Snapchat இணக்கம், அமலாக்கம், மற்றும் மேல்முறையீடு

சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்

மே 2024-இல் புதுப்பிக்கப்பட்டது

Snapchat முழுவதும், எங்கள் சமூகத்தின் தனியுரிமை நலன்களை மதிக்கும் அதே வேளையில் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பாதிப்புகளுக்கு எதிராகப் போராட நாங்கள் சமச்சீரான, இடர் அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம் - எங்களின் கொள்கைகளை நியாயமாகப் பயன்படுத்த எங்களை நாங்களே பொறுப்பாக்கிக்கொள்ள வெளிப்படையான உள்ளடக்கக் கட்டுப்பாட்டு நடைமுறைகள், தொடர்ச்சியான மற்றும் நியாயமான அமலாக்கம் மற்றும் தெளிவான தகவல்தொடர்புகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறோம்.


உள்ளடக்கக் கட்டுப்பாடு


நாங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு Snapchat-ஐ வடிவமைத்துள்ளோம், மேலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கம் பரப்பப்படுவதைத் தடுக்க உதவுவதில் இந்த வடிவம் முக்கியமான பங்கு வகிக்கிறது.
சரிபார்க்கப்படாத பதிப்பாளர்கள் அல்லது வேறு நபர்கள் வெறுப்பான, தவறான அல்லது வன்முறையான உள்ளடக்கத்தை ஒளிபரப்புவதற்கான வாய்ப்புள்ள திறந்த பொதுச் செய்தி ஊட்டத்தை Snapchat வழங்குவதில்லை.

இந்த வடிவமைப்பு பாதுகாப்புடன் பொது உள்ளடக்க மேற்பரப்புகளை (ஸ்பாட்லைட், பொதுக் கதைகள், மற்றும் வரைபடங்கள் போன்றவை) கட்டுப்படுத்துவதற்காகத் தானியங்கி கருவிகள் மற்றும் மனித மதிப்பாய்வுகளின் கலவையை நாங்கள் பயன்படுத்துகிறோம் -- பொதுப் பதிவுகளில் உள்ள பொருத்தமற்ற உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்கான -- இயந்திரக் கற்றல் கருவிகள் மற்றும் உண்மையான மக்களின் அற்பணிப்புமிக்க குழுக்கள்.

உதாரணத்திற்கு, ஸ்பாட்லைட்டில், விரிவான Snapchat சமூகத்துடன் பகிர்வதற்காக ஆக்கப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்கான காணொளிகளைப் படைப்பாளிகள் சமர்ப்பிக்கலாம், அனைத்து உள்ளடக்கமும் பகிரப்படுவதற்கு முதலில் செயற்கை நுண்ணறிவால் தானாக மதிப்பாய்வு செய்யப்படும்.
ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கம் அதிகமான பார்வையைப் பெறும்போது, அது பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைவதற்கு முன் மனிதக் கட்டுப்பாட்டாளரால் மதிப்பாய்வு செய்யப்படும்.
ஸ்பாட்லைட்டில் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இந்த அடுக்கு அணுகுமுறை தவறான தகவல்கள், வெறுப்பு பேச்சு, அல்லது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ள மற்ற உள்ளடக்கம் உள்ளிட்டவற்றைப் பரப்புவதைக் குறைப்பதுடன் சேர்த்து, அனைவருக்கும் மகிழ்ச்சியான, நேர்மறையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குகிறது.

அதேபோல், பதிப்பாளர் கதைகள் அல்லது காட்சிகள் போன்று, ஊடக நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கம், உள்ளடக்க வழிகாட்டுதல்களின் தொகுப்பிற்கு உட்பட்டதாகும் —இது தவறான தகவல்கள், வெறுப்பு பேச்சு, சதி கோட்பாடுகள், வன்முறை, மற்றும் மற்ற பல தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுத்து, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகிறது.
கூடுதலாக, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறிய உதவுவதற்காகக் கதைகள் போன்ற மற்ற பொது அல்லது அதிகம் புலப்படும் பரப்புகளில் நாங்கள் தீவிரமாகத் தீங்கைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், மேலும், தேடல் முடிவுகளில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் (சட்டவிரோதப் போதை மருந்துகள் அல்லது பிற சட்டவிரோத உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்த முயற்சிக்கும் கணக்குகள் போன்றவை) மீண்டும் தோன்றுவதைத் தடுக்க உதவ முக்கிய வார்த்தை வடிகட்டியை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

