நாங்கள் உங்கள் தகவல்களை எப்படிப் பயன்படுத்துகிறோம்

எங்கள் சேவைகள் பயன்படுத்த சிக்கலற்றவை மற்றும் எளிதானவை, ஆனால் அவற்றை இயக்கத்தில் வைக்க நிறைய வேலைகள் செய்யப்படுகின்றன! எங்கள் தயாரிப்புகளுக்கு சக்தி அளிக்கும் முக்கிய கூறுகளில் ஒன்று பகிரப்பட்ட அல்லது நேரடி உள்ளுணர்வுள்ள தகவல் - எனவே இங்கே நாம் பயன்படுத்தும் தகவல்களும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதன் மேலோட்டம் இதோ!

புதிய அம்சங்களை உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்துதல்

முதல் நிறுத்தம்: உருவாக்கம் வேடிக்கையான, கற்பனையான புதிய அம்சங்களை உருவாக்க எங்கள் அணிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு நாளும் எங்கள் மேம்பாட்டுக் குழுவுக்கு நீங்கள் உண்மையில் உதவுகிறீர்கள்!
எடுத்துக்காட்டாக, அடுத்து எதை உருவாக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க Snapchat பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வடிகட்டிகள் மற்றும் லென்ஸஸ்ஆகியவற்றைப் பார்க்கிறோம். ஒரே அணுகுமுறையுடன் எங்கள் பல அம்சங்களை நாங்கள் உருவாக்குகிறோம், எனவே நாங்கள் எங்கள் விளையாட்டை முழு கட்டுப்பாட்டில் வைத்து நீங்கள் விரும்பும் புதிய விஷயங்களை உருவாக்கலாம்!
நாங்கள் எப்போதும் எங்கள் சேவைகளை மேம்படுத்தும் வழிகளையும் தேடுகிறோம். சிலசமயங்களில் ஒரு அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அல்லது ஒரு செயலியின் தோற்றத்தை மாற்றுவோம். நாங்கள் எந்த விதமான மேம்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்கள் தகவல் உதவலாம். எடுத்துக்காட்டாக, Snapchat நீங்கள் அடிக்கடி யாருடன் பேசுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்கள் சிறந்த நண்பர்கள் யாரென்று ஊகிக்கலாம் — எனவே அவர்களுடன் Snap செய்வதை எளிதாக்க செயலி அவர்களை உங்கள் இவருக்கு அனுப்புக திரையின் மேற்பகுதியில் அவர்களை வைக்கலாம். நிறைய Snapchat பயனர்களின் தரவை ஆய்வுசெய்வது, மக்கள் செயலியைப் பயன்படுத்தும் வழிகளில் உள்ள போக்குகளைக் காண எங்களுக்கு உதவும். Snapchat-ஐ நிறைய வழிகளிலும், பெரிய அளவிலும் மேம்படுத்த இது எங்களுக்கு உதவுகிறது!

விஷயங்களை தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருத்தல்

அடுத்து வருவது: செயல்பாடுகள். நீங்கள் எங்களிடம் கேட்கும் சில தகவல்களைப் பகிர்வதன் மூலம் எங்கள் தயாரிப்புகள் செயல்படுகின்றன - நீங்கள் ஒரு நண்பருக்கு அனுப்ப விரும்பும் அல்லது ஸ்பாட்லைட் இல் சேர்க்க விரும்புவை போன்றது. Snap வரைபடம் போன்ற குறிப்பிட்ட அம்சங்கள், உங்கள் இருப்பிடத் தரவைப் பயன்படுத்தி வரைபடத்தை ஆராய்ந்து உங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும். வலைத்தளங்கள், லென்ஸஸ் மற்றும் நண்பர்களை பிற Snapchat பயனர்களுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் Snapcode-களையும் பயன்படுத்தலாம்.
விஷயங்களை இயக்கத்தில் வைக்க, எங்கள் தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நாங்கள் கண்காணிக்கிறோம், போக்குகளைப் பகுப்பாய்வு செய்கிறோம், மேலும் ஒவ்வொரு நாளும் அவற்றை மேம்படுத்த உதவும் உங்கள் பின்னூட்டத்தைக் கேட்கிறோம்! எடுத்துக்காட்டாக, நீங்கள் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள், எந்த வடிகட்டிகள் அல்லது லென்ஸஸை அதிகம் பயன்படுத்துகிறீர்கள், நீங்கள் எந்த ஸ்பாட்லைட் உள்ளடக்கதைப் பார்க்கவிரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் பகுப்பாய்வு செய்யலாம். எங்கள் சமூகத்துடன் எது ஒத்துப்போகிறது என்பதை அறிய இது உதவுகிறது — மேலும் பதிப்பாளர்களுக்கு மக்கள் எந்தக் உள்ளடக்கத்தினை விரும்பி மகிழ்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்துகிறது!
எங்கள் தயாரிப்புகளை புதுப்பித்து வைக்க உதவும் உங்களின் சில தகவல்களையும் பயன்படுத்துகிறோம். ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக, எங்கள் கேமரா முடிந்தவரை பல்வேறு சாதனங்களில் உயர்தரத்தில் பதிவு செய்வதை உறுதிசெய்வது முக்கியமாகும். எனவே அறிமுக நாளில் நீங்கள் ஒரு புதிய ஃபோன் வைத்திருந்தால், உங்கள் சாதனத்திற்கு Snapchat-ஐ உகந்ததாக்குவதை உறுதிசெய்ய அதன் செயல்திறனை நாங்கள் மதிப்பீடு செய்யலாம்.
அதேபோல், செயலியின் புதிய பதிப்புகளை நாங்கள் வெளியிடும்போது, அது வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் மற்றும் சாதனங்களில் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியனுக்கும் மேலான Snap கள் உருவாக்கி பகிரப்படுகின்றன. எனவே Snap-களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் வழங்குவதை உறுதிசெய்ய அவற்றின் அளவையும் பகுப்பாய்வு செய்கிறோம்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்குதல் & விடயங்களுக்குச் சூழல் கொடுத்தல்

