, இது Snapchat மீது எந்த குறிப்பிட்ட கவனமும் இல்லாமல் அனைத்து தளங்கள், சேவைகள் மற்றும் சாதனங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் 3 முதல் ஜூன் 19 வரை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மொத்தம் 9007 நபர்கள் பங்கேற்றனர். இதில் 13 முதல் 19 வயதுடையவர்களின் பெற்றோர்கள் 3003 பேர் உள்ளடங்கியுள்ளனர். அவர்களிடம் அவர்களது டீனேஜர்கள் இணைய ஆபத்திற்கு வெளிப்படுவது குறித்து கேட்கப்பட்டது. சர்வதேச பாதுகாப்பான இணைய தினம் 2025 அன்று உடன் இணைந்து முழு முடிவுகளையும் நாங்கள் வெளியிடும்போது இப்போது மற்றும் பிப்ரவரி இடையே கூடுதல் கண்டுபிடிப்புகளை நாங்கள் வழங்குவோம். அந்த நேரத்தில், Snapஇன் டிஜிட்டல் நல்வாழ்வு குறியீட்டின் மூன்றாம் ஆண்டு பதிவை குறித்தும் நாங்கள் அறிவிப்போம்.
சிறார்களைப் பாதிக்கும் பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறித்தல் குறித்த டெக்னாலஜி கோலிஷனின் மெய்நிகர் பல பங்குதாரர்களின் கருத்தரங்கில் எங்கள் பங்கேற்பு கருதி இன்று இந்த சமீபத்திய பாலியல் மோசடி குறித்த ஆழமான முடிவுகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். கீழே மேலும் விவரிக்கப்பட்டவாறு, Snap 2022 ஆம் ஆண்டிலிருந்து பாலியல் மோசடிக்கு எதிராகப் போராடி வருகிறது. பல்வேறு தளம் நடந்த ஆராய்ச்சியை மேற்கொள்வது இணைய அபாயங்களை புரிந்துகொண்டு சமாளிக்க சிறந்த வழியாகும்.
"இது போன்ற ஆராய்ச்சி இளம் நபர்கள் இணையத்தில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் மீது கவனத்தை செலுத்துகிறது, ஆனால் இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக தொழில்துறை, அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பின் சக்தியை இது சுட்டிக்காட்டுகிறது," என டெக் கோலிஷனின் தலைவர் மற்றும் சிஇஓ சீன் லிட்டோன் கூறினார். பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறித்தல் குறித்த டெக் கோலிஷனின் உலகளாவிய பல பங்குதாரர்களின் கருத்தரங்கில் Snap இந்த புதிய ஆராய்ச்சியை வழங்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தி கூட்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் தளங்களை நாம் உருவாக்கலாம்.”
குற்றவாளிகளின் கோரிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஜென் Z டீனேஜர்கள் மற்றும் இளம் வயதினரில் (23%) குற்றவாளிகளின் முதல் இரண்டு கோரிக்கைகள் பாலியல் புகைப்படங்கள் / வீடியோக்கள் மற்றும் பணம் ஆகியவை, கிட்டத்தட்ட பாதி நபர்கள் அதிக பாலியல் படங்களை, பணம் அல்லது பரிசு அட்டைகள் ஆகிவற்றைக் கேட்டுள்ளனர். கடந்த ஆண்டு கண்டுபிடிப்புகளுடன் இணங்க, பிற கோரிக்கைகளில் அடங்குபவை நேரில் சந்திக்க விரும்புவது (39%), பாலியல் உறவுகளில் ஈடுபட விரும்புவது (39%), தனிப்பட்ட தகவல்களுக்கான அணுகலை கோருவது (36%) அல்லது பாதிக்கப்பட்டவரின் கணக்குகளுக்கான அணுகலை கோருவது (35%) மற்றும் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் தொடர்புப் பட்டியல்களை அணுகக் கோருவது (25%). கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நிகழ்வுகளில் குற்றவாளி பதிலளித்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தினார் மற்றும் கிட்டத்தட்ட மற்றொரு 33% இல் குற்றவாளிகள் தனிப்பட்ட தகவலை மேலும் பலருக்கு வெளியிடுவதாக அச்சுறுத்தின்ர். அனைத்து சந்தர்ப்பங்களிலும், ஜென் Z இளம் நபர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை விட மைனர் வயது டீன்ஏஜர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கை அதிகமாக இருந்தது. (விவரங்களுக்கு விளக்கப்படத்தைப் பார்க்கவும்).

