ஆராய்ச்சியாளர் தரவு அணுகல் வழிமுறைகள்

வணிகம் அல்லாத நோக்கங்களுக்காக நீங்கள் ஆராய்ச்சியாளராக இருந்தால், டிஜிட்டல் சேவைகள் சட்டம் (DSA) வின்படி Snap-இன் பொது தரவு அணுகலை கோர விரும்பினால், உங்கள் ஆராய்ச்சி கோரிக்கையினை DSA-Researcher-Access[at]snapchat.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பின்வரும் தகவல்களுடன் சமர்ப்பிக்கலாம்:

  • உங்கள் பெயர் மற்றும் சார்புடைய ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர்

  • நீங்கள் அணுக விரும்பும் தரவு குறித்த விரிவான விளக்கம் 

  • நீங்கள் தரவை கோருவதற்கான நோக்கத்தின் விரிவான விளக்கம்.

  • திட்டமிடப்பட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் முறை பற்றிய விரிவான விளக்கம்.

  • நீங்கள் நடத்தி வரும் ஆராய்ச்சிக்கான நிதி ஆதாரங்கள் குறித்த விவரங்கள்.

  • உங்கள் ஆராய்ச்சி வணிகம் அல்லாத நோக்கத்தினை கொண்டது என்பதற்கான உறுதிப்படுத்தல்

  • கோரப்படும் தரவினை பயன்படுத்தப் போகும் கால நேரம் குறித்த விவரங்கள்.

உங்கள் கோரிக்கையினை பெற்ற பிறகு, கோரிக்கையானது விதிகளுக்கும் சட்டத்திட்டங்களுக்கு இணங்குகிறதா என நாங்கள் மதிப்பாய்வு செய்து உங்களுக்கு தகவல் தெரிவிப்போம்.