எங்கள் பணி Snapchat பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுதல்
அக்டோபர் 4, 2024
Snap இல் எங்கள் பாதுகாப்பு வழிமுறைகளையும், தளக் கொள்கைகளயும் தொடர்ந்து மேம்படுத்தி, மோசமான செயல் செய்பவர்கள் எங்கள் தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முயல்கிறோம். எங்கள் விதிகளை மீறும் செயல்களை கண்டறிந்து தடுக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்திகிறோம், நட்பு செயல்பாட்டில் ஒரு கட்டுபாட்டை கொண்டுவர வடிவமைப்பு கொள்கைகளை நாங்கள் பயன்படுத்திகிறோம், சட்டம் அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம், அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறோம் மேலும் இளம்வயதினரை மட்டுமல்ல எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பாதிக்கும் தீவிரமான பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் கல்வியை வழங்கவும் பணியாற்றுகிறோம்.
பதின்ம வயதினரை பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துள்ளோம். எங்கள் பணி மிகவும் முக்கியமானது, பின்வருவற்றையும் உள்ளடக்கியது:
I. தீய செயல் செய்பவர்களுக்கு Snapchat ஐ ஒரு அசௌகரியமான சூழலாக உருவாக்குதல்
இந்த ஆண்டு தொடக்கத்தில் எங்கள் சமூகத்தை, குறிப்பாக இளம்வயதினரை பாதுகாப்பதற்க்கும் மற்றும் Snapchat ஐ தனித்துவமாக்கும் நிஜ உலகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் புதிய அம்சங்களை நாங்கள் அறிவித்தோம். அந்த புதுப்பிப்புகளில் பின்வரும் அம்சங்கள் அடங்கும்: சந்தேகத்தை தூண்டும் தொடர்புகளுக்கான விரிவான இன்-ஆப் எச்சரிக்கைகள், குறிப்பாக இளம்வயதினருக்காக உருவாக்கப்பட்ட நண்பர்களை சேர்க்கும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வேண்டாத தொடர்புகளை தடுக்கக் கூடிய திறனை மேம்படுத்துதல்.
இந்த மாற்றங்கள், ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்தி வருகின்றன, மேலும் அனைத்து வகையான குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகதிற்கு எதிராக போராட எங்களின் தற்போதைய முதலீடுகளை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டிற்கு:
நாங்கள் சிக்னல்களைப் பயன்படுத்தி பாலியல் செயல்பாடுகளை அடையாளம் காண்கிறோம், இதன் மூலம் தவறான நபர்கள் மற்றவர்களை குறிவைத்து பாதிக்கும் முன்பே நீக்க முடியும். இது தவிர Snapchat இல் குழந்தைகள் பாலியல் சுரண்டலும் மற்றும் பலாத்காரமும் உள்ள புகைப்படங்களை (CSEAI) பரவாமல் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்திலும் தொடர்ந்து செயல்படுகிறோம்.இதில் PhotoDNA (அடையாளம் காணப்பட்ட சட்டவிரோத படங்களின் நகல் விவரங்களைப் கண்டறிதல்), CSAI மாட்ச் (அடையாளம் காணப்பட்ட சட்டவிரோத வீடியோக்களின் நகல் விவரங்களை கண்டறிதல்), மற்றும் உள்ளடக்க பாதுகாப்பு ஏபிஐ ("புதிய ஹாஷ் செய்யப்படாத படங்களை கண்டறிதல்), போன்றவற்றையும் உள்ளடக்கியது.
