பாதுகாப்பு வளங்கள் மற்றும் ஆதரவு

Snap பயனர்களுக்கு தேவையான வளங்களையும் ஆதரவையும் வழங்க தொழில் வல்லுநர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஆதரவு தேவைப்பட்டால் அல்லது சாட் செய்ய விரும்பினால் சில வளங்கள் இங்கே உள்ளன!
நீங்கள் எங்களின் Here For You எனும் தேடல் கருவியையும் ஆராயலாம், இது மனநலம், பதட்டம், மனச்சோர்வு, மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள், துக்கம் மற்றும் கொடுமைப்படுத்துதல் தொடர்பான சில தலைப்புகளை நீங்கள் தேடும் போது நிபுணத்துவம் வாய்ந்த உள்ளூர்மயமாக்கப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து வளங்களைக் காட்டுகிறது.
துன்பத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், பாலியல் அபாயங்கள் மற்றும் தீங்குகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்தையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அங்கு நீங்கள் உலகளாவிய ஆதரவு வளங்களின் பட்டியலையும் பார்க்கலாம்.
உலகளாவியது 🌏
MindUP (உலகளாவிய; பிரதான அலுவலகங்கள் US, UK மற்றும் CA -வில் உள்ளது)
நம்பிக்கை, தாங்குதன்மை மற்றும் இரக்கத்தைப் பராமரிக்கும் அதே வேளையில் மன அழுத்தத்தைக் கையாளுவதற்கும் பள்ளியில் செழித்தோங்குவதற்கும் கருவிகள் மற்றும் அறிவை வழங்குவதன் மூலம் 3 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு MindUP உதவுகிறது.

வட அமெரிக்காவிற்கான வளங்கள்

அமெரிக்கா (US) 🇺🇸
National Suicide Prevention Lifeline
அழக்கவும் அல்லது செய்தி அனுப்பவும் 988 அல்லது உரையாடவும் 988lifeline.org
The National Suicide Prevention Lifeline தற்கொலை எண்ணம் அல்லது மன உளைச்சலில் உள்ளவர்களுக்கு 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் இலவச மற்றும் ரகசிய உணர்வுரீதியான ஆதரவை வழங்குகிறது. அமெரிக்கா முழுவதும்.Substance Abuse and Mental Health Services Administration

நேஷனல் ஹெல்ப்லைன்:
1-800-662-HELP (4357)SAMHSA-இன் நேஷனல்
ஹெல்ப்லைன் ஓர் இலவச, ரகசியமான, 24/7 தகவல் சேவை மற்றும் மனநலம் மற்றும்/அல்லது போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகளை எதிர்கொள்பவர்களுக்கான சிகிச்சைப் பரிந்துரையாகும். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கிடைக்கிறது.

(செயல் நிலையில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு)
அழைக்கவும் 1 800 273 8255 அல்லது SMS: 838 255
Veteran Crisis Line என்பது நீங்கள் VA -வில் பதிவு செய்யாவிட்டாலும் அல்லது VA சுகாதாரச் சேவையில் பதிவு செய்திருந்தாலும் எவருக்கும் கிடைக்கும் ஒரு இலவசமான, இரகசியமான சேவையாகும்.

National Alliance on Mental Illness
அழைக்கவும் 1 800 950 6264 அல்லது SMS: NAMI என்று 741741 என்ற எண்ணுக்கு அனுப்பவும்
NAMI பரிந்து பேசுதல், கல்வி, ஆதரவு மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றை வழங்குகிறது, இதனால் மனநோயால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தனிநபர்களும் குடும்பங்களும் சிறந்த வாழ்க்கையைக் கட்டமைக்க முடியும்.

Active Minds
Active Minds என்பது மனநல விழிப்புணர்வு மற்றும் இளைஞர்களுக்கான கல்வியை ஆதரிக்கும் நாட்டின் முக்கிய இலாப நோக்கமற்ற அமைப்பாகும். சில உதவிகரமான பக்கங்கள்,
Anxiety and Depression Association of America
அழைக்கவும் 240 485 1001
(ADAA) என்பது கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மூலம் கவலை, மனச்சோர்வு, OCD, PTSD மற்றும் அவற்றுடன் தோன்றும் கோளாறுகள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக, சிகிச்சை அளிப்பதற்காக மற்றும் குணப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
National Eating Disorders Assoc

iation Association அழைக்கவும் 800 931 2237 National Eating Disorders Association (NEDA) உண்ணும் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. NEDA, உண்ணும் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை ஆதரிக்கிறது, மேலும் தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் தரமான பராமரிப்புக்கான அணுகல் ஆகியவற்றுக்கான வினையூக்கியாகச் செயல்படுகிறது।
Trans Lifeline
அழைக்கவும் 877 565 8860
Trans Lifeline என்பது ஒரு திருநங்கை/திருநம்பி சமூகத்தால் நடத்தப்படும் அமைப்பாகும், இது திருநங்கை/திருநம்பி மக்களுக்கு வாழவும் செழித்தோங்கவும் தேவையான சமூகம், ஆதரவு மற்றும் வளங்களுடன் அவர்களை இணைக்கிறது.
Hopeline
அழைக்கவும் 1 877 235 4525
தங்கள் அழைப்பாளர்களுக்கு அக்கறையுடன், தீர்ப்பளிக்கும் விதத்திலல்லாமல் செவிசாய்ப்பதற்காக ஈடுபாட்டுடன் கவனிக்கும் நுட்பங்களில் Hopeline கவனம் செலுத்துகிறது. அவை தொலைபேசி அழைப்பில் அறிவுரை வழங்காது, மாறாக மற்ற அமைப்புகளுக்குப் பரிந்துரை செய்யும்
கனடா (CA) 🇨🇦
Canada Suicide Prevention Services (CSPS)
1 833 456 4566 என்ற எண்ணை அழைக்கவும்
Crisis Services Canada (CSC) கனடா மக்களுக்குத் தற்கொலை தடுப்பு மற்றும் ஆதரவை வழங்குகிறது.
Youthspace (இணையவழி நெருக்கடி மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவு அரட்டை. அரட்டைகள் ரகசியமானவை மற்றும் பெயர் அறியப்படாதவை.)
SMS: 778 783 0177
Youthspace.ca என்பது இணையவழி நெருக்கடி மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவு அரட்டை ஆகும். நாங்கள் மதிப்பிடாமல் செவிசாய்க்கிறோம் மற்றும் அரட்டைகளை ரகசியமாகவும் பெயர் அறியப்படாமலும் வைக்கிறோம்.

