இணைய சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் துர்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்துப் போராட தனித்துவமான பிரச்சாரம்
ஏப்ரல் 17, 2024
இணைய சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் துர்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்துப் போராட தனித்துவமான பிரச்சாரம்
ஏப்ரல் 17, 2024
குழந்தைகளை பாலியல் சுரண்டல் மற்றும் துர்ப்பிரயோகம் செய்வது சட்டவிரோதமானது, மோசமானது மற்றும் கண்ணியமான உரையாடலின் தலைப்பாக, பெரும்பாலும் விலக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பயங்கரமான குற்றங்களை புறக்கணிக்க முடியாது. அரசின் அரங்குகள், இயக்குநர் குழுமக் கூட்டங்களில் மற்றும் சமையலறை
மேசைகளிலும் இவற்றை விவாதிக்க வேண்டும். இளம் நபர்களுக்கு இணைய பாலியல் அபாயங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும் மற்றும் பெரியவர்கள் இந்தச் சிக்கல்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும், இதன் மூலம் அவர்கள் நெருக்கடியில் இளம் நபர்களுக்கு உதவலாம். அதனால்தான் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையால் (DHS) இன்று தொடங்கப்பட்ட தனித்துவமான பொது விழிப்புணர்வு பிரச்சாரமான “Know2Protect” இன் நிறுவன ஆதரவாளராக Snap கௌரவிக்கப்படுகிறது.
சட்டத்திற்குப் புறம்பான உருக்காட்சிகளின் தயாரிப்பு மற்றும் விநியோகம் முதல் பாலியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை உறவில் வசப்பட வைத்தல் மற்றும் நிதி ரீதியாக ஊக்கமளிக்கும் "இணையப் பாலியல் மோசடி" வரை, Know2Protect குழந்தைகள் மற்றும்
பதின்பருவத்தினர்களை பாதிக்கும் பலவிதமான பாலியல் தீங்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டும். இந்தக் குற்றங்களை தடுக்க மற்றும் எதிர்த்துப் போராட உதவ இளைஞர்கள், பெற்றோர்கள், நம்பகமான பெரியவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த பிரச்சாரம் கல்வி மற்றும் அதிகாரம் அளிக்கும்.
Snap DHS உடன் ஆரம்பத்திலேயே இணைந்து செயல்பட்டு வந்துள்ளது மற்றும் நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைய, ஒரு தனித்த, ஊக்கமளிக்கும் செய்தி தேவை என்பதில் உடன்படுகிறது. இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க Snapchat-இல் கல்விரீதியான ஆவணங்களை இடுகையிட Know2Protect க்கு விளம்பரம் செய்வதற்கான இடத்தை நாங்கள் நன்கொடையாக அளித்துள்ளோம், இதன் மூலம் பதின் பருவத்தினர்களை அவர்களின் இடத்திலேயே அடையலாம், மேலும் எங்களது தளம் மற்றும் எங்களது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மையத்தில் இந்தப் பிரச்சாரத்தை இடம்பெறச் செய்வோம்.
கூடுதலாக, சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் துர்பிரயோகம் (CSEA) -இன் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அமெரிக்க பதின் பருவத்தினர்கள் (வயது 13-17) மாற்று இளம் வயதினர் )வயது 18-24) ஆகியோரிடம் ஆன்லைனில் புதிய ஆராய்ச்சியை நடத்துகிறோம், இது பிரச்சாரம் பற்றியும் இந்தக் கொடூரமான துர்பிரயோகத்தை அனைத்துத் தளங்கள் மற்றும் சேவைகளில் எதிர்க்துப் போராடும் எங்களின் முயற்சி பற்றி மேலும் தெரிவிக்கும்.
ஆராய்ச்சி முடிவுகள்
மார்ச் 28, 2024 முதல் ஏப்ரல் 1, 2024 வரை, உரிமை வயதை அடையாதவர்க்கு எதிரான பல்வேறு இணைய பாலியல் குற்றங்களுக்கான அவர்களது வெளிப்பாடு மற்றும் அவை குறித்த அறிவையும் பற்றி அமெரிக்காவைச் சார்ந்த பதின் பருவத்தினர்கள் மற்றும் இளம் வயதினர் 1037 பேரிடம் நாங்கள் கருத்துக்கணிப்பு நடத்தினோம். பங்கேற்பாளர்கள் Snapchat மட்டுமல்லாமல் பல்வேறு இணைய தளங்கள் மற்றும் சேவைகளில் அவர்களின் அனுபவங்களைக் குறிப்பிட்டு பதிலளித்தனர். சில ஆரம்ப கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:
பாலியல் தொடர்பான இணைய அபாயங்கள் பல பதின் பருவத்தினர்களுக்கும் இளம் வயதினருக்கும் பொதுவானவை, மூன்றில் இரண்டு பங்கு (68%) அவர்கள் இணையத்தில் நெருக்கமான உருக்காட்சிகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் அல்லது "உறவில் வசப்படவைத்தலை" அனுபவித்துள்ளதாக பகிர்ந்து உள்ளனர்1 அல்லது "கேட்பிஷிங்"2 நடத்தைகளை அனுபவித்திருக்கிறார்கள்.
