Snap Values


டிஜிட்டல் நல்வாழ்வுக்கான Snap இன் தொடக்க கவுன்சிலை அறிமுகப்படுத்துகிறோம்

ஆகஸ்ட் 8, 2024

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இன்றைய ஆன்லைன் வாழ்க்கை நிலையைப் பற்றிய பதின்பருவத்தினரின் கருத்துகளைக் கேட்கவும் நேர்மறையான அதிக நன்மையளிக்கும் இணைய அனுபவத்திற்கான அவர்களின் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் அறிந்துகொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட Snap இன் டிஜிட்டல் நல்வாழ்விற்கான கவுன்சில் திட்டத்தை சோதனை முயற்சியாக அமெரிக்காவில் அறிமுகம் செய்து, அதன் தொடக்க அமர்விற்கான பங்கேற்பாளர் தேர்வினை அறிவித்தோம். மே மாதத்தில், கவுன்சிலின் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினோம், சிந்தனையும் ஆர்வமும் கொண்ட முதலாம் குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். 

டிஜிட்டல் நல்வாழ்விற்கானகவுன்சிலில் அமெரிக்காவின் 12 மாகாணங்களைச் சேர்ந்த 18 பதின்பருவத்தினர் பங்கேற்கின்றனர்.: 

  • டெக்சாஸிலிருந்து அலெக்ஸ், 15 வயது 

  • விஸ்கொன்சினிலிருந்து அனா, 13 வயது

  • கொலராடோவிலிருந்து பிரெய்லி, 14 வயது 

  • நியூ ஜெர்சியிலிருந்து டினு, 16 வயது 

  • பென்சில்வேனியாவிலிருந்து ஜஹான், 14 வயது

  • நியூயார்க்கிலிருந்து ஜேலின், 16 வயது; ஃபோப், 15 வயது; வேலண்டினா, 14 வயது 

  • கலிஃபோர்னியாவிலிருந்து ஜெர்மி, 16 வயது; ஜோஷ், 14 வயது; கேட்லின், 15 வயது; மோனா, 16 வயது; ஓவி, 14 வயது

  • வாஷிங்டனிலிருந்து மேக்ஸ், 15 வயது

  • இலினோயிலிருந்து மோனிஷ், 17 வயது

  • விர்ஜினியாவிலிருந்து நெடின், 16 வயது 

  • ஃபுளோரிடாவிலிருந்து சல்சபீல், 15 வயது 

  • வெர்மோன்டிலிருந்து டாமி, 16 வயது

நிகழ்ச்சியைப் பற்றியும், அது குறித்த மன்ற உறுப்பினர்களின் ஆர்வங்களைப் பற்றியும் ஆலோசிப்பதற்காகவும், குழுவின் விதிமுறைகளை வகுப்பதற்காகவும், சமூக ஊடகத்தில் எச்சரிக்கை லேபிள்களின் பயன்பாடு குறித்து சர்ஜன் ஜெனரலின் சமீபத்திய அறைகூவல் போன்ற ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மே மாதம் தொடங்கி இரண்டு முறை குழு அழைப்புகளை நடத்தியுள்ளோம். இவற்றில் எங்கள் காதுகளில் தொடர்ச்சியாக ஒலித்த விஷயம் இணைய அனுபவங்களில் சகாக்களின் அறிவுரைக்கு எந்த அளவு மதிப்பளிக்கப்படுகிறது என்பது தான், இதில் பிறரைச் சார்ந்திருக்காமல் "தங்கள் வாழ்க்கையைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள" பதின் பருவத்தினர் விரும்புகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஜூலை மாதத்தில், மன்ற உறுப்பினர்களையும் அவர்தம் காப்பாளர்களையும் நேரடிச் சந்திப்பிற்காக சாண்டா மோனிகா. சி.ஏவில் உள்ள Snap தலைமையகத்திற்கு அழைத்தோம். உடனுக்குடன் அமர்வுகள், முழுமையான குழுக் கலந்துரையாடல்கள், சிறப்பு விருந்தினர் உரைகள், மற்றும் நட்புறவை ஏற்படுத்தும் கேளிக்கை நேரங்கள் என இரண்டு நாட்களும் பரபரப்பாக இருந்தது. வெவ்வேறு பணிப் பொறுப்புகள் மற்றும் அணிகளைச் சேர்ந்த எங்களது சக Snap ஊழியர்கள் 18 பேர் பங்கேற்ற "விரைவுப் பயிற்றுவிப்பு" அமர்வின் மூலமாக தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுவது பற்றிய சிறு அனுபவத்தையும் பதின்பருவத்தினர் பெற்றுக்கொண்டனர். 

ஆன்லைன் புதைகுழிகள், பெற்றோர் கட்டுப்பாட்டுக் கருவிகள், டிஜிட்டல் மற்றும் நேரடிச் சமூகத் தொடர்புகளுக்கு இடையேயான வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் போன்ற பல்வேறு தலைப்புகளில் சுவாரசியமான உரையாடல்களும் சிந்தனைகளும் நிறைந்த சந்திப்பாக அது அமைந்தது. நாங்கள் பிரிந்து செல்லும் நேரம் வந்தபோது, காப்பாளர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தக் குழுவும் தங்கள் உள்ளூர் சமூகங்களில் பங்காற்றவும், ஆன்லைன் பாதுகாப்பிற்கான தூதுவர்களாகச் செயல்படவும் மிகுந்த ஆர்வம் பெற்றிருந்தினர். கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்த பின்வரும் கருத்தானது நம் அனைவரின் உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாக உள்ளது: “சமூக ஊடகங்களைப் பற்றிய அனைத்துப் பிரச்சினைகளிலும் பெற்றோர் மற்றும் பதின்பருவத்தினரின் பார்வை ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்றாலும், நம்மால் முடிந்த அளவிற்கு டிஜிட்டல் தளங்களில் நமது சிறப்பியல்களை வெளிக்காட்டுவதில் ஒருவர்கொருவர் ஆதரவாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதில் நாம் அனைவரும் உடன்படுகிறோம்.”

இந்தச் சந்திப்பிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை, மன்ற உறுப்பினர்களின் எதிர்காலத் திட்டங்களை விரைவில் உங்களுடன் பகிர்வோம். இந்தத் திறமிக்க குழுவின் சாதனைகளைக் கேட்டறிய எங்களுடன் தொடர்ந்து இணைப்பிலிருங்கள்!

- விராஜ் தோஷி, தளப் பாதுகாப்புத் தலைவர்

செய்திக்குத் திரும்புக