Suicide Action Montreal
1 866 APPELLE (277-3553) என்ற எண்ணை அழைக்கவும்
தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் நபர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தரமான சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் தற்கொலை மற்றும் அதன் தாக்கங்களைத் தடுப்பதே Suicide Action Montréal-இன் குறிக்கோள் ஆகும். கூடுதலாக, சமூகத்தில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் அர்ப்பணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டை SAM நம்பியுள்ளது.

Hope for Wellness Helpline
1 855 242 3310 என்ற எண்ணை அழைக்கவும்
கட்டணமில்லா உதவி எண்ணை ஒரு நாளில் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் அழைக்கவும் அல்லது இணைய வழியில் அரட்டை அடிக்கவும். தொலைபேசி அழைப்பு மற்றும் அரட்டை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் கிடைக்கிறது, மேலும் கோரிக்கையின் பேரில் க்ரீ, ஓஜிப்வே மற்றும் இனுக்டிட் மொழிகளிலும் கிடைக்கும்.

Amelia Rising
705 476 3355 என்ற எண்ணை அழைக்கவும்
Amelia Rising Sexual Violence Support Centre, பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையை அனுபவித்த 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமான, முற்றிலும் ரகசியமான ஆதரவை வழங்குகிறது.

Crisis Text Line
SMS: HOME என்று 686868 என்ற எண்ணுக்கு அனுப்பவும்
Kids Help Phone-ஆல் இயக்கப்படும் Crisis Text Line, Kids Help Phone மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியான Crisis Text Line ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு சேவை கூட்டாண்மை ஆகும், இது கனடாவில் இளைஞர்களுக்கு முதல் முறையாக, 24/7, நாடு தழுவிய இலவசக் குறுஞ்செய்தி சேவையை வழங்குகிறது.

