டிஜிட்டல் நல்வாழ்வுக்கான Snap இன் முதல் கவுன்சிலுக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன!
9 ஜனவரி 2024
டிஜிட்டல் நல்வாழ்வுக்கான Snap இன் முதல் கவுன்சிலுக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன!
9 ஜனவரி 2024
அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள்! ஆன்லைன் பாதுகாப்புப் பிரச்சினைகள், ஆன்லைன் வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று முதல், Snap ஆனது 13 முதல் 16 வயதுக்குட்பட்ட அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கான 18 மாத தொடக்க திட்டமான டிஜிட்டல் நல்வாழ்வுக்கான எங்கள் முதல் கவுன்சிலுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது.
Gen Z ஆனது டிஜிட்டல் முறையில் ஈடுபட்டுள்ளது, அறிவார்ந்தது மற்றும் வளம் மிக்கது, மேலும் Snap-இல் உள்ள நாங்கள் ஆன்லைனில் செழித்து வருவதற்கும் வலுவான டிஜிட்டல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உத்திகளில் ஆர்வமாக உள்ளோம். Snapchat-ஐ தொடர்ந்து பாதுகாப்பான, ஆரோக்கியமான, படைப்பாற்றல் நிறைந்த மற்றும் நண்பர்களுடன் இணைவதற்கான மிகவும் சுவாரஸ்யமான இடமாக மாற்றுவதற்கான அவர்களின் யோசனைகளைக் கேட்கவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆன்லைனில் இருப்பது மிகவும் உண்மையான ஆபத்துகளை ஏற்படுத்தலாம் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் அந்த அபாயங்களைக் குறைக்க உதவுவதற்கு இளைஞர்கள் அவற்றைப் புரிந்துகொள்வதையும், அடையாளம் அறிவதையும், திறன்களைக் கொண்டிருப்பதையும் உறுதிசெய்ய விரும்புகிறோம். அதனால்தான் இந்தக் கவுன்சிலை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்: நாடு முழுவதும் உள்ள பதின்ம வயதினரிடமிருந்து இன்று ஆன்லைன் வாழ்க்கை நிலை குறித்தும், மேலும் நேர்மறையான மற்றும் பலனளிக்கும் அனுபவங்களுக்கான அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் இலட்சியங்களைப் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களையும் பெறுவது.
இத்திட்டமானது மாதாந்திர அழைப்புகள், திட்டப்பணிகள், எங்கள் உலகளாவிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (Safety Advisory Board) உடனான ஈடுபாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த முதல் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் உறுப்பினர்கள் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகாவில் உள்ள Snap-இன் தலைமையகத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்படுவார்கள், மேலும் இரண்டாமாண்டில், கவுன்சில் உறுப்பினர்களை ஈடுபடுத்தி, அவர்களின் அறிவாற்றலையும் கற்றலையும் வெளிப்படுத்துகின்ற ஒரு பொது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
டிஜிட்டல் நல்வாழ்வுக்கான எங்கள் கவுன்சிலில் சேர விண்ணப்பிக்கவும்
அமெரிக்காவில் வசிக்கும் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள பதின்ம வயதினர், இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை மார்ச் 22, வெள்ளிக்கிழமை அன்று வணிக நேரம் முடிவதற்குள் (பசிபிக் நேரம் மாலை 5:00 மணி) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
சில அடிப்படைத் தகவல்களுக்கும் கூடுதலாக, பொதுவான சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் ஆன்லைன் வாழ்க்கை பற்றிய கட்டுரை அல்லது கேள்விகளுக்கான குறுகிய வீடியோ பதில்களையும், அத்துடன் கவுன்சில் அனுபவம் மற்றும் Snapchat செயலி மற்றும் ஒரு நிறுவனமாக Snap பற்றிய பரிச்சயம் மற்றும் கருத்துகளுக்கான எதிர்பார்ப்புகளையும் விண்ணப்பம் கோருகிறது.
முதலான் ஆண்டில் இரண்டு நாள் உச்சிமாநாடு
விண்ணப்ப மீளாய்வுகள் மற்றும் எங்கள் உள்நிறுவனக் குழுவின் தேர்வைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதிலும் இருந்து சுமார் 15 இளைஞர்களை தொடக்கக் குழுவில் சேர அழைப்போம், இது முதலாம் ஆண்டின் போது ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினருக்கும் பெற்றோர், பாதுகாவலர் அல்லது சேப்பரோனுக்கும் எங்கள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் கவுன்சில் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான இரண்டு நாள் பயணத்தில் முடிவடையும். விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் அதனுடன் தொடர்புடைய பயணச் செலவுகளைள Snap ஏற்றுக்கொள்ளும்.
இந்த உச்சிமாநாட்டில் சிறு குழு மற்றும் முழு கவுன்சில் கலந்துரையாடல்கள், பாதுகாவலர்கள் மற்றும் சேப்பரோன்களுக்கான தனி "பெற்றோர் கண்காணிப்பு", விருந்தினர் பேச்சாளர்களுடன் ஊடாடும் அமர்வுகள், Snap தலைவர்களுடன் ஈடுபாடு மற்றும் வேடிக்கை நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். உச்சிமாநாட்டிற்குப் பிறகு, கவுன்சில் உறுப்பினர்களும் அவர்களின் வயதுவந்த ஆதரவாளர்களும் தங்கள் பள்ளிகள் மற்றும் சமூகங்களில் Snapchat-இல் டிஜிட்டல் நல்வாழ்வு மற்றும் நேர்மறையான ஈடுபாட்டிற்கான தூதர்களாகப் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம். கவுன்சில் அல்லது திட்டமிட்ட நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ளவும்: platform-safety@snapchat.com.
பொதுவாக ஆன்லைன் பாதுகாப்பிற்கான Snap-இன் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு பற்றி மேலும் அறிய, தனியுரிமை & பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடவும், மேலும் 6 பிப்ரவரி அன்று பாதுகாப்பான இணையம் தினத்தில் (Safety Internet Day) அமெரிக்காவிலும் மற்ற ஐந்து நாடுகளிலும் வெளியிடப்படும் டிஜிட்டல் நல்வாழ்வு குறித்த சமீபத்திய உலகளாவிய ஆராய்ச்சிக் கட்டுரையைத் தவறாமல் பார்க்கவும். இந்த வசந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் உறுப்பினர்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்!
- ஜாக்குலின் பியூச்சர் (Jacqueline Beauchere), உலகளாவிய தள பாதுகாப்பு தலைவர்