கடுமையான பாதிப்பு

சமூக வழிகாட்டுதல்கள் விளக்கத் தொடர்

புதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 2023

Snapchat பயனர்களின் பாதுகாப்பிற்கே நாங்கள் முன்னுரிமை வழங்குகிறோம். நாங்கள் எங்கள் சமூகத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடத்தையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், அதுவும் குறிப்பாக அத்தகைய அச்சுறுத்தல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்போது. கடுமையான பாதிப்பு என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக நாங்கள் கருதுகின்றோம்: (1) Snapchat பயனர்களின் உடல் மற்றும் உளநலனுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள், மற்றும் (2) மனித உயிர், பாதுகாப்பு மற்றும் நலனுக்கான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கடுமையான பாதிப்புக்கான உடனடியான மற்றும் நம்பகமான இடர். நாங்களும் எங்கள் சமூகமும் இந்தத் தலைப்புகள் குறித்து நன்கு தெரிந்துகொண்டு, எங்களின் தளத்தில் இந்த அச்சுறுத்தல்கள் எழும் இடங்களில் சரியான நடவடிக்கையை எடுக்க, நிபுணர்கள், பாதுகாப்பு குழுக்கள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். இந்த வகை பாதிப்புகள் அதிக அளவிலான ஆய்வுக்கு உட்படுத்தப்படவும், விதியை மீறுபவர்களுக்கு விரைவான, கடுமையான, மற்றும் நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தவும் தகுதியானது என்று நாங்கள் கருதுகிறோம்.


Snapchat பயனர்கள், பின்வரும் எதாவது நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நாங்கள் கண்டறியும்போது, நாங்கள் அவர்களின் கணக்குகளை உடனடியாக முடக்குவோம், மேலும், சில சந்தர்ப்பங்களில், இத்தகைய நடத்தையை சட்ட அமலாக்கத்திற்கு வழிகாட்டுவோம்:

  • குழந்தை பாலியல் சுரண்டல் அல்லது துன்புறுத்தல் படத்தைப் பகிர்தல், குழந்தை அல்லது பெரியவர்கள் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுதல், அல்லது பாலியல் பலாத்காரத்தை உள்ளடக்கிய பாலியல் சுரண்டல் அல்லது துன்புறுத்தல் நடவடிக்கை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய செயல்கள்

  • ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான போதை பொருட்களை வாங்க, விற்பனை செய்ய, பரிமாற்றம் செய்ய, அல்லது அவைகளுக்கு உதவ முயற்சி செய்வது

  • வன்முறைமிக்க தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள், ஆட்களைக் கடத்துதல், குறிப்பிட்ட வன்முறை அச்சுறுத்தல்கள் (வெடிகுண்டு மிரட்டல் போன்றவை), அல்லது மற்ற கடுமையான குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்கிய, மனித உயிர், பாதுகாப்பு அல்லது நலன் மீதான நம்பகமான, உடனடியான அச்சுறுத்தல்கள்

இத்தகைய விதிமீறல்களுக்குக் கடுமையான விளைவுகளைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அச்சுறுத்தல்களை எவ்வாறு கண்டறிந்து கட்டுப்படுத்தலாம், பாதிப்பைத் தடுக்கலாம், மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் போக்குகளைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ளலாம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள எங்களின் உள் குழுக்கள் தொடர்ந்து நிபுணர்களுடன் பணியாற்றுகின்றன. இந்தத் தலைப்பு மீதான எங்களின் பணி ஒருபோதும் முடிவடையாது, மேலும் அது நமது சமூகத்தின் தேவைகளுக்கேற்பத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். நாங்கள் உங்களை பாதுகாப்பு பிரச்சனை குறித்துப் புகாரளிக்கவும், எங்களின் பாதுகாப்பு மையத்திற்கு வருகை தரவும், அல்லது பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தைச் சரி செய்து நலனை ஊக்கப்படுத்துவதற்கான எங்களின் முயற்சிகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும் அழைக்கிறோம்.