நல்ல செய்தி என்னவெனில், பாதிக்கப்பட்டவர்களில் 85% பேர் பாலியல் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக கூறினார், இது கடந்த வருடம் 56% இலிருந்து 5அதிகரித்துள்ளது. பரந்த அளவு நடவடிக்கைகளில் உள்ளடங்குபவை, பெற்றோர், டீனேஜர் அல்லது பிற நம்பிக்கையான பெரியவரிடமிருந்து உதவி கோருவது (70%); சம்பவம் குறித்து புகாரளிப்பது (67%); குற்றவாளியை தடுப்பது போன்ற பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது (64%) - இது மிகவும் பொதுவான நடவைக்கையாகும்; கணக்குகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை புதுப்பித்தல் மற்றும் கணக்குகளைத் மூடுதல் இன்னும் 18% நபர்கள் சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை அல்லது எதுவும் செய்யவில்லை (8%) எனக் கூறினார்கள்.
Snap-இல் நாங்கள் புகார் செய்வது குறித்து மாற்றத்தை ஏற்படுத்தி எங்கள் சமூகத்தின் டீனேஜர்கள், இளம் வயதினர் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதைத் தொடர்கிறோம், தளங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திடம் புகார் அளித்துள்ள பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தரவு குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளோம். எங்களது சமீபத்திய ஆய்வு 36% ஜென் Z தலைமுறையினர் தொடர்புடைய தளத்திலும். 30% ஒரு ஹாட்லைன் அல்லது ஹெல்ப்லைனுக்கும் புகார் அளித்துள்ளதாகவும் மற்றும் 27% சட்ட அமலாக்கத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இந்த புகாரளித்துள்ள சதவிகிதங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளன.
Snap இன் தற்போதைய அர்ப்பணிப்பு
Snap எங்கள் தளத்தில் பாலியல் மோசடிக்கு எதிராக சுமார் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறது. நாங்கள் எப்போதும் முக்கியமான தடுப்பு மற்றும் புகாரளிக்கும் கருவிகளை கிடைக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டு, நாங்கள் பிரத்யேக பாலியல் மோசடிக்கு எதிராக புகாரளிக்கும் காரணத்தையும் செயலியில் புதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கல்வி ஆதாரங்களையும் சேர்த்தோம். இந்த ஆண்டு, டீனேஜர்கள் மற்றும் இளைஞர்களை சாத்தியமான சந்தேகத்திற்குரிய நட்பு கோரிக்கைகளுக்கு எச்சரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட எச்சரிக்கைகளை செயலியில் மேம்படுத்தினோம். நாங்கள் எங்கள் பெற்றோர் மேற்பார்வை கருவிகள் தொகுப்பான குடும்ப மையத்தில் புதிய செயல்பாட்டை அடிக்கடி சேர்க்கிறோம். குடும்ப மையமானது டீனேஜர்கள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் பிற நம்பகமான பெரியவர்களுக்கு இடையில் Snapchat-இல் மற்றும் பொதுவில் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது பற்றி உரையாடல்களை தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இளம் நபர்கள் பாலியல் மோசடியின் அபாயம் குறித்து அதிகம் அறிந்துள்ளனர் மற்றும் நமது செயலியில் உள்ள எச்சரிக்கைகள் உதவியாக உள்ளன என்பதை முறையற்ற கருத்துக்கள் குறிப்பிடுகின்றன. ஒரு டீனேஜரை மேற்கோள் காட்ட ஒரு ஐரோப்பிய என்ஜிஓ தலைவர் குறிப்பிட்டதாவது, "அந்த தருணத்தில் எண்ணத்தை இடைநிறுத்துவது உண்மையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்."
பாலியல் மோசடி கைமீறி போவதற்கும் முன் அந்த அபாயத்தை அகற்றுவது எங்கள் முதன்மை நோக்கமாக உள்ளது, ஆனால் இவை பல்வேறு பங்குதாரர்கள் மற்றும் துறைகளின் ஈடுபாடு தேவைப்படும் சமூகப் பிரச்சனைகளாகும் – தொழில்நுட்ப தளங்கள் மற்றும் சேவைகள், சட்ட அமலாக்க நிறுவனங்கள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளம் மக்கள் அனைவரின் பங்களிப்பு தேவைப்படும். டெக் கோலிஷன் மற்றும் அதன் உறுப்பினர்கள், காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்களுக்கான தேசிய மையம், தார்ன், எங்களது பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் பிறரின் தொடரும் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டைப் பாராட்டுகிறோம். மேலும் இந்த சமீபத்திய தளம் தாண்டிய ஆராய்ச்சியைத் தொடங்கியது பலருக்கு புதிய சிந்தனைகளை வழங்கும் என நம்புகிறோம். பாலியல் மோசடி மற்றும் பிற சாத்தியமான இணைய அபாயங்களிலிருந்து மக்களை பாதுகாக்க நாம் அனைவரும் முற்படுவதால், ஆராய்ச்சி, கற்றல் மற்றும் முதலீடுகளுக்கான கூடுதல் வாய்ப்புகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.