25 ஏப்ரல் 2024
29 ஆகஸ்ட், 2024
எங்கள் ஐரோப்பிய ஒன்றியம் (EU) வெளிப்படைத்தன்மை பக்கத்திற்கு வரவேற்கிறோம், இங்கு நாங்கள் டிஜிட்டல் சேவைகள் சட்டம் (DSA), ஒலிபரப்புப் பணிகள் தொடர்பான ஊடக சேவை ஆணை (AVMSD), டச்சு ஊடக சட்டம் (DMA), மற்றும் இணைய வழி பயங்கரவாத உள்ளடக்க ஒழுங்குமுறை (TCO) ஆகியவற்றால் தேவைப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறிப்பிட்ட தகவலை நாங்கள் வெளியிடுகிறோம். இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கையின் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அமெரிக்க ஆங்கில மொழியில் காணப்படும் என்பதை நினைவில் கொள்க.
Snap Group Limited, Snap B.V.-ஐ DSA-இன் நோக்கங்களுக்காக அதன் சட்ட பிரதிநிதியாக நியமித்துள்ளது. DSA தொடர்பாக நீங்கள் dsa-enquiries [at] snapchat.com முகவரியில் பிரதிநிதியை தொடர்பு கொள்ளலாம், AVMSD மற்றும் DMA தொடர்பாக vsp-enquiries [at] snapchat.com முகவரியிலும், TCO தொடர்பாக tco-enquiries [at] snapchat.com முகவரியிலும், எங்கள் ஆதரவு தளத்தின் மூலம் [ இங்கு ],அல்லது கீழே கொடுக்கப்பட்ட முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்:
Snap B.V.
B.V.Keizersgracht 165, 1016 DP
ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
நீங்கள் சட்ட அமலாக்க முகமை எனில் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள படிகளைப் பின்தொடர்க.
எங்களைத் தொடர்புகொள்ளும் போது ஆங்கிலம் அல்லது டச்சில் தொடர்பு கொள்ளவும்.
DSA-க்கு நாங்கள் ஐரோப்பிய கமிஷன் மற்றும் தி நெதர்லாண்ட்ஸ் ஆதாரிட்டி ஃபார் கன்ஸூமர்ஸ் அண்ட் மார்க்கெட்ஸ் (ACM) ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகிறோம். AVMSD மற்றும் DMA ஆகியவற்றுக்கு நாங்கள் டச்சு மீடியா ஆணையத்தால் (CvdM)-ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறோம். TCO தொடர்பாக, நாங்கள் நெதர்லாந்து இணையதள பயங்கரவாத உள்ளடக்கம் மற்றும் குழந்தைகள் பாலியல் சூறைச் செயல்கள் தடுப்பு ஆணையத்தின் (ATKM) கட்டுப்பாட்டில் இருக்கிறோம்.
"ஆன்லைன் தளங்கள்" என்று கருதப்படும்அதாவது ஸ்பாட்லைட், உங்களுக்காக, பொது
சுயவிவரப் பக்கங்கள், வரைபடங்கள், லென்ஸ்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஆகியவை Snapchat இன் சேவைகளுக்கான Snap இன் உள்ளடக்க மட்டுப்படுத்துதல் தொடர்பான பரிந்துரைக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட அறிக்கைகளை வெளியிட, DSA இன் விதிப்பிரிவுகள் 15, 24 மற்றும் 42 மூலம் தேவைப்படுகிறது. இந்த அறிக்கை 25 அக்டோபர் 2023 அன்றிலிருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட வேண்டும்.
Snap-இன் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் எங்கள் தளத்தில் புகாரளிக்கப்படும் உள்ளடக்கத்தின் இயல்பு மற்றும் அளவு பற்றிய சிந்தனைகளை வழங்க Snap வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை ஆண்டிற்கு இருமுறை வெளியிடுகிறது. எங்கள் 2023 H2 அறிக்கையை (ஜூலை 1 - டிசம்பர் 31) இங்கே காணலாம் (2024 ஆகஸ்ட் 1 நிலவரப்படி எங்கள் சராசரி மாத செயல்பாட்டு பயனர் எண்ணிக்கைகள் பற்றிய புதுப்பிப்புகளுடன் — இந்த பக்கத்தின் கீழே காணலாம்). டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் குறிப்பிட்ட அளவீடுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்.
31 டிசம்பர் 2023 நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்கள் Snapchat செயலியில் 90.9 மில்லியன் சராசரி மாதாந்திர செயலில் உள்ள பெறுநர்கள் எங்களுக்கு உள்ளனர். இதன் அர்த்தம், கடந்த 6 மாதங்களில் சராசரியாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவுசெய்யப்பட்ட 90.9 மில்லியன் பயனர்கள் ஒருமுறையாவது Snapchat செயலியைத் திறந்துள்ளனர்.
