Privacy, Safety, and Policy Hub
ஐரோப்பிய ஒன்றியம்
கடைசியாகப் புதுப்பித்தது: 25 ஆகஸ்ட், 2023

எங்களின் ஐரோப்பிய ஒன்றிய (EU) வெளிப்படைத்தன்மை பக்கத்திற்கு வரவேற்கிறோம், இங்கு நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்திற்குத் (DSA) தேவைப்படும் EU சார்ந்த தகவல்களை வெளியிடுகிறோம்.

சராசரி மாதாந்திர செயலில் உள்ள பெறுநர்கள்

1 ஆகஸ்ட் 2023 நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் 102 மில்லியன் சராசரி மாதாந்திர செயலில் உள்ள Snapchat செயலியின் பெறுநர்கள் உள்ளனர். இதன் அர்த்தம், கடந்த 6 மாதங்களில் சராசரியாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவுசெய்யப்பட்ட 102 மில்லியன் பயனர்கள் ஒருமுறையாவது Snapchat செயலியைத் திறந்துள்ளனர்.

தற்போதைய DSAவிதிமுறைகளைப் பூர்த்தி செய்ய இந்த எண் கணக்கிடப்பட்டது மற்றும் DSA நோக்கங்களுக்காக மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். மாறிவரும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்பம் உட்பட, காலப்போக்கில் இந்த எண்ணிக்கையை எவ்வாறு கணக்கிடுகிறோம் என்பதை நாங்கள் மாற்றலாம். நாங்கள் வெளியிடும் பிற செயலில் உள்ள பயனர் புள்ளிவிவரங்களுக்குப் பயன்படுத்தப்படும் கணக்கீடுகளிலிருந்தும் இது வேறுபடலாம்.

சட்டபூர்வ பிரதிநிதி 

Snap Group Limited Snap B.V. -ஐ அதன் சட்டபூர்வ பிரதிநிதியாக நியமித்துள்ளது. நீங்கள் பிரதிநிதியை sa-enquiries [at] snapchat.com-இல் அல்லது இங்கு அல்லது பின்வரும் முகவரியில் தொடர்புகொள்ளலாம்:

Snap B.V.
B.V.Keizersgracht 165, 1016 DP
Amsterdam, நெதர்லாந்து

நீங்கள் சட்ட அமலாக்க முகமை எனில் இங்குகோடிட்டுக் காட்டப்பட்டுள்ள படிகளைப் பின்தொடர்க.

ஒழுங்குமுறை ஆணையம்

DSA க்கு, நாங்கள் ஐரோப்பிய ஆணையம் (EC) மற்றும் Netherlands Authority for Consumers and Markets (ACM) ஆகிவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறோம்.