ஐரோப்பாவிற்கான வளங்கள்

ஆஸ்திரியா (AT) 🇦🇹
Rat auf Draht
அழைக்கவும் 147
Rat auf Draht குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்கு எந்த நேரத்திலும் - பெயர் அறியப்படாமல் - கட்டணமின்றி ஆலோசனைகளை வழங்குகிறது.
TelefonSeelsorge
142-ஐ அழைக்கவும்
Telefon Seelsorge நெருக்கடியான சூழ்நிலையில் ஆதரவை வழங்குகிறது. 142 என்ற அவசரகால எண்ணில் நீங்கள் எங்களை ஒரு நாளில் 24 மணிநேரமும் இலவசமாகத் தொடர்புகொள்ளலாம்|
பெல்ஜியம் (BE) 🇧🇪
Zelfmoord 1813
1813 என்ற எண்ணை அழைக்கவும்
தற்கொலை தடுப்புக்கான மையமானது தற்கொலைக்கு முடிவுகட்டுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த அமைப்பு தற்கொலைக்கான ஹாட்லைன் மற்றும் விரிவான ஆராய்ச்சி சேவைகளை வழங்குகிறது.
Child Focus
116 000
என்ற எண்ணை அழைக்கவும் காணாமல் போன குழந்தைகளைப் பற்றியும், சிறார்களின் பாலியல் சுரண்டலைப் பற்றியும் புகாரளிக்க Child Focus பெயர் அறியப்படாத 24/7 ஹாட்லைனை வழங்குகிறது.
குரோஷியா (HR) 🇭🇷
HRABRI Telefon
0800 0800 (பெரியவர்களுக்கு) அல்லது 116 111 (பதின் பருவத்தினருக்கு) என்ற எண்ணை அழைக்கவும்
குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குகிறது - குழந்தைகளுக்கான துணிச்சலான தொலைபேசி எண் 116 111; பெற்றோருக்கான துணிச்சலான தொலைபேசி எண் 0800 0800. அரட்டை மற்றும் மின்னஞ்சல்.
டென்மார்க் (DK) 🇩🇰
Livslinien
70 201 201 என்ற எண்ணை அழைக்கவும்
Livslinien என்பது தற்கொலை முயற்சிகளைக் குறைக்கும் நோக்கில் நிபுணர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கும் தற்கொலை ஆலோசனை நேரடி இணைப்பு ஆகும்.
BørneTelefonen
116 111 என்ற எண்ணை அழைக்கவும்
Children's Phone என்பது குழந்தைகளுக்கான ஆலோசனை, ஆறுதல் அல்லது கேட்க நேரம் இருக்கும் பெரியவர்களுக்கான இணைப்பு ஆகும்.
எஸ்டோனியா (EE) 🇪🇪
Eluliin
655 8088 என்ற எண்ணை அழைக்கவும்
Life Line ஒரு நிவாரண மையமாக எஸ்டோனியன்-ஸ்வீடிஷ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சூசைடாலஜியின் இயக்குனர் ஏரி வார்னிக் தலைமையில் உருவாக்கப்பட்டது. தனிமையில் உள்ள, மகிழ்ச்சியற்ற, மனச்சோர்வு மற்றும் / அல்லது தற்கொலை எண்ணம் கொண்ட நபர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறது.
ஃபின்லாந்து (FI) 🇫🇮
Suomen Mielenterveysry
09 2525 0111 என்ற எண்ணை அழைக்கவும்
MIELI ஃபின்னிஷ் மனநலச் சங்கம் என்பது பொதுச் சுகாதாரம் சார்ந்த மற்றும் அரசு சாரா ஒரு அமைப்பாகும். இந்தச் சங்கம் ஃபின்லாந்தில் மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் தடுப்பு மன ஆரோக்கியப் பணிகளைச் செய்கிறது|
பிரான்ஸ் (FR) 🇫🇷
E-Enfance
3018 என்ற எண்ணை அழைக்கவும்
டிஜிட்டல் வன்முறைக்கு எதிரான இந்தப் புதிய தேசிய எண், டிஜிட்டல் பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு இலவசம்-- 100% பெயர் அறியப்படாதது, இலவசமானது மற்றும் ரகசியமானது.
Suicide Écoute
01 45 39 40 00 என்ற எண்ணை அழைக்கவும்
Suicide Ecoute என்பது வாழ்க்கையினை முடித்துக் கொள்ள யோசிப்பவர்களுக்கும் அல்லது முடிவினை எடுத்தவர்களுக்கும் அதிலிருந்து மீள உதவக் கூடிய அமைப்பு. ஒவ்வொருவரும் தங்கள் துன்பங்களை வெளிப்படுத்த, முழுமையாக அநாமதேயமாக தகவலளிக்க அனைவரையும் Suicide Ecoute அனுமதிக்கிறது.
SOS Suicide Phénix
01 40 44 46 45 என்ற எண்ணை அழைக்கவும்
SOS Suicide Phoenix France Federation தற்கொலைகளைத் தடுப்பது மற்றும் மருத்துவ-சமூகத் துறை நடிகர்கள் மூலம் ஒட்டுமொத்தமாகத் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜெர்மனி (DE) 🇩🇪
TelefonSeelsorge
0800 111 0 111 அல்லது 0800 111 0 222 என்ற எண்ணை அழைக்கவும்
Telefonseelsorge 8,000-க்கும் மேற்பட்ட தன்னார்வ ஊழியர்களைக் கொண்ட ஓர் தன்னார்வ அமைப்பாகும், இது தொலைபேசி, அரட்டை, மின்னஞ்சல், மற்றும் நேரடியாக மன நல உதவி தேவைப்படுவோருக்கு எந்த நேரமும் ஆலோசனை வழங்கி உதவக் கூடிய அமைப்பாகும்.
Nummer gegen Kummer
116 111 என்ற எண்ணை அழைக்கவும்
Nummer gegen Kummer eV (NgK) ஜெர்மனி முழுவதும் உள்ள குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் பெற்றோர்களுக்கான மிகப் பெரிய இலவசத் தொலைபேசி வழி ஆலோசனை சேவை வழங்கும் ஒரே அமைப்பாகும்.
கிரேக்கம் (GR) 🇬🇷
Hamogelo
1056 என்ற எண்ணை அழைக்கவும்
"The Smile of the Child" என்பது குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக Andreas Yannopoulos என்ற 10 வயது சிறுவனால் 1995 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, ஒரு பதிவு செய்யப்பட்ட NGO ஆகும். 18 வயதிற்குட்பட்ட பதின்பருவத்தினருக்கானது.
அயர்லாந்து (IE) 🇮🇪
Pieta House
1 800 247 247 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது SMS: HELP என்று 51444 என்ற எண்ணுக்கு அனுப்பவும்
சுயத் தீங்கு விளைவிப்பவர்கள், தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்கள் அல்லது தற்கொலையால் யாரையாவது இழந்து துயரப்படுபவர்களுக்கு Pieta இலவசமாகச் சிகிச்சை வழங்குகிறது.
Belong To
01 670 6223 என்ற எண்ணை அழைக்கவும்
LGBTI+ இளைஞர்கள் அவர்களின் அடையாளங்கள் மற்றும் அனுபவங்களின் பன்முகத்தன்மையிலும் சமமாகவும், பாதுகாப்பாகவும், மதிப்புடனும் இருக்கும் ஒரு உலகமே BeLonG To-வின் நோக்கமாகும்.
Jigsaw — இளைஞர்களின் மன ஆரோக்கியத்திற்கான தேசிய மையம்
353 1 472 7010 என்ற எண்ணை அழைக்கவும்
Jigsaw என்பது வழிகாட்டல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி மூலம் இளைஞர்களின் மன ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு தொண்டு நிறுவனமாகும்.
ReachOut Ireland
ReachOut Ireland என்பது மனநலப் பிரச்சினைகளுடைய இளைஞர்களுக்குத் தகவல்கள் மற்றும் நடைமுறை கருவிகளுக்கான அணுகலை வழங்கும் ஒரு இணையவழி மனநலச் சேவை வழங்குநராகும்.
இத்தாலி (IT) 🇮🇹
Telefono Amico
199 284 284 என்ற எண்ணை அழைக்கவும்
Telefono Amico என்பது தனிமை, வேதனை, சோகம், அசௌகரியம் அல்லது கோபம் ஆகியவற்றை உணரும் எவருக்கும் செவிசாய்க்க உறுதிபூண்டுள்ள ஒரு தன்னார்வ அமைப்பாகும்.
லித்துவேனியா (LT) 🇱🇹
Lithuanian Association of Emotional Support Lines
ஒரு நபரின் உணர்வுபூர்வமான வலிகளைக் குறைக்கவும், கடினமான சூழல்களிலிருந்து வெளிவரவும் அதனை எதிர்த்து நிற்கவும் இலவசமாக, எளிதாகக் கிடைக்கக் கூடிய வகையில், இக்கட்டான தருணங்களில் பெயர் அறியாமல் ஆதரவினை அளிப்பதே LEPTA-வின் நோக்கமாகும்.
Jaunimo Linija
8 800 28888 என்ற எண்ணை அழைக்கவும்
தேவையுள்ளவர்களுக்குத் தொலைபேசி, எழுத்துப்பூர்வக் கடிதம் அல்லது ஆன்லைன் அரட்டை மூலம் ஆதரவினை Jaunimo Linija வழங்குகிறது. நீங்கள் தெரிவிக்கும் அனைத்துமே உங்களுக்கும் யூத் லைனிற்கும் இடையில் மட்டுமே இருக்கும்।
லக்சம்பர்க் (LU) 🇱🇺
Kanner-Jugendtelefon
116 111 என்ற எண்ணை அழைக்கவும்
KJT-இன் செயல்பாடு என்பது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும் மற்றும் தடைகள் இல்லாமலும் செவிசாய்த்து உதவியை வழங்குவதன் மூலம் வழங்கப்படும் ஒரு வளமாகும்.
BEE SECURE
BEE SECURE என்பது லக்சம்பர்க்கின் பாதுகாப்பான இணைய மையமாகும். இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காகச் செய்தி, ஃபாக்ட்ஷீட்கள், நிகழ்வுகள் மற்றும் உதவிக்குறிப்புகள் மூலம் வளங்களை வழங்குதல்!
மொரிசியஸ் (MU) 🇲🇺
Befrienders Mauritius
230 800 93 93 என்ற எண்ணை அழைக்கவும்
Befrienders உலகளாவிய மையங்கள் துன்பத்தில் இருப்பவர்களுக்குப் பேசுவதற்கும் செவி சாய்ப்பதற்கும் ஒரு திறந்தநிலை இடத்தை வழங்குகிறது. இது தொலைபேசி ஹெல்ப்லைன்கள், குறுஞ்செய்தி அனுப்புதல், நேருக்கு நேர் தொடர்புகள், இணைய வழி அரட்டை, அவுட்ரீச் மற்றும் உள்ளூர் கூட்டாண்மைகள் மூலமாகச் செய்யப்படுகிறது.
நெதர்லாந்து (NL) 🇳🇱
113 Suicide Prevention
0900 0113 என்ற எண்ணை அழைக்கவும்
Foundation 113 என்பது தற்கொலையினை தடுப்பதற்கான தேசிய அமைப்பாகும். யாரும் தனிமையில் இறந்து தற்கொலை செய்துகொள்ளாத ஒரு நாட்டை நோக்கி செயல்படுவதே அமைப்பின் நோக்கமாகும்|
MiNd Netherlands
088 554 32 22 என்ற எண்ணை அழைக்கவும்
MiND என்பது இணையத்தில் சட்டவிரோத, பாரபட்சமான அறிக்கைகளுக்கான நெதர்லாந்து தேசிய ஹாட்லைன் ஆகும். ஹாட்லைன் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது|
நார்வே (NO) 🇳🇴
Kirkens SOS
22 40 00 40 என்ற எண்ணை அழைக்கவும்
Kirkens SOS என்பது 24-மணி நேரத் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் உடனடித் தகவல் ஆதரவு வாயிலாகத் தற்கொலையினைத் தடுக்க மற்றும் பொங்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஓர் மதம் சார்ந்த அமைப்பாகும்.
Mental Helse Hjelpetelefonen
116 123 என்ற எண்ணை அழைக்கவும்
மன நலம் அதிகப்படியான வெளிப்படைத் தன்மை, மன நலச் சிக்கல்களைத் தடுத்தல் மற்றும் சிறந்த ஆரோக்கிய நலத்தினைப் பெற முயல்கிறது. பயனர்களும் உறவினர்களும் மன ஆரோக்கியம் குறித்து அனுபவம் மற்றும் அறிவாற்றலினை கொண்டிருப்பர், அதனை பொது அதிகாரிகள், தொழில்முறை சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் தெரிவிக்க விரும்புகிறோம்|
போலந்து (PL) 🇵🇱
Telefon Zaufania dla Dzieci i Młodzieży
116 111 என்ற எண்ணை அழைக்கவும்
நாங்கள் கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவும் ஒரு குழுவாகும். நீங்கள் எதை அனுபவிக்கிறீர்கள் என்பதை எங்களிடம் கூறலாம்|
போர்ச்சுகல் (PT) 🇵🇹
SOS VOZ AMIGA
808 237 327 அல்லது 210 027 159 என்ற எண்ணை அழைக்கவும்
தனிமை, நோய், உடைந்த குடும்ப உறவுகள், போதைப் பழக்கம், மோசடி மற்றும் பல்வேறு உணர்ச்சிகரமான சூழ்நிலைகளால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க மக்களிடமிருந்து அழைப்புகளை நாங்கள் பெறுகிறோம். எங்கள் ஆதரவில், மதிப்புகளை தீர்ப்பாக வழங்கமாட்டோம்| பெயர் வெளியே தெரியாமல் மற்றும் பாதுகாப்பான முறையில் குறைகளை கேட்க தோள் கொடுக்கிறோம்| உங்களுக்கு தேவையெனில், தயங்காதீர்கள்| எங்களை அழையுங்கள்| நாங்கள் அக்கறை கொள்கிறோம்!
ருமேனியா (RO) 🇷🇴
Alianţa Română de Prevenţie a Suicidului
0800 801 200 என்ற எண்ணை அழைக்கவும்
The Romanian Suicide Prevention Alliance (ARPS) என்பது தற்கொலையைத் தடுப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தைப் பராமரித்து மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
செர்பியா (RS) 🇷🇸
Centar Srce
0800 300 303 என்ற எண்ணை அழைக்கவும்
தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் அரட்டை மூலம் நெருக்கடியில் உள்ள மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் தற்கொலை தடுப்பை வழங்குவதே மையத்தின் நோக்கம் ஆகும். ஒருவர் உணரும் துன்பத்தைத் தணித்துத் தற்கொலை உணர்வுகளின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
சிலோவாக்கியா (SK) 🇸🇰
Linka Detskej Istoty
116 000 என்ற எண்ணை அழைக்கவும்
தேவையின்போது யாரையாவது தொடர்புகொள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உதவுகிறது. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு ஆண்டில் 365 நாட்களும் இந்தத் தொலைபேசி எண் செயல்பாட்டில் இருக்கும்.
ஸ்லோவேனியா (SI) 🇸🇮
Enska Svetovalnica – Krizni Center
031 233 211என்ற எண்ணை அழைக்கவும்
மகளிர் ஆலோசனை சங்கம் என்பது ஒரு பொது நல மனிதாபிமான அமைப்பாகும், இது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் உதவி மற்றும் சுய உதவித் துறையில் செயல்படுகிறது.
TOM – Telefon Za Otroke in Mladostnike
116 111 என்ற எண்ணை அழைக்கவும்
TOM என்பது Friends of Youth Association of Slovenia (ZPMS) கட்டமைப்பிற்குள் இயங்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தொலைபேசி ஆகும்.

