ஐரோப்பிய ஒன்றியத்தின் AI ஒப்பந்தத்தில் Snap கையொப்பமிடுகிறது
செப்டம்பர் 25, 2024
ஐரோப்பிய ஆணையம் இன்று அறிமுகம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய AI ஒப்பந்தத்தில் Snap கையொப்பமிட்டுள்ளது.
AI ஒப்பந்தத்தில் Snap இணைகிறது, ஏனென்றால் எங்கள் மதிப்புகள் மற்றும் தற்போதைய முயற்சிகள் நம்பகமான AI இன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் AI சட்டத்தின் நோக்கத்துடன் ஒத்திசைந்து இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய AI சட்டம், ஐரோப்பிய குடிமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் AI ஐ ஒழுங்குபடுத்துவதற்கான புதிய ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது. AI சட்டம் 1 ஆகஸ்ட் 2024 அன்று சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்றாலும், உயர் ஆபத்துள்ள AI அமைப்புகளின் தேவைகள் உட்பட பெரும்பாலான சட்ட விதிமுறைகள் – இடைநிலை காலத்திற்குப் பிறகே பொருந்தும். இந்த முழு அமலாக்கத்திற்கு முன்னர், ஐரோப்பிய ஆணையம் AI ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது AI சட்டம் முழுதாக செயல்படுத்தப்படுவதற்கு முன் அதன் முக்கிய சட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க நிறுவனங்களை அனுமதிக்கிறது.
AI ஒப்பந்தத்தில் கையொப்பமிடுபவராக, Snap மூன்று முக்கிய உறுதிமொழிகளை செய்துள்ளது:
நிறுவனத்தில் AI வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், AI ஆளுமை உத்தியைப் பின்பற்றுவது மற்றும் AI சட்டத்துடன் எதிர்கால இணக்கத்தை நோக்கி பணிபுரிவது
AI சட்டத்தின் கீழ் அதிக ஆபத்தாக கருதப்படும் பகுதிகளில் வழங்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட AI அமைப்புகள் வரைபடத்தை சாத்தியமான அளவிற்கு மேற்கொள்ளுதல்
தங்களது பணியாளர்கள் மற்றும் AI அமைப்புகளை அவர்களது சார்பாக கையாளும் பிற நபர்களுக்கு, அவர்களின் தொழில்நுட்ப அறிவு, அனுபவம், கல்வி மற்றும் பயிற்சி மற்றும் AI அமைப்புகள் பயன்படுத்தப்பட போகும் சூழல் ஆகியவற்றை மனதில் கொண்டு, விழிப்புணர்வு மற்றும் AI கல்வியறிவை ஊக்குவித்தல்
Snap-இன் AI ஆளுகைப் பணிகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு மற்றும் ஐயோப்பிய ஆணையத்துடன் குறிப்பாக AI அலுவலகத்துடன் மற்றும் மற்ற தொழில்நுட்பத் துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் AI சட்ட அமலாக்கத்தை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். AI மற்றும் பிற வளர்ந்து வரும், புதுமையான தொழில்நுட்பங்களில் நம்பிக்கையை உருவாக்க உதவும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.