நாங்கள் எளிய இன்-ஆப் புகாரளிப்பு வசதியைக் கொண்டு, எங்கள் விதிகளை மீறும் உள்ளடக்கங்கள் மற்றும் கணக்குகளை அறிக்கையிடும் சாத்தியத்தை நீண்ட காலமாக வழங்கி வருகிறோம். 2023ல், பாலியல் வற்புறுத்தல் தொடர்பான தீமைகளை எதிர்க்க எங்கள் முயற்சிகளை வலுப்படுத்த மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, நாங்கள் இன்-ஆப் சேட் டெக்ஸ்ட் மூலம் புகாரளிப்பு வசதியை அறிமுகப்படுத்தினோம் – இது Snap பயனர்கள் உரையாடலிலிருந்தே நேரடியாக தனிப்பட்ட செய்திகளை புகாரளிக்க அனுமதிக்கிறது. நாங்கள் எங்கள் இன்-ஆப் அறிக்கை சாதனங்களை மேலும் விரிவாக்கி, பாலியல் மிரட்டலுக்காக ஒரு குறிப்பிட்ட, தகுந்த புகாரளிக்கும் காரணத்தை சேர்த்துள்ளோம். குழந்தைகள் பாலியல் சுரண்டல் எதிர்ப்பு அமைப்பான (CSEA) தார்ன் என்ற NGO வின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த பதிவுகளை இளைஞர்களுக்கு அவர்களின் பொருத்தமான மொழியில் வழங்கினோம் ("அவர்கள் என் நிர்வாண படங்களை வெளியிட்டனர் / அல்லது வெளியிடுவோம் என மிரட்டுகின்றனர்"). இதையொட்டி, அந்த அறிக்கைகள் சிக்னல் அடிப்படையிலான கண்டறிதல் மற்றும் அமலாக்கம் உள்ளிட்ட எங்கள் அமலாக்க முயற்சிகளைத் தெரிவிக்கப் பயன்படுகின்றன. நாங்கள் போக்குகள், நடத்தைகள் மற்றும் பாலியல் வற்புறுத்தல் செய்பவர்களின் நுட்பங்களை பகுப்பாய்வு செய்கிறோம். ஒரு கணக்கு குறிப்பிட்ட தன்மைகளை வெளிப்படுத்தினால், அது பாலியல் வற்புறுத்தலுக்காக முடக்கப்படும்.
2022 இல் வெளியிடப்பட்ட எங்கள் குடும்ப மைய கருவிகளின் தொகுப்பை நாம் தொடர்ந்து மேம்படுத்தி, புதியவைகளை சேர்த்து வருகிறோம். இதன் மூலம் பெற்றோர், தங்கள் டீன் Snapchat இல் யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள், சமீபத்தில் யாருடன் உரையாடியுள்ளனர் என்பதையும், அவற்றில் கவலை அளிக்ககூடிய இருக்கும் கணக்குகளை எளிதில் புகாரளிக்கவும் முடியும். ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் மற்றும் இளம் வயதினரிடையே திறந்த மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலைத் தூண்டுவதே குடும்ப மையத்தினுடைய எங்கள் குறிக்கோள்.
நாங்கள் சட்ட அமலாக்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறோம், மேலும் எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் 24/7 உலகம் முழுவதும் செயல்படும் எங்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க செயல்பாட்டுக் குழுக்களில் அதிக முதலீடு செய்கிறோம். எடுத்துக்காட்டாக, எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் 2020 ஆம் ஆண்டிலிருந்து இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளன, மேலும் எங்கள் சட்ட அமலாக்கச் செயல்பாடுகள் குழு அந்த நேரத்தில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. எங்கள் தளத்தில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத செயல்பாட்டுக்கும் எதிராக பொருத்தமான நடவடிக்கை எப்படி எடுப்பது என்பதை அதிகாரிகளும் முகவர்களும் அறிந்திருப்பதை உறுதி செய்ய, அமெரிக்காவில் சட்ட அமலாக்கத்திற்கான வருடாந்திர உச்சி மாநாடுகளை நடத்துகிறோம்.
நைஜீரியாவில் பல பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உருவாகும் இடத்தில், குற்றவாளிகளை விசாரிப்பதற்கும், மற்றும் தண்டனை வழங்குவதற்கும் திறன் மற்றும் அறிவை வளர்த்துக் கொள்கிறோம் மேலும் இந்தப் பகுதியில் நைஜீரியா அரசாங்கத்துடன் எங்கள் ஈடுபாட்டை தொடர திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவிற்கு வெளியே பாலியல் செயல்பாடு அதிகமாக உள்ள நாடுகளில் சைபர் டிப்ஸ்-ஐ விசாரிப்பதில் சட்ட அமலாக்கத்திற்கு பயிற்சி அளிப்பதற்க்காக சர்வதேச நீதி இயக்கம், NCMEC, மற்ற தொழில்துறை உறுப்பினர்கள் மற்றும் NGO தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றியுள்ளோம்.