Društvo Zaupni telefon Samarijan
116 123 என்ற எண்ணை அழைக்கவும்
மன அழுத்தத்தில் உள்ள தனிநபர் நாளின் எந்த நேரத்திலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறைகள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஒரே நேரத்தில் இரண்டு தொலைபேசிகளில் பேசுவதற்கு கிடைக்க வேண்டும் என்பதே சங்கத்தின் நோக்கமாகும்.
ஸ்பெயின் (ES) 🇪🇸
Teléfono de la Esperanza
717 003 717 என்ற எண்ணை அழைக்கவும்
Telefono de la Esperanza என்பது ஸ்பானிஷ்-போர்ச்சுகீசிய மொழி பேசும் உலகில் அவசரமான, இலவசமான நெருக்கடி தலையீட்டால் நெருக்கடி சூழ்நிலைகளில் மக்களுக்கு உணர்ச்சி ரீதியான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஒரு சமூக அமைப்பாகும்.
Internet Segura for Kids
017 என்ற எண்ணை அழைக்கவும்
Safe Internet for Kids (IS4K) என்பது ஸ்பெயினில் உள்ள சிறார்களுக்கான இணையப் பாதுகாப்பு மையம் ஆகும், மேலும் இது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே இணையம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்வீடன் (SE) 🇸🇪
Mind
90 101 என்ற எண்ணை அழைக்கவும்
ஆரோக்கியமான நபர்களின் மனச் சமநிலையையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்கவும், ஆபத்தான நிலையில் உள்ள நபர்களின் நரம்பு சார்ந்த மற்றும் மன நோய்களைத் தடுக்கவும், இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பொருத்தமான கவனிப்புகளின் மூலம் மேம்படுத்தவும், மனநலப் பராமரிப்பை ஊக்குவிக்கிறது.
ஸ்விட்சர்லாந்து (CH) 🇨🇭
தொலைபேசி எண் 143
143 என்ற எண்ணை அழைக்கவும்
உதவிகரமான உரையாடல் அல்லது ஆதரவான இணையவழி தொடர்பை விரும்பும் நபர்களுக்கு வழங்குதல்.
யுனைடெட் கிங்டம் (UK) 🇬🇧
Samaritans அழைக்கவும் 116 12
3 Samaritans என்பது மக்கள் அவர்களின் கவலைகளைக் கூறு

