புதிய ஆராய்ச்சி: 2023 ஆம் ஆண்டில் பதின் பருவத்தினர்களின் இணையச் செயல்பாடுகளைக் கண்காணிப்பது பெற்றோர்களுக்கு கடினமானதாக இருந்தது

பிப்ரவரி 5 2024

பல தலைமுறைகளாக, உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் குழந்தை வளர்ப்பு வெகுமதியளிப்பது மற்றும் மகிழ்ச்சிகரமானது ஆனால் அதே நேரத்தில் சோர்வடையச் செய்வது மற்றும் மன அழுத்தம் தருவது என்று கூறியிருப்பார்கள். டிஜிட்டல் காலத்தில் நுழைந்த பிறகு அந்த சந்தோஷங்கள் மற்றும் சவால்கள் அதிகரிக்க மட்டுமே செய்கின்றன. இன்று, சர்வதேச பாதுகாப்பான இணைய தினத்தன்று, 2023 ஆம் ஆண்டில், பெற்றோர்கள் தங்கள் பதின் பருவத்தினர்களின் இணைய செயல்பாடுகளை பின்தொடர்வது கடினமாக இருப்பதாகவும், பதின் பருவத்தினர் இணையத்தில் பொறுப்புடன் செயல்படுவார்கள் என்பதில் பெற்றோர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் காட்டும் புதிய ஆராய்ச்சியை நாங்கள் வெளியிடுகிறோம். இந்த ஆராய்ச்சி Snapchat மட்டுமல்லாமல் அனைத்து சாதனங்கள் மற்றும் தளங்களிலும் நடத்தப்பட்டது. 

இணையத்தில் தங்கள் பிள்ளைகள் பொறுப்பாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை 2023 ஆம் ஆண்டில் குறைந்துவிட்டதாக எங்களது சமீபத்திய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. 10 பெற்றோர்களில் நான்கு பேர் மட்டுமே (43%) "எனது பிள்ளை இணையத்தில் பொறுப்புடன் நடந்துகொள்வார் மற்றும் அவர்களை தீவிரமாகக் கண்காணிக்கத் தேவையில்லை" என்ற அறிக்கையை ஒப்புக்கொள்கின்றனர். 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இதே போன்ற ஆராய்ச்சியின் 49% இலிருந்து இது ஆறு சதவிகிதம் குறைவாகும். கூடுதலாக, இளைய வயதான பருவத்தினர்களின் ( 13 முதல் 17 வயதினர்) குறைவானவர்களே, அவர்கள் ஒரு இணையத்தில் ஆபத்தை சந்தித்த பிறகு பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடமிருந்து உதவி கேட்கும் சாத்தியம் உள்ளதாகக் கூறினார், இது 2022 ஆம் ஆண்டில் 64% இலிருந்து ஐந்து சதவிகிதம் குறைந்து 59% சதவிகிதமாக உள்ளது.

நெருக்கமான அல்லது பாலுணர்வைத் தூண்டும் படங்களுக்கு தங்கள் பதின் பருவத்தினர்கள் காட்டப்படுவதை 11 சதவிகிதம் குறைமதிப்பிட்டனர் - இந்தக் கேள்வி 2023 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. பதின் பருவத்தினர்களின் ஒட்டுமொத்த இணைய ஆபத்து வெளிப்பாட்டை அளவிடும் பெற்றோர்களின் திறனும் தவறாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில், டிஜிட்டல் அபாய வெளிப்பாடு குறித்து பதின் பருவத்தினர்கள் புகாரளிப்பது மற்றும் பெற்றோர்கள் அதை துல்லியமாக அளவிடுவது இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு இரண்டு சதவீத புள்ளிகள் ஆகும். கடந்த ஆண்டு, அந்த வேறுபாடு மூன்று சதவிகிதம் புள்ளிகளாக அதிகரித்தது. 

