பாதுகாப்பின் மூலம் தனியுரிமை

நீங்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணராவிட்டால், தனியுரிமை பாதுகாப்பை உணர்வது கடினமான விஷயம். அதனால் தான் Snapchat உங்கள் கணக்கைப் பாதுகாக்க உங்களுக்கு உள்நுழைவு சரிபார்ப்பு (ஒரு வகையான இரு காரணி அங்கீகாரம்) போன்ற அம்சங்களை வழங்குகிறோம் மற்றும் எங்கள் சொந்த உள்கட்டமைப்பைப் பாதுகாக்க அதிகமான அளவு முயற்சிகள் எடுக்கிறோம். ஆனால் உங்கள் Snapchat கணக்கை குறிப்பாக பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில கூடுதல் படிமுறைகளும் உள்ளன:

பாதுகாப்பான கடவுச்சொல்லை பயன்படுத்தவும்

நீண்ட, சிக்கலான, மற்றும் தனித்துவமான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுங்கள், இது தவறான நபர்கள் உங்கள் கடவுச்சொல்லை யூகிப்பதைத் தடுக்கும் அல்லது உங்கள் கணக்கை அணுக சமரசம் செய்யப்பட்ட கடவுச்சொற்களின் பட்டியலைப் பயன்படுத்துவதைத் தடுக்க உதவும்.
உங்கள் கணக்கின் பாதுகாப்பை உறுதிசெய்ய, உங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்தி "I l0ve gr@ndma's gingerbread c00kies!" போன்ற ஒரு நீண்ட தனிப்பட்ட கடவுச்சொல்லை தேர்ந்தெடுங்கள். (எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகளைப் பயன்படுத்தி) - "Password123" போன்றவை இனிமேலும் யாரையும் ஏமாற்றாது.
உங்களுக்கு கடவுச்சொற்களை நினைவுகூர்வது கடினமானதாக இருந்தால் பாதுகாப்பான கடவுச்சொற்களை உருவாக்க ஒரு கடவுச்சொல் மேலாளரைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் கடவுச்சொற்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. உங்கள் முறை என்னவாக இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க உங்கள் கடவுச்சொல்லை ஒருபோதும் யாரிடமும் பகிரவேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உள்நுழைவு சரிபார்ப்பைப் பயன்படுத்து

உள்நுழைவு சரிபார்ப்பை இயக்குங்கள். இது ஒரு முக்கியமான அம்சமாகும், இது இரு-காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தி கூடுதல் பாதுகாப்பு அடுக்கைச் சேர்க்கிறது.
உள்நுழைவு சரிபார்ப்பைப் பயன்படுத்துவது, உங்கள் கடவுச்சொல்லைப் பெற்ற (அல்லது யூகித்த) ஒருவர் உங்கள் கணக்கை அணுகுவதைத் தடுக்க உதவும்.

உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கவும்

உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உங்கள் கணக்கில் சேர்க்கவும் - அந்த வகையில் உங்களை அடைய எங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன
உங்கள் தொலைபேசி எண்ணை மாற்றினால் அல்லது உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கான அணுகலை இழந்தால் இது மிகவும் முக்கியமானது. உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை எவ்வாறு சரிபார்ப்பது என்பது குறித்த வழிமுறைகளுக்கு இங்கேசெல்லவும்.

அங்கீகரிக்கப்படாத மூன்றாம் நபர் செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம்

அங்கீகரிக்கப்படாத மூன்றாம் நபர் செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம். அங்கீகரிக்கப்படாத மூன்றாம் நபர் செயலிகள் மற்றும் பிளக்இன்ஸ் (அல்லது டிவீக்ஸ்), Snapchat உடன் இணைக்கப்படாத மென்பொருள் உருவாக்குனர்களால் உருவாக்கப்படுகின்றன, மேலும் பெரும்பாலும் Snapchat இல் கூடுதல் அம்சங்கள் அல்லது செயல்பாட்டை சேர்க்கக் கோருகின்றன.
ஆனால், இந்த அங்கீகரிக்கப்படாத மூன்றாம் நபர் செயலிகளும் பிளக் இன்களும் உங்களுடைய, பிற Snapchat பயனர்களுடைய கணக்குகளைச் சிலவேளை சமரசம் செய்யலாம் என்பதால் அவற்றை Snapchat ஆதரிப்பதில்லை அல்லது அனுமதிப்பதில்லை. பாதுகாப்பாக இருக்க, அதிகாரப்பூர்வ Snapchat செயலி அல்லது அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் பயன்பாடுகள் மற்றும் பிளக் இன்களை மட்டுமே பயன்படுத்தவும்.

உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதல் உதவிக்குறிப்புகள்

தவறான நபர்களுக்கு எதிரான தற்காப்புக் கவசம் நீங்கள் தான் ! உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் மேலும் சில உதவிக்குறிப்புகளைக் காணலாம்:

  • உங்களுடைய Snapchat கணக்கில் உங்களுடையது அல்லாத தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கை மற்றவர்கள் அணுகலாம். உங்கள் கணக்கில் யாரேனும் தங்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கும்படி கேட்டால், எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

  • வேறொருவரின் சாதனத்தில் Snapchat இல் உள்நுழைய வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கை மற்றவர்கள் அணுகலாம். உங்களுடையது அல்லாத சாதனத்தில் நீங்கள் உள்நுழைந்தால், எப்போதும் பின்னர் வெளியேற நினைவில் கொள்ளுங்கள்!

  • உங்கள் மொபைல் சாதனத்தில் வலுவான கடவுக்குறியீடு அல்லது கடவுச்சொற்றொடரைச் சேர்க்கவும் அல்லது இன்னும் சிறப்பாக, உங்கள் சாதனத்தைத் திறக்க உங்கள் கைரேகை அல்லது முகத்தைப் பயன்படுத்தும் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும். உங்களிடம் இந்தக் கூடுதல் கட்டுப்பாடுகள் இல்லையெனில், உங்கள் சாதனம் தொலைந்துபோனாலோ, திருடப்பட்டாலோ அல்லது கவனிக்கப்படாமலோ இருந்தால், உங்கள் Snapchat கணக்கின் உள்ளடக்கங்களை எவரேனும் அணுகலாம்.

  • சந்தேகத்திற்கிடமான செய்திகளைக் கவனியுங்கள், குறிப்பாக சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்ய முயற்சிக்கும் - அவை தீங்கிழைக்கும் வலைத்தளங்களுக்கு வழிவகுக்கும் அல்லது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட உங்களை ஏமாற்றலாம். கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள்!

Snapchat இல் பாதுகாப்பாக இருப்பதற்கான கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, இங்கே செல்லவும் மற்றும் பாதுகாப்பான ஸ்னாப்ஷாட்டில் குழு சேரவும்.