வதைக் கேட்டு உதவி செய்யும் ஒரு தொண்டு அமைப்பாகும் PAPYRUS Prevention of Young Suicide HOPELineUK
அழை
க்கவும் 0 800 068 41 41 அல்லது SMS: 07860039967
PAPYRUS என்பது தற்கொலை எண்ணங்களை கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும், ஒரு இளைஞன் தற்கொலையைப் பற்றி சிந்திக்கக்கூடும் என்று கவலைப்படுபவர்களுக்கும் ரகசியமான ஆதரவு மற்றும் ஆலோசனையை வழங்கும் சேவை ஆகும்.
UK Safer Internet Centre
UK Safer Internet Centre என்பது Childnet, South West Grid for Learning மற்றும் Internet Watch Foundation என்ற மூன்று முன்னணி தொண்டு நிறுவனங்களின் கூட்டணி ஆகுன்.
Campaign Against Living Miserably
0 800 58 58 58 என்ற எண்ணை அழைக்கவும்
எங்களது உதவி எண் UK-வில் உள்ளவர்களில் கவலையுடையவர்கள் அல்லது எதாவது காரணத்திற்காகத் தடையைச் சந்தித்தவர்கள், பேச விரும்புபவர்கள் அல்லது தகவல் மற்றும் ஆதரவைப் பெற விரும்புபவர்களுக்கானதாகும்.

Mind
0 300 123 3393 என்ற எண்ணை அழைக்கவும்
மனநலப் பிரச்சினையை எதிர்கொள்ளும் எவரையும் ஊக்கப்படுத்த நாங்கள் ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்குகிறோம்.

