சட்டத்திற்குப் புறம்பான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்

சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்

புதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 2024

  • எந்தவித சட்டவிரோதச் செயல்களுக்கும் Snapchat-ஐப் பயன்படுத்த வேண்டாம். சட்ட விரோதமான அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட போதைப்பொருட்கள், கள்ளப்பொருட்கள், ஆயுதங்கள் அல்லது போலியான பொருட்கள் அல்லது ஆவணங்களை வாங்குவது, விற்பது, பரிமாற்றம் செய்வது அல்லது விற்பனை செய்வது, (குழந்தைகள் மீதான பாலியல் துர்பிரயோகம் அல்லது வன்புணர்வை காட்டும் போன்றவை) போன்றவை இதில் அடங்கும். மனித கடத்தல் அல்லது பாலுறவு அடிமை வியாபாரம் உள்ளிட்ட எந்த வகையான சுரண்டல் ஆகியவற்றை விளம்பரப் படுத்துதல் அல்லது அதற்கு வழி செய்தல் ஆகியவை அடங்கும்.

  • சூதாட்டம், புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்படாத ஊக்குவிப்பு உட்பட, ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் அல்லது தொழில்களை சட்டவிரோதமாக ஊக்குவிப்பதை நாங்கள் தடைசெய்கிறோம்.



மேலோட்டம்

சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான எங்கள் தடை Snapchat முழுவதும் பாதுகாப்பு குறித்த எங்கள் உறுதியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த விதிகளை நிலைநிறுத்துவது எங்கள் தளம் சட்டவிரோத நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப் படாததை உறுதி செய்வதோடு, Snapchat பயனர்களை கடுமையாக பாதிக்கும் அபாயங்களில் இருந்து பாதுக்காக்க உதவுகிறது. இந்த இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல, பாதுகாப்பு பங்குதாரர்கள், NGOகள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் எங்கள் சமூகத்திற்கு கல்வி வளங்களை வழங்கவும் பொதுப் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் இணைகிறோம்.


நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்

சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் உலகம் முழுவதும் உள்ள அதிகார வரம்புகளில் வேறுபடுகின்றன, மேலும் Snapchat ஒரு உலகளாவிய சமூகம் என்பதால் பொதுப் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அல்லது மனித உரிமைகள், அமெரிக்காவின் சட்டங்கள் அல்லது பயனர் இருக்கும் நாட்டின் சட்டங்களை மீறும் எந்தவொரு செயலுக்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று பயனர்கள் எதிர்பார்க்கலாம்.

எல்லா சந்தர்ப்பங்களிலும், தடைசெய்யப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் பின்வருபவை உள்ளடங்கும்; குற்றவியல் நடவடிக்கையை ஊக்குவிப்பது; இணையக் குற்றத்திற்கு வசதி செய்து தருவது அல்லது அதில் பங்கேற்பது; மற்றும் சட்ட விரோதமான அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட மருந்துகள், கள்ளப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் போலியான பொருட்கள் அல்லது ஆவணங்களை வாங்குதல், விற்பது அல்லது விற்பனைக்கு உதவுதல்.

சட்டப்பூர்வமாக வாங்க, விற்க அல்லது பயன்படுத்த சிறப்பு உரிமம் மற்றும் பிற நிர்வாக இணக்கம் தேவைப்படும் வழிகளில் அரசாங்க அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படும் பொருட்கள் அல்லது செயல்பாடுகளை அங்கீகரிக்கப்படாத விற்பனை அல்லது விளம்பரத்திற்காக எங்கள் தளத்தைப் பயன்படுத்துவதையும் எங்கள் விதிகள் தடைசெய்கின்றன. Snap-இன் முன் அனுமதி தேவைப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளின் எடுத்துக்காட்டுகளில் அடங்குவது ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவது; மதுபானம் விற்பனை செய்வது; மற்றும் THC வணிகங்களை ஊக்குவிப்பது. Snap-இன் முன் அனுமதி தேவைப்படும் முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் எடுத்துக்காட்டுகளில் ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு வசதி ஏற்படுத்தித் தருவது; மதுபானங்கள்; புகையிலை, அல்லது வேப் தயாரிப்புகளை விற்பனை செய்வது; மற்றும் THC வணிகங்களை விளம்பரம் செய்வது ஆகியவை அடங்கும். Snapchat-இல் பொருத்தமான வர்த்தக மற்றும் விளம்பர நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலுக்கு இந்த வளத்தை ஆலோசிக்க வணிகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