எந்த இரண்டு நபர்களும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை, எனவே உங்கள் Snapchat அனுபவத்தைக் குறிப்பாக உங்களுக்காக வடிவமைக்க உங்கள் சில தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்! எடுத்துக்காட்டாக, நீங்கள் பார்க்கும் ஸ்பாட்லைட் உள்ளடக்கத்தை நாங்கள் தனிப்பயனாக்குகிறோம் - எடுத்துக்காட்டாக நீங்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால், விளையாட்டு தொடர்பான உள்ளடக்கத்தை நீங்கள் அதிகம் பார்க்கக்கூடும். அல்லது, உங்கள் நாய்க்குட்டி Snaps ஐ நீங்கள் என் கதை இல் அடிக்கடி பதிவுசெய்தால், உங்களுக்கு நாய்கள் என்றால் பிடிக்கும் என்பதை எங்களால் கணிக்க முடிந்து உங்கள் விருப்பத்திற்கேற்ற அது தொடர்பான உள்ளடக்கத்தினை காண்பிக்க முயற்சிப்போம்!
உங்களுக்கு ஆர்வமுள்ள உள்ளடக்கத்தை முதன்மையாக்க தேடல் திரையைத் தனிப்பயனாக்கி, உங்கள் நினைவுகளின் தனிப்பயனாக்கப்பட்ட கண்ணோட்டத்தையும் உங்களுக்கு வழங்கலாம். இது உங்கள் பிறந்தநாள் என எங்களுக்குத் தெரிந்தால், அதைக் கொண்டாட உதவுவதற்கு உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் சிறப்பு லென்ஸை நாங்கள் வழங்கலாம்! உங்கள் Snapchat அனுபவத்தை உண்மையில் தனித்துவமானதாக்குவதற்காக, விளம்பரங்கள், தேடல், வடிகட்டிகள், Snap வரைபடம் மற்றும் லென்ஸஸையும் நாங்கள் தனிப்பயனாக்கலாம்.
நீங்கள் இருக்கும் இடத்தையும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் அடிப்படையாகக் கொண்டு, உங்கள் Snapகளுக்கு சில பின்னணி வழங்க உதவ நாங்கள் தகவலைப் பயன்படுத்துகிறோம்! நேரம், இடம், வானிலையைக் காட்டக்கூடிய ஸ்டிக்கர்கள் அல்லது நீங்கள் இருக்கும் நிகழ்வுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு லென்ஸஸ் மற்றும் வடிகட்டிகளும் இதில் அடங்கும். உங்கள் நினைவுகளை வரிசைப்படுத்தவும் இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம், எப்போது, ​​எங்கு பிடிக்கப்பட்டன என்பதன் அடிப்படையில் அவை உங்களுக்காக ஒழுங்கமைக்கப்படுகின்றன.
நாங்கள் உங்கள் அனுபவத்தை எப்படி தனிப்பயனாக்குகிறோம் என்பது பற்றி மேலும் தகவல் அறிய தயவுசெய்து இங்கே படிக்கவும்.

எங்கள் சேவைகளைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருத்தல்

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் முடிந்தவரை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பது எங்களுக்கு முக்கியம், எனவே எங்கள் தயாரிப்புகளின் இந்த அம்சங்களையும் மேம்படுத்த உங்களின் சில தகவல்களைப் பயன்படுத்துகிறோம்! எடுத்துக்காட்டாக, நாங்க உங்கள் கணக்கைப் பாதுகாக்க இரு காரணி அங்கீகாரத்தை வழங்குகிறோம். மேலும் ஏதேனும் சந்தேகப்படும்படியான செயலைக் நாங்கள் கவனித்தால் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது உரைச் செய்தியை அனுப்புவோம். Snapchat-இல் அனுப்பப்படும் URL-களையும் அந்த வலைப்பக்கம் தீங்கு ஏற்படுத்தும் சாத்தியமுள்ளதா எனப் பார்க்க நாங்கள் ஸ்கேன் செய்து அதைபற்றிய எச்சரிக்கையையும் உங்களுக்கு கொடுக்க முடியும்.

