இவான் ஸ்பீகலின் செனட் சபை சாட்சியம் அவர் வழங்கியவாறே
ஜனவரி 31, 2024
இவான் ஸ்பீகலின் செனட் சபை சாட்சியம் அவர் வழங்கியவாறே
ஜனவரி 31, 2024
இன்று, எங்கள் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான இவான் ஸ்பீகல் நீதித்துறை தொடர்பான அமெரிக்க செனட் கமிட்டியின் முன் சாட்சியமளிப்பதில் மற்ற தொழில்நுட்பத் தளங்களுடன் சேர்ந்தார். கமிட்டியின் முன் வழங்கப்பட்ட முழு வாய்மொழி சாட்சியத்தை நீங்கள் கீழே படிக்கலாம்.
***
தலைவர் டர்பின், ரேங்கிங் மெம்பர் கிரஹாம், மற்றும் செயற்குழுவின் உறுப்பினர்களே, இந்த விசாரணையைக் கூட்டி, இணையத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான முக்கியமான சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பெயர் இவான் ஸ்பீகல், நான் Snap நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு வகிக்கிறேன்.
நாங்கள் Snapchat-ஐ உருவாக்கியுள்ளோம், இது உலகெங்கிலும் உள்ள 800 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள பயன்படுத்து இணைய சேவையாகும்.
Snapchat உருவாகும் முன்னரே உங்களில் பலர் இணையத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க பணிபுரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், மேலும் இந்தப் பணிக்கான உங்களின் நீண்ட கால அர்ப்பணிப்புக்கும் நம் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க இணைந்து பணியாற்றுவதற்கான உங்கள் விருப்பத்திற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இணைய தாக்குதல்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இங்குள்ளவர்களில் குடும்பத்தினர்களையும் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன்.
மக்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்க நாங்கள் வடிவமைத்த ஒரு சேவை தீங்கு விளைவிக்கத் தவறாகப் பயன்படுத்துப்படுகிறது என்ற நான் உணரும் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
நமது சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவது எங்களது பொறுப்பு என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்.
இந்த பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உழைத்த, மாற்றத்திற்காக அழுத்தம் கொடுத்த, மற்றும் பல உயிர்களைப் காப்பாற்றக்கூடிய கூப்பர் டேவிஸ் சட்டம் போன்ற முக்கியமான சட்டங்கள் குறித்து சட்டமியற்றுபவர்களுடன் ஒத்துழைத்த பல குடும்பங்களை நான் அங்கீகரிக்க விரும்புகிறேன்.
என்னுடைய இருபதாவது வயதில் எனது இணை நிறுவனர் பாபி மர்ஃபியுடன் சேர்ந்து Snapchat-ஐ உருவாக்கத் தொடங்கினேன். நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது இணையத்தில் நாங்கள் எதிர்கொண்ட சில பிரச்சனைகளைத் தீர்க்க நாங்கள் Snapchat-ஐ வடிவமைத்தோம்.
எங்களிடம் சமூக ஊடகத்திற்கான மாற்று எதுவுமில்லை. அதன் அர்த்தம் இணையத்தில் பகிர்ந்த படங்கள் நிரந்தரமானவை, பகிங்கரமானவை மற்றும் புகழ் அளவீடுகளுக்கு உட்பட்டவை என்பதாகும். இது நல்ல உணர்வைக் கொடுக்கவில்லை.
நாங்கள் Snapchat ஐ வித்தியாசமாக உருவாக்கினோம் ஏனெனில் நாங்கள் வேகமாக, வேடிக்கையான மற்றும் தனிப்பட்ட முறையில் எங்கள் நண்பர்களுடன் தொடர்புகொள்ள புதிய வழி தேவைப்படாது. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம், எனவே Snapchat-இல் பயனர்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தொடர்புகொள்கிறார்கள்.
உங்கள் கதையை நண்பர்களிடம் பகிரும் போது பகிங்கர லைக்குகளோ கருத்துக்களோ இதில் இல்லை.
Snapchat இயல்பாகவே தனிப்பட்டது, அதாவது பயனர்கள் நண்பர்களைச் சேர்ப்பதைத் தேர்வுசெய்ய வேண்டும் மற்றும் அவர்களை யார் தொடர்புகொள்ளலாம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
நாங்கள் Snapchat-ஐ உருவாக்கிய போது, எங்கள் சேவை மூலம் அனுப்பப்படும் படங்கள் மற்றும் வீடியோக்கள் இயல்பாக நீக்கப்படுவதைத் தேர்வுசெய்தோம்.
பதிவு செய்யப்படாத தொலைபேசி அழைப்புகள் மூலம் வழங்கப்பட்ட தனியுரிமையை அனுபவித்த முந்தைய தலைமுறையினர் போலவே, Snapchat மூலம் தருணங்களைப் பகிரும் திறனிலிருந்து எங்கள் தலைமுறை பலனடைந்துள்ளது. இதில் குறைகளே இல்லாதது எனக் கூற முடியாது, ஆனால் இது நிரந்தரம் இல்லாத வகையில் உணர்வுகளை வெளிப்படுகிறது.
Snapchat செய்திகள் இயல்பாகவே நீக்கப்பட்டாலும், படங்கள் மற்றும் வீடியோக்களை அவற்றைப் பெறுபவர்கள் சேமிக்க முடியும் என்பதை நாங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம்.
சட்டவிரோத அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கும் அதே சமயம், நாங்கள் சான்றுகளை கூடுதல் காலத்திற்குத் தக்கவைக்கிறோம், இது சட்ட அமலாக்கத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குவதையும் குற்றவாளிகளைப் பொறுப்பேற்க வைக்க உதவுவதையும் அனுமதிக்கிறது.