இந்த முடிவுகள் Snap நிறுவனத்தின் ஜென் Z இன் டிஜிட்டல் நல்வாழ்வைப் பற்றிய தொடர்ச்சியான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகும், மேலும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் பதின் பருவத்தினர்கள் (வயது 13-17) மற்றும் இளம் பெரியவர்கள் (வயது 18-24) ஆன்லைனில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அளவிடும் எங்கள் வருடாந்திர டிஜிட்டல் நல்வாழ்வு குறியீட்டின் (DWBI) இரண்டாவது அளவீட்டைக் குறிக்கிறது. நாங்கள் 13 முதல் 19 வயது வரையிலான பிள்ளைகளின் பெற்றோர்களிடம் Snapchat மட்டுமல்லாமல் அவர்களின் பதின் பருவத்தினர்கள் பயன்படுத்தும் மற்ற தளம் அல்லது சாதனத்தில் இணைய ஆபத்துகள் பற்றிய அவர்களின் அனுபவங்களை ஆய்வு செய்தோம். இந்த கருத்துக்கணிப்பு ஏப்ரல் 28, 2023 முதல் மே 23, 2023 வரை நடத்தப்பட்டது. மூன்று வயதுவரம்பு மக்கள் மற்றும் ஆறு புவியியல் பகுதிகளில் 9,010 பங்கேற்பாளர்கள் இதில் அடங்குவர். 

சில கூடுதல் உயர் மட்ட கண்டுபிடிப்புகள் இதோ:

  • ஜென் Z பதின் பருவத்தினர்கள் மற்றும் இளைஞர்களில் 78% 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏதோ இணைய ஆபத்தை எதிர்கொண்டதாகக் கூறினர், 2022 ஆம் ஆண்டு 76% இருந்து இரண்டு சதவிகிதம் அதிகரிப்பு.

  • பதிலளித்த ஜென் Z பிள்ளைகளில் 57% அவர்கள் அல்லது அவர்களின் ஒரு நண்பர் கடந்த மூன்று மாதங்களில் நெருக்கமான அல்லது பாலியல் தொடர்பான படங்களில் ஈடுபட்டதாகக் கூறினர். அதாவது அவற்றைப் பெறுவது (48%), பிறர் அவர்களிடம் அவர்களுடையப் படங்களை கேட்டது (44%) அல்லது வேறு ஒருவரின் புகைபடங்கள் அல்லது வீடியோக்களை பகிர்வது அல்லது விநியோகிப்பது (23%). மேலும், பதிலளித்தவர்களில் 33% இந்தப் படங்கள் யாருக்கு அனுப்ப நினைத்தார்களோ அவர்களைத் தாண்டி பரவியதாகக் கூறினர். 

  • பெற்றோர்களில் பாதி பேர் (50%) தங்கள் பதின் பருவத்தினர்களின் இணைய செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க சிறந்த வழிகள் குறித்து அவகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று கூறினர்.   

இரண்டாம் ஆண்டு DWBI 

டிஜிட்டல் நல்வாழ்வுக் குறியீடு 0 மற்றும் 100 க்கு இடையேயான மதிப்பெண்ணை பதிலளிப்பவர் ஒவ்வொருவருக்கும் பற்றுணர்வு அறிக்கைகள் பலவற்றுடன் அவர்கள் ஒப்புதலின் அடிப்படையில் ஒதுக்குகிறது. பின்னர் தனிப்பட்ட பதிலளித்தவர் மதிப்பெண்கள் நாட்டின் மதிப்பெண்கள் மற்றும் ஆறு நாடுகளின் சராசரியை உருவாக்க தொகுக்கப்பட்டுள்ளன. ஆறு புவியியல் மண்டலங்களில், 2023 ஆம் ஆண்டு DWBI 2022 ஆம் ஆண்டு சராசரி அளவீடான 62 ஆக இருந்ததில் இருந்து மாறவில்லை. ஆறு தனிப்பட்ட நாடுகளுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பெற்றோர் ஆதரவு என்ற வலுவான கலாச்சாரத்துடன் இந்தியா 67 இல் அதிக DWBI ஐ பதிவுசெய்துள்ளது, ஆனால் 2022 ஆம் ஆண்டு 68 இலிருந்து ஒரு சதவிகித புள்ளி குறைவு. ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இந்த அனைத்து நாடுகளிலும் முறையே 63, 60, 62 மற்றும் 64 ஆக பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு 60 இலிருந்து பிரான்சும் ஒரு சதவிகிதம் புள்ளி குறைந்து 59-இல் இருக்கிறது. 

