Snap Values

4வது வருடாந்திர உச்சி மாநாட்டுடன் சட்ட அமலாக்கத்துடன் Snapchat கூட்டுச்செயல்பாடு தொடர்கிறது

டிசம்பர் 18, 2024

டிசம்பர் 11 அன்று, அன்று எங்களது நான்காவது வருடாந்திர அமெரிக்க சட்ட அமலாக்க உச்சி மாநாட்டை நடத்தினோம், அதில் Snap சட்ட அமலாக்க விசாரணைகளுக்கு எவ்வாறு ஆதரவளிக்கிறது மற்றும் Snapchat பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி மேலும் அறிந்துகொள்ள நாடு முழுவதிலுமிருந்து உள்ளூர், மாநில மற்றும் கூட்டாச்சி சட்ட அமலாக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு அமெரிக்க சட்ட அமலாக்க சமூகத்திலிருந்து 6,500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவுசெய்தனர்.

எங்களது தலைமை நிர்வாக அதிகாரி இவான் ஸ்பீகல் அமெரிக்க சட்ட அமலாக்கத்தின் முக்கிய இலக்கை அங்கீகரித்து, இணைந்து பணிபுரிவதில் Snap-இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, Snapchat-க்கான அவரின் தொலைநோக்கைப் பகிர்ந்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.    

இரண்டு மணிநேர உச்சி மாநாட்டில், எங்கள் சமூகத்தைப் பாதுகாக்க உதவ சட்ட அமலாக்கம் பயன்படுத்தக்கூடிய செயல்பாட்டு கருவிகள் மற்றும் வளங்களைப் பகிர்வதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். Snap உறுப்பினர்கள் பின்வருவன பற்றி கலந்துரையாடினார்கள் 1) எங்களிடம் தயாராக உள்ள வளங்கள் மற்றும் செயல்முறைகள், 2) Snapchat-ஐ பாதுகாப்பாக உருவாக்க 2024 ஆம் ஆண்டில் நாங்கள் செய்த தயாரிப்பு மேம்பாடுகள் மற்றும் 3) எங்கள் துறை தாண்டிய கூட்டுறவுகள். 

உச்சி மாநாட்டின் மூலம், அமெரிக்க சட்ட அமலாக்க சமூகத்தின் விரிவான சாத்தியமான பிரிவுகளை அடைய முற்படுகிறோம், புதிய உறவுகளை எளித்தாக்குகிறோம் மற்றும் எங்கள் கொள்கைகள், செயல்முறைகள், பாதுகாப்பு கருவிகள் பற்றிய நடைமுறை சார்ந்த தகவலை வழங்குகிறோம்.  

எங்கள் பாதுகாப்பு செயல்பாடுகள் அணிகள் 

எங்கள் சமூகத்தைப் பாதுகாக்க உதவுவதற்காக எங்களிடம் தயாராக உள்ள அணி உறுப்பினர்கள் மற்றும் வளங்களுக்கு பங்கேற்பாளர்களை .அறிமுகப்படுத்தினோம். எங்கள் பாதுகாப்பு செயல்பாடுகள் குழு மற்றும் நம்பிக்கை & பாதுகாப்பு குழு இரண்டும் சட்ட அமலாக்கத்துடன் ஈடுபட்டு Snapchat பயனர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு புகார்தாரர்களிடமிர்ந்து பாதுகாப்பு கவலைகள் குறித்த புகார்களுக்கு பதிலளிக்கின்றன. 

நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழு — இதில் சட்ட அமலாக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், அரசு மற்றும் காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்களுக்கான தேசிய மையம் ஆகியவை அடங்கும். — இந்த மையம் புகார்களை விசாரிப்பதன் மூலம் மற்றும் சட்ட விரோத உள்ளடக்கத்தை முன்கூட்டியே கண்டறிய இயந்திரக் கற்றல் போன்ற அதிநவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தவறான நபர்களை தடுக்க மற்றும் அகற்ற உறுதிப்பாடு பூண்டுள்ளது.

LEO என்றும் அழைக்கப்படும் சட்ட அமலாக்க செயல்பாடுகள் குழு, சட்ட அமலாக்கத்துடன் நெருக்கமாக ஈடுபடும் குழுவாகும். LEO சட்ட அமலாக்கத்தின் சட்டக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவும், அவசரகால சூழ்நிலைகளில் சட்ட அமலாக்கத்திற்கு தரவுகளை வெளிப்படுத்தவும், பொதுவாக Snapchat இல் பாதுகாப்பு பற்றி சட்ட அமலாக்கத்திற்கான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Snapchat இன் பாதுகாப்பு செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள குழு உறுப்பினர்களுடன் 24 / 7 வேலை செய்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், எங்கள் சமூகத்தின் தேவைகளுக்கு அதிக விரைவாக நாங்கள் பதிலளிக்க உதவ, எங்கள் சட்ட அமலாக்க செயல்பாடுகள் குழு மூன்று மடங்காகியுள்ளது மற்றும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு 150% வளர்ச்சியடைந்துள்ளது.  