Snapchat-இல் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் பரவுவதைத் தடுக்க, தானியங்கி செயல்முறை மற்றும் மனித ஆய்வு இரண்டின் கலவையையும் பயன்படுத்தி எங்கள் சேவையில் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கத்தைப் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
எங்கள் உள்ளடக்க விதிமுறைகளை எப்போதும் நேர்மையாக அனைத்துக் கணக்குகளுக்கும் பயன்படுத்துகிறோம். நாங்கள் எங்களின் அமலாக்க நடவடிக்கைகளைச் சரியாக செய்வதை உறுதிப்படுத்த தர உறுதிப்பாட்டின் மூலம் அவற்றின் மாதிரிகளை இயக்குகிறோம்.
மேலும், அறியப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் தொடர்பான உள்ளடக்கம் மற்றும் பிற வகையான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்கிறோம், அந்த உள்ளடக்கத்தை அகற்றுகிறோம், புண்படுத்தும் கணக்குகளை செயலிழக்கச் செய்து, சாதனங்களைத் முடக்குவதற்கும், சட்ட அமலாக்கத்திற்கான ஆதாரங்களை பாதுகாக்கிறோம் மற்றும் சில உள்ளடக்கங்களை அடுத்த நடவடிக்கைக்காக தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் அளிக்கிறோம்.
கடந்த ஆண்டு நாம் 690,000 புகார்களை காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையத்திற்கு பதிவுசெய்தோம், இது 1,000-க்கும் மேற்பட்ட கைதுகளுக்கு வழிவகுத்தது. நாங்கள் 2.2 மில்லியன் போதை மருந்து தொடர்பான உள்ளடக்கங்களை அகற்றி தொடர்புடைய 705,000 கணக்குகளை முடக்கினோம்.
எங்கள் கடுமையான தனியுரிமை அமைப்புகள், உள்ளடக்கத்தை மட்டுப்படுத்தும் முயற்சிகள், முன்கூட்டிய கண்டறிதல் மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு இவை அனைத்தும் இருந்தபோதிலும், மக்கள் இணைய சேவைகளைப் பயன்படுத்தும் போது மோசமான விஷயங்கள் நிகழலாம். அதனால்தான் பதிமூன்று வயதுக்குக் குறைவானோர் Snapchat-இல் தொடர்புகொள்ள இன்னும் தயாராக இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.
iPhone மற்றும் Android சாதனங்களில் பெற்றோர் கட்டுப்பாட்டைப் பயன்படுத்த பெற்றோர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். நாங்கள் அவற்றை எங்கள் வீட்டிலும் பயன்படுத்துகிறோம் மற்றும் எங்களது பதிமூன்று வயதுப் பிள்ளை பதிவிறக்கும் ஒவ்வொரு செயலியையும் எனது மனைவி அங்கீகரிக்கிறார்.
அதிகத் தெரிவுநிலை மற்றும் கட்டுப்பாட்டைத் விரும்பும் பெற்றோர்களுக்கு, நாங்கள் Snapchat-இல் குடும்ப மையத்தை உருவாக்கியுள்ளோம். இங்கு நீங்கள் உங்கள் டீனேஜ் பிள்ளை யாருடன் பேசுகிறார் என்பதைப் பார்க்கலாம், தனியுரிமை அமைப்புகளை மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் உள்ளடக்க வரம்புகளை அமைக்கலாம்.
சிறார்கள் இணையப் பாதுகாப்பு சட்டம் மற்றும் கூப்பர் டேவிஸ் சட்டம் போன்ற சட்டங்கள் போன்ற குழுவின் உறுப்பினர்களுடன் நாங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். இவற்றுக்கு ஆதரவளிப்பது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இணையத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்திற்கு பரந்த தொழில்துறை ஆதரவை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்.
எந்தச் சட்டமும் முழுமையானது அல்ல, ஆனால் விதிகள் எதுவுமே இல்லாமல் இருப்பதை விட சில விதிகள் இருப்பது மேல்.
எங்கள் சேவையைப் பயன்படுத்துபவர்களைப் பாதுக்காக்க நாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் பெரும்பான்மையானவை இந்தத் தொழில்துறையில் உள்ள எங்களது கூட்டாளர்கள், அரசு, இலாப நோக்கற்ற அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், குறிப்பாக, சட்ட அமலாக்க மற்றும் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த முதல் பதிலளிப்பவர்களின் ஆதரவு இவையெல்லாம் இல்லாமல் சாத்தியமில்லை.
குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைச் செய்ய இணைய சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நம் நாடு மற்றும் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் அசாதாரண முயற்சிகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இந்த நாடு எனக்கும் எனது குடும்பத்திற்கும் அளித்துள்ள வாய்ப்புகளுக்கு ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சமூகத்திற்கு திருப்பியளிப்பதையும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் எனது கடமையாக நினைக்கிறேன், மேலும் இந்த முக்கியமான ஜனநாயக செயல்முறைகளின் ஒரு பகுதியாக இன்று நான் இங்கு இருப்பதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
குழு உறுப்பினர்களே, இணையப் பாதுகாப்புக்கான தீர்வுகளின் ஒரு அங்கமாக நாங்கள் இருப்போம் என்ற உறுதிப்பாட்டை உங்களுக்கு அளிக்கிறேன்.
எங்கள் குறைபாடுகள் குறித்து நேர்மையாக இருப்போம், நாங்கள் மேம்பாடு அடைய தொடர்ந்து பணியாற்றுவோம்.
வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கக் காத்திருக்கிறேன்.