Revenge Porn Helpline
0345 6000 459 என்ற எண்ணை அழைக்கவும்
Revenge Porn Helpline ரிவெஞ்ச் போர்ன் என்று பொதுவாக அழைக்கப்படும் நெருக்கமாக இருக்கும் படத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை அனுபவிக்கும் 18+ வயதினருக்கு இந்த உள்ளடக்கத்தை நீக்க உதவுவதுடன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. மின்னஞ்சல் help@revengepornhelpline.org.uk.
Action Fraud
அழைக்கவும் 0300 123 2040
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் நீங்கள் மோசடிக்கு ஆளாகியிருந்தால், ஏமாற்றப்பட்டிருந்தால் அல்லது இணையக் குற்றங்களை அனுபவித்திருந்தால், Action Fraud நீங்கள் புகாரளிக்க வேண்டிய மோசடி மற்றும் இணையக் குற்றங்களுக்கான UK இன் தேசிய அறிக்கை மையமாகும்

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனிற்கான வளங்கள்

அர்ஜென்டினா (AR) 🇦🇷
Hablemos de Todo
Hablemos de Todo வலைதளம் மூலமாகப் பெயர் அறியப்படாத அரட்டையை வழங்குகிறது. உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேசவும், கேள்விகளைக் கேட்கவும், உங்களின் அனைத்துச் சந்தேகங்களையும் சுதந்திரமாக எடுத்துக்கொள்வதற்குமான ஒரு இடம்|
பஹாமாஸ் (BS) 🇧🇸
National Hotline for Crisis Intervention
242 322 2763 என்ற எண்ணை அழைக்கவும்
சமூகச் சேவை துறையானது குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கான ஒரு ஹாட்லைனை வழங்குகிறது, மேலும் தற்போதைய வாழ்க்கை சவால்களால் மனச்சோர்வடைந்த, உணர்ச்சி மிகுதியால் பாதிக்கப்பட்ட அல்லது சமாளிப்பதில் சிரமங்களை அனுபவிக்கும் நபர்களுக்கான ஆலோசனைகளையும் சமீபத்தில் சேவையில் சேர்த்தது.
பிரேசில் (BR) 🇧🇷
O CVV – Centro de Valorização da Vida
188 என்ற எண்ணை அழைக்கவும்
Centro de Valorização da Vida (CVV) என்பது இலவசமான, கூரிய நோக்குடைய உணர்ச்சி சார்ந்த ஆதரவு மற்றும் தற்கொலை தடுப்பு சேவைகளை வழங்கும் இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
சிலி (CL) 🇨🇱
Todo Mejora
பாலியல் ரீதியிலான நோக்குநிலை, அடையாளம் மற்றும் பாலின வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடு காரணமாக, கொடுமைப்படுத்துதல் மற்றும் தற்கொலை நடத்தைக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் நல்வாழ்வை Todo Mejora ஊக்குவிக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Todo Mejora பாதுகாப்பான மணிநேரம் வழங்குகிறது, அதில் ஊழியர்கள் உங்களுடன் நேரடியாக அரட்டையடிக்க உள்ளனர்.
கயானா (GY) 🇬🇾
The Caribbean Voice
The Caribbean Voice என்பது தற்கொலை தடுப்பு, மன நலம், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடுதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளுக்கான உலகளாவிய வளங்களை வழங்குகிறது.
மெக்சிகோ (MX) 🇲🇽
SAPTEL55 5259 8121
என்ற எண்ணை அழைக்கவும்
SAPTEL என்பது 30 வருடங்களாக இயங்கி வரும் மன ஆரோக்கிய மற்றும் தொலைதூர மருந்துகள் சேவையாகும். SAPTEL என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட, பயிற்சி பெற்ற மற்றும் மேற்பார்வையிடப்பட்ட உளவியலாளர்கள் கலந்து கொண்டு இலவச ஆலோசனை, பரிந்துரை, உளவியல் ஆதரவு, உளவியல் சிகிச்சை ஆலோசனை மற்றும் உணர்வு பூர்வ நெருக்கடி சூழல் தலையீடு ஆகியவற்றை வழங்கும் தொழில்முறை திட்டமாகும். மெக்சிகன் குடியரசு முழுமைக்கும் SAPTEL சேவைகள் வழங்கி வருகிறது|
Alianza por la seguridad en internet
Alianza por la seguridad en internet (ASI) Mexico என்பது குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு டிஜிட்டல் குடியுரிமை மற்றும் பொறுப்பாக இணையத்தினைப் பயன்படுத்துவது குறித்துக் கல்வி போதிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

