Snapchat-ஐப் பாதுகாப்பானதாக்குவதற்கான எங்கள் பணியின் முக்கியப் பகுதி என்னவென்றால், விசாரணைகளில் உதவுவதற்கான தகவலுக்கான சரியான கோரிக்கைகளை நிறைவேற்ற சட்ட அமலாக்க மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகும். உயிருக்கு உடனடி அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் முன்கூட்டியே புகாரளிக்கவும் நாங்கள் பணியாற்றுகிறோம்.
பெரும்பாலான உள்ளடக்கம் Snapchat இல் இயல்பாக அழிந்துவிடும் என்பதால், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அரசாங்க நிறுவனங்களுக்கு கணக்கு தகவல்களை பாதுகாத்து வழங்க நாங்கள் பணியாற்றுகிறோம். Snapchat கணக்கு பதிவுகளுக்கான சட்டப்பூர்வ கோரிக்கையின் செல்லுபடியை நாங்கள் பெற்று நிறுவியவுடன் — இது ஒரு சட்டபூர்வமான சட்ட அமலாக்க அல்லது அரசாங்க முகமையால் செய்யப்படுவது மற்றும் சர்ச்சைக்குரிய தரப்பினரால் அல்ல என்பதை உறுதிசெய்தல் முக்கியம் — பொருந்தும் சட்டம் மற்றும் தனியுரிமை தேவைகளுக்கு இணங்க நாங்கள் பதிலளிப்போம்.
கீழேயுள்ள அட்டவணை சட்ட அமலாக்க மற்றும் அரசாங்க நிறுவனங்களிலிருந்து நாங்கள் ஆதரிக்கும் கோரிக்கைகளின் வகைகளை விவரிக்கிறது, இதில் முறைமன்ற அழைப்பு ஆணை மற்றும் அழைப்பு ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகள், தேடல் உத்தரவுகள் மற்றும் அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கைகள் ஆகியவை அடங்கும்.
அமெரிக்க அரசாங்கத் தகவல் கோரிக்கைகள்
அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிலிருந்து பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.
சர்வதேச அரசாங்கத் தகவல் கோரிக்கைகள்
அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து பயனர் தகவலுக்கான கோரிக்கைகள்.
*“கணக்கு அடையாளங்காட்டிகள்” என்பவை பயனர் தகவல்களைக் கோரும்போது சட்டச் செயல்முறையில் சட்ட அமலாக்கத்தால் குறிப்பிடப்பட்ட அடையாளங்காட்டிகளின்(எ.கா., பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்றவை) எண்ணிக்கையைப் பிரதிபலிக்கிறது. சில சட்டச் செயல்முறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்காட்டிகள் இருக்கலாம். சில நிகழ்வுகளில், ஒற்றைக் கணக்கைப் பல அடையாளங்காட்டிகள் அடையாளம் காட்டலாம். பல கோரிக்கைகளில் ஒற்றை அடையாளங்காட்டிக் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளில், ஒவ்வொரு நிகழ்வும் சேர்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கோரிக்கைகள்
அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சட்டச் செயல்முறைக்கு இணங்க பயனர் தகவலுக்கான கோரிக்கைகள். பின்வருவனவற்றில் தேசியப் பாதுகாப்பு கடிதங்கள் (NSL) மற்றும் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு (FISA) நீதிமன்ற உத்தரவுகள்/வழிகாட்டல்கள் ஆகியவை அடங்கும்.
அரசாங்க உள்ளடக்க அகற்றுதல் கோரிக்கைகள்
எங்கள் சேவை நிபந்தனைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு அரசாங்க நிறுவனம் முன்வைக்கும் கோரிக்கைகளை இந்த வகை அடையாளம் காட்டுகிறது.
குறிப்பு: ஓர் அரசாங்க நிறுவனத்தால் கோரிக்கை வைக்கப்படும்போது எங்கள் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றும்போது நாங்கள் முறையாகக் கண்காணிப்பதில்லை என்றாலும், அது மிகவும் அரிதான நிகழ்வு என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று நம்பும் அதே வேளையில், அது எங்கள் கொள்கைகளை மீறவில்லை என்றால், உலகளாவிய ரீதியில் அதை அகற்றுவதை விட, சாத்தியமாகும் போது புவியியல் ரீதியாக அதன் அணுகலைக் கட்டுப்படுத்த முயல்கிறோம்.
பதிப்புரிமை உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அறிவிப்புகள் (DMCA)
டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்குக் கிடைத்த செல்லுபடியாகும் அகற்றுதல் அறிவிப்புகளை இந்த வகை பிரதிபலிக்கிறது.
வணிகமுத்திரை அறிவிப்புகள்