தொடர்புடைய விளம்பரங்களை வழங்குதல்

விளம்பரங்கள் பொருத்தமானவையாக இருக்கும்போதுதான் அவை சிறந்தவையாக இருக்கும் என்று நினைக்கிறோம்—விளம்பரதாரர்கள் அவற்றை விரும்புகிறார்கள், மேலும் நீங்களும் அவற்றை மிகவும் விருப்புவீர்கள் என்று நினைக்கிறோம். எனவே, சரியான நேரத்தில் சரியான விளம்பரங்களைத் தேர்ந்தெடுக்க உங்களைப் பற்றி நாங்கள் கற்றுக்கொண்ட சில தகவல்களைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, வீடியோ கேம்களுக்கான ஒரு சில விளம்பரங்களை நீங்கள் கிளிக் செய்தால், அந்த விளம்பரங்களை நாங்கள் தொடர்ந்து இயக்கலாம்! ஆனால் நீங்கள் விரும்பாத விளம்பரங்களைக் காண்பிப்பதைத் தவிர்க்க உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு டிக்கெட் விற்கும் தளம் நீங்கள் ஏற்கனவே ஒரு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளீர்கள் என்று எங்களிடம் சொன்னால், - அல்லது Snapchat மூலம் அவற்றை நீங்கள் வாங்கியிருந்தால் - அதற்கான விளம்பரங்களைக் காண்பிப்பதை நாங்கள் நிறுத்தலாம்.மேலும் அறிய.

உங்களைத் தொடர்பு கொள்ளுதல்

சிலசமயங்களில் நாங்கள் வெளியிடும் புதிய அம்சங்கள், விளம்பரங்கள் மற்றும் அது போன்ற பிற விஷயங்களைப் பற்றிய முன்னோட்டத்தை அளிக்க உங்களை நாங்கள் தொடர்புகொள்வோம். எடுத்துக்காட்டாக, குழு வீடியோ உரையாடல் வெளியிடப்பட்டது என்பதைத் தெரிவிக்க பல Snapchat பயனர்களுக்கு ஒரு உரையாடலை அனுப்பினோம். இதை முக்கியமாக நாங்கள் செயலியில் செய்கிறோம், ஆனால் சில சமயங்களில் நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல், உரைச் செய்தி அனுப்புவோம் அல்லது பிற செய்தியிடல் தலங்கள் மூலம் உங்களுடன் தொடர்பு கொள்வோம். நீங்கள் எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்புகொண்டுள்ள போது அல்லது உங்களுக்காக செய்திகள் அல்லது கோரிக்கைகள் காத்திருக்கின்றன என்பதை நினைவுபடுத்த உங்களை திரும்பித் தொடர்புகொள்ள உங்கள் தகவலையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். நிச்சயமாக எங்களை நாங்களே ஸ்பேம் செய்துகொள்ள விரும்ப மாட்டோம், எனவே நாங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளை சிறியதாக அனுப்ப முயற்சி செய்வோம்.

எங்கள் விதிமுறைகள் & கொள்கைகளை நடைமுறைப்படுத்தல்

கடைசி வகை சட்டஞ்சார்ந்ததாகும் இது தான் வழக்கமாக சலிப்பளிக்கும் வகையாகும், ஆனால் இது மிக முக்கியமான ஒன்று! சில சந்தர்ப்பங்களில் உங்கள் தகவலை சட்டரீதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவோம். ਉਦਾਹਰਣ ਦੇ ਲਈ, ਜਦੋਂ ਗੈਰਕਾਨੂੰਨੀ ਸਮਗਰੀ Snapchat ਜਾਂ ਸਾਡੀ ਕਿਸੇ ਹੋਰ ਸੇਵਾਵਾਂ 'ਤੇ ਪੋਸਟ ਕੀਤੀ ਜਾਂਦੀ ਹੈ, ਤਾਂ ਸਾਨੂੰ ਆਪਣੀਆਂ ਸੇਵਾਵਾਂ ਦੀਆਂ ਸ਼ਰਤਾਂ ਅਤੇ ਹੋਰ ਨੀਤੀਆਂ ਨੂੰ ਲਾਗੂ ਕਰਨ ਦੀ ਲੋੜ ਹੋ ਸਕਦੀ ਹੈ. ਕੁਝ ਮਾਮਲਿਆਂ ਵਿੱਚ, ਅਸੀਂ ਤੁਹਾਡੀ ਜਾਣਕਾਰੀ ਨੂੰ ਕਾਨੂੰਨੀ ਲਾਗੂ ਕਰਨ ਦੀਆਂ ਬੇਨਤੀਆਂ ਦੇ ਨਾਲ ਸਹਿਮਤ ਜਾਂ ਸਾਡੀਆਂ ਕਾਨੂੰਨੀ ਜ਼ਿੰਮੇਵਾਰੀਆਂ ਦੀ ਪਾਲਣਾ ਕਰਨ ਲਈ ਇਸਤੇਮਾਲ ਜਾਂ ਸਾਂਝਾ ਕਰ ਸਕਦੇ ਹਾਂ. மேலும் அறிய எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையைப் பார்க்கவும்.