உறுப்பினர் நாடு அடிப்படையில் இந்த எண்ணிக்கை பின்வருமாறு பிரிக்கப்படுகிறது:
இந்த புள்ளிவிவரங்கள் தற்போதைய DSA விதிகளை பூர்த்தி செய்ய கணக்கிடப்பட்டன, மேலும் DSA நோக்கங்களுக்காக மட்டுமே இவற்றைச் சார்ந்திருக்க வேண்டும். மாறும் உள்ளார்ந்த கொள்கை, ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப காலப்போக்கில் இந்தப் புள்ளிவிவரங்களைக் கணக்கிடும் முறையை நாங்கள் மாற்றியுள்ளோம், வெவ்வேறு காலப்பகுதிகளுக்கு இடையேயான புள்ளிவிவரங்களை ஒப்பிடுவது இதன் நோக்கமல்ல. இது பிற நோக்கங்களுக்காக நாங்கள் வெளியிடும் மற்ற செயலில் உள்ள பயனர் புள்ளிவிவரங்களுக்காக பயன்படுத்தப்படும் கணக்கீடுகளிலிருந்து வேறுபடலாம்.
அகற்றுதல் கோரிக்கைகள்
இந்த காலகட்டத்தில், DSA விதி 9இன் படி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்து 0 அகற்றுதல் கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம்.
தகவல் கோரிக்கைகள்
இந்த காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடமிருந்து பின்வரும் தகவல் கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம்:
தகவல் கோரிக்கைகளின் ரசீது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கான சராசரி செயல்பாட்டு நேரம் 0 நிமிடங்கள் — ரசீதை உறுதிப்படுத்தும் தானியங்கி பதிலை நாங்கள் வழங்குகிறோம். தகவல் கோரிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான சராசரி செயல்பாட்டு நேரம் ~10 நாட்கள் ஆகும். இந்த அளவீடு Snap ஒரு IR ஐப் பெற்றதிலிருந்து கோரிக்கை முழுமையாகத் தீர்க்கப்பட்டது என்று Snap நம்பும் நேரம் வரையிலான கால அளவைப் பிரதிபலிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், இந்தச் செயல்முறையின் காலம் Snap -இலிருந்து அவர்களின் கோரிக்கையைச் செயலாக்குவதற்குத் தேவையான தெளிவுபடுத்தலுக்கான ஏதேனும் கோரிக்கைகளுக்கு சட்ட அமலாக்கங்கள் பதிலளிக்கும் வேகத்தைப் பொறுத்தது.
Snapchat-இல் உள்ள அனைத்து உள்ளடக்கமும் எங்களது சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை நிபந்தனைகள் மற்றும் ஆதரிக்கும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் விளக்கங்களுக்கு இணங்க வேண்டும். முன்கூட்டிய கண்டறிதல் வழிமுறைகள் மற்றும் சட்டவிரோத அல்லது மீறும் உள்ளடக்கம் அல்லது கணக்குகள் பற்றிய அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யத் தூண்டும், அதே நேரத்தில், எங்கள் கருவி அமைப்புகள் கோரிக்கையைச் செயல்படுத்துகின்றன, தொடர்புடைய மெட்டாடேட்டாவைச் சேகரிக்கின்றன, மேலும் எங்கள் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு பொருத்தமான உள்ளடக்கத்தை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட பயனுள்ள மற்றும் திறமையான ஆய்வு செயல்பாடுகளை எளிதாக்கும் பயனர் இடைமுகம் வழியாக அனுப்புகின்றன. எங்களது இடையீட்டுக் குழுக்கள் மனித மதிப்பாய்வி மூலமோ அல்லது தானியிங்கி முறைகள் மூலமோ ஒரு பயனர் எங்கள் விதிமுறைகளை மீறியதாக தீர்மானிக்கும்போது, நாங்கள் புண்படுத்தும் உள்ளடக்கதை நீக்கலாம் அல்லது கணக்கை நிறுத்தலாம் அல்லது தொடர்புடைய கணக்கின் தெரிவுநிலையைக் குறைக்கலாம் மற்றும்/அல்லது எங்கள் Snapchat இடையீடு, அமலாக்கம் மற்றும் முறையீடுகள் விளக்கத்தில் விளக்கப்பட்டுள்ளவாறு சட்ட அமலாக்கத்திற்குத் தெரியப்படுத்தலாம். சமூக வழிகாட்டுதல்கள் மீறல்களுக்காக எங்கள் பாதுகாப்புக் குழுவால் பூட்டப்பட்ட கணக்குகளின் பயனர்கள் பூட்டப்பட்ட கணக்கு முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம் மற்றும் பயனர்கள் குறிப்பிட்டஉள்ளடக்க அமலாக்கங்களை முறையீடு செய்யலாம்.
