Snap Values

பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளின் போது சமூகப் பாதுகாப்பை பராமரிப்பதற்கு Snapchat-இன் அணுகுமுறை

ஜூலை 23, 2024

விளையாட்டு மற்றும் ஒற்றுமை உணர்வை நாங்கள் கொண்டாடும் சமயத்தில் இந்த கோடை காலம் ஆற்றல், நட்புணர்ச்சி மற்றும் மறக்கமுடியாத தருணங்களால் நிரப்பும் என்பது உறுதி. ரசிகர்கள் விளையாட்டை அனுபவிக்கும், கொண்டாடும் மற்றும் பார்க்கும் வகையை Snapchat மாற்றுகிறது — அவர்களை விளையாட்டு, அவர்களின் அணிகள், அவர்களுக்கு பிடித்த தடகள வீரர்கள் மற்றும் வீரர்களுக்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்கிறது.

Snap-இல் Snapchat பயனர்கள் தங்களை தடையின்றி வெளிப்படுத்தக்கூடிய,தங்கள் உண்மையான நண்பர்களுடன் தொடர்புகொள்ளக்கூடிய மற்றும் ஈடுபடுத்தும் உள்ளடக்கதின் மூலம் இணைந்து மகிழத் தேவையான பாதுகாப்பான மற்றும் கேளிக்கையான சூழலை வழங்குவது தான் எங்களின் நோக்கமாகும். 

பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் எங்கள் சமூகத்திற்கான நேர்மறையான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் எவ்வாறு உறுதிபூண்டுள்ளோம் என்பதை இன்று நாங்கள் பகிர்கிறோம்:

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு  

  • வடிவமைப்பிலேயே தனியுரிமையும் பாதுகாப்பும். முதலாவது நாளிலிருந்தே, எங்கள் சமூகத்தின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் தயாரிப்புகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். Snapchat என்பது வழக்கமான சமூக ஊடகத்திற்கான ஒரு மாற்றாகும் — இது உங்களின் நண்பர்கள், குடும்பம் மற்றும் உலகத்துடன் உங்கள் உறவை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு காட்சி செய்தியனுப்பல் செயலி ஆகும். Snapchat என்பது வழக்கமான சமூக ஊடகத்திற்கான ஒரு மாற்றாகும்-இது உங்களின் நண்பர்கள், குடும்பம் மற்றும் உலகத்துடன் உங்கள் உறவை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு காட்சி செய்தியனுப்பல் செயலி ஆகும். அதனால்தான் Snapchat திறந்தவுடனேயே உள்ளடக்க ஃபீடுக்கு செல்லாமல் நேரடியாக கேமராவுக்கு சென்று, உண்மையான வாழ்க்கையில் ஏற்கனவே நண்பர்களாக இருப்பவர்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது. நீங்கள் உங்களை வெளிப்படுத்தவும், பின்தொடரலை அதிகரிப்பதற்கான அழுத்தமோ, லைக்குகளுக்கான போட்டியோ இல்லாமல் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் Snapchat உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. 

  • எங்கள் சமூக வழிகாட்டுதல்கள். எங்கள் சமூக வழிகாட்டுதலாகள் Snapchat பயனர்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் சேவைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் அதே வேளையில், பரந்த அளவிலான சுய வெளிப்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் எங்கள் பணியை ஆதரிக்கிறது. இந்த வழிகாட்டுதல்கள் Snapchat உள்ள அனைத்து உள்ளடக்கம் மற்றும் நடத்தை — மற்றும் அனைத்து Snapchat பயனர்களுக்கும் பொருந்தும். 

  • முன்கூட்டிய உள்ளடக்க மட்டுப்படுத்துதல். Snapchat முழுவதும், பரந்த அளவிலான பார்வையாளர்கள் அடையும் மட்டுப்படுத்தப்படாத உள்ளடக்கத்தின் திறனை கட்டுப்படுத்துகிறோம். மேலும் அது பரந்த அளவில் விநியோகிக்கப்படும் முன் எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைத்தல் தகுதிக்கான உள்ளடக்க வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுடன் இணங்குவதை உறுதி செய்கிறோம். பொது இடுகைகளில் உள்ள பொருத்தமற்ற உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய, இயந்திர கற்றல் கருவிகள் மற்றும் உண்மையான நபர்கள் அடங்கிய அர்ப்பணிப்புக் குழுக்கள் உட்பட – எங்களின் பொது உள்ளடக்க வெளிப்பாடுகளை (ஸ்பாட்லைட், பொதுக் கதைகள் மற்றும் வரைபடங்கள் போன்றவை) மட்டுப்படுத்த, தானியங்கு கருவிகள் மற்றும் மனித மதிப்பாய்வின் கலவையைப் பயன்படுத்துகிறோம். 

