Privacy, Safety, and Policy Hub

2021-ஆம் ஆண்டின் முதலாவது அரை ஆண்டிற்கான எங்களுடைய வெளிப்படைத்தன்மை அறிக்கை

நவம்பர் 22, 2021

இன்று, 2021-ஆம் ஆண்டின் முதலாவது அரை ஆண்டிற்கான எங்களுடைய வெளிப்படைத்தன்மை அறிக்கையை நாங்கள் வெளியிடுகிறோம், இது இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. சமீபத்திய அறிக்கைகளைப் போலவே, இந்தக் காலக்கட்டத்தில் உலகளாவிய ரீதியில் எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் மீறல்கள், குறிப்பிட்ட வகை மீறல்களுக்கு எதிராக நாங்கள் பெற்ற மற்றும் நடவடிக்கை எடுத்த உள்ளடக்க அறிக்கைகளின் எண்ணிக்கை; சட்ட அமலாக்க மற்றும் அரசாங்கங்களின் கோரிக்கைகளுக்கு நாங்கள் எவ்வாறு பதிலளித்தோம் ஆகியவற்றைக் குறித்த தரவை இந்த அறிக்கைப் பகிர்ந்து கொள்கிறது; நாடு வாரியாக நாங்கள் எடுத்த நடவடிக்கைகள்; Snapchat உள்ளடக்கத்தின் மீறல் பார்வை விகிதம் மற்றும் தளத்தில் உள்ள தவறான தகவல்களின் நிகழ்வுகள்.

இந்த காலகட்டத்தில் எங்கள் அறிக்கையிடலில் பல புதுப்பிப்புகளைச் சேர்ப்போம், எங்களின் செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் செயல்திறனைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க, மணிநேரங்களில் இருந்து நிமிடங்களில் எங்களின் சராசரி புகாரைப் பெற்றதில் இருந்து நடவடிக்கை எடுத்த நேரத்தைக் குறிப்பிடுவது உட்பட.

ஒவ்வொரு நாளும் Snapchat கேமராவைப் பயன்படுத்தி சராசரியாக ஐந்து பில்லியன் புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. ஜனவரி 1 முதல் - ஜூன் 30, 2021 வரை, எங்கள் வழிகாட்டுதல்களை மீறியுள்ள 6,629,165 உள்ளடக்கங்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டுள்ளோம். இந்த காலகட்டத்தில், எங்கள் மீறல் பார்வை விகிதம் (VVR) 0.10 சதவீதமாக இருந்தது, அதாவது Snap இன் உள்ளடக்கத்தின் ஒவ்வொரு 10,000 பார்வைக்கும் எங்கள் வழிகாட்டுதல்களை மீறியுள்ள 10 உள்ளடக்கம் இருந்தது. கூடுதலாக, பாலியலை வெளிப்படுத்தும் உள்ளடக்கம், தொந்தரவளித்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல், சட்டவிரோத மற்றும் போலி மற்றும் போதைப்பொருள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் குறித்து மீறல் பற்றிய புகார்களுக்கு பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தை நாங்கள் கணிசமாக மேம்படுத்தியுள்ளோம்.

குழந்தை பாலியல் துர்ப்பிரயோக உள்ளடக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் பணி 

எங்கள் சமூகத்தின் பாதுகாப்பு மிக முக்கியமான முன்னுரிமையாகும். இளைஞர்களை அவர்களுக்கு சம்பந்தமில்லாதோர் கண்டுபிடிப்பதை கடினமாக்கி மற்றும் உண்மையான நண்பர்களுடன் தொடர்புகொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு தளமாக நாங்கள் வேண்டுமென்றே Snapchat ஐ வடிவமைத்துள்ளோம். எடுத்துக்காட்டாக, Snapchat பயனர்கள் ஏற்கனவே நண்பராக இல்லாதவர்களின் நண்பர்கள் பட்டியலை இயல்புநிலையில் பார்க்கமுடியாது மற்றும் அவரிடம் இருந்து செய்தியைப் பெறமுடியாது.

எங்கள் சமூகத்தின் எந்த ஒரு உறுப்பினர் மீதும் குறிப்பாக வயது முதிராதவர்கள் மீதான தவறான நடத்தை குறித்து முற்றிலும் சகிப்பு தன்மையற்ற நிலையை கொண்டுள்ளோம், அது எங்கள் சமூக வழிகாட்டுதல்களின் படி சட்டவிரோதமானது, ஏற்க முடியாதது மற்றும் தடை செய்யப்பட்டது. சிறுவர் பாலியல் துர்பிரயோகப் பொருட்கள் (CSAM) மற்றும் பிற வகையான குழந்தைகளின் பாலியல் சுரண்டல் உள்ளடக்கம் உட்பட எங்கள் தளத்தில் துர்பிரயோகத்தைத் தடுக்க, கண்டறிதல் மற்றும் ஒழிப்பதற்கான எங்கள் திறன்களை மேம்படுத்துவதன் மூலம், இந்த மீறல்களை எதிர்த்துப் போராடுவதில் முனைப்புடன் செயல்படுகிறோம்.

எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அணிகள் CSAM இன் அறியப்பட்ட சட்டவிரோதமான புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை அடையாளம் காணவும் அவற்றை தொலைந்த மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்தில் (NCMEC) இல் புகாரளிக்கவும் PhotoDNA மற்றும் குழந்தை பாலியல் துர்பிரயோகம் உருக்காட்சி (CSAI) பொருத்தும் தொழில்நுட்பம் போன்ற முன்கூட்டிய கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்துகின்றன. அதன் பின்னர், NCMEC உள்நாட்டு அல்லது சர்வதேச சட்ட அமலாக்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும்.

2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில், உலகளவில் மொத்த கணக்குகளில் CSAM-ஐ உள்ளடக்கிய 5.43 சதவீதத்தின் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில், 70 சதவீத CSAM மீறல்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த அதிகரித்த முன்கூட்டியே கண்டறிதல் திறன், CSAM-பரவுதல் ஒருங்கிணைந்த ஸ்பேம் தாக்குதல்களின் அதிகரிப்புடன் இணைந்து, இந்த அறிக்கையிடல் காலத்தில் இந்த பிரிவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

புதியவர்களுடனான தொடர்பு குறித்த இணைய அபாயங்கள் மற்றும் எந்த வகையான கவலை அல்லது கொள்கை மீறல் குறித்தும் எங்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுக்களை எச்சரிப்பதற்கு செயலியில் புகாரளித்தலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து Snapchat பயனர்களுக்குக் கற்பிக்க, தொழில்துறை பாதுகாப்பு வல்லுநர்களுடனும், எங்கள் செயலியில் உள்ள அம்சங்களுடனும் எங்கள் கூட்டுறவைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம். கூடுதலாக, எங்கள் நம்பக்கூடியவர்கள் புகாரளிக்கும் திட்டத்திற்கு கூட்டாளர்களைத் தொடர்ந்து சேர்த்துக்கொண்டிருக்கிறோம். அது உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் அல்லது CSAM சம்பந்தப்பட்ட வழக்கு போன்ற அவசரகால மேல்முறையீடுகளைப் புகாரளிக்க ஒரு ரகசிய சேனலுடன் சரிபார்க்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர்களை வழங்குகிறது. பாதுகாப்புக் கல்வி, நல்வாழ்வு வளங்கள், மற்றும் பிற புகாரளிக்கும் உதவிகளை வழங்குவதற்காக இந்தக் கூட்டாளர்களுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம், இதன் மூலம் அவர்கள் Snapchat சமூகத்திற்கு உதவ முடியும்.

தவறான தகவல் பரவுவது பற்றிய எங்கள் அணுகுமுறை

இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கை உள்ளடக்கிய காலப்பகுதி, துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பொதுமக்கள் அணுகுவதை உறுதிசெய்வது எவ்வளவு முக்கியமானது என்பதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜனநாயக செயல்முறைகள், பொது சுகாதாரம் மற்றும் கோவிட்-19 தொடர்பான தவறான தகவல்களின் பரவலில் இருந்து எங்கள் Snapchat பயனர்கள் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான புதிய வழிமுறைகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து அவற்றின் மீது முதலீடு செய்கிறோம்.

2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில், உலகளவில் எங்கள் தவறான தகவல் வழிகாட்டுதல்களை மீறியதற்காக மொத்தம் 2,597 கணக்குகள் மற்றும் உள்ளடக்கத்திற்கு எதிராகச் நடவடிக்கை எடுத்துள்ளோம், இந்த எண்ணிக்கை முந்தைய அறிக்கையிட்டால் காலத்தின் மீறல்களின் எண்ணிக்கையில் பாதியாகும். Discover மற்றும் ஸ்பாட்லைட் ஆகியவற்றில் உள்ள மீறும் உள்ளடக்கம் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்கூட்டியே கட்டுப்படுத்தப்படுவதால், இந்த மீறல்களில் பெரும்பாலானவை தனிப்பட்ட Snapகள் மற்றும் கதைகளில் இருந்து வந்தவை, மேலும் இந்த மீறல்களில் பெரும்பாலானவை எங்களுடைய செயலில் உள்ள கட்டுப்படுத்தும் முயற்சிகள் மூலமாகவும் Snapchat பயனர்களின் புகார்களின் மூலமாகவும் எங்களுக்குத் தெரிய வந்தன..