உள்ளடக்கம் மற்றும் கணக்கு அறிவிப்புகள் (DSA விதி 15.1(b))
எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை நிபந்தனைகளை தளத்தில் மீறும் உள்ளடக்கம் மற்றும் கணக்குகள் குறித்து பயனர்கள் மற்றும் பயனர்கள் அல்லாதவர்கள் Snapக்கு தெரிவிக்க அனுமதிக்கும் வழிமுறைகளை Snap உருவாக்கியுள்ளது, இதில் DSA விதி 16இன் படி சட்டவிரோதமானது என அவர்கள் கருதுபவையும் அடங்கும். இந்த புகாரளித்தல் வழிமுறைகள் செயலியினுள்ளும் (அதாவது உள்ளடக்கத்திலிருந்து நேரடியாக) மற்றும் எங்கள் இணையதளத்திலும் கிடைக்கின்றன.
தொடர்புடைய காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பின்வரும் உள்ளடக்கம் மற்றும் கணக்கு அறிவிப்புகளை நாங்கள் பெற்றோம்:
In H2’23, we handled 664,896 notices solely via automated means. All of these were enforced against our Community Guidelines because our Community Guidelines encapsulate illegal content.
In addition to user-generated content and accounts, we moderate advertisements if they violate our platform policies. Below are the total ads that were reported and removed in the EU.
நம்பகமான ஃபிளாகர்கள் அறிவிப்புகள் (விதி 15.1(b))
எங்கள் சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கை (H2 2023) காலத்திற்கு, DSA-இன் கீழ் முறையாக நியமிக்கப்பட்ட நம்பகமான ஃபிளாகர்கள் எவரும் இல்லை. இதன் விளைவாக, இந்த காலத்தில் அத்தகைய நம்பகமான ஃபிளாகர்கள் சமர்ப்பித்த அறிவிப்புகளின் எண்ணிக்கை பூஜ்யம் (0) ஆகும்.
முன்கூட்டிய உள்ளடக்க நெறிப்படுத்தல் (விதி 15.1(c))
தொடர்புடைய காலகட்டத்தில், Snap அதன் சொந்த முயற்சியில் உள்ளடக்க நெறிப்படுத்தலில் ஈடுபட்ட பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் பின்வரும் உள்ளடக்கம் மற்றும் கணக்குகளை அமல்படுத்தியது:
Snap இன் சொந்த முன்முயற்சி நெறிப்படுத்தல் முயற்சிகள் அனைத்தும் மனிதர்களையோ அல்லது ஆட்டோமேஷனையோ பயன்படுத்துகின்றன. எங்கள் பொது உள்ளடக்கம் பிறப்புகளில், உள்ளடக்கம் பரவலான பார்வையாளர்களுக்கு விநியோக்கிக்கத் தகுதி பெறும் முன் பொதுவாக தானியங்கி இடையீடு மற்றும் மனித மதிப்பாய்வு இரண்டையும் கடக்கிறது. தானியங்கு கருவிகளைப் பொறுத்தவரை, பின்வருவன அடங்கும்:
இயந்திர கற்றலைப் பயன்படுத்தி சட்டவிரோத மற்றும் மீறும் உள்ளடக்கத்தினை முன்கூட்டியே கண்டறிதல்;
ஹாஷ்-மேட்சிங் கருவிகள் (PhotoDNA மற்றும் Googleஇன் CSAI Match போன்றவை);
ஈமோஜிக்கள் உள்ளிட்ட நிந்திக்கும் முக்கிய வார்த்தைகளின் அடையாளம் காணப்பட்ட மற்றும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட பட்டியலை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கத்தை நிராகரிக்க நிந்திக்கும் மொழி கண்டறிதல்.