ஆப்பிரிக்காவுக்கான வளங்கள்

மொரிசியஸ் (MU) 🇲🇺
Befrienders Mauritius
230 800 93 93 என்ற எண்ணை அழைக்கவும்
Befrienders உலகளாவிய மையங்கள் துன்பத்தில் இருப்பவர்களுக்குப் பேசுவதற்கும் செவி சாய்ப்பதற்கும் ஒரு திறந்தநிலை இடத்தை வழங்குகிறது. இது தொலைபேசி ஹெல்ப்லைன்கள், குறுஞ்செய்தி அனுப்புதல், நேருக்கு நேர் தொடர்புகள், இணைய வழி அரட்டை, அவுட்ரீச் மற்றும் உள்ளூர் கூட்டாண்மைகள் மூலமாகச் செய்யப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா (ZA) 🇿🇦
SADAG — The South African Depression and Anxiety Group
0800 567 567என்ற எண்ணை அழைக்கவும்
The South African Depression and Anxiety Group (SADAG) நோயாளிக்காகப் பரிந்து பேசுவதில், கல்வியில் மற்றும் நாட்டில் மனநோயின் வடுக்களை நீக்குவதில் முன்னணியில் உள்ளது. தென்னாப்பிரிக்கா முழுவதும் மனநலம் சார்ந்த கேள்விகளுடன் உள்ள நோயாளிகளுக்கும் அழைப்பாளர்களுக்கும் உதவுவதில் இதன் நிபுணத்துவம் உள்ளது|
Lifeline
0861 322 322 என்ற எண்ணை அழைக்கவும்
உணர்ச்சி ரீதியான ஆரோக்கியத்தை ஏற்றுக்கொள்ள ஏகுர்ஹுலேனி முழுவதும் உள்ள தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் வசதி செய்து தருவதற்காக.
The Triangle Project (LGBTI நபர்கள், துணைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக)
021 422 0255 என்ற எண்ணை அழைக்கவும்
Triangle Project என்பது ஆண் பெண் ஓரினச் சேர்க்கையாளர், ஆண் ஓரினச் சேர்க்கையாளர், இருபால் சேர்க்கையாளர், திருநங்கைகள், இடைப்பட்ட பாலினத்தவர் மற்றும் வினோதமான (LGBTIQ) நபர்கள், அவர்களின் துணைகள் மற்றும் குடும்பங்களுக்கான அரசியலமைப்பு சார்ந்த உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்வதை உறுதி செய்வதற்காகத் தொழில்முறை சேவைகளை வழங்கும் ஒரு இலாப நோக்கமற்ற மனித உரிமை அமைப்பாகும்.

LifeLine Pietermaritzburg
033 342 4447 என்ற எண்ணை அழைக்கவும்
LifeLine மற்றும் Rape Crisis எனச் செயல்படும் LifeLine Pietermaritzburg என்பது அத்தகைய சேவை தேவைப்படும் எவருக்கும் பொதுவான ஆலோசனையை இலவசமாக வழங்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட சிவில் சமூக அமைப்பாகும்.

ஆசியாவிற்கான வளங்கள்

சீனா (CN) 🇨🇳
Beijing Suicide Research and Prevention Center
010 8295 1332 என்ற எண்ணை அழைக்கவும்
Beijing Suicide Research and Prevention Center துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுகிறது.
Lifeline Shanghai
400 821 1215 என்ற எண்ணை அழைக்கவும்
Lifeline என்பது ஒரு இலவசமான, ரகசியமான மற்றும் பெயர் அறியப்படாத ஆதரவு சேவையை வழங்குகிறது; உணர்ச்சி ரீதியான துன்பம் அல்லது நெருக்கடி காலங்களில் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான ஆதரவை வழங்க உதவியாளர்கள் உள்ளனர்.

ஹாங்காங் பிரதேசம்
The Samaritan Befrienders Hong Kong (香港撒瑪利亞防止自殺會)
2389 2222 என்ற எண்ணை அழைக்கவும்
The Samaritan Befrienders Hong Kong சேவையானது ஆர்வமிக்க தன்னார்வலர்களின் குழுவினால் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு உதவும் மனதுடன், அவர்கள் உணர்வுப்பூர்மாக அழுத்தத்தில் உள்ளவர்கள், விரக்தியடைந்தவர்கள், ஆதரவற்றவர்கள் அல்லது தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு 24-மணி நேர உடனடி உணர்வுப் பூர்வமான மன அமைதியளிக்கும் சேவையினை வழங்குகிறார்கள்|
The Samaritans Hong Kong (香港撒瑪利亞會)
2896 0000 என்ற எண்ணை அழைக்கவும்
பிரச்சனை எவ்வளவு மன உளைச்சல் ஏற்படுத்தக் கூடியதாக அல்லது இயல்பானதாக இருந்தாலும் சரி Samaritans கேட்கத் தயாராக உள்ளனர். நாங்கள் அறிவுரை வழங்கவோ அல்லது என்ன செய்ய வேண்டும் என்றோ கூற மாட்டோம். நிபந்தனையற்ற உணர்வு பூர்வமான ஆதரவினை வழங்கவே நாங்கள் இங்குள்ளோம்.
இந்தியா (IN) 🇮🇳
AASRA
022 2754 6669 என்ற எண்ணை அழைக்கவும்
Aasra என்பது தனிமை உணர்வு, துன்பகரமான உணர்வு மற்றும் தற்கொலை உணர்வைக் கொண்டவர்களுக்கான நெருக்கடி தலையீட்டு மையம் ஆகும். மனச்சோர்வுடையவர்கள் மற்றும் தற்கொலை உணர்வுடையவர்களுக்குத் தன்னார்வமான, தொழில்முறையான மற்றும் அடிப்படையில் ரகசியமான கவனிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் மனநோயைத் தடுக்கவும் கையாளவும் உதவுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்.
Sneha India
91 44 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்
Sneha என்பது இந்தியாவில் சென்னையில் உள்ள ஒரு தற்கொலை தடுப்பு அமைப்பாகும். துன்பமாக, மனச்சோர்வுடன் அல்லது தற்கொலை உணர்வுடன் இருக்கக்கூடிய எவருக்கும் நிபந்தனையற்ற உணர்ச்சி ரீதியான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம்|
ஜப்பான் (JP) 🇯🇵
Tokyo Suicide Prevention Center (東京自殺防止センター)
03 5286 9090 என்ற எண்ணை அழைக்கவும்
Tokyo Suicide Prevention Center தற்கொலைக்கு வழிவகுக்கும் உணர்ச்சிகள் உட்படத் துன்பம் மற்றும் விரக்தியில் உள்ளவர்களுக்கு ரகசியமான மற்றும் உணர்ச்சி ரீதியான ஆதரவை வழங்குகிறது
Aichi Suicide Prevention Center
Aichi Suicide Prevention Center என்பது தற்கொலை செய்ய எண்ணுபவருக்கு எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உணர்ச்சி ரீதியான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அமைப்பாகும்.
மலேசியா (MY) 🇲🇾
Befrienders Kuala Lumpur
603 7956 8145 என்ற எண்ணை அழைக்கவும்
Befrienders என்பது தனிமையில் இருப்பவர்கள், துயரத்தில் இருப்பவர்கள், விரக்தியில் இருப்பவர்கள், மற்றும் தற்கொலை எண்ணங்களைக் கொண்டவர்களுக்கு - கட்டணம் இல்லாமல் ஒரு நாளில் 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும், உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
பிலிப்பைன்ஸ் (PH) 🇵🇭
Natasha Goulbourn Foundation
0917 558 4673 என்ற எண்ணை அழைக்கவும்
Natasha Goulbourn Foundation என்பது அனைவருக்குமான மன நலனில் கவனம் செலுத்தும் நேர்மறையான மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களின் ஆரோக்கியமான சமூகத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
சிங்கப்பூர் (SG) 🇸🇬
Samaritans of Singapore (新加坡援人協會)
1800 221 4444 என்ற எண்ணை அழைக்கவும்
Samaritans of Singapore (SOS) என்பது நெருக்கடியை எதிர்கொள்ளும், தற்கொலை பற்றி யோசிக்கும் அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரகசியமாக உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Silver Ribbon (Singapore)
65 6386 1928 என்று அழைக்கவும்
மனநலக் களங்கத்தினை எதிர்த்துப் போராடுதல், ஆரம்பகால உதவியை ஊக்குவித்தல் மற்றும் மனநலக் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கான புதுமையான வழிமுறைகள் மூலம் சமூகத்திற்குள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைப்பதை எளிதாக்குதல்.