புதிய பாதுகாப்பு அம்சங்கள் 

எங்களிடம் வலுவான உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு இருக்கும்போது, எங்கள் தளத்தை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்க புதிய வழிகளை தொடர்ந்து தேடுகிறோம். ஏற்கனவே, சமூக அழுத்தத்தை குறைக்க எங்கள் நண்பர்கள் பட்டியலை தனிப்பட்டதாக வைத்துள்ளோம். ஏற்கனவே நண்பர்கள் பட்டியலில் சேர்க்கப்படாத அல்லது தொலைபேசி தொடர்புகளில் இல்லாத எவரும் நேரடியாக தகவல் அனுப்ப நாங்கள் அனுமதிப்பதில்லை. மேலும் இருப்பிடப் பகிர்வு உட்பட முக்கிய தனியுரிமை அமைப்புகள் இயல்புநிலையில் கடுமையான தரநிலைக்கு அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு இந்த உச்சி மாநாட்டில் நாங்கள் முன்னிலைப்படுத்திய டீனேஜர்களுக்கான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அறியாதவர்கள் டீனேஜர்களைத் தொடர்புகொள்வதை மேலும் கடினமாக்க தடுப்புக் கருவிகள் மற்றும் செயலியில் எச்சரிக்கைகள் ஆகியவற்றில் முன்னேற்றங்களைச் செய்துள்ளோம். எங்கள் செயலியில் உள்ள எச்சரிக்கைகள் இப்போது புதிய மற்றும் மேம்பட்ட சமிக்ஞைகளை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, தடுக்கப்பட்ட அல்லது பிறர் புகாரளித்துள்ள ஒருவரிடமிருந்து அல்லது டீனேஜர்களின் பிராந்தியம் இல்லாத இடத்திலிருக்கும் ஒருவரிடமிருந்து அரட்டை செய்தியை டீனேஜர்கள் பெற்றால் அவர்கள் ஒரு எச்சரிக்கை செய்தியை பார்க்கலாம்.

பெற்றோர் கருவிகள் மற்றும் வளங்களை வழங்கும் Snapchat-இன் செயலியில் உள்ள குடும்ப மையத்திற்கு புதிய இருப்பிடம் பகிரும் அம்சங்களை நாங்கள் அறிவித்துள்ளோம். மற்ற புதுப்பித்தல்களுடன் சேர்ந்து, பெற்றோர்கள் இப்போது Snap வரைபடத்தில் அவர்களது இருப்பிடத்தைப் பகிருமாறு தங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் கேட்கலாம்.

கூட்டாண்மை

சட்ட அமலாக்கத்துடன் பணிபுரிவதுடன் கூடுதலாக, Snapchat பயனர்களை முடிந்தளவு பாதுகாப்பாக வைத்திருக்கவும் விழிப்புணர்வுடன் வைத்திருக்கவும் பல துறை சார்ந்த கூட்டாண்மை அடிப்படையிலான அணுகுமுறை பயனுள்ள வழியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். உச்சி மாநாட்டின் போது டீனேஜர்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு பற்றி தெரிவிக்க உதவும் வகையில் கல்வியாளர் கருவித்தொகுப்பை உருவாக்க Safe and Sound Schools உடனும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் அதன் “Know2Protect” பிரச்சாரத்தில் எங்கள் கூட்டாண்மை பற்றி விவாதித்துள்ளோம். எங்கள் சமூகத்திற்கு கற்பிக்கவும் அதை பாதுகாக்கவும் தொடர்ந்து எல்லை கடந்த கூட்டாளர்களுடன் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.

2025 ஆம் ஆண்டை முன்னோக்கி பார்க்கும்போது, நிறைய வேலைகள் இருக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் சமூகத்தைப் பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் நாங்கள் ஆக்கப்பூர்வமான உறவை உருவாக்கும்போது, உச்சி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அவர்களது முனைப்புடனான பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டுக்கு நன்றி தெரிவிக்கிறோம். 

- ரேச்சல் ஹோச்சௌசர், தலைவர், பாதுகாப்பு செயல்பாடுகள் அவுட்ரீச்

செய்திக்குத் திரும்புக