பல வருடங்களாக, நாங்கள் “நம்பகமான ஃபளாகர்ஸ்” என்ற பலவகையான குழுவுடன்: இலாப நோக்கமற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட அரசாங்க அதிகாரிகள், அவர்கள் உச்ச கட்ட முன்னுரிமை வழிகளைக் கொண்டு உதவி தேவைப்படும் Snap பயனர்கள் சார்பில் மிரட்டல் மற்றும் அதிக முன்னுரிமை சேனல்கள் வழியாக செயல்பட்டு வந்திருக்கிறோம். எங்களின் ட்ரஸ்டட் ஃப்லாக்கர் திட்டத்தில் பங்கேற்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், சிறுவர்களுக்கான எதிரான பாலியல் தொடர்பான பாதிப்புகள் உட்பட பாலியல் பலாத்காரம் பற்றிய உள்ளடக்கம் மற்றும் கணக்குகளைப் புகாரளிக்கின்றனர்.
ii. தொழில் நிபுணர்கள் மற்றும் கூட்டணிகளை ஈடுபடுத்துதல்
எங்கள் சொந்த முதலீடுகளுக்கும் மேலாக, உலகம் முழுவதிலும் உள்ள நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம், ஏனெனில் இந்தப் பிரச்சினைகளில் எவரும் அல்லது எந்த நிறுவனமும் தனிப்பட்ட முறையில் முன்னேற முடியாது என்பதை நாங்கள் அறிவோம். எடுத்துக்காட்டாக, வீ ப்ரொடெக்ட் குளோபல் அலையன்ஸின் சர்வதேச கொள்கை வாரியத்தின் தொழில்துறையின் பிரதிநிதியாக Snap செயல்படுகிறது; நாங்கள் இன்ஹோப் இன் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாகவும், இங்கிலாந்தின் இன்டெர்னெட் வாட்ச் ஃபவுண்டேஷன் (IWF) நம்பிக்கை குழுவிலும் இருக்கிறோம். இந்த அனைத்து அமைப்புகளும் தங்கள் இயக்கங்களின் மையத்தில் இணைய CSEA ஒழிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஆன்லைன் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தும் உலகளாவிய தொழில்துறை கூட்டணியான டெக் கோயலிஷனில் நாங்கள் செயல்படும் உறுப்பினர்களாக இருக்கிறோம், மேலும் அதன் இயக்குநர்கள் குழுவின் நிர்வாகக் குழுவில் இரண்டு வருட காலத்தை சமீபத்தில் முடித்துள்ளோம். நிறுவனங்கள் தங்கள் குழந்தை பாதுகாப்புக் கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை வலுப்படுத்துவதற்கான முதல் கிராஸ்-பிளாட்ஃபார்ம் சிக்னல் பகிர்வு திட்டமான டெக் கூட்டணியின் லான்டர்ன் முயற்சியின், துவக்க உறுப்பினர்களாகவும் இருந்தோம். இந்தத் திட்டத்தின் செயலில் பங்கேற்பதன் மூலம், பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட தீமை செய்யும் நபர்களைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உதவ முடியும்.
கூடுதலாக, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் (NCMEC) டேக் இட் டவுன் தரவுத்தளத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம், இது சிறார்களுக்கு நேரடியாக அவர்களின் சாதனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் அல்லது வீடியோக்களை கொண்டு "ஹாஷ்" என்று அழைக்கப்படும் டிஜிட்டல் கைரேகையை உருவாக்க அனுமதிக்கிறது. Snap உட்பட பங்கேற்கும் நிறுவனங்கள், எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் நகல் படங்களைத் தேடவும் அகற்றவும் அந்த ஹாஷ்களைப் பயன்படுத்தலாம். ரிப்போர்ட் ரிமூவ் எனப்படும் இங்கிலாந்தில் இதேபோன்ற திட்டத்தில் நாங்கள் பங்கேற்கிறோம், கடந்த ஆண்டு, SWGfL இன் StopNCII ஒத்துழைப்பில் சேர்ந்தோம், Snapchat இல் அந்த குழுவின் ஹாஷ் தரவுத்தளத்தை மேம்படுத்துவதன் மூலம் உடன்பாடு இல்லாத அந்தரங்கப் படங்கள் (NCII) பரவுவதைத் தடுக்க உதவியது. StopNCII ஆனது அந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் அந்தரங்க படங்கள் பரவுவதைத் தடுக்க உதவுகிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அவர்களின் தனியுரிமையை மீட்டெடுக்கும் திறனை வழங்குகிறது.