இந்த குறியீடு PERNA மாதிரியைப் பயன்படுத்துகிறது, இது தற்போதுள்ள நல்வாழ்வுக் கோட்பாட்டின் மாறுபாடு ஆகும்1இதில் ஐந்து வகைப்பிர்வுகளில் 20 உணர்வு அறிக்கைகள் அடங்கும்: Positive Emotion (நேர்மறை உணர்வு), Engagement(ஈடுபாடு), Relationships(உறவு), Negative Emotion(எதிர்முறை உணர்வு மற்றும் சாதனை (Achievement). எந்த ஒரு சாதனம் அல்லது பயன்பாட்டில் அவர்களின் அனைத்து இணைய அனுபவங்களையும் கருத்தில் கொண்டு - வெறும் Snapchat-இல் மட்டுமல்லாமல் - கடந்த மூன்று மாதங்களில் பதிலளித்தவர்களிடம் 20 அறிக்கைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடன்பாட்டின் அளவை பதிவு செய்யுமாறு கேட்கப்பட்டது. உதாரணமாக, நேர்மறை உணர்வுப் பிரிவின் கீழ் அறிக்கைகளில் உள்ளடங்குபவை: "பெரும்பாலும் பெருமையாக உணர்ந்தேன்" மற்றும் "பெரும்பாலும் மகிழ்ந்தேன்" மற்றும் சாதனைக் குழுவின் கீழ்: "எனக்கு முக்கியமான விஷய்ங்களை எவ்வாறு செய்வது என்பதை அறிந்து கொண்டேன்." (20 DWBI உணர்வு அறிக்கைகளின் பட்டியலுக்குஇந்த இணைப்பு ஐப் பார்க்கவும்.) 

முடிவுகளில் இருந்து கற்பது

Snap-இல், இந்த மற்றும் பிற ஆராய்ச்சி முடிவுகளை எங்கள் தயாரிப்பு மற்றும் அம்ச வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு உதவ நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறோம், இதில் Snapchat-இன்-குடும்ப மையம் அடங்கும். 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குடும்ப மையம், தங்கள் டீனேஜர்கள் Snapchat-இல் யாருக்கு செய்தியனுப்புகிறார்கள் என்பதன் மீதான சிந்தனையை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு வழங்கும் அதே நேயம் அந்தத் தகவல் தொடர்புகளின் உண்மையான உள்ளடக்கத்தை வெளிப்படுத்தாமல் டீனேஜர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பெற்றோர் கருவிகளின் தொகுப்பாகும். 

குடும்ப மையத்தின் ஆரம்ப பதிப்பில், பெற்றோர்களுக்கு கவலை தரும் கணக்குகளை ரகசியமாகப் புகாரிக்கும் மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை அமைக்கும் திறனையும் கூட வழங்கினோம். கடந்த ஆண்டு குடும்ப மையத்தைப் புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்கு, உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் இயல்பாகவே இயக்கத்தில் இருக்கும் - குழந்தைப் பாதுகாப்பு ஆலோசகர்களிடமிருந்து பெற்ற கருத்தால் தூண்டபட்ட மாற்றம். கடந்த மாதம் கூடுதல் குடும்ப மைய அம்சங்களை நாங்கள் அறிவித்தோம், மேலும் இப்போது பெற்றோர்களுக்கு Snapchat-இன் AI இயக்கும் சாட்பாட்டான My AI அவர்களின் பிள்ளைகளின் அரட்டைகளுக்கு பதில் அளிப்பதை முடக்கும் திறனை நாங்கள் அறிவித்துள்ளோம். குடும்ப மையத்தை பொதுவாகக் கண்டறியும் வசதியையும் நாங்கள் மேம்படுத்தியுள்ளோம், மேலும் பெற்றோருக்கு அவர்களின் பதின் பருவத்தினரின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகளைப் பற்றிய பார்வையை நாங்கள் வழங்குகிறோம். இயல்பாகவே கடுமையான நிலைகளுக்கு அமைக்கப்பட்டு, பெற்றோர்கள் இப்போது தங்கள் பதின் பருவத்தினர்களின் Snapchat கதையை யார் பார்க்க முடியும், யார் அவர்களை தொடர்பு கொள்ளலாம், மற்றும் அவர்களின் பதின் பருவத்தினர்கள் Snap வரைபடத்தில் தங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா என்பது தொடர்பான அமைப்புகளைக் காணலாம்.  