சட்டத்தைப் மீறும் மற்றும் Snapchat பயனர்களின் பாதுகாப்புக்கு தீவிர ஆபத்து விளைவிக்கும் ஆன்லைன் நடத்தை மற்றும் நடவடிக்கைகளின் வகைகள் குறித்து இயன்றவரை அதிகத் தகவலை Snapchat பயனர்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இலாப நோக்கமற்ற நிறுவனங்களுடனான கூட்டணி மற்றும் பல்வேறு பாதுகாப்பு பங்குதாரர்களுடன் இணைவதன் மூலம் அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் Snapchat பயனர்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதில் அடங்குவது, உங்களுக்காக இங்கு மற்றும் ஹெட்ஸ் அப் போன்ற செயலியின் உள் உள்ள வளங்கள் மற்றும் விளம்பர கவுன்சில் மற்றும் வெள்ளை மாளிகை போன்ற பங்குதாரர்களுடன் வெளிப்புற கூட்டணி. குற்றத்திற்கான ஆதாரங்களை வழங்கக்கூடிய Snapchat செயல்பாடுகள் தொடர்பான சரியான சட்ட செயல்முறைகளுக்கு பதிலளிக்கும் வகையில் சட்ட அமலாக்க முகவர்களுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.


இந்தக் கொள்கைகளை நாங்கள் எவ்வாறு செயல்படுத்துகிறோம்

சட்டவிரோத அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான எங்களது விதிகளை மீறும் உள்ளடக்கம் அகற்றப்படும். பல சந்தர்ப்பங்களில், மீறும் உள்ளடக்கத்தைப் பகிரும், ஊக்குவிக்கும் அல்லது விநியோகிக்கும் பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்படும் மற்றும் இந்தக் கொள்கைகளை மீண்டும் மீண்டும் மீறும் பயனர் கணக்குகளுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்படும். இருப்பினும், போதைப்பொருள் கடத்தல் அல்லது மனித கடத்தல் போன்ற சில சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளன. இவை குறித்து எங்களுக்கு உண்மையிலேயே துளிகூட சகிப்புத்தன்மை இல்லை; இந்த மீறல்கள் ஒரே ஒரு விதிமீறலைத் தொடர்ந்து கூட கணக்குச் சலுகைகளை இழக்க நேரிடும்.

Snapchat-ஐப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவ ஒரு முக்கியமான வழி எங்கள் செயலியில் உள்ள புகாரளிக்கும் கருவியைப் பயன்படுத்து சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாகப் புகாரளிப்பதாகும். நாங்கள் புகாரைப் பெற்றவுடன் எங்களது நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கள் தீங்கை சரியான முறையில் தீரிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். ஸ்பாட்லைட் மற்றும் Discover போன்ற எங்களின் அதிகம் சென்றடையக்கூடிய அம்சங்களில் உள்ளடக்கத்தை மட்டுப்படுத்தவும் தகவல் இணக்கத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் மிகவும் செயலூக்கமான அணுகுமுறையை மேற்கொள்கிறோம். ஆனால் இவற்றில் நீங்கள் சந்திக்கும் ஏதேனும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் குறித்த பயனர் புகார்களைப் பெறுவது இன்னும் மிகவும் மதிப்புமிக்கது; இந்த இடங்களை சட்டவிரோதமான அல்லது பாதுகாப்பற்ற செயல்பாடுகள் இல்லாமல் வைத்திருப்பதற்காக, எங்கள் செயல்முறைகளில் ஏதேனும் நிலைகுலைவு ஏற்பட்டால், அவை எங்களை எச்கரிக்க உதவுகின்றன.


முக்கிய அம்சம்

பொதுப் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் Snapchat பயனர்களை தீங்கு விளைவிக்கும் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் எங்கள் பங்கை செய்வது நாங்கள் தீவிரமாக கருதும் பொறுப்பாகும்.

இந்த முயற்சிகளை நாங்கள் தொடரும் போது, எங்கள் அணுகுமுறையின் செயல்திறனின் வெளிப்படையாக நுணுக்கங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளின் மூலம், சட்டவிரோத அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக எங்கள் அம்லாக்கங்கள் தொடர்பான நாடு அளவிலான தகவலை வழங்குகிறோம். இந்த முயற்சிகள் தொடர்பாக கூடுதல் நுணுக்கங்களை வழங்க, எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் போதைப்பொருள் தொடர்பான மற்றும் ஆயுதங்கள் தொடர்பான மீறல்களுக்கான எங்கள் அறிக்கை மற்றும் அமலாக்கத் தரவை நாங்கள் விளக்கியுள்ளோம், மேலும் எங்கள் எதிர்கால அறிக்கைகளில் இந்த மீறல்களின் விரிவான முறிவுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

Snapchat அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இடமாக இருக்க உதவும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகளின் நிகழ்வுகளைப் புகாரளிக்குமாறு பயனர்களை ஊக்குவிக்கிறோம். தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அல்லது நடத்தைக்கு தீர்வு காண்பதற்கான எங்கள் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம், மேலும் இந்த நோக்கங்களை நாங்கள் பொறுப்புடன் முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்புச் சமூகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, எங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடவும்.