எங்கள் அனைத்துத் தயாரிப்பு மேற்பரப்புகளிலும், எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறியதாகக் கருதப்படும் கணக்குகள் மற்றும் உள்ளடக்கம் குறித்துப் பயனர்கள் புகாரளிக்கலாம்.
புகாரை மதிப்பாய்வு செய்து; எங்களின் கொள்கைகளின் படி சரியான நடவடிக்கை எடுத்து; அதன் முடிவு குறித்து, புகாரளித்த தரப்பிடம் சில மணி நேரங்களுக்குள் தெரிவிக்கப் பயிற்சி அளிக்கப்பட்ட எங்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவிற்கு Snapchatபயனர்கள் இரகசியமான புகாரை நேரடியாகச் சமர்ப்பிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அல்லது நடத்தை குறித்துப் புகாரளிப்பது பற்றிய மேலும் தகவல்களுக்கு, எங்களின் உதவித் தளத்தில் உள்ள இந்த வளத்தைப் பார்க்கவும்.
Snapchat இல் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறிந்து அகற்றுவது மற்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் நீங்கள் மேலும் இங்குஅறியலாம்.

பிறரின் உள்ளடக்கம் அல்லது கணக்குகளுக்கு எதிராக ஆதாரமற்ற புகார்களை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அல்லது எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட உள்ளடக்கம் அல்லது கணக்குகளை மீண்டும் மீண்டும் புகாரளிப்பதன் மூலம் Snap-இன் புகாரளிக்கும் அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். இது போன்ற நடத்தையில் ஈடுபட்டு நீங்கள் இங்கு பல புகார்களைச் சமர்ப்பித்தால், முதலில் நாங்கள் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்போம், ஆனால் இது தொடர்ந்தால், உங்களிடமிருந்து வரும் புகார்களுக்கு நாங்கள் 90 நாட்களுக்கு முன்னுரிமையளிக்க மாட்டோம்.

கொள்கை அமலாக்கம் @ Snap

எங்களின் கொள்கைகள் நிலையான மற்றும் நியாயமான அமலாக்கத்தை மேம்படுத்துவதாக இருப்பது Snapல் உள்ள எங்களுக்கு முக்கியமாகும்.
இந்தக் காரணத்திற்காக, சமூக வழிகாட்டுதல்களின் மீறல்களுக்குப் பொருத்தமான அபராதங்களை நிர்ணயிப்பதற்கான காரணிகளின் கலவையை நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.
பாதிப்பின் தீவிரம் மற்றும் Snapchat பயனர்களின் முந்தைய மீறல்கள் குறித்த எதாவது வரலாறு உள்ளிட்டவை இந்தக் காரணிகளில் மிகவும் முக்கியமானவை ஆகும்.

மிகவும் தீவிரமான பாதிப்புகளை அதே அளவு தீவிரத்துடன் எழும் பிற விதிமீறல்களிலிருந்து வேறுபடுத்துவதற்காக அவை ஏற்படுத்தும் இடர் அடிப்படையிலான அணுகுமுறையை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
கடுமையான பாதிப்புகளின் அமலாக்கம் மற்றும் அந்தப் பிரிவைச் சேர்ந்த மற்ற விதிமீறல்கள் குறித்த எங்களின் தகவல்களுக்காக, நாங்கள் இந்த வளத்தை உருவாக்கியுள்ளோம்.

எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதற்காக அல்லது தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது என்று எங்களால் தீர்மானிக்கப்படும் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்.
தீவிரமான துன்புறுத்தல் அல்லது தொந்தரவளித்தல், ஆள்மாறாட்டம், மோசடி, தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் அல்லது Snap-ஐ வேறு விதமாகச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடப் பயன்படுத்தும் கணக்குகள் இதற்கான எடுத்துக்காட்டாகும்.

