Snapchat பாதுகாப்பு மையம்

Snapchat நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தருணங்களைப் பகிர ஒரு விரைவான மற்றும் கேளிக்கையான வழியாகும். பெரும்பாலான நம் சமூகம் Snapchat-ஐ தினசரி பயன்படுத்துகிறது. அதனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எங்களிடம் வழக்கமாக ஆலோசனை கேட்பது ஆச்சர்யப்படும் விஷயம் இல்லை. நாங்கள் உங்கள் கவலைகளைப் பகிர்கிறோம். மேலும் படைப்பாற்றல் மற்றும் வெளிப்பாட்டிற்காக ஒரு பாதுகாப்பான கேளிக்கைய் மிகுந்த சூழகை வழங்க விரும்புகிறோம்.

புகாரளிப்பது எளிது!

செயலியினுள் புகாரளித்தல்

பொருத்தமற்ற உள்ளடக்கத்தை செயலியிலேயே எளிதாக எங்களிடம் புகாரளிக்கலாம்! Snap ஐ அழுத்திப் பிடித்து, பின் 'Snap ஐ புகாரளி' பொத்தானைத் தட்டுங்கள். என்ன நடக்கிறது என்று எங்களிடம் தெரிவியுங்கள் — உதவுவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்! துன்புறுத்தல் குறித்துச் செயலியில் புகாரளிப்பது பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் Snapchat-இல் புகாரளிப்பதற்கான எங்களுடைய விரைவு வழிகாட்டியைப் பதிவிறக்குங்கள்.

பாதுகாப்பு என்பது பகிரப்பட்ட பொறுப்பு

துவக்கம் முதலே Snapchat, மக்கள் தங்கள் கேமரா மூலம் தங்களை வெளிப்படுத்த அதிகாரம் அளிப்பதைப் பற்றியது. நீங்கள் தன்னியக்கமாக உங்களுக்குத் தெரிந்த அனைவரையும் நட்பில் இணைக்கவோ அல்லது எது பிரபலமானதோ அதை மட்டுமே நீங்கள் பார்க்கவோ ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. அதற்கு பதிலாக, பொதுமக்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு அவர்களின் கதைகளை அவர்கள் வழியிலேயே சொல்வதை எளிதாக்க விரும்பினோம்!
Snapchat தனிப்பட்ட தகவல்தொடர்புக்கானது, ஒளிபரப்ப அல்ல.
Snapகள் விரைவான மற்றும் எளிதான தகவல்தொடர்புக்கு செய்யப்படுவதால் தான் அவை இயல்பாகவே நீக்கப்படுகின்றன! நண்பர்களுக்கு நீங்கள் நேரடியாக அனுப்புவது அல்லது உங்கள் கதையில் பொதுவில் இடுகையிட தேர்வுசெய்பவற்றை மட்டுமே அவர்களால் பார்க்கமுடியும்.
பாதுகாப்புக் கூட்டணிக்கான அணுகுமுறை.
எங்கள் சமூகத்தின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக Snap ஆழ்ந்த உறுதிபூண்டுள்ளது, Snapchat பயனர்களைப் பாதுகாப்பாகவும் அறிந்தவர்களாகவும் வைப்பதற்காக வடிவமைப்பிலேயே தனியுரிமையும் பாதுகாப்பும் என்ற தத்துவத்தை எங்கள் குழுக்கள், தயாரிப்புகள், கொள்கைகள் மற்றும் கூட்டாளர்கள் நடைமுறைப்படுத்துகின்றனர்.
எங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக நேரடியாக பணியாற்றும் எங்கள் உள்ளடக்க மதிப்பீட்டாளர்களின் உள்ளார்ந்த குழுக்களுடன் கூடுதலாக, தேவைப்படும் Snapchat பயனர்களுக்கு வளங்களையும் ஆதரவையும் வழங்குவதற்காக தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் அரசு-சாரா நிறுவனங்களுடனும் பணியாற்றுகிறோம்.