தீங்கான உள்ளடக்கத்தைப் பொறுத்த வரை, கொள்கைகளையும் அமலாக்கத்தையும் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது — தளங்கள் அவற்றின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். தொடக்கத்திலிருந்தே Snapchat வழக்கமான சமூக ஊடகத் தளங்களிலிருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது, எவரும் எதையும் பகிரும் உரிமை கொண்ட திறந்த செய்தியோடைக்குப் பதிலாக — நெருக்கமான நண்பர்களுடன் பேசுதல் எங்கள் முதன்மை பயன்பாட்டு நோக்கை ஆதரிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. Snapchat-இன் வடிவமைப்பு உள்ளடக்கம் வைரலாவதைக் கட்டுப்படுத்துகிறது, இது மக்களின் மோசமான உள்ளுணர்வை ஈர்க்கும் உள்ளடக்கத்திற்கான ஊக்கத்தை நீக்குகிறது, இதன் மூலம் சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் பரவுவது தொடர்பான கவலைகளை கட்டுப்படுத்துகிறது.

இந்த அணுகுமுறை மோசமான உள்ளடக்கத்தைப் பரவுவதை தடுக்கும் எங்கள் பணியின் ஒரு அங்கமாகும். புகாரளிக்கும் காலத்தில், பயங்கரவாத மற்றும் தீவிரவாத உள்ளடக்கம் மீதான எங்கள் தடையை மீறியதற்காக ஐந்து கணக்குகளை நாங்கள் நீக்கியுள்ளோம், இது கடந்த புகாரளிக்கும் சுழற்சியில் இருந்து சற்று குறைவானது. Snap இல், இந்த இடத்தில் ஏற்படும் மேம்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், எங்கள் தளத்தில் துர்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியமான பரப்பிகளைக் குறைக்க முயல்கிறோம். எங்கள் தள கட்டமைப்பு மற்றும் எங்கள் குழு உரையாடல் செயல்பாட்டின் வடிவமைப்பு இரண்டும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் பரவுவதை மற்றும் ஒழுங்கமைக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது. நாங்கள் குழு அரட்டைகளை வழங்குகிறோம், ஆனால் அவை அளவில் மட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் நிரல் நெறிமுறைகள் அவற்றை பரிந்துரைப்பதும் இல்லை, மேலும் எங்கள் தளத்தில் குறிப்பிட்ட குழுவில் உறுப்பினராக இல்லாத எவராலும் அவற்றை கண்டறிய முடியாது.

இந்தக் காலக்கட்டத்தில், கோவிட்-19 பற்றிய உண்மைப் பொதுப் பாதுகாப்புத் தகவலை எங்கள் Discover தலையங்கக் கூட்டாளர்கள் வழங்கும் கவேரேஜ் மூலம், பொதுச் சேவை அறிவிப்புகள் (PSAக்கள்) மூலம் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள், ஏஜென்சிகள் மற்றும் கேள்வி பதில்கள் மூலம் மருத்துவ நிபுணர்கள் மற்றும் இணைப்பு நிஜமாக்க லென்ஸஸ் மற்றும் ஃபில்டர்கள் போன்ற ஆக்கப்பூர்வமான கருவிகள் மூலம் எங்கள் சமூகத்திற்குத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம், - இவை அனைத்தும் Snapchat பயனர்களுக்கு நிபுணத்துவ பொது சுகாதார வழிகாட்டுதலை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்காக தடுப்பூசிகள் கிடைத்த போது, Snapchat பயனர்கள் பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் வகையில் வெள்ளை மாளிகையுடன் ஒரு புதிய முயற்சியை நாங்கள் தொடங்கினோம்.மற்றும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையுடன் அதே முயற்சியில் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.

முன்னோக்கிச் செல்லும்போது, ஆன்லைன் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பல துறைகளின் பொறுப்புக்கூறல் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்ட பல பங்குதாரர்களுக்கு எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை மேலும் விரிவானதாகவும் உதவிகரமாகவும் மாற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் மோசமான செயல்புரிபவர்களை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் விரிவான முயற்சிகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறோம், மேலும் மேம்படுத்துவதற்குத் தொடர்ந்து உதவும் பல பாதுகாப்புக் கூட்டாளர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

செய்திக்குத் திரும்புக