அமெரிக்காவை சார்ந்த பதின் பருவத்தினர்கள்: டிஜிட்டல் நல்வாழ்வுக்கான எங்கள் புதிய கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கவும் 

எங்கள் தொடர்ச்சியான ஆராய்ச்சியை உயிரூட்டம் செய்ய கடந்த மாதம் டிஜிட்டல் நல்வாழ்விற்கான எங்களது முதல் சங்கத்துக்கான விண்ணப்பச் செயல்முறையை நோக்கிய எங்களது முதல் அடியை எடுத்துவைத்தோம். அமெரிக்காவில் இளைஞர்களுக்கான ஒரு சோதனைத் திட்டம் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட 15 இளைஞர்கள் கொண்ட ஒரு குழுவைக் கொண்ட ஒரு தொடக்க சங்கத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். நாம் ஒருவருக்கொருவர் செவிமடுக்கவும், கற்றுக்கொள்வதையும் விரும்புகிறோம், மேலும் Snapchat மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை, நெருங்கிய நண்பர்களுக்கிடையேயான படைப்பாற்றல் மற்றும் இணைப்பிற்கான பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சூழலாக மாற்றுவதைத் தொடர விரும்புகிறோம். விண்ணப்பங்கள் மார்ச் 22 வரை திறந்திருக்கும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு இந்த வசந்த காலத்தில் சங்கத்தில் ஒரு பதவியை வழங்குவோம். 

இந்தத் திட்டத்தில் இடம்பெறுபவை - மாதாந்திர அழைப்புகள், எங்களது உள்களாவிய பாதுகாப்ப ஆலோசனை குழுவுடனான ஈடுபாடு, முதல் ஆண்டில் நேரடி உச்சிமாநாடு மற்றும் பதின் பருவத்தினர்களின் அறிவாற்றல் மற்றும் கற்றலை காட்சிப்படுத்துவது ஆகிய்வை இடம்பெறும். விண்ணப்ப செயல்முறை பற்றி தெரிந்துகொள்ள இந்தப் இடுகையைபார்த்து இங்கே விண்ணப்பிக்கவும்

இந்த இளைஞர் சங்கத்தின் சோதனை ஓட்டத்தை நிறுவ நாங்கள் ஆவலுடன் உள்ளோம், மேலும் அவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பான இணைய தினம் 2025 ஐக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்! இதற்கிடையில், இன்றும் 2024 ஆம் ஆண்டு முழுவது SID-இல் ஈடுபட ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறோம்!   

— ஜாக்குலின் பியூச்சர் (Jacqueline Beauchere), உலகளாவிய தள பாதுகாப்பு தலைவர்

எங்கள் டிஜிட்டல் நல்வாழ்வு ஆராய்ச்சி ஜென் Z இன் இணைய அபாயங்களுக்கு வெளிப்பாடு, அவர்களின் உறவுகள் மற்றும் முந்தைய மாதங்களில் அவர்களின் இணைய செயல்பாடுகள் பற்றிய அவர்களின் பிரதிபலிப்புகள் பற்றிய கண்டுபிடிப்புகளை அளிக்கிறது. ஒரு விலைப்பதிவு இடுகையில் எங்களால் பகிர்ந்து கொள்ள முடிவதைத் தவிர ஆராய்ச்சி செய்ய அதிகம் உள்ளது. டிஜிட்டல் நல்வாழ்வுக் குறியீடு மற்றும் ஆராய்ச்சி பற்றி மேலும் அறிய வலைத்தளம், இந்த புதுப்பிக்கப்பட்ட விளக்கத்தை, ஆறு நாடுகளின் முழு ஆராய்ச்சி முடிவுகள்,மேலும் ஆறு நாடுகளின் தகவல் குறிப்பு: ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஐக்கிய ராச்சியம் மற்றும் அமெரிக்கா.

செய்திக்குத் திரும்புக
1 தற்போதைய ஆராய்ச்சி கோட்பாடு PERMA மாடல் ஆகும், அது பின்வருமாறு: நேர்மறை உணர்வுகள் (P), ஈடுபாடு (E), உறவுகள் (R), அர்த்தம் (M) மற்றும் நிறைவேற்றம் (A).