நாங்கள் எங்கள் தொடக்க Snap கவுன்சில் ஃபார் டிஜிட்டல் வெல்-பீயிங்கைத் தொடங்கினோம், இந்த ஆண்டு இது அமெரிக்கா முழுவதிலும் இருந்து 18 இளம் வயதினரைக் கொண்ட குழுவாகும், இது அவர்களின் பள்ளிகளிலும் சமூகங்களிலும் பாதுகாப்பான ஆன்லைன் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்தும் ஒரு வருட கால பைலட் திட்டத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜூலை மாதம், இந்தக் குழு, குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் அல்லது சேப்பரோனுடன், கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஸ்னாப் தலைமையகத்தில் கூடி விவாதித்தது, இது ஆன்லைன் பிழைகள் மற்றும் சமூக இயக்கவியல் மற்றும் பெற்றோர் கருவிகள் போன்ற தலைப்புகளில் சுவாரஸ்யமான நுண்ணறிவுகளை வழங்கியது. இது Snap இன் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவுடன் கூடுதலாக உள்ளது, இதில் 16 வல்லுநர்கள் மற்றும் மூன்று இளைஞர் வழக்கறிஞர்கள் உள்ளனர், அவர்கள் பாதுகாப்பு விஷயங்களில் Snap க்கு நேரடி ஆலோசனையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள். 2025 ஆம் ஆண்டை எதிர்நோக்குகிறோம், அங்கு இரு குழுக்களின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கூடுதல் நுண்ணறிவுகளைக் கண்டறிய அதிக வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்.
iii. கவனத்தை எழுப்புவது
எங்கள் உள்துறை முதலீடுகள் மற்றும் நிபுணர்களுடன், தொழில்துறைகள் கடந்து மேற்கொள்ளும் பணிகளைத் தவிர, ஆன்லைன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வற்புறுத்தல் திட்டங்களை எதிர்க்கும் முக்கிய கூறு, பொதுமக்கள் மற்றும் Snapchat பயனர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
2022 ஆம் ஆண்டில், அனைத்துதளங்களிலும் பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள், ஆன்லைனில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் தொழில்துறையில் முன்னணி ஆராய்ச்சியை வழங்கும் டிஜிட்டல் நல்வாழ்வு குறியீட்டை நாங்கள் தொடங்கினோம். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஆழமான ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்த ஆய்வு பொதுவாக ஆன்லைன் அனுபவங்களை உள்ளடக்கியதால், Snapchat இல் மட்டுமல்ல, இது எங்கள் பணியை தெரிவிக்க உதவுவதுடன் தொழில்நுட்ப சூழலின் மற்றவர்களுக்கான நுண்ணறிவுகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மாதத்தின் முடிவில் சிறார்களின் பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறித்தல் குறித்த தொழில்நுட்ப கூட்டணியின் வரவிருக்கும் விர்சுயல் மல்டி-ஸ்டேக்ஹோல்டர் மன்றத்துடன் இணைந்து எங்களின் இரண்டாம் ஆண்டு செக்ஸ்டோர்ஷன் டீப் டைவ் முடிவுகளை நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்காவின் உள் நாட்டு பாதுகாப்பு துறை (DHS) மூலம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வகையான பொது விழிப்புணர்வு பிரச்சாரமான நோ2ப்ரொடக்ட் ஐ ஆதரிக்கும் முதல் நிறுவனமாக நாங்கள் பெருமைபடுகிறோம். இந்த பிரச்சாரம் இளைஞர்கள், பெற்றோர்கள், நம்பகமான பெரியவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளித்து, நிதி மோசடி போன்ற குற்றங்களைத் தடுக்கவும் எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. K2P கல்வி ஆதாரங்களுக்காக Snapchat இல் விளம்பர இடத்தை நன்கொடையாக வழங்குவதுடன், பிரச்சாரத்தை மேலும் தெரிவிக்க, அமெரிக்காவில் உள்ள பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுடன் கூடுதல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். ஊடாடக்கூடிய Know2Protect வினாடி வினா மூலம் ஸ்னாப்சாட்டர்களைப் பயிற்றுவிப்பதற்கு உதவ, ஆக்மென்டட் ரியாலிட்டி ஸ்னாப்சாட் லென்ஸையும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளோம். இங்கிலாந்தில், 11 முதல் 13 வயதுடைய சிறுமிகளுக்கு ஆன்லைனில் பாலியல் பேணுதல், செக்ஸ் தொடர்பான டெக்ஸ்ட் மாற்றுதல் மற்றும் நிர்வாணங்களை அனுப்புதல் போன்றவற்றைப் பற்றி தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கர்ல்ஸ் அவுட் லவுட் என்ற IWF இன் பரந்த அளவிலான பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்றுவரை ஆதரித்தோம். கூடுதலாக, Snapchat-டிற்கான கல்வியாளர் வழிகாட்டியை நாங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம், சேஃப் அண்ட் சவுன்ட் ஸ்கூல்ஸ் உடன் இணைந்து, கற்பிப்பவர்களுக்கான விரிவான டூல் கிட்-ஐ உருவாக்குகிறோம், இதில் கற்பழிப்பை எவ்வாறு எதிர்ப்பது என்பது பற்றிய தகவல்களும் வழிகாட்டலும் அடங்கும்.
எங்களின் பல ஆண்டுகால ஆராய்ச்சியின் அடிப்படையில், ஆன்லைன் பாதிப்புகளைத் தடுப்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சமூகக் கல்வி ஆகியவை சக்திவாய்ந்த கருவிகள் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் Snapchat இல் இளம் வயதினரையும் இளைஞர்களையும் நேரடியாகச் சென்றடைய ஆப்ஸ் சார்ந்த ஆதாரங்களைத் தொடர்ந்து உருவாக்கி மேம்படுத்துகிறோம். செப்டெம்பர் 2023 இல், பாலியல் அபாயங்கள் மற்றும் பணத்திற்க்கான பாலியல் மிரட்டல்கள் உட்பட தீங்குகளை மையமாகக் கொண்ட நான்கு புதிய இன்-ஆப் “பாதுகாப்பு Snapshot எபிசோட்களை வெளியிட்டோம். செக்ஸ்டிங்க் மற்றும் நிர்வாணங்களை உருவாக்குதல் மற்றும் பகிர்தலால் ஏற்படும் விளைவுகள், பாலியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை ஆன்லைனில் சீர்படுத்துதல் மற்றும் குழந்தை பாலியல் கடத்தல் பற்றிய பதிவுகளை நாங்கள் வழங்குகிறோம். இந்த ஆதாரங்கள் அனைத்தும் காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் (NCMEC) நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, முக்கிய புவியியல் பகுதிகளில் தொடர்புடைய ஹாட்லைன்கள் மற்றும் ஹெல்ப்லைன்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
நாங்கள் ஆன்லைன் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம், ஆனால் இன்னும் செய்ய அதிகமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கவும் மேலும் யாரும் சாத்தியமான இலக்காக இருக்கலாம் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களை விரைவாக முறியடிக்க விரும்புகிறோம், மேலும் சட்ட அமலாக்கத்திற்க்கு இன்னும் கூடுதல் செயல்படக்கூடிய சைபர் டிப்ஸ்களை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம்.
போலியான மாத்திரைகள் விற்பனை, வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும் தற்கொலை மற்றும் சுய-தீங்கு உள்ளடக்கம் உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருள் செயல்பாடு போன்ற பிற மோசமான தீங்குகளுக்கு எதிராகப் போராடும் அதே உத்திகளில் பலவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்த இடத்தில் எங்கள் பணி ஒருபோதும் தீராது என்பதை நாங்கள் உணர்கிறோம், ஆனால் Snap பயனர்களின் பாதுகாப்பில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம், மேலும் தொழில்துறை, அரசாங்கம் மற்றும் சட்ட அமலாக்கத்தில் தகவல் பரிமாற்றம் மற்றும் எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்போம்.