போலி நபர்கள் ஆன்லைனில் பரவலாக உள்ளனர் மற்றும் அவர்கள் டிஜிட்டல் ஆபத்து வெளிப்பாட்டின் முக்கிய இயக்கிகளாக இருக்கின்றனர். நெருக்கமான உருக்காட்சிகளைப் பகிர்ந்தவர்கள் அல்லது உறவில் வசப்படவைத்தல் அல்லது கேட்பிஷிங் நடத்தைகளை அனுபவித்தவர்களில், 10 இல் ஒன்பது (90%) எதிராளி தங்கள் அடையாளம் பற்றி பொய் கூறியதாக சொன்னார்கள்.
நெருக்கமான உருக்காட்சியைப் பகிர்வது மற்றும் கேட்பிஷிங் ஆகியவை ஆன்லைன் "இணையப் பாலியல் மோசடி"-க்கான அதிக ஆபத்தான வழிகளாகும்.3 ஏனெனில் நெருக்கமான உருக்காட்சிகளைப் பகிர்ந்து கொண்டவர்களில் பாதி பேர் இணையப் பாலியல் மோசடியால் அச்சுறுத்தப்பட்டனர். பெண்களைக் காட்டிலும் ஆண்களே ((51% vs. 42%) இணையப் பாலியல் மோசடி மற்றும் பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றுக்கு இலக்காகிறார்கள் - இலக்கானவர்களிடமிருந்து பணம், பரிசு அட்டைகள் அல்லது மதிப்புள்ள வேறு ஏதாவது கோருவது ஆண்களிடையே மிகவும் பொதுவானது (34% vs 9%). அத்தகைய சூழ்நிலைகளில், பெண்களிடம் பெரும்பாலும் கூடுதல் பாலியல் உருக்காட்சிகளே கோரப்படுகிறது (57% vs 37%).
கெடுவாய்ப்பாக, ஒருவேளை ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாலும், இந்த மூன்று அபாயங்களில் ஒன்றை அனுபவித்த டீனேஜர்கள் மற்றும் இளம் வயதினர்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் (41%) அதை வெளிப்படுத்தவில்லை. வெறும் 37% இணைய தளத்திற்கு, சட்ட அமலாக்கத்திற்கு மற்றும் / அல்லது உறவில் வசப்படவைத்தல் பற்றி புகாரளித்தனர். ஆரோக்கியமான - ஆனால் இன்னும் போதுமானதாக இல்லாத இலக்கு வைக்கப்பட்டவர்களில் (63%) சதவீதம் பேர் சிக்கலைப் புகாரளிக்கும் ஒரே ஆபத்து நெருக்கமான உருக்காட்சிகள்; பாதிக்கும் மேலானவர்கள் (56%) அவர்கள் மூலம் பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறித்தல் பற்றி புகாரளித்தனர்.
இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் Snap-இன் டிஜிட்டல் நலனின் தற்போதைய ஆய்வுகளை அடிகோடிட்டுக் காட்டுகின்றன, கடந்த வருடம் பதின் பருவத்தினர்கள் மற்றும் இளம் வயதினர்கள் மத்தியில் இணைய பாலியல் துன்புறுத்தல் பற்றிய ஆழமான சிந்தனை அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பதின் பருவத்தினர்கள் மற்றும் இளம் வயதினர் மீது Know2Protect பிரச்சாரத்தின் தாக்கம் குறித்து அளவிட உதவ இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்த ஆய்வை மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இணைய பாலியல் துர்பிரயோகத்தை எதிர்த்துப் போராட Snap இன் பணி
இந்த சாத்தியமான தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குக் கூடுதலாக, எங்கள் சேவையிலிருந்து இந்த உள்ளடக்கதையும் நடத்தையையும் ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம்.