முறையீடுகள் (விதி 15.1(d))
தொடர்புடைய காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் உள் புகார் கையாளுதல் அமைப்புகள் மூலம் பின்வரும் உள்ளடக்கம் மற்றும் கணக்கு முறையீடுகளை Snap செயலாக்கியது:
* குழந்தைகளைப் பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துவதே முதன்மையானது. Snap குறிப்பிடத்தக்க ஆதாரங்களை இதற்காக ஒதுக்குகிறது மற்றும் அத்தகைய நடத்தைக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. CSE மேல்முறையீடுகளை மீளாய்வு செய்ய சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது, மேலும் உள்ளடக்கத்தின் கிராஃபிக் தன்மை காரணமாக இந்த மீளாய்வுகளைக் கையாளும் முகவர்களின் வரையறுக்கப்பட்ட குழு உள்ளது. 2023 இலையுதிர் காலத்தில், சில CSE அமலாக்கங்களின் நிலைத்தன்மையை பாதிக்கின்ற கொள்கை மாற்றங்களை Snap நடைமுறைப்படுத்தியது, மேலும் முகவர் மறு-பயிற்சி மற்றும் கடுமையான தர உத்தரவாதம் மூலம் இந்த முரண்பாடுகளை நாங்கள் நிவர்த்தி செய்துள்ளோம். அடுத்த வெளிப்படைத்தன்மை அறிக்கை CSE மேல்முறையீடுகளுக்கான பதில்வினையாற்றும் நேரங்களை மேம்படுத்துதல் மற்றும் ஆரம்பக்கட்ட அமலாக்கங்களின் துல்லியத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
உள்ளடக்க மதிப்பீட்டிற்கான தானியங்கு வழிமுறைகள் (கட்டுரை) 15.1(e))
எங்கள் பொது உள்ளடக்கம் பிறப்புகளில், உள்ளடக்கம் பரவலான பார்வையாளர்களுக்கு விநியோக்கிக்கத் தகுதி பெறும் முன் பொதுவாக தானியங்கி இடையீடு மற்றும் மனித மதிப்பாய்வு இரண்டையும் கடக்கிறது. தானியங்கு கருவிகளைப் பொறுத்தவரை, பின்வருவன அடங்கும்:
இயந்திர கற்றலைப் பயன்படுத்தி சட்டவிரோத மற்றும் மீறும் உள்ளடக்கத்தினை முன்கூட்டியே கண்டறிதல்;
ஹாஷ்-மேட்சிங் கருவிகள் (PhotoDNA மற்றும் Google’s CSAI Match போன்றவை);
ஈமோஜிக்கள் உள்ளிட்ட நிந்திக்கும் முக்கிய வார்த்தைகளின் அடையாளம் காணப்பட்ட மற்றும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட பட்டியலை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கத்தை நிராகரிக்க நிந்திக்கும் மொழி கண்டறிதல்.
அனைத்து தீங்குகளுக்கும் தானியங்கி மட்டுப்படுத்தல் தொழில்நுட்பங்களின் துல்லியமானது சுமார் 96.61% ஆகவும், பிழை விகிதம் சுமார் 3.39% ஆகவும் இருந்தது.
தன்னியக்க மற்றும் மனித மதிப்பீட்டாளர் சார்பு மற்றும் அரசாங்கங்கள், அரசியல் தொகுதிகள் அல்லது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தனிநபர்கள் உள்ளிட்டவர்களால் செய்யப்படும் தவறான அறிக்கைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரத்திற்கான ஆபத்துகள் உட்பட உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்புடைய அபாயங்கள் இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். Snapchat பொதுவாக அரசியல் அல்லது ஆர்வலர் உள்ளடக்கத்திற்கான இடமல்ல, குறிப்பாக நமது பொது இடங்களில்.
ஆயினும்கூட, இந்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கு, Snap-இல் சோதனை மற்றும் பயிற்சி உள்ளது, மேலும் அது சட்ட அமலாக்க மற்றும் அரசாங்க ஆணையங்கள் உட்பட சட்டவிரோத அல்லது விதிமீறும் உள்ளடக்கத்தின் அறிக்கைகளைக் கையாளுவதற்கு வலுவான, நிலையான நடைமுறைகளைக் கொண்டுள்ளது. எங்களின் உள்ளடக்க அளவீட்டு அல்காரிதங்களை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து மேம்படுத்துகிறோம். கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவது கடினம் என்றாலும், குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது, மேலும் எங்கள் பயனர்கள் தவறுகள் ஏற்பட்டால் அதைப் புகாரளிப்பதற்கான வழிகளை நாங்கள் வழங்குகிறோம்.
எங்கள் கொள்கைகள் மற்றும் அமைப்புகள் நிலையான மற்றும் நியாயமான அமலாக்கத்தை ஊக்குவிக்கின்றன, மேலும் அவை மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, தனிப்பட்ட Snapchatter உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் எங்கள் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அறிவிப்பு மற்றும் மேல்முறையீட்டு செயல்முறைகள் மூலம் அமலாக்க இறுதிவிளைவுகளை அர்த்தமுள்ள வகையில் மறுப்பதற்கான வாய்ப்பை Snapchatter-களுக்கு வழங்குகிறது.
