2024 தேர்தலுக்கான திட்டமிடல்
23 ஜனவரி 2024
Snap-இல், குடிமை சார்ந்த ஈடுபாடு என்பது சுய வெளிப்பாட்டின் மிகவும் சக்திவாய்ந்த வடிவங்களில் ஒன்று என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். மக்கள் தங்களை வெளிப்படுத்த உதவுகின்ற, மேலும் புதிய மற்றும் முதல்முறையாக வாக்களிக்கின்ற வாக்காளர்களிடம் குறிப்பிடத்தக்க அளவில் சென்றடைகின்ற ஒரு தளமாக நாங்கள் இருப்பதால், அவர்கள் உள்ளூரில் நடைபெறும் தேர்தலில் எங்கு, எப்படி வாக்களிக்கலாம் என்பது உட்பட, செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள் பற்றிய துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை அணுக நமது சமூகத்திற்கு உதவுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். 2024-இல் 50 நாடுகளில் தேர்தல் நடத்தப்பட இருப்பதால், வரும் தேர்தலுக்கான அனைத்து தொடர்புடைய முன்னேற்றங்களையும் கண்காணிக்க தவறான தகவல்கள், அரசியல் சார்ந்த விளம்பரங்கள் மற்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் உள்ளிட்ட எங்கள் நீண்ட தேர்தல் ஒருமைப்பாட்டுக் குழுவை மீண்டும் கூட்டுகிறோம். அவர்களின் முக்கியமான பணிகளுக்கு இடையில் கூடுதலாக, இந்த ஆண்டு தேர்தலுக்கான எங்கள் திட்டத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
எங்களின் ஆரம்ப நாட்களில் இருந்தே, எங்கள் நிறுவனர்கள் Snapchat-ஐ மற்ற சமூக ஊடகத் தளங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானதாக வடிவமைத்துள்ளனர். Snapchat முடிவில்லாத, ஆராயப்படாத உள்ளடக்கத்தின் ஊட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை, மேலும் இது மக்களை லைவ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிப்பதில்லை. தவறான தகவல்களுக்கு ஆதரவாக எங்கள் அல்காரிதங்களை நாங்கள் நிரல்படுத்துவதில்லை, மேலும் நாங்கள் குழுக்களைப் பரிந்துரைப்பதில்லை. அதற்குப் பதிலாக, அதிகமான பார்வையாளர்களிடம் உள்ளடக்கம் சென்றடைவதற்கு முன்பே நாங்கள் அதை மதிப்பீடு செய்கிறோம், மேலும் அமெரிக்காவில் உள்ள தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் முதல் பிரான்சில் உள்ள லு மாண்டே, இந்தியாவில் உள்ள டைம்ஸ் நவ் வரை உலகெங்கிலும் உள்ள நம்பகமான ஊடகக் கூட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் செய்திகளைக் காண்பிக்கிறோம்.
எல்லா Snapchat கணக்குகளுக்கும் சரிசமமாகப் பொருந்துகின்ற எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தேர்தல்களின் நேர்மையைக் குலைக்கும் உள்ளடக்கம் உட்பட, தவறான தகவல்களைப் பரப்புவதையும், முற்றிலும் பொய்யானவை போன்ற வேண்டுமென்றே தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தையும் எப்போதும் தடைசெய்துள்ளது. Snapchat பயனர்கள் பொது உள்ளடக்கத்தைப் பார்க்க முடிகின்ற செயலியின் பகுதிகளில் நாங்கள் பரப்புகின்ற எந்த உள்ளடக்கத்திற்கும் இன்னும் உயர் தரநிலையை நாங்கள் பராமரிக்கிறோம். தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளதால், மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட அனைத்து உள்ளடக்க வடிவங்களையும் உள்ளடக்கும் வகையில் எங்கள் கொள்கைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். இந்த வகையான உள்ளடக்கத்தை நாங்கள் முனைப்புடன் கண்டறிந்தால், அல்லது இது குறித்து எங்களிடம் புகாரளிக்கப்பட்டால், உடனடியாக அதை அகற்றுவோம் - மேற்கொண்டு இது Snapchat அல்லது பிற தளங்களில் பரவுவதற்கான திறனையும் குறைப்போம்.
பல ஆண்டுகளாக, எங்களின் வெவ்வேறு இயங்குதள வடிவமைப்பு முடிவுகள் Snapchat-ஐ போலியான செய்திகள் மற்றும் சதிக் கோட்பாடுகள் அதிகமாக இயங்கக்கூடிய இடமாக மாறாமல் பாதுகாக்க உதவியுள்ளது. உதாரணமாக, கடந்த 2022-இல் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல் சுழற்சியின் போது, உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட தவறான தகவல்கள் அகற்றப்பட்டன. இதை எங்கள் குழுக்கள் ஒரு மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து அகற்றின. 2024-இல் இந்த அளவை முடிந்தவரை குறைவாக வைத்திருப்பதே எங்கள் குறிக்கோளாகும்.
அரசியல் விளம்பரத்திற்கான கூடுதல் பாதுகாப்புகள்
தேர்தல் குறுக்கீடுகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக பாதுகாக்கும் வகையில், அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கும் நாங்கள் தனித்துவமான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் ஒவ்வொரு அரசியல் விளம்பரத்திலும் மனித மீளாய்வு முறையைப் பயன்படுத்துகிறோம், மேலும் அவை வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்திற்கான எங்கள் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய, ஒரு சுயாதீனமான, பாரபட்சமற்ற உண்மைச் சரிபார்ப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறோம். ஏமாற்றும் படங்கள் அல்லது உள்ளடக்கத்தை உருவாக்க AI-ஐத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த முழுமையான சரிபார்ப்பை எங்கள் சோதனைச் செயல்முறை உள்ளடக்குகிறது.
விளம்பரம் இயங்குவதற்கு ஒப்புதல் பெற, அதற்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும், மேலும் வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது தேர்தல் நடைபெறும் நாட்டிற்கு வெளியே உள்ள எந்தவொரு தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் விளம்பரங்களுக்குப் பணம் செலுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அரசியல் விளம்பரங்களின் நூலகத்தை இயக்குவதற்கும் வைத்திருப்பதற்கும் எந்த அரசியல் விளம்பரங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதை அறிவது பொதுமக்களின் நலனுக்காக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பொறுப்பான, துல்லியமான மற்றும் பயனுள்ள செய்திகள் மற்றும் தகவல்களுக்கான இடமாக Snapchat தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்போம். நமது சமூகம் தங்கள் உள்ளூர் தேர்தல்களில் பங்கேற்கத் தொடர்ந்து அதிகாரம் அளிக்கவும் விரும்புகிறோம், மேலும் வரும் மாதங்களில் Snapchat பயனர்கள் வாக்களிக்கப் பதிவுசெய்ய உதவும் எங்கள் திட்டங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை நாங்கள் பகிர்வோம்.