  • எங்கள் செயலியில் புகாரளித்தல் கருவி: எங்கள் அனைத்து தயாரிப்பு மேற்பரப்புகளிலும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் சாத்தியமான மீறல்களுக்கு கணக்குகள் மற்றும் உள்ளடக்கத்தை Snapchat பயனர்கள் புகாரளிக்க முடியும். புகாரை மதிப்பாய்வு செய்து; எங்களின் கொள்கைகளின் படி சரியான நடவடிக்கை எடுத்து; அதன் முடிவு குறித்து, புகாரளித்த தரப்பிடம் சில மணி நேரங்களுக்குள் தெரிவிக்கப் பயிற்சி அளிக்கப்பட்ட எங்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவிற்கு Snapchat பயனர்கள் இரகசியமான புகாரை நேரடியாகச் சமர்ப்பிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அல்லது நடத்தை குறித்துப் புகாரளிப்பது பற்றிய மேலும் தகவல்களுக்கு, எங்களின் உதவித் தளத்தில் உள்ள இந்த வளத்தைப் பார்க்கவும்.
    Snapchat இல் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறிந்து அகற்றுவது மற்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் நீங்கள் மேலும் இங்குஅறியலாம்.

  • சட்ட அமலாக்க ஒத்துழைப்பு: Snap அவர்கள் பயனர்களின் தனியுரிமை மற்றும் உரிமைகளை மதிக்கும் அதே நேரத்தில் சட்ட அமலாக்கத்திற்கு உதவி செய்ய உறுதிபூண்டுள்ளது. Snapchat கணக்குப் பதிவுகளுக்கான சரியான கோரிக்கையை நாங்கள் பெற்றவுடன், பொருந்தக்கூடிய சட்டம் மற்றும் தனியுரிமை தேவைகளின் இணக்கத்துடன் நாங்கள் பதிலளிக்கிறோம். மேலும் தகவலுக்கு நீங்கள் எங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடலாம்.

  • தொழில்துறை நிபுணர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் கூட்டுறவு: தேவையுள்ள Snapchat பயனர்களுக்கு உதவவும் Snapchat-இல் தடைசெய்யப்பட்ட இணைய துன்புறுத்தல், வெறுப்புப் பேச்சு அல்லது பிற தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகள் பற்றிய எந்தவொரு புகாருக்கும் உடனடியாக பதிலளிக்கவும் நாங்கள் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்கிறோம். கூடுதல் ஆதாரங்களுக்கு, Here For You என்ற செயலியில் உள்ள போர்ட்டல் அல்லது கீழே உள்ள கூடுதல் ஆதாரங்களைப் பார்வையிடவும். 

  • தடகள கல்வி மற்றும் ஆதரவு: ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி தடகள வீரர்களுக்கு கற்பிக்கவும் தடகள வீரர்கள் அல்லது அவர்கள் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ள எந்தத் தீன்கிழைக்கும் நடத்தையயும் விரைவாகக் கையாள நாங்கள் நேரடி சேனல்களை நிறுவியுள்ளோம்.

கூடுதல் வெளிப்புற பயனுள்ள ஆதாரங்கள்

பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கான எங்கள் தொடர் முயற்சிகளில் பிரான்சில் பின்வரும் மதிப்புமிக்க ஆதாரங்களைப் பயன்படுத்துமாறு எங்களது சமூகத்தை ஊக்குவிக்கிறோம்:

  • Thésée: ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக ஆதரவை வழங்குகிறது.

  • 3018/E-Enfance: ஆன்லைனில் மைனர்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

  • Ma Sécurité: காவல் துறை மற்றும் படைக்கலந் தாங்கிய காவல்துறைப் பிரிவு. உங்கள் விசாரணைகளில் உங்களுக்கு உதவலாம்.

  • Pharos: சட்டவிரோத உள்ளடக்கத்தை புகாரளிக்க.

  • Call 15: உடனடி ஆபத்து ஏற்படும் நேரங்களில் அவசரகால உதவி.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளில் மக்கள் பாதுகாப்பாக கொண்டாட மற்றும் பங்கேற்பாதை உறுதிசெய்யும் ஒரு இடமாக Snapchat இருப்பதை உறுதிசெய்ய எங்கள் பங்கை வகிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் பாதுகாப்பு அணுகுமுறை பற்றிய கூடுதல் தகவலுக்கு, எங்கள் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் கொள்கை மையத்தைப் பார்வையிடவும்.

செய்திக்குத் திரும்புக