எங்கள் அமலாக்கக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம், மேலும் Snapchat-இல் தீங்கு விளைவிக்கின்ற மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கம் மற்றும் செயல்பாடுகளை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இது எங்களின் சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் காட்டப்பட்டுள்ள எங்கள் அறிக்கையிடல் மற்றும் அமலாக்கப் புள்ளிவிவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த Snapchat-இல் விதிமீறல்களின் பரவல் விகிதங்கள் குறைவதில் உள்ள மேல்நோக்கிய போக்கில் பிரதிபலிக்கிறது.
எங்கள் சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கை (H2 2023) காலத்திற்கு, DSA-இன் கீழ் நீதிமன்றத்திற்கு வெளியே சர்ச்சைத் தீர்வு அமைப்புகள் எதுவும் முறையாக நியமிக்கப்படவில்லை. இதன் விளைவாக, இந்தக் காலக்கட்டத்தில் அத்தகைய அமைப்புகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட சர்ச்சைகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக (0) இருந்தது, மேலும் எங்களால் இறுதிமுடிவுகளை, தீர்வுகளுக்கான சராசரி திருப்ப நேரங்களை மற்றும் அமைப்பின் முடிவுகளை நாங்கள் நடைமுறைப்படுத்திய சர்ச்சைகளின் பங்கை எங்களால் வழங்க முடியவில்லை.
H2 2023-இன் போது, விதி 23-இன்படி நாங்கள் கணக்கு இடைநிறுத்தங்கள் எதையும் விதிக்கவில்லை. Snap-இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவானது, வெளிப்படையான ஆதாரமற்ற அறிவிப்புகளையோ புகார்களையோ பயனர் கணக்குகள் அடிக்கடிச் சமர்ப்பிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளைக் கொண்டுள்ளது. இந்த நடைமுறைகளில் நகல் அறிக்கை உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வேண்டுமென்றே தொடர்ந்து ஆதாரமற்ற அறிக்கைகளை அடிக்கடி சமர்ப்பித்த பயனர்களைத் தடுப்பதற்கு மின்னஞ்சல் வடிப்பான்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். எங்கள் Snapchat மதிப்பீடு, அமலாக்கம் மற்றும் மேல்முறையீடுகள் விளக்கியில் விளக்கப்பட்டுள்ளபடி கணக்குகளுக்கு எதிராக Snap பொருத்தமான அமலாக்க நடவடிக்கை எடுக்கிறது மற்றும் Snap-இன் கணக்கு அமலாக்கத்தின் நிலை பற்றிய தகவலை எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் (H2 2023) காணலாம். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படும் மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்படும்.
எங்களது உள்ளடக்கத்தை மட்டுப்படுத்தும் குழு உலகம் முழுவது இயங்கி, Snapchat பயனர்களை 24x7 பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. கீழே, 31 டிசம்பர் 2023 நிலவரப்படி மதிப்பீட்டாளர்களின் மொழி நிபுணத்துவங்களால் (சில மதிப்பீட்டாளர்கள் பல மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்) எங்கள் மனித மதிப்பீட்டு வளங்களின் பிரிவுகளைக் கீழே காணலாம்:
மேலே உள்ள அட்டவணை டிசம்பர் 31, 2023 நிலவரப்படி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு மொழிகளுக்கு ஆதரவளிக்கும் அனைத்து நெறிப்படுத்துநர்களையும் உள்ளடக்கியது. எங்களுக்குக் கூடுதல் மொழி ஆதரவு தேவைப்படும் சூழ்நிலைகளில், நாங்கள் மொழிபெயர்ப்புச் சேவைகளைப் பயன்படுத்துகிறோம்.
வேலையின் நிலையான விவரங்களைப் பயன்படுத்தி நெறியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர், இதில் (தேவையைப் பொறுத்து) மொழியை அறிந்திருக்க வேண்டிய தேவையும் அடங்கும். மொழித் தேவை என்பது பின்வருமாறு விளக்கப்படுகிறது, வேலைக்கு விண்ணப்பிப்பவர் அந்தந்த மொழியில் பேச்சுத் திறனையும் எழுத்துத் திறனையும் வெளிப்படுத்த வேண்டும், ஆரம்ப நிலைப் பணிகளில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிக்குக் கருதப்பட வேண்டுமெனில் விண்ணப்பதாரர்கள் கல்வி மற்றும் பின்னணி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் உள்ளடக்க நெறிப்படுத்தல் ஆதரவு வழங்க உள்ள நாட்டில் அல்லது பிராந்தியத்தில் நிலவும் நடப்பு நிகழ்வுகளைப் பற்றிய புரிதலையும் வெளிப்படுத்த வேண்டும்.