எங்களின் சமூக வழிகாட்டுதல்களின் மற்ற மீறல்களுக்கு, மூன்று பகுதி அமலாக்கச் செயல்முறையை Snap பயன்படுத்துகிறது:

  • படிநிலை ஒன்று: விதிமீறும் உள்ளடக்கம் நீக்கப்படும்.

  • படிநிலை இரண்டு: Snapchat பயனர் எங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறியுள்ளதாகவும், அவர்களின் உள்ளடக்கம் நீக்கப்பட்டது என்றும், மீண்டும் மீண்டும் விதி மீறப்பட்டால் அவர்களின் கணக்கு முடக்கப்படுவது உட்படக் கூடுதல் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்கள் அறிவிப்பைப் பெறுவார்கள்.

  • படிநிலை மூன்று: Snapchat பயனர் கணக்கிற்கு எதிராக எங்கள் குழு ஒரு ஸ்டிரைக்கைப் பதிவு செய்யும்.

ஸ்டிரைக் என்பது ஒரு குறிப்பிட்ட Snapchat பயனரின் விதிமீறல்கள் பதிவை உருவாக்கும்.
ஒவ்வொரு ஸ்டிரைக்கிலும் Snapchat பயனருக்கு ஒரு அறிவிப்பும் வழங்கப்படும்; ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு Snapchat பயனருக்குப் பல ஸ்டிரைக் வழங்கப்பட்டால், அவரின் கணக்கு முடக்கப்படும்.

சமூக வழிகாட்டுதல்களை மீறும் பயனர்களுக்கு எச்சரிக்கை மற்றும் கல்வி வழங்கும் வகையில் ஸ்னாப் அதன் கொள்கைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதை இந்த ஸ்ட்ரைக் அமைப்பு உறுதி செய்கிறது.
எங்கள் கொள்கைகளின் முதன்மை குறிக்கோள் எங்களின் மதிப்புகள் மற்றும் குறிக்கோளைப் பிரதிபலிக்கும் வழிகளில் அனைவரும் Snapchat-ஐ பயன்படுத்தி மகிழ்வதை உறுதி செய்வதாகும்; அந்த இலக்கை ஆதரிக்க உதவுவதற்காக இந்த அமலாக்கக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.


அறிவிப்பு மற்றும் முறையீட்டு நடைமுறைகள்

Snapchat பயனர்களின் கணக்குக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வதை உறுதி செய்யவும், அமலாக்க விளைவை அர்த்தமுள்ள வகையில் விவாதம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கவும், Snapchat பயனர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், எங்கள் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அறிவிப்பு மற்றும் முறையீட்டு செயல்முறைகளை உருவாக்கியுள்ளோம்.

ஏன் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நன்கு புரிந்துகொள்ள, ஒரு கணக்கிற்கு எதிராக அபராதங்களை விதிக்க வேண்டுமா என்று நாங்கள் மதிப்பிடும்போது நாங்கள் எங்களின் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விதிமுறைகளைப் பயன்படுத்துவோம் மற்றும், Discover மற்றும் ஸ்பாட்லைட்டில் பதிவிடப்படும் Snapகளைக் கட்டுப்படுத்த எங்களின் சமூக வழிகாட்டுதல்கள், சேவை விதிமுறைகள், மற்றும் பரிந்துரை தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்களைப் பயன்படுத்துவோம் என்று நினைவில் கொள்ளவும்.

எங்கள் முறையீடுகளின் செயல்முறைகள் எப்படி வேலை செய்கிறது என்பது குறித்த தகவல்களுக்கு, கணக்கு முறையீடு மற்றும் உள்ளடக்க முறையீடு குறித்த உதவி கட்டுரைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

கணக்கு பூட்டப்பட்டதற்கான முறையீட்டை Snapchat அனுமதிக்கும்போது, ​​Snapchat பயனரின் கணக்கிற்கான அணுகல் திருப்பி வழங்கப்படும்.
முறையீடு வெற்றிகரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், முறையீடு செய்துள்ள தரப்பிடம் எங்களின் முடிவு குறித்துச் சரியான நேரத்தில் நாங்கள் தெரிவிப்போம்.