நம்பகமான அடையாளமிடுபவர் திட்டம்.
Snapchat சமூகத்திற்கு ஆதரவளித்து எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை புகாரளிக்கும் இலாப-நோக்கமற்ற, அரசு-சாரா நிறுவனங்கள் (NGOகள்), தேர்ந்தெடுத்த அரசு முகமைகள், மற்றும் பாதுகாப்பு கூட்டாளர்களுக்கு ஆதரவு வழங்குவதில் உதவுவதற்காக எங்கள் நம்பகமான அடையாளமிடுபவர் திட்டத்தை வடிவமைத்துள்ளோம்.
பாதுகாப்பு ஆலோசனைக் குழு.
எங்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் Snapchat சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க முடியும் என்பது குறித்து Snap இற்குக் கற்பிக்கின்றனர், கேள்வியெழுப்புகின்றனர், பிரச்சினைகளை எழுப்புகின்றனர் மற்றும் ஆலோசனை வழங்குகின்றனர்.
எங்கள் கூட்டணிகளின் வாயிலாக, நெருக்கடியில் இருப்பவர் தொடர்பான சொற்களைத் தேடும்போது காட்டப்படும் தொழில்முறை இலாப-நோக்கமற்ற நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட வட்டார மொழியாக்கம் செய்யப்பட்ட வளங்கள் மற்றும் உள்ளடக்கம் இடம்பெற்றிருக்கும் Here for You போன்ற வளங்களை உருவாக்கவும், மற்றும் தரவு தனியுரிமை, பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து Snapchat பயனர்களுக்குக் கற்பிப்பதை இலக்காகக் கொண்ட எங்கள் டிஜிட்டல் கற்றல் திட்டமான Safety Snapshot ஐ அறிமுகப்படுத்தவும் முடிந்தது. எங்களின் ஆரோக்கிய வளங்களைக் குறித்ததான கூடுதல் தகவலுக்கு, Snapchat ஆரோக்கிய வளங்களுக்கான விரைவு வழிகாட்டியைப் பதிவிறக்கவும்!
டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணை மற்றும் ஆராய்ச்சி
பதின் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் இணையத்தில் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை பற்றிய உட்பார்வை பெற நாங்கள் இளம் தலைமுறையின் டிஜிட்டல் நல்வாழ்வில் ஆராய்ச்சி செய்தோம். இந்த ஆராய்ச்சி, நான்கு தலைமுறைகளுக்கு மேலாக நல்வாழ்வு குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணை (DWBI), இளம் தலைமுறையின் ஆன்லைன் உளவியல் நல்வாழ்வில் ஒரு நடவடிக்கையை ஆன்லைன் சுற்றுசூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் நாங்கள் பதின் பருவத்தினர் (13-17 வயது) மற்றும் இளைஞர்கள் (18-24 வயது) மற்றும் பதின் பருவத்தினரின் பெற்றோர்கள் 13 முதல் 19 வயது, ஆகியோரை ஆறு நாடுகளில் நாங்கள் ஆய்வு செய்தோம்: ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா. 2022 டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணையில் அந்த ஆறு நாடுகளின் மதிப்பீடு 62 புள்ளிகளில் உள்ளன டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணை மற்றும் ஆராய்ச்சி தேடல் விவரங்கள் பற்றி மேலும் படிக்க எங்கள் DWBI பக்கத்தைப்பார்க்கவும்

பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள்

Snapchat காலப்போக்கில் வளர்ச்சியடைந்துள்ளதால், உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு எப்போதும் எங்கள் மனதில் முதன்மையாக இருந்து வருகிறது. அப்படிச் சொன்னாலும், நீங்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் எடுக்கக்கூடிய சில படிமுறைகள் உள்ளன.
Snapchat சபையொழுக்கம்
பிற Snapchat பயனர்களிடம் அன்பாகவும் மற்றும் மரியாதையாகவும் இருக்கவும். நீங்கள் எதை Snap செய்கிறீர்கள் என்பதைப் பற்றி பரிசோதனையுடன் இருங்கள். ஒருவர் பெற விரும்பாத எதையும் அவருக்கு அனுப்பவேண்டாம்.
Snapகள் இயல்பாகவே நீங்கிவிடும், ஆனால்.....
Snapகள் இயல்பாகவே நீங்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஒரு நண்பர் திரைப்பிடிப்பு படம் எடுக்கலாம் அல்லது மற்றொரு சாதனத்தை வைத்து புகைப்படம் எடுக்கலாம் என்பதை நினைவில் கொள்க.
தனியுரிமை அமைப்புகள்
உங்களுக்கு யார் புகைப்படங்களை அனுப்பலாம் என்பதைத் தேர்வுசெய்ய உங்கள் தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்க்கவும் அல்லது Snap வரைபடத்தில் உங்கள் கதைகள் மற்றும் இருப்பிடத்தைப் பார்க்கவும்.
நண்பர்கள்
உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக Snapchat உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நிஜ வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாத எவரையும் நட்புறுவதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை.
சமூக வழிகாட்டுதல்கள்
எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் படித்து உங்கள் நண்பர்களும் அவற்றைப் பின்தொடர உதவுங்கள்!
பாதுகாப்பு குறித்த கவலைகளைப் புகாரளிப்பது
கவலையை ஏற்படுத்தும் எதையாவது நீங்கள் பார்க்க நேர்ந்தால் அல்லது யாராவது ஒருவர் பொருத்தமற்ற ஒன்றை அல்லது உங்களை சங்கடப்படுத்தும் ஒன்றை உங்களை செய்யச் சொன்னால் அந்த Snap-ஐ எங்களிடம் புகாரளிக்கவும் — மேலும் உங்கள் பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர் ஒருவரிடம் அதைப் பற்றி பேசுங்கள்.
கொடுமைப்படுத்துதல்
உங்களை யாராவது துன்புறுத்தினாலோ அல்லது கொடுமைப்படுத்தினாலோ, அந்த Snap-ஐ எங்களிடம் புகாரளிக்கவும் — மற்றும் உங்கள் பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவரிடம் அது குறித்துப் பேசுங்கள். நீங்கள் எப்போதும் அந்த நபரைத் தடை செய்யலாம் அல்லது கொடுமைப்படுத்துதல் நடைபெறும் அந்த குழு அரட்டையை விட்டு எந்நேரமும் வெளியேறலாம்.
  • கூடுதல் உதவி: அமெரிக்காவில் உள்ள Snapchat பயனர்களுக்கு கூடுதல் ஆதரவையும் வளங்களையும் வழங்க Snapchat கிரைசிஸ் டெக்ஸ்ட் லைனுடன் கூட்டு சேர்ந்துள்ளது. கிரைசிஸ் டெக்ஸ்ட் லைனில் நேரடி, பயிற்சி பெற்ற நெருக்கடி ஆலோசகருடன் நேரலையில் பேச KIND என 741741 க்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள். இந்த சேவை இலவசமானது மற்றும் 24/7 அணுக்கக்கூடியது!
கடவுச்சொல் பாதுகாப்பு
உங்கள் கடவுச்சொல்லை பாதுகாப்பாக வைத்திருங்கள் மற்றும் பிற நபர்கள், செயலிகள் அல்லது வலைத்தளங்களுடன் எந்த சூழலிலும் பகிராதீர்கள். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சேவைக்கும் வேறுபட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதை பரிந்துரைக்கிறோம்.
இந்த Discover சேனல் டிஜிட்டல் கல்வியறிவை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பு தனியுரிமை உதவிக்குறிப்புகள் மற்றும் நுட்பங்களை Snapchat பயனர்களுக்குக் கற்பிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் Discover உள்ளடக்கத்தை நிர்வகிப்பது
Discover இல், உலகம் முழுவதிலும் நடக்கும் விஷயங்களை அறிந்துகொள்ள நண்பர்களின் கதைகள், பதிப்பாளர் கதைகள், நிகழ்ச்சிகள் மற்றும் Snap வரைபடம் ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் எந்த Discover உள்ளடக்கதைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம்.
  • சந்தாக்கள்: நண்பர்கள் பகுதிக்கு நேர் கீழே நீங்கள் குழு சேர்ந்துள்ள பதிப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சேனல்களில் இருந்து விருப்பமான உள்ளடக்கத்தைப் பார்ப்பீர்கள். எந்த கதைகள் மிகச் சமீபமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் இவை வரிசைப்படுத்தப்படுகின்றன.
  • Discover: நீங்கள் இதுவரை குழு சேராத பதிப்பாளர் மற்றும் உருவாக்கியவர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட கதைகளின் வளர்ந்து வரும் பட்டியிலை நீங்கள் இங்கு காணலாம் — அத்துடன் நிறுவனமொன்று வழங்கும் கதைகள், மற்றும் உலகெங்கிலும் உள்ள எங்கள் சமூகத்தின் கதைகளையும் பார்க்கலாம். நீங்கள் எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட கதையை நீங்கள் உண்மையில் விரும்பவில்லை என்றால், நீங்கள் அதைப் பிடித்துக் கொண்டு, அந்தக் கதையையும் அதே போன்ற மற்றவற்றை மறைக்க 'மறை' என்பதைத் தட்டவும்.
  • Discover-இல் கதைகளை மறைப்பது: நீங்கள் பார்க்க விரும்பாத எந்த கதையையும் நீங்கள் எப்போதும் மறைக்கலாம். கதை மீது அழுத்திப் பிடித்து 'மறை' என்பதைத் தட்டவும்.
  • Discover-இல் கதைகள் பற்றி புகாரளிப்பது: Discover-இல் பொருத்தமற்ற ஒன்றைப் பார்க்க நேர்ந்தால் எங்களை அணுகவும்! பொருத்தமற்ற Snap-ஐ அழுத்திப் பிடித்து, அதனைப் புகாரளிக்க 'Snap-ஐ புகாரளி' பொத்தானைத் தட்டுங்கள்.
வயது: குறைந்தபட்சம்
Snapchat-இல் இணைய ஒருவருக்கு 13+ வயதாகியிருக்க வேண்டும், மேலும் ஒரு கணக்கு 13 வயதிற்குட்பட்ட ஒருவருக்கு சொந்தமானது என்பதை நாங்கள் தீர்மானித்தால், அதை மூட நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.