எங்கள் Snapchat சமூகத்தைப் பாதுகாக்க உதவும் எங்கள் கொள்கைகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை எங்கள் நெறிப்படுத்தல் குழு பயன்படுத்துகிறது. பல வார காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, இதில் புதிய குழு உறுப்பினர்களுக்கு Snapஇன் கொள்கைகள், கருவிகள் மற்றும் மேலெடுத்துச் செல்லும் செயல்முறைகளைப் பற்றி பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு, ஒவ்வொரு நெறியாளரும் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எங்கள் நெறிப்படுத்தல் குழு தங்கள் பணிச்சூழலுக்குப் பொருத்தமான புத்தாக்கப் பயிற்சியில் வழக்கமாக பங்கேற்கின்றது, குறிப்பாக நாங்கள் கொள்கை-சார்ந்த மற்றும் சூழலைப் பொறுத்த நேர்வுகளை எதிர்கொள்ளும்போது இவற்றில் ஈடுபடுகின்றனர். அனைத்து நெறியாளர்களும் நடப்பிலுள்ள மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளுக்கு இணங்குகின்றனர் என்பதை உறுதிசெய்ய நாங்கள் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், சான்றிதழ் பயிற்சிகள், தேர்வுகள் போன்றவற்றையும் நடத்துகிறோம். இறுதியாக, நடப்பு நிகழ்வுகளின் அடிப்படையில் அவசரமான உள்ளடக்கப் போக்குகள் ஏற்படும்போது, கொள்கைத் தெளிவுபடுத்தல்களை நாங்கள் விரைவாகப் பகிர்கிறோம், எனவே இக்குழுக்கள் Snapஇன் கொள்கைகளுக்கு ஏற்ப அவற்றை எதிர்கொள்ள முடியும்.
எங்கள் உள்ளடக்க நெறியாளர் குழுவுக்கு நாங்கள் – Snapஇன் “டிஜிட்டல் முதன்மை பணியாளர்கள்” – குறிப்பிடத்தக்க ஆதரவு மற்றும் ஆதாரங்களை வழங்குகிறோம், இதில் பணிக்கால நல்வாழ்வு மற்றும் மனநல சேவைகளுக்கான எளிதான அணுகல் அடங்கும்.
பின்னணி
எங்கள் சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரையும், குறிப்பாக சிறார்களை பாலியல் சுரண்டல் செய்வது சட்டவிரோதமானது, வெறுக்கத்தக்கது மற்றும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களால் தடைசெய்யப்பட்டுள்ளது. எங்கள் தளத்தில் சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் துன்புறுத்தலை (CSEA) தடுப்பது, கண்டறிவது, ஒழிப்பது Snapஇன் முதன்மை இலக்காகும், இவற்றையும் பிற வகைக் குற்றங்களையும் எதிர்ப்பதற்கான எங்கள் திறன்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துகிறோம்.
சிறார் பாலியல் துன்புறுத்தல் பற்றிய படங்கள், வீடியோக்களை அடையாளம் காண்பதற்காக முறையே வலுவான ஹேஷ் பொருத்த நுட்பமான PhotoDNA மற்றும் Googleஇன் சிறார் பாலியல் துன்புறுத்தல் இமேஜரிகளை (CSAI) நாங்கள் பயன்படுத்துகிறோம், சட்டத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைக் காணாமல் போன மற்றும் சுரண்டலுக்குள்ளான சிறார்களுக்கான அமெரிக்க தேசிய மையத்திற்கு (NCMEC) புகாரளிக்கிறோம். NCMEC பின்னர், தேவைக்கேற்ப, உள்நாட்டு அல்லது சர்வதேச சட்ட அமலாக்கத்துடன் ஒருங்கிணைகிறது.
அறிக்கை
கீழே உள்ள தரவு PhotoDNA அல்லது CSAI பொருத்தத்தைப் பயன்படுத்தி பயனரின் கேமரா ரோலில் இருந்து Snapchatக்குப் பதிவேற்றப்பட்ட ஊடகங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்ததன் மூலம் கிடைத்த முடிவை அடிப்படையாகக் கொண்டதாகும்.