Snapchat-ஐ சட்டவிரோதச் செயல்பாட்டிற்கு இணக்கமில்லாத சூழலாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், மேலும் எந்தவொரு உள்ளடக்கம் அல்லது உரிமை வயதை அடையாதவர் மீது பாலியல் துர்பிரயோகம் சம்பந்தப்பட்ட செயலுக்கும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டுள்ளோம். மீறும் உள்ளடக்கத்தை நாங்கள் விரைவாக அகற்றுகிறோம், புண்படுத்தும் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் மற்றும் உலகின் எந்த இடத்தில் அந்த உள்ளடக்கம் இருந்தாலும், அவற்றை U.S. National Center for Missing and Exploited Children (NCMEC) -இடம் புகாரளிக்கிறோம். மீறும் உள்ளடக்கத்தை முன்கூட்டியே கண்டறிய நாங்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் மற்றும் Snapchat சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் செயலியைப் பயன்படுத்தாத அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிக்கலை எங்களிடமும் உள்ளூர் சட்ட அமலாக்கத்திடமும் புகாரளிக்குமாறு ஊக்குவிக்கிறோம். எங்கள் சமூக உறுப்பினர்கள் சாத்தியமான தீங்குகளில் இருந்து மற்றவகளை பாதுகாக்கச் செல்வதன் மூலம் சிறந்த சேவை செய்கிறார்கள். NCMEC இன் Take It Down முயற்சியிலும் நாங்கள் பங்கேற்கிறோம், மேலும் இளைஞர்கள் அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், தேவைப்பட்டால், திட்டத்தில் பங்கேற்கவும் ஊக்குவிக்கிறோம். Snap கடந்த ஆண்டு சேர்ந்துகொண்ட பெரியவர்களுக்கு அதையொத்த முயற்சியான StopNCII உள்ளது.)
நாங்கள் உலகம் முழுவதும் உள்ள பிற நிபுணர்களுடன் ஈடுபடுகிறோம், ஏனெனில் எந்த ஒரு நிறுவனமோ அல்லது அமைப்போ இந்தச் சிக்கல்களில் தனியாக தாக்கத்தை ஏற்படுத்தமுடியாது. WeProtect Global Alliance-இன் சர்வதேச கொள்கை இயக்குனர் குழுவில் உள்ள அனைத்துத் துறைகளையும் Snap பிரதிநிதித்துவப்படுத்துகிறது; நாங்கள் INHOPE இன் ஆலோசனைக் குழு மற்றும் UK Internet Watch அறக்கட்டளையின் நிதிக் குழுவின் உறுப்பினர்கள்; மற்றும், கடந்த ஆண்டு, தொழில்நுட்பக் கூட்டணியின் இயக்குநர்கள் குழுவின் நிர்வாகக் குழுவில் இரண்டு ஆண்டு காலத்தை நிறைவுசெய்தோம். இந்த அனைத்து அமைப்புகளும் தங்கள் இயக்கங்களின் மையத்தில் இணைய CSEA ஒழிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளன.
குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், REPORT சட்டம் மற்றும் அமெரிக்காவில் SHIELD சட்டம் போன்ற சட்டப்பூர்வ தீர்வுகளை நாங்கள் ஆதரிக்கிறோம், மேலும் துர்பிரயோகம் செய்பவர்களை நீதியின் முன் நிறுத்த சட்ட அமலாக்க முகமைகளின் விசாரணையில் நாங்கள் உதவுகிறோம். செயலியில் மற்றும் எங்கள் இணையதளம் ஆகிய இரண்டிலும் கல்வி ஆதாரங்களில் முதலீடு செய்துள்ளோம், மேலும் கடந்த ஆண்டு பல்வேறு பாலியல் அபாயங்கள் குறித்த நான்கு புதிய குறுகிய வடிவ காணொளிகளை சேர்த்துள்ளோம்.
Know2Protect ஐ ஆதரிப்பது Snap பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள பணியின் நீட்டிப்பாகும். இன்றைய அறிமுகத்திற்கு DHS-க்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் மேலும் ஒட்டுமொத்த தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு முழுவதும் இந்த மோசமான தீங்குகளை அகற்ற உதவுவதில் நாம் ஒவ்வொருவரும் வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பதற்கான அதன் முயற்சிகளைப் பாராட்டுகிறோம்.
—ஜேக்லின் பியூஷர், தளப் பாதுகாப்பின் உலகத் தலைவர்