ஓசியானியாவிற்கான வளங்கள்

ஆஸ்திரேலியா (AU) 🇦🇺
Lifeline
அழைக்கவும் 13 11 14
தனிப்பட்ட நெருக்கடிகளை அனுபவிக்கும் ஆஸ்திரேலியர்களுக்குத் தற்கொலை தடுப்பு சேவைகள், குடும்ப வன்முறை பற்றிய பயிற்சிகள் மற்றும் நிதி சார்ந்த நலனுக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்கு 24 மணிநேர அணுகலை Lifeline வழங்குகிறது.

குழந்தைகளுக்கான உதவி எண்
அழைக்கவும் 1 800 55 1800
குழந்தைகளுக்கான உதவி எண் என்பது குறிப்பாக 5-25 வயதுடைய இளைஞர்களுக்கான ஆஸ்திரேலியாவின் இலவசமான, தனிப்பட்ட மற்றும் ரகசியமான ஒரே தொலைபேசி ஆலோசனை சேவை ஆகும்.

Beyondblue
அழைக்கவும் 1300 22 4636
Beyondblue என்பது நல்ல மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வடுக்கள் மற்றும் பாகுபாட்டைக் கையாள்வதற்கும், கவலை, மனச்சோர்வு மற்றும் தற்கொலை பற்றிய தகவல்களையும் ஆதரவையும் வழங்குவதற்காகவும் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
நியூசிலாந்து (NZ) 🇳🇿
மனச்சோர்வுக்கான ஹாட்லைன்
0800 111 757 என்ற எண்ணை அழைக்கவும்
ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு உதவியை நாடுவதை ஊக்குவிப்பதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை அடையாளம் கண்டு புரிந்துகொள்ள நியூசிலாந்து நாட்டவர்க்கு இந்த வலைதளம் உதவுகிறது.

The Lowdown
SMS: 5626
மனச்சோர்வு அல்லது பதட்டத்தை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு உதவி செய்வதை The Lowdown ஊக்குவிக்கிறது. இந்தத் தளத்தில் இளைஞர்கள் பதட்டம், மனச்சோர்வு பற்றிய பயனுள்ள தகவல்கள் (மற்றும் அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுவது அல்லது பெற்றோருடன் பழகுவது போன்ற அவர்கள் கஷ்டப்படும் பிற பிரச்சினைகள்), 12 உண்மையான இளைஞர்கள் தங்கள் கதைகளைச் சொல்லும் வீடியோக்கள் மற்றும் பலவற்றைக் காணலாம்.

Youthline
0800 376 633 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது SMS: 234
இளைஞர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் இளைஞர்களை ஆதரிப்பவர்கள் ஆகியோருடன் Youthline பணியாற்றுகிறது. எங்கள் அமைப்புகள் தன்னார்வலர்கள் மற்றும் ஊதியம் பெறும் ஊழியர்களால் ஆனவை - மேலும் நாடு முழுவதும் எங்களுக்கு மையங்கள் உள்ளன.

Lifeline
0800 543 354 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது SMS: HELP என்று 357 என்ற எண்ணுக்கு இலவசமாக அனுப்பவும்
பாதுகாப்பான, அணுகக்கூடிய, பயனுள்ள, தொழில்முறை சார்ந்த மற்றும் புதுமையான சேவைகளை வழங்குவதன் மூலம் துன்பத்தைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம் ஆகும். குறிப்பாக நியூசிலாந்தில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதலை அதிகரிக்கவும், அதனுடன் தொடர்புடைய வடுக்களைக் குறைக்கவும், சுகாதாரம் மற்றும் சமூகத் துறைக்குச் சாதகமான பங்களிப்பை வழங்க மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் வேலை செய்கிறோம்|