குழந்தைகள் பாலியல்ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதே எங்கள் முதல் முன்னரிமை ஆகும். Snap குறிப்பிடத்தக்க ஆதாரங்களை இதற்காக ஒதுக்குகிறது மற்றும் அத்தகைய நடத்தைக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. CSE மேல்முறையீடுகளை மீளாய்வு செய்ய சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது, மேலும் உள்ளடக்கத்தின் கிராஃபிக் தன்மை காரணமாக இந்த மீளாய்வுகளைக் கையாளும் முகவர்களின் வரையறுக்கப்பட்ட குழு உள்ளது. 2023 இலையுதிர் காலத்தில், சில CSE அமலாக்கங்களின் நிலைத்தன்மையை பாதிக்கின்ற கொள்கை மாற்றங்களை Snap நடைமுறைப்படுத்தியது, மேலும் முகவர் மறு-பயிற்சி மற்றும் கடுமையான தர உத்தரவாதம் மூலம் இந்த முரண்பாடுகளை நாங்கள் நிவர்த்தி செய்துள்ளோம். அடுத்த வெளிப்படைத்தன்மை அறிக்கை CSE மேல்முறையீடுக்கான பதிலளிப்பு நேரத்தை மேம்படுத்துதல், ஆரம்பகட்ட அமலாக்கங்களின் துல்லியத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்.
உள்ளடக்க நெறிப்படுத்தல் பாதுகாப்புகள்
CSEA ஊடக ஸ்கேனிங்கிற்காகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்புகள் மேலே எங்கள் DSA அறிக்கையின் "உள்ளடக்க நெறிப்படுத்தல் பாதுகாப்புகள்" பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டது: ஜூன் 17, 2024
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: ஜூன் 17, 2024
இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கை, பயங்கரவாத உள்ளடக்கம் ஆன்லைன் பகிர்வு (ஒழுங்குபடுத்தல்) தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் ஒழுங்குமுறை 2021/784 இன் விதிகள் 7(2) மற்றும் 7(3)க்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ளது. இது ஜனவரி 1 - டிசம்பர் 31, 2023 அறிக்கைக் காலகட்டத்திற்கானதாகும்.
விதி 7(3)(a): பயங்கரவாத உள்ளடக்கத்தை அடையாளம் காணுதல் மற்றும் அகற்றுதல் அல்லது முடக்குதல் தொடர்பான ஹோஸ்டிங் சேவை வழங்குநரின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்
விதி 7(3)(b): குறிப்பாகத் தானியங்குக் கருவிகளைப் பயன்படுத்தி பயங்கரவாத உள்ளடக்கமாகக் கருதப்பட்டு இதற்கு முன்னர் நீக்கப்பட்ட அல்லது அணுகல் முடக்கப்பட்டவை ஆன்லைனில் மீண்டும் தோன்றுவதைக் கையாளுவதற்கு ஹோஸ்டிங் சேவை வழங்குநர் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்
பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள், வன்முறையாளர்கள் ஆகியோர் Snapchatஐப் பயன்படுத்துவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் அல்லது பிற வன்முறை, குற்றச் செயல்களைப் பரப்பும், ஊக்குவிக்கும், புனிதப்படுத்தும் அல்லது முன்னெடுக்கும் உள்ளடக்கங்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ளன. பயனர்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை எங்கள் செயலியில் மற்றும் எங்கள் ஆதரவுத் தளத்தில் உள்ள புகாரளித்தல் மெனுவின் மூலம் புகாரளிக்க முடியும். ஸ்பாட்லைட் மற்றும் Discover போன்ற எங்கள் பொதுப் பரப்புகளில் மீறல் உள்ளடக்கத்தை அடையாளம் காண்பதற்காக முன்கூட்டியே கண்டறிதலைப் பயன்படுத்துகிறோம்.
மீறல் உள்ளடக்கத்தை நாங்கள் அறிந்துகொண்ட விதத்தைப் பொருட்படுத்தாமல், எங்கள் நம்பிக்கை & பாதுகாப்புக் குழுக்கள் தானியங்கு மற்றும் மனித மதிப்பாய்வின் கலவையைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட உள்ளடக்கத்தை உடனடியாக மதிப்பாய்வு செய்து அமலாக்க முடிவுகளை எடுக்கலாம். அமலாக்க நடவடிக்கைகள் என்பதில் உள்ளடக்கத்தை அகற்றுதல், மீறல் கணக்கிற்கு எச்சரிக்கை விடுதல் அல்லது அதைப் பூட்டுதல், தேவைப்பட்டால் அந்தக் கணக்கைக் சட்ட அமலாக்கத்துறைக்கு அறிக்கையளித்தல் போன்றவை அடங்கும். Snapchat இல் பயங்கரவாத அல்லது பிற வன்முறை உள்ளடக்கம் மீண்டும் தோன்றுவதைத் தடுப்பதற்காக, சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து செயலாற்றுவதுடன் கூடுதலாக மீறல் கணக்குடன் தொடர்புடைய சாதனத்தைத் தடைசெய்தல் மற்றும் மற்றொரு Snapchat கணக்கை உருவாக்குவதிலிருந்து அந்தப் பயனரைத் தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்.
பயங்கரவாத உள்ளடக்கத்தை அடையாளம் காணுதல் மற்றும் அகற்றுதல் தொடர்பான எங்கள் நடவடிக்கைகள் குறித்த கூடுதல் விவரங்களை வெறுப்பு உள்ளடக்கம், பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதம் பற்றிய விளக்கம் மற்றும் நெறிப்படுத்தல், அமலாக்கம் மற்றும் முறையீடுகள் பற்றிய விளக்கம் ஆகியவற்றில் காணலாம்.
விதி 7(3)(c): அகற்றுதல் ஆணைகள் அல்லது குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அகற்றப்பட்ட பயங்கரவாத உருப்படிகள் அல்லது அணுகல் முடக்கப்பட்ட உருப்படிகளின் எண்ணிக்கை, விதி 3(7) இன் முதல் துணைப் பத்தி மற்றும் விதி 3(8) இன் முதல் துணைப் பத்தி ஆகியவற்றின்படி உள்ளடக்கம் அகற்றப்படாத அல்லது அணுகல் முடக்கப்படாத அகற்றுதல் ஆணைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றுக்கான காரணம்
அறிக்கைக் காலத்தில், Snap எந்தவொரு அகற்றுதல் ஆணைகளையும் பெறவில்லை, ஒழுங்குமுறையின் விதி 5இன் படி ஏதேனும் குறிப்பிட்ட நடவடிக்கைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தும் தேவை ஏற்படவில்லை. எனவே, ஒழங்குபடுத்துதல் விதியின் கீழ் அமலாக்க நடவடிக்கையை நாங்கள் எடுக்க வேண்டியதில்லை.
பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாத உள்ளடக்கம் தொடர்பான எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் பயனர் புகார்கள் மற்றும் முன்கூட்டியே கண்டறிதலின் அடிப்படையில் உள்ளடக்கம் மற்றும் கணக்குகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளைப் பின்வரும் அட்டவணை விவரிக்கிறது
விதி 7(3)(d): விதி 10க்கு ஏற்ப ஹோஸ்டிங் சேவை வழங்குநரால் கையாளப்பட்ட புகார்களின் எண்ணிக்கையும் விளைவுகளும்
விதி 7(3)(g): உள்ளடக்க வழங்குநரின் புகாரைத் தொடர்ந்து உள்ளடக்கத்தை அல்லது அதற்கான அணுகலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர் மீட்டமைத்த வழக்குகளின் எண்ணிக்கை
மேலே குறிப்பிட்ட படி அறிக்கைக் காலத்தில் ஒழுங்குமுறை விதியின் கீழ் நாங்கள் அமலாக்க நடவடிக்கை எடுக்கும் தேவை ஏற்படாத காரணத்தால், ஒழுங்குமுறையின் விதி 10இன் கீழ் நாங்கள் எந்தப் புகார்களையும் கையாளவில்லை மற்றும் அது தொடர்பான மீட்டமைத்தல் எதுவும் இல்லை.
EU மற்றும் உலகம் முழுவதும், எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் கீழ் பயங்கரவாதம் மற்றும் வன்முறை உள்ளடக்கத்திற்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது சம்பந்தமான முறையீடுகள் மற்றும் மீட்டமைத்தல் தொடர்பான தகவல்கள் பின்வரும் அட்டவணையில் உள்ளது.
Article 7(3)(e): the number and the outcome of administrative or judicial review proceedings brought by the hosting service provider
Article 7(3)(f): the number of cases in which the hosting service provider was required to reinstate content or access thereto as a result of administrative or judicial review proceedings
As we had no enforcement actions required under the Regulation during the reporting period, as noted above, we had no associated administrative or judicial review proceedings, and we were not required to reinstate content as a result of any such proceedings.
1 ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் 92.4 மில்லியன் சராசரி மாதாந்திர செயலில் உள்ள Snapchat செயலியின் பெறுநர்கள் (“AMAR”) உள்ளனர். இதன் அர்த்தம், கடந்த 6 மாதங்களில் சராசரியாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவுசெய்யப்பட்ட 92.4 மில்லியன் பயனர்கள் ஒருமுறையாவது Snapchat செயலியைத் திறந்துள்ளனர்.
உறுப்பினர் நாடு அடிப்படையில் இந்த எண்ணிக்கை பின்வருமாறு பிரிக்கப்படுகிறது: